இந்தியப் பங்குச் சந்தையில், நீண்ட காலத்துக்குப்பிறகு மேல்நோக்கிய நகர்வைத் தொடர்ச்சியாகக் காணமுடிகிறது. சந்தையில் காளையின் போக்கு காணப்படுவதைப் பார்க்க முடிகிறது.

நிஃப்டியானது திங்களன்று மேலும் உயர்வதைக் காணமுடிந்தது. இரண்டு நாள்களின் நகர்வில் கிட்டத்தட்ட நிஃப்டி 1000 புள்ளிகள் ஏற்றம் பெற்றது. உண்மையிலேயே இது மிக விரைவான, அதிக ஏற்றமாகும். அடுத்த சில நாள்களுக்கு அதே வலுவான நிலை யிலேயே இருந்தது. அதன் காரணமாக சார்ட்டில் கொடி போன்ற பேட்டர்ன் உருவானது. தற்போது இந்த பேட்டர்னில் உடனடி ஏற்றம் ஏற்பட்டால், மேலும் கூடுதல் ஏற்றப்போக்கைக் காணலாம். ஆனால், வெகுவிரைவாக நகரக்கூடிய சூழலில் சந்தை இருப்ப தால், அந்த மாற்றத்துக்கு அதிக நேரம் எடுக்காது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

அக்டோபர் மாதம், நீண்ட மாதம். அந்த மாதத்தில் 31-ம் தேதி வியாழக்கிழமை அன்றுதான் எஃப் அண்டு ஓ எக்ஸ்பைரி நடக்கிறது. வழக்கமாக, 5 அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களைக் கொண்ட மாதங்களில் ஓரளவு காளையின் போக்கு காணப்படும். எனவே, வரும் அக்டோபர் மாதத்திலும் இந்த ஏற்றப்போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

நிஃப்டி தற்போது 10400 - 10500 என்ற வரம்பின் உறுதியான ஆதரவு நிலையை உருவாக்கியுள்ளது. அதனை ஓர் இடைநிலை ஆதரவு மண்டலமாகக்கொண்டு நாம் செயல்படலாம். இந்த ஏற்றத்திற்கு லார்ஜ்கேப் பங்குகள் முக்கியக் காரணம். வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பங்குத் தரகு நிறுவனங்கள், இந்த ஆண்டுக்கான இண்டெக்ஸ் வருவாயை 10-12% உயர்த்தியுள்ளன. மேலும், வரும் ஆண்டுக்கான இண்டெக்ஸ் இலக்கையும் உயர்த்தியுள்ளன. இவையனைத்தும் சந்தையின் சென்டிமென்டை மேம்படுத்தி யிருக்கிறது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் இண்டெக்ஸ்களும் சிறிது மேம்பட்டுள்ளன. அவை கீழே சரிந்திடாமல் தக்கவைத்துக் கொண்டாலே போதுமானது.

சிறுமுதலீட்டாளர்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இண்டெக்ஸ்கள் ஏறத் தொடங்கினாலே சந்தையில் முதலீட்டாளர்களின் சென்டிமென்டில் உண்மையில் மாற்றத்தைக் கொண்டுவரும். சந்தையில் முதலீடுகளின் வரவு கவனிக்கப்படவேண்டும். ஏனெனில் அதுதான் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சிந்தனை மாற்றத்தைத் தெளிவாகக் காட்டும் அறிகுறியாகும்.வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இணைந்து தொடர்ந்து முதலீடு செய்யும்போது சந்தையின் போக்கு மீண்டும் வலுவடையக்கூடும்.

சீரமைப்புகள் மேலும் தொடரும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. எனவே, தற்போது சந்தையும் அவர்களிடமிருந்து அறிவிப்புகளை எதிர்பார்க்கும் மனநிலையில் உள்ளது. எனவே, வர்த்தக வாரத்தின் இடைப்பட்ட இறக்கங்களைப் பங்கு முதலீட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கும்வரை ஓரளவு டிரேடிங் வரம்பில் சந்தை இருக்கும். சந்தையின் இறக்கத்தைப் பங்குகளை வாங்குவதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த உத்தியை வரும் வாரம் முழுக்க செயல்படுத்த வேண்டும். ஆப்ஷன் ஓப்பன் இன்ட்ரஸ்ட் அக்டோபர் மாதம் முழுக்க நிஃப்டி 11200-11900 என்ற வரம்பில் வர்த்தகமாகலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICIBANK)

தற்போதைய விலை: ரூ.449.15

வாங்கலாம்.

இந்த வங்கியின் பங்குகள் குறுகிய காலத்தில் அதிகமாக விற்கப்படும் என்பதற்கான அறிகுறி காணப்பட்டது. ஆனால், அந்தச் சூழ்நிலையைச் சமாளித்து, இதுவரை இல்லாத அளவுக்குப் பங்கு விலை புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. பங்கின் விலையானது கரடியின் பிடியில் சிக்குவது தடுக்கப்பட்டு, காளையின் பிடியில் இருக்கிறது. இந்தப் போக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். குறுகியகால இலக்கு விலை ரூ.485 ஆகும். ரூ.440-450 என்கிற விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.432.

மஹிந்திரா அண்டு மஹிந்திரா (M&M)

தற்போதைய விலை: ரூ.555.15

வாங்கலாம்.

இந்தப் பங்கு விலையின் மாத வரைபடத்தில் புல்லிஸ் என்கல்ஃபிங் பேட்டர்ன் உருவாகியிருக் கிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தி லிருந்து இறங்கிவந்த பங்கின் விலை இறக்கம் தடைப்பட்டிருக்கிறது. 2006-2018-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எந்த அளவுக்குப் பங்கின் விலை ஏறியதோ, அதே அளவுக்குப் பங்கின் விலை இறக்கத்தைச் சந்தித்தது. உடனடி லாங் பொசிஷன்கள் உருவாகியிருக்கிறது. ஸ்டாப் லாஸ் ரூ.540-க்குக்கீழே வைத்துக்கொள்ளவும். பங்கின் விலை இறக்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தப் பங்கின் விலை குறுகிய காலத்தில் 635 ரூபாய்க்கு ஏறக்கூடும்.

எஸ்.பி.அப்பேரல்ஸ் (SPAL)

தற்போதைய விலை: ரூ.209.00

வாங்கலாம்.

இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது நீண்ட இறக்கத்திற்குப் பிறகு, அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது. இந்த நிலை தற்போது உடைக்கப்பட்டு பங்கு விலை ஏற ஆரம்பித்திருக் கிறது. பங்கின் விலை வரைபடத்தில் அருமையான பாலிங்கர் பாண்டு உருவாகியிருக்கிறது. இது பங்கின் விலை மேலும் உயரும் என்பதைக் காட்டு கிறது. ஆர்.எஸ்.ஐ பேட்டர்னும் பங்கின் விலை ஏறும் என்பதைத்தான் உணர்த்துகிறது. இந்தப் பங்கின் வார வரைபடமும் பங்கின் விலை ஏற்றத்திற்கான பாசிட்டிவ் அறிகுறிகளைக் காட்டுகிறது. அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் குறுகிய கால முதலீட்டு நோக்கில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.187 வைத்துக் கொள்ளலாம். இலக்கு விலை ரூ.225. .

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.