பிரீமியம் ஸ்டோரி

ந்தியப் பங்குச் சந்தையில் சில பலவீனங்கள் உருவாகியுள்ளன. இதன் விளைவாக, கடந்த வாரத்தில் முக்கியக் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. இப்போது உயர்விலிருந்து முதல் லோயர் டாப் - லோயர் பாட்டம் உருவாகியுள்ளது. இதனால் பங்குச் சந்தை உடனடியாக இன்னும் இறங்கக்கூடும். இந்த இறக்கமானது தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய மே மாத நிலையாக இருக்கக் கூடும். இறக்கத்துக்கான சப்போர்ட் 11425-ஆக உள்ளது. இந்த நிலைக்குப் பிறகு மேலே ஏறும் எனலாம். அது உண்மையான காளைச் சந்தையாக இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அதிர்ஷ்டவசமாக இப்போது நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. நல்ல நிதிநிலை முடிவுகளை வெளியிடும் நிறுவனப் பங்குகளைக் கவனித்து வர்த்தகம் மற்றும் முதலீடு செய்வது இந்த நேரத்தில் லாபகரமாக இருக்கும்.

டாக்டர் சி.கே.நாராயண் 
நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES

தனியார் வங்கிகள் மற்றும் எஸ்.பி.ஐ பங்கு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நிஃப்டியைவிடச் சிறப்பாகச் செயல்படா விட்டாலும், பேங்க் நிஃப்டி தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சில பெரிய வங்கிகள் நல்ல நிதிநிலை முடிவுகளை அளிப்பதன்மூலம் பேங்க் நிஃப்டியை மேலும் உயரத்துக்குக் கொண்டு செல்லும். வரும் வாரத்தில் பேங்க் நிஃப்டி 30000 மற்றும் 31000 இடையே வர்த்தகமாகக்கூடும்.

நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளைப் பொறுத்து வரும் வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தையின் வர்த்தகம் இருக்கும். நிஃப்டி 11400 மற்றும் 11700 இடையே ரேஞ்ச் பவுண்டில் வர்த்தகமாகக்கூடும்.

நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளுக்கேற்ப தனிப்பட்ட பங்குகளில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்வது லாபம் சம்பாதிக்கும் வழியாக இருக்கும்.

இன்ஃபோ எட்ஜ் இந்தியா (NAUKRI)

தற்போதைய விலை: ரூ.2195.35

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இன்ஃபோஎட்ஜ் நிறுவனத்தின் பங்குகளை சில காலம் முன்பு நாம் பரிந்துரை செய்திருக்கிறோம். எதிர்பார்த்தபடியே ஏற்றப்போக்கில் நன்கு செயல்பட்டுள்ளது. கடந்த ஏழு வாரங்களாக அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் செயல்பட்ட பின்னர் தொடர்ந்து வலுவாகச் செயல்படுவது பங்கின் விலை சார்ட்டில் தெரிகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்தப் பங்கு தற்போது அடுத்த ஏற்றப் போக்குக்குத் தயாராக இருக்கிறது. இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான மற்ற டிஜிட்டல் தளங்கள் (வேலைவாய்ப்புத் தளம் உள்பட) நல்ல முறையில் செயல்படுவதால், காலாண்டு முடிவுகளும் நன்றாக இருக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. பங்கின் விலை உயர்வு சீராக உள்ளது. நகர்வு நிலையும் நன்றாக உள்ளது. வால்யூமும் அதிகமாக உள்ளது. இவை அனைத்துமே இதே போக்கு தொடர்வதற்குச் சாதகமான அறிகுறி களாகும். இந்த பங்கில் தற்போதைய விலையில் முதலீடு செய்யவும். புதிய உச்சம் ரூ.2,550 எட்டக் கூடும். ஸ்டாப் லாஸ் ரூ.2,200 வைத்துக் கொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிர்லா கார்ப்பரேஷன் (BIRLACORPN)

தற்போதைய விலை: ரூ.649.90

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சிமென்ட் நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறி இறங்கிக்கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், அவற்றின் மதிப்பு குறையவில்லை. அந்தத் துறையிலுள்ள மற்ற நிறுவனப் பங்குகளுடன் ஒப்பிடுகையில், பிர்லா கார்ப்பரேஷன் நிறுவனப் பங்கு விலையில் சீரான முன்னேற்றத்தைக் காண முடிகிறது. பங்கு விலை ரூ.1,265 ரூபாயிலிருந்து ரூ.440 என்ற அதிக வீழ்ச்சிக்குப்பின் தற்போது மீண்டெழுவது தெரிகிறது.

சிறிது முன்னேற்றத்துடன் ஹையர் டாப் - ஹையர் பாட்டம் என்ற ஏற்ற இறக்க வடிவமைப்பைச் சார்ட்டில் காண முடிகிறது. புதிதாக சில வாங்குவோர் சேர்ந்த காரணத்தால் அதிக வால்யூமில் வர்த்தகம் நடந்துள்ளது. அதன் காரணமாக 23.6% ரீட்ரேஸ்மென்ட் பகுதியில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய முதலீடுகள் காரணமாக ஏற்பட்ட ஏற்றம் பிரேக் அவுட்டை உறுதி செய்கின்றன. பங்கு விலை குறுகிய காலத்தில் ரூ.750-800 அளவை எட்டக்கூடும்.

ஃபெடரல் மொகுல் கோயெட்ஸ் (FMGOETZE)

தற்போதைய விலை: ரூ.590.35

வாங்கலாம்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போது வாகனத் துறை பெரிய அழுத்தத்திற்குள்ளான சூழலில் இருந்தபோதும் கோயெட்ஸ் போன்ற சில நிறுவனங்கள் நல்ல முறையில் செயல்படுகின்றன. இந்த நிறுவனம், இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களுக்குமான பிஸ்டன் வளையங் களைத் தயாரிக்கிறது. இதன் பங்கு விலை சார்ட்டில் தொடர்ச்சியாக சில சாதகமான பேட்டர்ன்கள் தெரிகின்றன. நல்ல காலாண்டு முடிவுகள் வருவதற்கான சாத்தியம் இருக்கிறது. அப்படி வரும்பட்சத்தில் இந்த பேட்டர்னைப் பொறுத்தவரை, கோயெட்ஸ் நிறுவனப் பங்கு, குறைந்த ரிஸ்க் உள்ள பங்காக இருக்கும். வரவுள்ள பிரேக் அவுட்டுக்குப்பின் பெரிய அளவில் லாபத்தை ஈட்டித் தரக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ.585 வைத்து வாங்கலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு