நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

கடந்த வார இந்திய வர்த்தகத்தைப் பொறுத்தவரை சிறு இடைவெளியுடன் ஆரம்பித்து, பின்னர் சற்று இறக்கம் கண்டு மீண்டும் அதிலிருந்து ஏற்றம் கண்டது. இந்த நகர்வில் நிஃப்டி அதன் இலக்கான 15250 புள்ளிகளை எட்டி அங்கேயே நிலைகொண்டது. இந்த நிலையில் இறக்கம் காணப்படாததால் சந்தை இன்னும் காளையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மேலும் ஏற்றத்தை நோக்கி நகர்த்துமென்றும் கருதலாம்.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐ) விஷயத்திலும் பங்குகளை வாங்கும் போக்கு தொடர்கிறது. முன்பைவிட தீவிரமாகவும் இருக்கிறார்கள். கடந்த ஜனவரியின் கடைசி வாரத்தில் பங்கு விற்பனையில் ஈடுபட்ட அந்நிய முதலீட்டாளர்கள் பட்ஜெட்டுக்குப் பிறகு, மீண்டும் பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

முதலீடுகள் தீவிரமாக சந்தைக்குள் வந்துகொண்டிருக்கின்றன. அதேசமயம், மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் போன்ற உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்ற வண்ணம் இருக்கின்றன. முதலீடுகளை வெளியே எடுப்பதற்கான அழுத்தம் தெளிவாகத் தெரிகிறது. இது கடந்த வருடம் மே - ஜூன் மாதங்களிலேயே ஆரம்பித்தது.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து எப்போது லாபம் கிடைக்கும் எனப் பார்த்து காத்துக்கொண்டிருப்பதற்கு வேறு ஏதாவது செய்யலாம் என்ற மனநிலைக்கு பெரும்பாலானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு சரியா தவறா என்பது பின்னர்தான் தெரியும்.

பட்ஜெட்டுக்குப் பிறகான வாரத்தில் வலுவான வாராந்தர கேண்டில் உருவாகியுள்ளது. தற்போது இதில் நீண்ட கேண்டிலின் இடைப்பகுதியில் அதற்கான சாத்தியமான ஸ்டாப்லாஸ் அல்லது புல்பேக் நகர்வு இருக்க வாய்ப்புள்ளது. இது முந்தைய சில வாரங்களின் பைவெட் விலை புள்ளிகளை ஒத்தவையாக உள்ளது. எனவே, சந்தையில் உள்ள லாங் பொசிஷன் கள் அவற்றின் ட்ரெய்லிங் ஸ்டாப் ஆனது 14450 என்ற நிலைக்கும் கீழே இறங்க வாய்ப்புள்ளது.

பெரும்பாலான வர்த்தகர்கள் ட்ரெய்லிங் ஸ்டாப் மற்றும் இறக்கத்தில் பங்குகளை வாங்கும் சூழலில் நிஃப்டி 14950-15000 என்ற வரம்பில் ஓர் இடைவெளி ஜோனை நோக்கி நகரலாம்.

சந்தை தொடர்ந்து ஏற்றம் அடைவதற்கான சாத்தியங் களுடன் இருக்கிறது என்பதால் 12250-12300 என்ற வரம்பில் கால் பொசிஷன்களை வைத்துக் கொள்ளலாம். இனி வருகிற ஏற்றங்கள் இந்த நிலைக்கு மேல்தான் இருக்கும்.

மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவு பங்குகளில் நல்ல செயல்பாடு தொடர்ந்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குகள்
பங்குகள்

எல் அண்ட் டி (LT)

தற்போதைய விலை ரூ.1,533

வாங்கலாம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எல் அண்ட் டி பங்கில் விலை நகர்வு காணப்படுகிறது. நிஃப்டியின் செயல்பாட்டோடு இப்பங்கு இணைந்துள்ளதோடு, இடைவெளிக்குப் பிறகு இயக்கத்துக்கு வந்திருக்கிறது. பங்கில் குறிப்பிட்ட கன்சாலி டேஷனுக்குப் பிறகு, வலுவான ஏற்றம் காணப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து மேலும் ஏற்றம் அடைவதற்கான பிரேக் அவுட் இருப்பதும் தெரிகிறது.

பங்கின் விலை ரூ.1,560 என்ற நிலையைத் தாண்டி பிரேக் அவுட் ஆகி வெற்றிகரமாக நகர்ந்தால் இப்பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் பங்கின் விலை 10% ஏற்றம் காண வாய்ப்புள்ளது. 1,360 ரூபாய்க்கு கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

சார்ட்
சார்ட்

ஹட்கோ (HUDCO)

தற்போதைய விலை ரூ.46.55

வாங்கலாம்

பங்குச் சந்தையில் பட்டியல் ஆன சில காலம் நன்றாகச் செயல்பாட்டில் இருந்தது. பின்னர் முதலீட்டாளர்களின் கவனப் பட்டியலிலிருந்து காணாமல் போனது. ஆனால், தற்போது இதன் மூன்றாம் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்திருப்பதால் பங்கு மீண்டும் வெளிச்சத் துக்கு வந்திருக்கிறது.

பங்கில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள ஒருங்கிணைப்பு பிரேக் அவுட் ஒன்றை உருவாக்கி மேல்நோக்கி நகர்த்த தயாராக உள்ளது. குறுகிய காலத்தில் பங்கின் விலை ரூ.65-70 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.40-ல் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பாலிகேப் (POLYCAB)

தற்போதைய விலை ரூ.1,324.50

வாங்கலாம்

புதிய உச்சங்களை எட்டும் பங்குகளை எப்போதுமே நமக்கு பிடிக்கும். அதுவும் துறையின் முன்னணி பங்குகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்போது கூடுதல் கவனம் பெறும். கேபிள் உற்பத்தி சார்ந்த அனைத்து நிறுவனங்களும் பாலிகேப் உட்பட சிறப்பான காலாண்டு முடிவுகளுடன் வந்திருக்கின்றன.

இதன் பங்கு விலை புதிய உச்சத்தில் இருப்பதோடு தொடர்ந்து ஏற்றமடையும் சாத்தியத்துடனும் உள்ளது. பங்கின் விலை ரூ.1,600 வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.1,250 என வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.