Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

BUY & SELL

இந்தியப் பங்குச் சந்தை புதிய உச்சங்களை எட்டியபிறகு தொடர்ந்து பாசிட்டிவ் போக்கை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததே இல்லை. உச்ச நிலைகளில் தன்னை தக்கவைத்துக் கொள்ள சந்தை முயற்சி செய்யும் போதெல்லாம் ஒருவித பதற்றம் உள்ளே நுழைந்து காளையின் ஆதிக்கத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும். மேலும், சந்தை அதன் ரெசிஸ்டன்ஸ் நிலையைத் தொட்ட பிறகு பெரிய அளவில் செயல்பாடு ஏதுமில்லாத நிலையிலேயே இருக்கிறது.

மேலும், உச்சநிலைகளில் அவசர அவசரமாக உருவாக்கும் சப்ளை தொடர்வதன் காரணமாகவும் சந்தையின் போக்கானது நீர்த்துப் போய்விடுகிறது. ஆனாலும் கடந்த வாரத்தில் சந்தை கண்ட இறக்கமானது, அதன் முக்கியமான சப்போர்ட் நிலைகளை மீண்டும் ஒருமுறை பரிசோதித்திருக்கிறது எனலாம். இந்த நிலைகளில்தான் தற்போது சந்தை நிலை கொண்டுள்ளது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

சார்ட்டில் காணப்படுவதுபோல் குறிப்பிட்ட வரம்பைச் சுற்றி காணப்படும் சமீபத்திய சப்போர்ட் நிலைகள், ஒரு குவியத்துடன் ஒருங்கிணைந்துள்ள 15000 என்ற நிலையானது கடப்பதற்குக் கடினமான சப்போர்ட் நிலையாக இருக்கும். மேலும், ஒரு மீடியன் லைன் சப்போர்ட்டும் உருவாவதைப் பார்க்க முடிகிறது. இது சந்தை மீண்டு வருவதற்கான நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. எனவே, பெரிய அளவில் நெகட்டிவ் போக்கு உருவாகாதவரை சந்தையின் போக்கு குறித்து கவலைப்படுவதற்குக் காரணம் ஏதும் தற்போது இல்லை. தொடர்ந்து வங்கிகளின் நிலை மேம்பட்டுக்கொண்டே இருப்பது காளையின் போக்குக்கு மிகவும் உந்து சக்தியாக இருக்கிறது. பொதுத்துறை வங்கிப் பங்குகள் மீண்டும் கவனம் குவியத் தொடங்கியிருப்பதால் வங்கித் துறையின் ஏற்றத்தின் போக்கில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும்.

காலாண்டு முடிவுகள், மத்திய பட்ஜெட் மற்றும் ரிசர்வ் வங்கி நிதி மற்றும் கடன் கொள்கை உள்ளிட்ட செய்திகளின் தாக்கம் முடிவடைந்து உள்ளதால் சந்தை தற்போது ஒருங்கிணைப்பு நிலையில் இருக்கிறது. எனவே, சந்தையில் காளையின் போக்கைத் தொடர்ந்து முடுக்கிவிட புதிய காரணிகளை நாம் தேட வேண்டியிருக்கிறது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, தற்போது சந்தையில் ஏற்படும் இறக்கங்களை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளாக எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஏற்றமும் லாங் பொசிஷன்களுக்கு எதிரான ஏரியா என்பதால், சந்தை தற்போது இறக்கத்தின் போக்கில் நகரவே வாய்ப்புள்ளது.

நிஃப்டி தற்போது கடந்த வார கன்சாலிடேஷன் நிலைக்கு அருகில் 14950 என்ற வரம்புக்குள் மீடியன் லைன் சப்போர்ட் நிலையை நோக்கி நகர்ந்துள்ளது. மேலும், எல்லா குறியீடுகளும் ஒன்றாக மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பதால் நாம் முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்கிறோம்.

லார்ஜ்கேப் பங்குகளின் செயல்பாடு குறைந்துள்ள நிலையில் வரும் வாரத்தில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் செயல்பாடு காணப்படும் என்பதால், மாதாந்தர எக்ஸ்பைரியும் வரவுள்ள நிலையில் அதை சார்ந்து நம்முடைய செயல்பாடுகளைத் திட்டமிடலாம்.

பங்குகள்
பங்குகள்

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ்
(INDIABULLS HOUSING FINANCE)
வாங்கலாம்
தற்போதைய விலை ரூ.231.25

அண்மைக் காலத்தில், இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கின் விலையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

பங்கின் விலை ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இறக்க ஆரம்பித்து அதன் டிரெண்ட்லைன் சப்போர்ட் ஆன ரூ.190 வரைக்கும் இறக்கம் கண்டது. இதன்பிறகு பங்கின் விலை ஏற்றம் காண ஆரம்பித்தது. இறங்கி வேகத்திலேயே ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.

விரைவான மற்றும் ஆற்றல் மிகுந்த ரிவர்சல் பங்கின் விலையில் நடந்திருக்கிறது. இந்த நிறுவனம் பற்றிய பாசிட்டிவ் செய்திகளும் பங்கு விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது.பங்கின் விலை ரூ. 265-க்கு உயரக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ. 222 வைத்து கொள்ளவும்.

சி.ஜி பவர் (CGPOWER )
வாங்கலாம்
தற்போதைய விலை ரூ.47.70

கடந்த இரு ஆண்டுகளாக மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலை அதிக இறக்கத்தில் இருந்தது. 2020–ம் ஆண்டில் சற்று ஏற்றம் காண ஆரம்பித்தது. இப்போது இந்தப் பங்குகள் நல்ல ஏற்றம் காண ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், சி.ஜி பவர். இந்தப் பங்கின் விலை சார்ட்டில் அருமையான வட்ட வடிவ பேட்டன் உருவாகியிருக்கிறது. இது பங்கில் ஒரு மொமென்டத்தை உருவாக்கியிருக்கிறது. மின் உற்பத்தி நிறுவனப் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் மீண்டும் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பங்கின் விலை ரூ.60-க்கு உயரக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.46 வைத்துக் கொள்ளவும்.

சார்ட்
சார்ட்

ஜே.கே பேப்பர் (JKPAPER)
வாங்கலாம்
தற்போதைய விலை ரூ.145.90

இந்த நிறுவனப் பங்கின் விலை 2018–ம் ஆண்டு மத்தியில் ஆரம்பித்தது. இது 2020 மார்ச் 20–ம் தேதி வரைக்கும் தொடர்ந்தது. பங்கின் விலை சுமார் ரூ.60 வரைக்கும் இறக்கம் கண்டது. இந்த நிலை யிலிருந்து பங்கின் விலை ஏற்றம் காண ஆரம்பித்தது. தற்போதைய நிலையில் மேலும், ஏற்றம் காண்ப தற்கான போக்கு காணப் படுகிறது. ரூ.140 நிலையில் அருமையான வட்ட வடிவ பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. கடந்த வாரத்தில் புதிய உச்சத்தை உருவாக்கியது. மேலும், 61.8% ஃபெபோனாசி ரெசிஸ்டன்ஸ் நிலையைத் தாண்டியிருக்கிறது.

இறக்கத்திலிருந்து 50% ஏற்றத்தின் போக்கில் இருக்கிறது. தற்போதைய நிலையில் முதலீடு செய்யலாம். ரூ.140 வரைக்கும் இறங்கினாலும் முதலீடு செய்யலாம். இலக்கு விலை ரூ. 165-ஆக உள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ. 135 வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.