இந்தியப் பங்குச் சந்தை கடந்த வாரம் பெரிதாக சோபிக்கவில்லை. காலாண்டு நிதிநிலை முடிவுகள் வரத் தொடங்கியும் சந்தை ஏற்றம் பெறவில்லை என்பது கொஞ்சம் கவலைக்குரிய விஷயமே!

சந்தேகத்திற்கு இடமின்றி, இரண்டு முக்கிய ஐ.டி நிறுவனங்கள் (இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்) நல்ல நிதிநிலை முடிவுகளைத் தந்துள்ளன. அவை தவிர, பிற நிறுவனங்கள் பெரிதாகக் குறிப்பிடும்படியான முடிவுகள் எதுவும் தரவில்லை. வரும் பல நிறுவனங்களின் சிறந்த நிதிநிலை செயல்பாட்டால் சந்தை சிறப்பாகச் செயல்படக்கூடும்.

ஒட்டுமொத்தமாக, பங்குச் சந்தையின் செயல்பாடு ஒரு வரம்புக்குள் உள்ளது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மத்திய பட்ஜெட் தொடர்பான தாக்கம் குறைந்துவிட்டதால், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் பக்கம் கவனம் திரும்பி இருக்கிறது. அந்த வகையில், வரும் வாரங்களில் தனிப்பட்ட பங்குகளின் செயல்பாடே மேலோங்கி இருக்கக்கூடும்.

வியாழக்கிழமை அன்று நிஃப்டியின் விலை சார்ட்டில் ‘ஈவினிங் ஸ்டார் பேட்டர்ன்’ உருவாகியிருந்தது. அதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை அன்று நிஃப்டி புள்ளிகள் இறக்கம் கண்டன. இதேபோல், பேங்க் நிஃப்டி சார்டிலும் அது இறக்கம் காணும் என்பதற்கான பேட்டர்ன் உருவாகியிருந்தது. இந்த இரண்டும் குறுகிய காலத்தில் சந்தை இறக்கம் காணும் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகள் நல்லபடியாக வந்தால், இந்த நிலையைத் தவிர்க்கலாம்.

இந்த நேரத்தில் சந்தை மோசமான செய்திகளால் ஓரளவு பாதிக்கப்படக்கூடும் என்பதையும் இது குறிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் சந்தைகளுக்கு எதுவும் இல்லை; அது சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட்டிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐ-க்கள்) விற்பனை செய்தே வருகின்றன. எனவே, நாம் சற்று கடினமான காலத்தில் இருக்கிறோம் என்று தெரிகிறது.

இந்தச் சூழலில் சந்தையில் பங்கேற்பதைவிட ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது பாதுகாப்பாக இருக்கும். ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டும் வர்த்தகத்தில் ஈடுபடலாம். பெரிய நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள்தான் வரும் வாரங்களில் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்.

கோல்கேட் பாமோலிவ் (COLPAL)

தற்போதைய விலை: ரூ.1,173.55

வாங்கலாம்

எஃப்.எம்.சி.ஜி பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றத்தில் உள்ளன. குறிப்பாக, சில பன்னாட்டு நிறுவனங் களின் பங்குகளுக்கு நிறைய தேவை இருக்கிறது. இதுவும் அதேபோன்ற ஒருபங்குதான்.

இந்த நிறுவனத்தின் செயல்பாடு நன்றாக இல்லாமல், பங்குச் சந்தையில் நல்ல நிலைக்கு வருவது கடினம். பன்னாட்டு நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்குப் பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்கின்றன.

கோல்கேட் பாமோலிவ் பங்கு விலை நகர்வில் சமீபத்தில் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் காணப்பட்டது. அது பிரேக் அவுட் ஆகக்கூடும். அதிகரிக்கும் வால்யூம் மற்றும் விலை நகர்வு போன்றவை பங்கு விலை தொடர்ந்து மேல்நோக்கி நகர உதவக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.1,170 வைத்து வாங்கலாம். இலக்கு விலை ரூ.1,350.

எம்பஸிஸ் (MPHASIS)

தற்போதைய விலை: ரூ.931.90

வாங்கலாம்

ஐ.டி நிறுவனப் பங்குகளின் செயல்பாடு தற்போது சற்று தாழ்ந்து இருக்கின்றன. பல நிறுவனப் பங்குகள் விலை, சிறிது சரிவைச் சந்தித்துள்ளன. எம்பஸிஸ் நிறுவனப் பங்கும் இறக்கம் கண்டு, கடந்த 100 வாரங்களின் சராசரியைவிடக் கீழேயும் சென்றது. அதன்பின் கீழிறங்காமல் நின்று தற்போது முக்கியமான ஆதரவின் மூலமாக இருமுறை மேலேறியிருக்கிறது.

இதன் ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர் பொதுப்படையான தளத்தில் காணப் படுகிறது. இந்தப் பங்கு, மேல்நோக்கி நகர்வதற்கான ஓர் உந்துதலுக்காகக் காத்திருப்பதாகத் தெரிகிறது. காலாண்டு நிதிநிலை முடிவுகள் நல்லதாக வந்தால், அது சாத்தியமாகக்கூடும்.

தற்போதைய விலையில் இதனை வாங்குவது குறைந்த ரிஸ்க்காகத் தெரிகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.900 வைத்து வாங்கலாம்.

ஜி.எம்.எம் ஃபாட்லெர் (GMMPFAUDLR)

தற்போதைய விலை: ரூ.1,279.00

வாங்கலாம்

பங்குச் சந்தையில் வரவேற்புப் பெற்ற துறைகளில் ரசாயனத் துறையும் ஒன்றாகும். அந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நல்ல நிலையில் செயல் படுகின்றன. ரசாயனத் துறைக்கு தேவை யான கண்ணாடியிலான பொருள்கள் தயாரிப்பதில் ஜி.எம்.எம் முக்கியமான நிறுவனமாகும். இதன் பங்கின் விலை நீண்ட காலப் போக்கு மேல்நோக்கியதாகவே இருக்கிறது. இதன் நகர்விலிருக்கும் ஒவ்வொரு மீட்சியும் வாங்குவதற்கு அல்லது கூடுதலாக முதலீடு செய்யத் தூண்டுவதாக இருக்கும்.

ஜி.எம்.எம் பங்கு சிறிது மீண்டெழுந்து. 100 இ.எம்.ஏ என்ற ஆதரவைப் பெறுகிறது. அதன்பின் மீண்டும் பங்கு விலை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,290 வைத்து வாங்கவும். இலக்கு விலை ரூ.1,450. .

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.