நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
பங்கு முதலீடு

B U Y & S E L L

இந்தியப் பங்குச் சந்தையின் சமீபத்திய நகர்வுகள் திசையறியாது காணப்பட்ட நிலையில் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரியின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது இறக்கம் சற்று கடுமையாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்த மாதத்தின் பாதியிலிருந்தே கரடியின் ஆதிக்கம் இருந்துவருகிறது. பிப்ரவரியில் சப்போர்ட் நிலைகளிலிருந்து மீண்டுவந்த நகர்வுகள் மீண்டும் நம்பிக்கையைத் தந்தன. ஆனாலும் உச்ச நிலைகளில் தொடர்ந்து இறக்கம் காணப்பட்டதால் அந்த நம்பிக்கை காணாமல் போனது. இது இறக்கத்தின் போக்கை அதிகரித்தது. மோசமான கரடியின் ஆதிக்கம் காணப்பட்டாலும் அது ஷார்ட் எடுப்பதற்கான அழைப்பாகவே இருந்தது. அந்நிய முதலீட்டாளர்களின் செயல்பாட்டிலும் முரண்பாடுகள் காணப்பட்டதால் அதன் தாக்கம் பங்குச் சந்தையின் போக்கில் எதிரொலித்தது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

கடந்த வாரம் முழுவதும் கடும் ஏற்ற இறக்கமான போக்கு இருந்தது. எந்தத் துறையும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒட்டுமொத்த சந்தையின் செயல்பாட்டையும் பார்க்கும்போது 14300 என்ற நிலையில் தற்காலிக தடை இருப்பது தெரிகிறது. தற்போதுள்ள கரடியின் போக்கு ஒருங்கிணைப்புக்குத் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. காரணம், நகர்வுபோக்கில் உருவாகியுள்ள சிறிய நிழல் கேண்டில் பேட்டர்ன்கள் சந்தை மீண்டு வருவதற்கான நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது.

சந்தையின் போக்கை பார்த்ததிலிருந்து நிஃப்டியின் தினசரி சார்ட்டுகளில் இருந்த வலுவான சப்போர்ட் நிலைகள் முடிவுக்கு வந்துவிட்டன. இறக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சி நிச்சயம் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும், சந்தையின் போக்கில் அழுத்தம் தொடர்ந்து காணப்படுகிறது. எனவே, நாம் அடுத்த சில நாள்களில் தொடர்ந்து சப்ளை காணப்படும் பட்சத்தில் உண்டாகும் சந்தையின் போக்கைப் பயன்படுத்த தயாராக வேண்டும். தற்போது இறக்கத்தின் போக்கில் 13500 என்ற நிலையைக் கவனிக்க வேண்டும்.

அடுத்த மாதத்தில் சந்தையின் நகர்வு சற்று குறைவாகவே இருக்கும். மேலும், இன்னொரு முக்கியக் காரணி, வரும் வாரம் ஈடுபாடு குறைவாக இருக்கும் என்பதால் சந்தை பங்களிப்பு கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கும். சமீபத்தில் கவனிக்க வேண்டிய நிலைகள் நிஃப்டி 14300 மற்றும் ஏற்றத்தின் போக்கில் 14900 என்ற நிலைகளை அடுத்த சில வாரங்களுக்குக் கவனிக்க வேண்டும். எனவே, தெளிவான போக்கு தெரியும் வரை இறக்கத்தில் முதலீடு செய்து ஏற்றத்தில் விற்பனை செய்வது சிறந்தது. திறந்த மனநிலையுடன் சந்தையை அணுகினால் எப்போதும் வாய்ப்புகள் இருப்பதைக் கண்டடையலாம்.

வங்கிப் பங்குகள் கடுமையாக இறங்கி அதன் முக்கிய சப்போர்ட் நிலையான பேங்க் நிஃப்டி 33000-32750 என்ற வரம்புக்கு நகர்ந்தது. இதிலிருந்து மீள சில காலம் ஆகும். மேலும், ஐ.டி பங்குகளும் திசையறியாமல்தான் தொடர்கின்றன. வரும் வாரங்களில் இவை ஏதேனும் உதவியாக இருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காதபட்சத்தில் அமைதியாக மற்றுமொரு வாரத்தை கன்சாலிடேஷனுக்காக விட வேண்டியதுதான்.

சார்ட்
சார்ட்

பிரஸ்டீஜ் எஸ்டேட் (PRESTIGE)

தற்போதைய விலை: ரூ.305.20

வாங்கலாம்

இந்தத் துறை சில காலமாகவே ஏற்ற இறக்கத்தில்தான் இருந்துவருகிறது. ஆனாலும் மெட்டல் துறையில் பிரஸ்டீஜ் எஸ்டேட் பங்கில் பாசிட்டிவ் போக்கு காணப்படுவதோடு நல்ல ஏற்றத்தை அடைந்து தன்னை தக்கவைத்துக்கொண்டு மேலும் ஏற்றமடையவும் தயாராக இருக்கிறது. இதில் சமீபத்திய கன்சாலிடேஷன் முடிவுக்கு வந்து பாசிட்டிவ் போக்கில் 300 என்ற ரெசிஸ்டன்ஸ் நிலையைக் கடந்து நகர இருக்கிறது. நல்ல ரவுண்டிங் பேட்டர்னும் பிரேக் அவுட் ஆக இருக்கிறது. மேலும், இதில் டிமாண்டும் சிறப்பாக இருப்பதால் வரும் நாள்களில் ஏற்றம் காணப்படும்.குறுகியகாலத்தில் பங்கின் விலை 330 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போதைய விலையிலும் ரூ.290 வரை இறக்கத் திலும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.280-ல் வைத்துக்கொள்ளவும்.

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் (GODREJIND)

தற்போதைய விலை: ரூ.525.05

வாங்கலாம்

இந்தப் பங்கில் சமீபத்தில் உண்டான பிரேக் அவுட் நீண்ட காலத்துக்கு தலை, தோள்பட்டை பேட்டர்னுடன் கடந்த சில மாதங்களாகவே காணப்படுகிறது. இந்த பிரேக் அவுட்டிலிருந்து ஏற்பட்ட ஏற்றமானது அதன் மோசமான முந்தைய அனுபவத் தைச் சரிசெய்யும் அளவுக்கு நன்றாக ஏற்றம் கண்டது. அதில் காணப்பட்ட நல்ல பேட்டர்ன் அதன் 450 என்ற நிலைகளில் பரிசோதனை செய்து புதிய உச்சத்தை கடந்த வாரத்தில் கடந்து ரெசிஸ்டன்ஸ் நிலையாக உருவானது. இந்தப் பங்கின் பேட்டர்னில் அடுத்த இலக்கு ரூ.700 என்ற நிலையில் காணப்படுகிறது. தற்போதைய விலையிலும் ரூ.470-480 வரை யிலான இறக்கத்திலும் வாங் கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.460-ல் வைத்துக்கொள்ளவும். ரூ.625 வரை உயர வாய்ப்புள்ளது.

பிர்லா கார்ப் (BIRLACORPN)

தற்போதைய விலை: ரூ.878.00

வாங்கலாம்

சிமென்ட் துறை பங்குகள் கடந்த சில வாரங்களாக கன்சாலி டேஷன் நிலையில் இருந்து வருகிறது. அதிலிருந்து மீண்டு வரும் நிலையான போக்கு பங்கின் மீது கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிலையான ஏற்றம் பங்கில் நல்ல ரவுண்டிங் பேட்டர்னை உண்டாக்கியிருக்கிறது தெளிவாகத் தெரிகிறது. இது நல்ல மொமென்டத்தை உண்டாக்கும். இந்தத் துறையில் மீண்டும் ஆர்வம் திரும்பி யிருப்பதால் இந்தப் பங்கு அடுத்த சில நாள்கள் ஏற்றத்தை அடைய வாய்ப்பு உள்ளது. ரூ.950 வரை உயர வாய்ப்புள்ளது.

தற்போதைய விலையிலும் ரூ.850 வரையிலான இறக்கத்திலும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.825 என வைத்துக் கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.