பிரீமியம் ஸ்டோரி

காலாண்டு நிதிநிலை முடிவுகள் நல்லவிதமாக வரவேண்டியதன் தேவை குறித்து கடந்த வாரத்தில் குறிப்பிட்டிருந்தோம். சந்தையின் நடவடிக்கையைச் சற்றுக் கவனித்து, எச்சரிக்கை உணர்வுடன்கூடிய அணுகுமுறையை இனியும் தொடர்வது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அனைத்து ஆதரவு நிலைகளையும் தகர்த்துவிட்டு, நிஃப்டி 11000-க்குக் கீழும், பேங்க் நிஃப்டி 28000-க்குக் கீழும் முடிந்திருக்கிறது. சந்தை பெரிய சரிவிலிருக்கும்போது கவனத்துடன் செயல்படுவது தான் விவேகமான அணுகுமுறை. இந்தச் சரிவு, டிரேடர்களின் சென்டிமென்டைத் தகர்த்து, வர்த்தகர்கள் மத்தியில் பீதி கிளப்புவது போன்ற உணர்வைத் தந்துள்ளது. முதலீட்டாளர் களும்கூட மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் இண்டெக்ஸ்களுக்கும் முந்தைய அதிகபட்ச இறக்கத்தையும் தாண்டி இறங்கி இருக்கிறது. பல்வேறு துறை சார்ந்த இண்டெக்ஸ்களுக்கும்கூட இதே நிலை தான். பாதகமான செயல்பாடே பெரிதும் இருந்ததால், அனைவரின் சென்டிமென்டுகளையும் பாதித்துள்ளது.

நிஃப்டி 11000-க்குக்கீழேயும், பேங்க் நிஃப்டி 28000-க்குக்கீழேயும் செல்லும்போது விற்பனை முடிவுக்கு வந்து, மேல்நோக்கிய நகர்வுக்கான சிறிய முயற்சி தொடங்கக்கூடும். அப்படியான அந்த முயற்சி புதிதான ஒன்றைப்போலவே இருக்கும். இதில் வெற்றிகரமான நகர்வுக்குத் தொடர்ச்சியான செயல்பாடுகள் தேவைப்படும். சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவில் முதலீட்டாளர் களும் சிக்கிக்கொண்டனர்.

மேலும், இந்தக் காலாண்டு முடிவுகள் சீசன் சாதகமானதாக அமையவில்லை. 50 சதவிகிதத்துக்கும் மேலான நிஃப்டி பங்குகள் ஒட்டுமொத்த வருமான வளர்ச்சி 7 சதவிகிதத்துக் கும் குறைவாக இருக்கின்றன. இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியல்ல. சந்தையின் வருவாய் வளர்ச்சியானது, இன்னும் ஓரிரு காலாண்டுகளுக்கு சந்தை இறக்கத்திலேயே இருக்குமென காட்டுகிறது. சந்தையின் போக்கு ஒரு வரம்புக்குள்ளேயே இருக்கக்கூடும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அதிகமாக வர்த்தகமான பங்குகள் பல்வேறு இண்டெக்ஸ்களில் உள்ளன. அவை மீண்டும் வர்த்தகமாக வாய்ப்புள்ளன. சந்தையில் தொடர்ந்து இ்ருப்பவர்களுக்குக் குறுகியகால முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. சில சாதகமான செய்திகள் வருவதன் அடிப்படையில் சந்தையில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.

சந்தையின் சென்டிமென்டுகள் பாதிக்கப்படும் போது அதிலிருந்து மீண்டுவந்து முதலீடுகளைத் தொடர்வதற்கான காலக்கெடு நீண்டதாக இருக்குமென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

டாக்டர் சி.கே.நாராயண் 
நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES

வரும் வாரத்தில், நிஃப்டி 11300 மற்றும் பேங்க் நிஃப்டி 28500 நிலைகளில் நல்லதொரு உந்துதல் உருவாகி சந்தை மேலெழக்கூடும். இறங்கினால் 10800-10900 என்ற அளவுகளுக்கு அருகே இப்போதுள்ள நிலையிலிருந்து மேலும் சரியக் கூடும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாடா குளோபல் (TATAGLOBAL)

தற்போதைய விலை: ரூ.265.60

வாங்கலாம்.

இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு 2019-ம் ஆண்டு ஆரம்பத்தில் இறக்கத்தில் இருந்தது. இப்போது ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. பங்கின் விலை சார்ட்டில் ஹையர் டாப் மற்றும் பாட்டம் பேட்டர்ன் உருவாகி யிருக்கிறது.

தொடர்ந்து இந்தப் பங்கின் விலை உயரும் என்பதைத்தான் வரைபடம் காட்டுகிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கினை வாங்கலாம். சில மாதங்களில் பங்கின் விலை ரூ.320-ஐ தாண்டக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மாரிக்கோ (MARICO)

தற்போதைய விலை: ரூ.372.65

வாங்கலாம்.

ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவு களுக்குமுன்பாக இந்தப் பங்கு குறித்த முதலீட்டு முடிவுகளை எடுக்கமுடியாத நிலை காணப்பட்டது. ஏனெனில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருந்தது. தற்போதும் அதே நிலை தொடர்ந்தாலும் காலாண்டு முடிவுக்குப்பிறகு இந்தப் பங்கை வாங்கலாம் என்கிற நிலைக்கு வர முடிகிறது. மொமன்டம் இண்டி கேட்டரும் பங்கின் விலை ஏற்றத்தைச் சந்திக்கும் என்பதையே காட்டுகிறது. குறுகிய கால இலக்கு விலை ரூ.412. ஸ்டாப்லாஸ் ரூ.360 வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஏசியன் பெயின்ட்ஸ் (ASIANPAINT)

தற்போதைய விலை: ரூ.1545.20

வாங்கலாம்.

இந்த நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை முடிவுகள், லாபகரமாக வெளி வந்திருக்கிறது. அதனால் இந்தப் பங்குக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கு முன்பாக, இந்தப் பங்கின் விலையானது இறக்கத்தில் இருந்தது. காலாண்டு முடிவுகள் வெளிவந்தபிறகு ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. தற்போதைய நிலையில், பங்கின் விலை வரைபடத்தில் ஃப்ளாக் பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. இந்தப் பங்கின் விலையானது வருகிற வாரங்களில் ரூ.1,600 - 1,625 என்கிற புதிய உச்சத்திற்குச் செல்லும் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,500 வைத்துக்கொள்ளவும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு