நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

மார்க்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
மார்க்கெட்

B U Y & S E L L

என்.எஸ்.இ பங்குச் சந்தையின் சர்வர்கள் செயல் இழந்து, பங்கு வர்த்தகம் தடைபட்டுப் போனதால், நவீன டிரேடர்கள் பரிதவித்துப் போனார்கள். அதே நேரத்தில், மதியத்துக்கு மேல் நீட்டிக்கப்பட்ட வர்த்தக நேரத்துடன் என்.எஸ்.இ பங்குச் சந்தை செயல்பட்டதால், வர்த்தகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். மத்திய அரசு, சில பொதுத் துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்கப்போகிறது என்கிற செய்தியால் தனியார் வங்கிப் பங்குகளின் விலை உயர்ந்து வர்த்தகமானது.

பிப்ரவரி 25–ம் தேதி மாதத்தின் கடைசி வியாழக்கிழமை என்பதால், அன்று ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்கள் நிறைவடையும். அன்றைய தினம் கிட்டத்தட்ட 20 – 20 கிரிக்கெட் ஆட்டம் போல் சந்தையில் வர்த்தகத்தின் போக்கு காணப்பட்டது. ரன்கள் எடுப்பது அல்லது விக்கெட் வீழ்த்துவது போன்ற பரபரப்பு காணப்பட்டது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

எக்ஸ்பைரி தினம் என்பதால், ஷார்ட் கவரிங் அதிகம் காணப்பட்டது. சென்செக்ஸ், நிஃப்டி, பேங்க் நிஃப்டி குறியீடுகள் ஏறி முடிந்திருக்கின்றன. வேகமான உற்சாகம் சந்தைக்குள் மீண்டும் ஒருமுறை நுழைந்து, இப்போது அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. கீழ்நிலைகளில் மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் அதிக முதலீடு நடந்திருக்கிறது. தொடர்ச்சியான ஏற்றம் மற்றும் நிலையாகத் தொடரும் நம்பிக்கை ஆகியவை கரடியின் முகாமுக்குள் சந்தையைக் கொண்டு செல்லாமல் தடுத்து வருகிறது. சார்ட்களின்படி பார்க்கும்போது, சந்தையில் காளையின் மொமென்டத்தைப் பார்க்க முடிகிறது. கீழ்நிலைகளில் அதிக பீட்டா பங்குகளுக்கு மீண்டும் தேவை உருவாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது.

எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி தினத்தில் நிஃப்டி புள்ளிகள் 15000-க்குமேல் நிறைவு பெற்றிருப்பது சந்தை ஏற்றத்தின் போக்கில் இருப்பதைக் காட்டுகிறது. நிஃப்டி புள்ளிகள் 15200-க்குமேல் உயரும் போது ஏற்றத்தின் போக்குத் தொடரும் எனலாம். வாரத்தின் இடையில் நிஃப்டி புள்ளிகள் 14900-14950-க்கு இறங்கும் பட்சத்தில் அதைப் பங்குகளை வாங்கு வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மீண்டும் பேங்க் நிஃப்டி ஏற்றத்துக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில், ரெசிடன்ஸ் 37000 என்பது தொடர்கிறது. வங்கித் துறை குறித்த பாசிட்டிவ் செய்தி களால் ஏற்றம் தொடரக்கூடும். பேங்க் நிஃப்டி குறியீடு 35000-க்கு இறங்கினால் அதை வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உலக அளவில் நெகட்டிவ் செய்திகள் இல்லை என்பதால், பங்குச் சந்தைகள் சில சமயங்களில் பதற்றமானபோதிலும் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கின்றன.

பேங்க் நிஃப்டி ஏற்றம் கண்டு வருவதால், கூடவே நிதிச் சேவை நிறுவனங்களை அதிக வெயிடேஜ் கொண்ட் நிஃப்டி இண்டெக்ஸும் ஏற்றம் கண்டுவருவதைப் பார்க்கிறோம்.

ஏற்ற இறக்கத்தை சந்தை எவ்வாறு கையாளும் என்பதை வரும் வாரத்தில் நாம் பார்க்கலாம். குறியீடுகளின் ஏற்றம் உறுதியாக இல்லாத நிலையில் குறிப்பிட்ட பங்குகளில் வர்த்தகம் மேற்கொள்ள சாதகமான சூழல் இருக்கும்.

நிஃப்டி,  டாடா ஸ்டீல் பி.எஸ்.எல், ஸென்சார் டெக், ஜி.எஸ்.எஃப்.சி
நிஃப்டி, டாடா ஸ்டீல் பி.எஸ்.எல், ஸென்சார் டெக், ஜி.எஸ்.எஃப்.சி

டாடா ஸ்டீல் பி.எஸ்.எல் (TATA STEEL BSL)

தற்போதைய விலை ரூ.47.60

வாங்கலாம்

அண்மைக் காலத்தில் இந்தப் பங்கின் விலையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது.மெட்டல் நிறுவனப்பங்குகளில் சில பாசிட்டிவ் நிலைகள் காணப் படுகின்றன. இதனால் இந்த நிறுவனப் பங்கு விலை ஏற்றம் காணும் எனலாம். இதன் அண்மைக்கால ரெசிஸ்டன்ஸ் சுமார் ரூ.46-ஆக உள்ளது. மேலும், பங்கின் விலை சார்ட்டில் அருமையான வட்ட வடிவ பேட்டர்ன் உருவாகி பிரேக் அவுட் ஆகியிருக்கிறது.

இந்தப் பங்குகளுக்கு அதிக தேவை உருவாகியிருப்பதால் வரும் வாரங்களில் பங்கின் விலை இன்னும் ஏற்றம் காணலாம். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். பங்கின் விலை சுமார் 43-க்கு குறைந்தாலும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.41 வைத்துக் கொள்ளவும்.

ஸென்சார் டெக் (ZENSAR TECH)

தற்போதைய விலை ரூ.296.75

வாங்கலாம்

கடந்த சில வாரங்களாக ஐ.டி நிறுவனப் பங்குகளின் விலை அதிக ஏற்றம் இறக்கம் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரே நிலையில் காணப்பட்டது. இப்போது இந்த நிலை மாறி ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.

இந்தப் பங்கின் விலை சார்ட்டில் அருமையான வட்ட வடிவ பேட்டன் உருவாகியிருக் கிறது. இது பங்கின் விலை ஏற்றத்தில் மொமென்டம் இருப் பதைக் காட்டுகிறது.

இந்தத் துறை மீது முதலீட் டாளர்களுக்கு மீண்டும் ஆர்வம் வந்திருக்கிறது. பங்கின் விலை ரூ.350-ஐ நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். பங்கின் விலை சுமார் 270-க்கு குறைந் தாலும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.260 வைத்துக் கொள்ளவும்.

ஜி.எஸ்.எஃப்.சி (GSFC)

தற்போதைய விலை ரூ.88.50

வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்கின் விலை, இறக்கத்திலிருந்து ஏற்றத்துக்குத் திரும்பி விலை மேலும் ஏறும் என்கிற நிலை காணப்படும்.

இந்தப் பங்கின் விலை சார்ட்டில் ரூ. 85 அருகே அருமையான வட்ட வடிவ பேட்டர்ன் உருவாகி யிருக்கிறது. கடந்த வாரத்தில் பங்கின் விலை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

பங்கின் விலை இறக்கத்திலிருந்து 50% ஏற்றம் கண்டிருக்கிறது. பங்கின் விலை ரூ.95-ஐ நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். பங்கின் விலை சுமார் 85-க்கு குறைந் தாலும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.83 என வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.