Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

டந்த வாரத்தில் பயம் சூழ்ந்திருந்த பங்குச் சந்தை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்குப்பின் சிறிது மீண்டது. ஆனாலும், சிறிய ஏற்றத்துக்குப்பின் சந்தையைக் காளை கைவிட்டு விட்டது. இதன் விளைவாக, பல நிறுவனப் பங்குகளின் விலை மேலும் இறங்கியுள்ளது. எஃப் & ஓ ரோல் ஓவர் கடந்த மூன்று மாதங்களாக இறக்கத்தில் உள்ளது. பங்குச் சந்தையின் சென்டிமென்ட் தொடர்ந்து நம்பிக்கையளிப்பதாக இல்லை.

டாக்டர் சி.கே.நாராயண் 
நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES

மத்திய அரசாங்கத்தின் தரப்பிலிருந்து தொடர்ந்து நல்ல விதமான அறிவிப்புகள் வரவேண்டும். வரவுள்ள அறிவிப்புகளின் தன்மையைப் பொறுத்தே சந்தை மீளும். சந்தையின் நம்பிக்கை பெருமளவு குறைந்திருக்கும்போது அரசாங்கத்தின் சிறிதளவு அறிவிப்புகள் போதுமானதாக இருக்காது.

2019 ஆண்டுக்கான நிஃப்டி சார்ட்டைப் பார்த்தால், இந்த ஆண்டின் தொடக்கத்தை 10900 வரம்பில் தொடங்கியிருப்பது தெரியும். அதிலிருந்து ஓரளவு உயர்ந்து, மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பியுள்ளது. ஆக, எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் சந்தை எந்தப் புதிய உயரத்தையும் தொடவில்லை. இது 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த நிலையிலேயே தற்போது சந்தையைப் பொறுத்தவரை, இது பயனற்ற ஆண்டாகவே உள்ளது. இது முதலீட்டாளர்களிடையே விரக்தியை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. எனவே, மூழ்கியுள்ள சந்தை, சரிவிலிருந்து மீள்வதற்கு மிகப் பெரிய நிகழ்வு ஒன்று நமக்குத் தேவைப்படுகிறது.

குறுகிய கால சார்ட்டில் சந்தையின் போக்கு நிதானமாகவே உள்ளது. இப்போதைக்கு இந்தப் போக்கு இதே வரம்புக்குள் நீடிக்கக்கூடும். வேறெந்த செய்திகளும் இல்லாத நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகின்றன. இதன் காரணமாக, வர்த்தக நாள்களுக்கு இடையேயும், வர்த்தக வாரத்துக்கு இடையேயும் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அடுத்த வாரம், விரைவாகச் செயல்படும் வர்த்தகர்களுக்கானதாக இருக்கக்கூடும். பங்குச் சந்தையில் புதிய செய்திகளால் அதிக விற்பனை நடைபெற்றால், நல்லதொரு வழி கிடைக்கும். நிஃப்டி 10900 புள்ளிகளில் நல்லதொரு ஆதரவு காணப்படுகிறது. மாதாந்தர சார்ட்டில் சப்போர்ட் ட்ரெண்ட் லைனைக் காணமுடிகிறது. ஆகஸ்ட் மாத கேண்டிலின் மேல்பகுதியில் செப்டம்பர் மாதத்தில் நல்லதொரு டிரேடிங் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் (METROPOLIS)

தற்போதைய விலை: ரூ. 1162.00

வாங்கலாம்

நோய்கள் கண்டறியும் ஆய்வகத் துறையில் இருக்கும் மெட்ரோபொலிஸ் நிறுவனத்தின் வளர்ச்சியானது, படிப்படியாக முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தத் துறையில் போட்டி நிறுவனங்கள் குறைவாக உள்ளன.

இதன் பங்கு விலை வரைபடத்தில் கடந்த ஜூலை மாதத்தில் நடுப்பகுதியில், பங்கின் விலை ஏற்றத்தைக் கண்டது. அதற்கடுத்த ஆறு வாரம் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் வர்த்தகமானது. தற்போது பங்கின் விலை ஏறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. வரும் வாரங்களில் இன்னும் அதிகரிக்கும். இலக்கு விலை ரூ.1,220 வைத்துக்கொள்ளவும். இதன் ஸ்டாப் லாஸ் ரூ.975.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கிரெடிட் அக்ஸஸ் கிராமீன் (CREDITACC)

தற்போதைய விலை: ரூ. 559.95

வாங்கலாம்

கடந்த வாரத்தில் சில மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி இருக்கின்றன. இதில் ஒன்று, கிரெடிட் அக்ஸஸ். இந்தப் பங்கின் விலை சார்ட், ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமான பங்கின் விலை மாறி, இப்போது ஏறும் என்பதைக் குறிப்பிடுகிறது. வரும் நாள்களின் பங்கு விலை ஏற்றம் கண்டு, புதிய உச்சத்தைத் தொடக்கூடும். இதன் ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர் பங்கு விலை ஏறும் என்பதையே காட்டுகிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.565 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.600.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டெல்டா கார்ப் (DELTACORP)

தற்போதைய விலை: ரூ. 176.50

வாங்கலாம்

டெல்டா கார்ப்பரேஷன் நிறுவனப் பங்கு விலை, காலாண்டு நிதிநிலை முடிவுக்குப்பிறகு இறக்கத்தில் இருக்கிறது. தற்போதைய இறக்கம் தடைபட்டு, புதிய முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை வாங்க ஆரம்பித் திருக்கிறார்கள். ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டரும் இறக்கத்தில் இருந்த பங்கின் விலை ஏறும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். வரும் வாரங்களில் இந்தப் பங்கின் விலை ரூ.200-220-க்கு உயரக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.160 வைத்துக்கொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.