Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ் ஏற்றம் நிலையாக இருக்கும் வரை மிட்கேப் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

டந்த வாரம் `இந்தியப் பங்குச் சந்தை, தொடர் ஏற்றத்தையும், நிலையான சந்தைச் செயல்பாட்டையும்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தோம். `நிஃப்டி 10500 என்ற நிலையில் நிலைபெறும் வரை காளையின் போக்குத் தொடரும்’ எனக் கூறியிருந்தோம். இதற்காகப் பெரிய அளவில் சந்தை சிரமப்பட வேண்டியிருக்கவில்லை. நிஃப்டியின் நகர்வுக்கு ரிலையன்ஸ் பங்கின் பங்களிப்பு பெரிய அளவில் உதவியாக இருந்தது. அதன் புதிய விலை ஏற்றம் இண்டெக்ஸையும் மேல்நோக்கி நகர்த்தியிருக்கிறது. மற்ற துறைப் பங்குகள் குறிப்பாக, வங்கிப் பங்குகள் பெரிய அளவில் ஏற்றம் காணவில்லை. என்றாலும், ரிலையன்ஸ் பங்கின் ஏற்றமே நிஃப்டியை வலுவான போக்கில் புதிய ஏற்றத்துக்கு எடுத்துச்செல்லப் போதுமானதாக இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பங்கு விலைகள் மார்ச் 24-ல் கண்ட இறக்கத்தில் 50% மீண்டு ஏற்றம்கண்டிருக்கின்றன. இந்த ஏற்றம் தற்போது தடைப்பட்டுள்ளது. ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விசித்திரமான விஷயம் ரிலையன்ஸ். என்ன செய்திகள் வந்தாலும், இந்தப் பங்கு தன்னுடைய ஏற்றப்போக்கில் பின்வாங்குவதாகவே தெரியவில்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

தற்போது ரிலையன்ஸ் ரீடெயில் செய்திகளில் அடிபடுகிறது. அதாவது, அமேஸான் இதில் முதலீடு செய்ய ஆர்வம்காட்டுவதாகக் கூறப்படுகிறது. இது போன்ற வதந்திகளும், முதலீட்டாளர்கள் எடுக்கும் ஷார்ட் முடிவுகளும் ரிலையன்ஸ் பங்கின் வேகத்தைக் கூட்டுகின்றன. இதனால் நிஃப்டியில் ரிலையன்ஸின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், பங்குகளில் சப்ளை இல்லை. அவை ஏற்கெனவே சீலிங் நிலையை எட்டிவிட்டன. எனவே, சப்ளை இல்லாததாலும், தொடர்ந்து அதில் வர்த்தகம் செய்வதற்கான டிமாண்ட் அதிகரித்துக்கொண்டிருப்பதாலும் இந்தப் பங்கும், இதனால் நிஃப்டியும் நிலையான போக்கில் செயலாற்றுகின்றன.

 பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இது போன்ற சூழலில் இறுதியில் ஏதேனும் ஒரு வழி உருவாகும்; அது என்ன என்று எதிர்பார்த்து வர்த்தகம் செய்யாமல் இருப்பதைவிட, அதற்காகக் காத்திருக்க வேண்டும். பதற்றப்பட்டு ஏதாவது நடந்துவிடுமோ என்று முடிவெடுப்பவர்கள் ஷார்ட் எடுப்பார்கள்; அது மோசமான முடிவாக இருக்கலாம். உண்மையில், இந்த வகை டிரேடர்கள்தான் சந்தையின் போக்கை மேலும் ஏற்றத்தை நோக்கி நகர்வதற்குத் தீனி போடுபவர்களாக இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இண்டெக்ஸ் ஏற்றம் நிலையாக இருக்கும் வரை மிட்கேப் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாம். சார்ட்டிலுள்ள சப்போர்ட் டிரெண்ட் லைன் நமக்குக் கவலையளிக்கும் ஒன்று. இந்த நிலை உடையும்வரை கேஷ் மற்றும் ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில் லாங் பொசிஷன்களில் தொடரலாம்.

 பங்குச் சந்தை
பங்குச் சந்தை

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் (APOLLOHOSP)

தற்போதைய விலை ரூ.1,531.30.

வாங்கலாம்.

மூன்று மாதங்கள் கன்சாலிடேஷனில் இருந்த இந்தப் பங்கின் விலை தற்போது பிரேக் அவுட் ஆகி ஏற்றத்தை நோக்கி நகரவிருக்கிறது. மேலும், பங்கில் புதிய வேகம் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால் தொடர் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். இதன் கன்சாலிடேஷன் கிட்டதட்ட அசெண்டிங் முக்கோண பேட்டர்னில் இருக்கிறது. எனவே, இந்த பிரேக் அவுட் சந்தை சாதகமான சூழலில் தொடரும் பட்சத்தில் அதிக ஏற்றங்களைத் தரலாம். குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.1,625 வரை ஏற்றமடையலாம். இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,490 வைத்துக்கொள்ளவும்.

டிரேடர் பக்கங்கள் மற்றும்

எஃப் & ஓ பகுதியைப் படிக்க:

https://bit.ly/3f0qPig

 பங்குச் சந்தை
பங்குச் சந்தை

எஸ்.ஹெச் கெல்கர் கம்பெனி (SHK)

தற்போதைய விலை ரூ.79.00.

வாங்கலாம்.

சந்தையில் இந்தப் பங்கு பட்டியலான அன்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பங்கு இறக்கத்தைச் சந்தித்தது. அந்த இறக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பங்கின் சார்ட்டில் பாட்டம் நல்ல பேட்டர்னுடன் இருக்கிறது. எனவே, குறுகியகாலத்தில் ரூ.90-95 வரை உயரலாம். ரூ.68 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

 பங்குச் சந்தை
பங்குச் சந்தை

சுந்தரம் ஃபாஸனர்ஸ் (SUNDRMFAST)

தற்போதைய விலை ரூ.415.95.

வாங்கலாம்.

இந்தப் பங்கை ஏற்கெனவே பரிந்துரை செய்திருக்கிறோம். இப்போது இது தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றிவருகிறது. இதன் டெக்னிக்கல் அறிகுறிகள் வலுவாக உள்ளன. அதற்கேற்ப பங்கின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. தற்போது இதில் ஒரு வரம்பில் பிரேக்அவுட் சூழல் தெரிகிறது. இது மேலும் ஓர் இலக்கு நோக்கி ஏற்றம் காணும் வகையில் இருக்கிறது. பங்கின் விலை ரூ.530 வரை உயரலாம். மொமென்டம் இண்டிகேட்டரான ஆர்.எஸ்.ஐ நல்ல நிலையில் இருக்கிறது. எனவே, பங்கு ஏற்றத்தை நோக்கி நகர்வது உறுதி. ரூ.400 ஸ்டாப்லாஸுடன் வாங்கலாம்.

தமிழில்: திவ்யா

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.