பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டந்த வாரம், ‘செப்டம்பர் 20-ம் தேதி ஏற்பட்ட வலுவான ஏற்றப்போக்குக்கு எதிராகச் சரிவு ஏற்படாது என்றே நம்பினோம். ஆனால், இந்த மாதத்தில் நம் நம்பிக்கைக்கு எதிராக இறக்கம் வரலாம். அப்படி வரும் இறக்கங்களின்போது, அடிப்படையில் வலுவான பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனமாக அமையும்’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதேபோல நல்லதோர் இறக்கத்தைக் கொடுத்த சந்தை, அதன் பிறகு தன்னைச் சரிசெய்துகொண்டு, செப்டம்பர் 20-ம் தேதி ஏற்பட்ட ஏற்றத்த்துக்குப் பிறகு இறங்கியதில் 50% ஏற்றத்தைப் பெற்றிருக்கிறது. இந்த ஏற்றப்போக்கில் பங்குகளின் விலை 61.8% ரீட்ரேஸ்மென்ட் பகுதிக்குள் சென்றிருக்கிறது. தடைநிலைக்கு வந்திருக்கும் இந்த ஏற்றம், அதிக உத்வேகத்தையும், பெருத்த சந்தேகத்தையும் ஏற்படுத்துவதால் இந்த நிலை சுவாரஸ்யமானதாக இருக்கிறது. இந்தச் சூழலைவைத்துப் பார்த்தால், ஏதேனும் கரடியின் போக்குக்கான காரணம் என்னவென்று கணிப்பது கடினமான ஒன்று. அதே நேரத்தில், காளையின் போக்குக்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன.

இரண்டாவது காலாண்டு முடிவுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. சந்தையில் பெரிய பரபரப்பில்லை. பெரும்பாலும் இந்த முடிவுகளால் சந்தைக்குப் சாதகமான சூழல் இல்லை. ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான செய்தி. இது, சந்தைக்குச் சாதகமானதாக இருக்கும்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

சந்தை, செப்டம்பர் மாதம் முழுக்க காளையின் போக்கைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சியெடுத்தது. மேலும் சாதகமான போக்கை உருவாக்க முற்படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள், காளையின் போக்குடன் தொடர வேண்டும் என நினைக்காமல் தனிப்பட்ட பங்குகளின் இறக்கத்தில், நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். வர்த்தகத்தின் மூலம் உடனடி லாபம் கிடைக்காமல் போகலாம். அதே நேரத்தில், முதலீட்டின் மூலம் நல்ல லாபத்தை ஈட்டும் சரியான தருணமாக இது இருக்கிறது.

அதானி போர்ட்ஸ் (ADANIPORTS)

தற்போதைய விலை: ரூ.421.70

வாங்கலாம்.

அதானி குழுமத்தைச் சேர்ந்த மிக முக்கியமான நிறுவனம், இந்த அதானி போர்ட்ஸ். கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரு வரம்புக்குள் வர்த்தகமானது. பங்கு விலை கடந்த வாரத்திலிருந்து ஏற ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பங்கில் புதிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் பங்கின் விலை ஏற ஆரம்பித்திருக்கிறது. அண்மையில் புதிய உச்சமாக இந்தப் பங்கின் விலை

420 ரூபாய் அளவுக்கு ஏறியிருக்கிறது. குறுகியகாலத்தில் 480 ரூபாய் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.405 என வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜூபிலியன்ட் லைஃப் சயின்சஸ் (JUBILAN )

தற்போதைய விலை: ரூ.503.05

வாங்கலாம்.

இந்தியப் பங்குச் சந்தையின் போக்கு இறக்கத்திலிருந்து திரும்பி ஏற்றநிலைக்கு வந்திருக்கிறது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு ஆதரவுநிலை உருவாகியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் மத்தியிலிருந்து இறக்கத்திலிருந்த பங்கு விலை, தற்போது ஏற ஆரம்பித்திருக்கிறது.

பங்கு விலை வரைபடத்தில் ஆர்..எஸ்.ஐ டைவர்ஜென்ஸ் பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. லோயர் பாட்டம் உருவாகியிருந்த நிலை மாறி, இப்போது ஹையர் பாட்டம் நிலை உருவாகியிருக்கிறது. பங்கின் விலை குறுகிய காலத்தில் 550 ரூபாய்க்கு உயரக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.480 வைத்துக்கொள்ளவும்.

எல் அண்டு டி இன்ஃபோடெக் (LTI)

தற்போதைய விலை: ரூ.1,610.60

வாங்கலாம்.

இந்தப் பங்கின் மாத விலை சார்ட்டை பார்க்கும்போது, பங்கு விலை 1,515 ரூபாயில் வர்த்தகமாகிக்கொண்டிருந்தபோது, அதிக முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டிருப்பது தெரிகிறது. நான்கு மாத விலை சார்ட்டைப் பார்க்கும்போது, கடந்த

2018-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் எந்த நிலையில் வர்த்தகமானதோ அதேநிலைதான் தற்போதும் இருப்பது தெரிகிறது.

தற்போது இந்த நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிதிநிலை முடிவுகள் நல்லவிதமாக வந்திருப்பதால், இந்தப் பங்கில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. காலாண்டு முடிவுக்குப் பிறகு பங்கின் விலை ஏற ஆரம்பித்திருப்பதால் தற்போதையநிலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,550 வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் 1,850 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.