Published:Updated:

பங்கு முதலீட்டில் எப்போது வாங்குவது, எப்போது விற்பது? வழிகாட்டும் சிக்னல்கள்

S H A R E M A R K E T

பிரீமியம் ஸ்டோரி

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட், Rkgcapitalgains.com

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இரண்டு வகை. முதலாவது, நீண்டகால முதலீட்டாளர் கள்; இவர் உலகம் மற்றும் நாட்டின் வளர்ச்சி, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி, நிறுவனத் தின் லாப உயர்வு ஆகியவற்றை அலசி ஆராய்ந்து முதலீட்டுக்கான பங்கைத் தேர்வு செய்வார்கள். இரண்டாவது வகையினர், குறுகியகால முதலீட்டாளர்கள். இவர்கள் ஒரு பங்குக்கு எவ்வளவு தேவை (டிமாண்ட்) இருக்கிறது, அளிப்பு (சப்ளை) எவ்வளவு இருக்கிறது மற்றும் டெக்னிக்கல்கள் பார்த்து முதலீடு செய்வார்கள்.

இந்தக் குறுகியகால முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் (டிரேடர்கள்) என்ன பங்கை வாங்கலாம், வாங்கிய பங்குகளை எப்போது விற்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள டெரிவேட்டிவ் மார்க்கெட்டில் (ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்) என்ன நடக்கிறது, அவை என்ன சிக்னல்களைக் காட்டுகின்றன என்பதை உன்னிப் பாகக் கவனிக்கிறார்கள். டெரிவேட்டிவ் மார்க்கெட்டில் அவர்கள் கவனிக்கும் விஷயங்கள் என்னென்ன..?

ஜி.எஸ்.ராஜேஷ் 
குமார், 
ஈக்விட்டி ரிசர்ச் 
அனலிஸ்ட், 
Rkgcapitalgains.
com
ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட், Rkgcapitalgains. com

ஓப்பன் இன்ட்ரஸ்ட்

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தையில் நிலுவையிலுள்ள மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அதாவது, வர்த்தக நாளின் இறுதியில் நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள் ‘ஓப்பன் இன்ட்ரஸ்ட்’ எனப்படும்.

பங்கு விலை உயர்வு, வால்யூம் & ஓப்பன் இன்ட்ரஸ்ட் உயர்வு...

ஒரு குறிப்பிட்ட பங்குக்கான ‘ஓப்பன் இன்ட்ரஸ்ட்’ எஃப் அண்ட் ஓ சந்தையில் அதிகமாக இருக்கிறது. கூடவே அந்தப் பங்கின் விலையும் அதிகரித்து வருகிறது. கூடவே வால்யூம் (வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை) உயர்கிறது எனில், அந்தப் பங்கில் முதலீடு செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அந்தக் குறிப்பிட்ட பங்கில் புதிதாக அதிக பேர் முதலீடு செய்து வருகிறார்கள் என்று அர்த்தம்.

அதிக பேர் அந்தப் பங்கில் நீண்டகால முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதால், பங்கின் விலை குறுகிய காலத்தில் உயரக்கூடும். அந்தக் குறிப்பிட்ட பங்கை வாங்குவதற்கான சிக்கனலாக பங்கு விலை அதிகரிப்பு மற்றும் ஓப்பன் இன்ட்ரஸ்ட் & வால்யூம் எண்ணிக்கை அதிகரிப்பை எடுத்துக்கொள்ளலாம்.

பங்கு முதலீட்டில் எப்போது வாங்குவது, எப்போது விற்பது?  வழிகாட்டும் சிக்னல்கள்

பங்கு விலை உயர்வு & வால்யூம், ஓப்பன் இன்ட்ரஸ்ட் குறைவு...

ஓப்பன் இன்ட்ரஸ்ட் எண்ணிக்கை குறைகிறது எனில், அந்தக் குறிப்பிட்ட பங்கிலிருந்து முதலீடு வெளி யேறுகிறது என்று அர்த்தம். மேலும், அந்தக் குறிப்பிட்ட பங்கின் விலை அதிகரிக்கக் காரணம், ஷார்ட் கவரிங் நடக்கிறது என்று அர்த்தம். அதாவது, வர்த்தகர்கள் விற்று வைத்த (ஷார்ட் செல்லிங்) பங்குகளை வாங்கி நேர் செய்துவருவதால், பங்கின் விலை அதிகரிக்கிறது.

அதே நேரத்தில், ஒப்பந்தங்கள் நிறைவு பெறு வதால், ஓப்பன் இன்ட்ரஸ்ட் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கூடவே வால்யூம் குறைகிறது எனில், அந்தக் குறிப்பிட்ட பங்கை விற்பதற் கான சிக்கனலாக பங்கு விலை அதிகரிப்பு மற்றும் ஓப்பன் இன்ட்ரஸ்ட், வால்யூம் எண்ணிக்கை குறைவதை எடுத்துக்கொள்ளலாம்.

பங்கு விலை குறைவு & ஓப்பன் இன்ட்ரஸ்ட், வால்யூம் அதிகரிப்பு...

பங்கில் ஷார்ட் பொசி ஷன்கள் அதாவது, ஷார்ட் செல்லிங் அதிகரித்திருக்கும் நிலையில் பங்கு விலை குறைந்து, ஓப்பன் இன்ட்ரஸ்ட் மற்றும் வால்யூம் எண்ணிக்கை அதிகரித்து வரும். இந்த நிலையில், குறிப்பிட்ட பங்கு கரடியின் கைக்குள் சென்றிருக் கிறது என அர்த்தம்.

இதன் பிறகு பங்கின் விலை இறங்கப்போகிறது என்று அர்த்தம். முதலீட்டாளர்கள் ஷார்ட் பொசிஷனுக்குள் நுழையும் வரை பங்கின் விலை இறக்கம் காணும். குறிப்பிட்ட பங்கை விற்றுவிட்டு வெளியேறு வதற்கான சிக்னலாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

பங்கு விலை, வால்யூம் & ஓப்பன் இன்ட்ரஸ்ட் குறைவு...

பங்கு விலை குறைந்துவரும் நிலையில் கூடவே ஓப்பன் இன்ட்ரஸ்ட் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது எனில், பங்கின் விலை குறுகிய காலத்துக்கு தற்காலிக இறக்கத்தில் இருக்கும். பிறகு, மீண்டும் ஏற்றத்துக்குத் திரும்பப்போகிறது என்று அர்த்தம். ஓப்பன் இன்ட்ரஸ்ட் குறைவதால், புதிய ஷார்ட் செல்லிங் இல்லை. கூடவே வால்யூம் குறைந்தால், குறிப்பிட்ட பங்கை வாங்கும் சிக்னலாகக் கொள்ளலாம்.

பங்கு முதலீட்டில் எப்போது வாங்குவது, எப்போது விற்பது?  வழிகாட்டும் சிக்னல்கள்

புட் – கால் விகிதம்...

பங்குச் சந்தையின் ஒட்டு மொத்த சென்டிமென்டை அறிந்து கொள்ள உதவும் பயனுள்ள இண்டி கேட்டர் இந்த புட் டு கால் விகிதம் (Put to Call Ratio) ஆகும். ஒரு குறிப்பிட்ட நாளில் வர்த்தகமான மொத்த புட் ஆப்ஷன்களின் மதிப்பை, அதே நாளில் வர்த்தகமான மொத்த கால் ஆப்ஷன்களின் மதிப்பால் வகுக்க கிடைப்பதுதான் புட் டு கால் விகிதம் ஆகும்.

புட் – கால் விகிதம் உயர்வு, குறைவு...

இந்த புட் - கால் விகிதம் அதிகரித்தால் வர்த்தர்கள் கால் ஆப்ஷனைவிட புட் ஆப்ஷன்களில் அதிக பணத்தைப் போட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். இது பங்கின் விலை அதிகரிக்கப்போகிறது என்பதற்கான சிக்னலாக எடுத்துக் கொள்ளலாம். இந்த புட் – கால் விகிதம் குறைந்தால், வர்த்தர்கள் புட் ஆப்ஷனை விட கால் ஆப்ஷன்களில் அதிக பணத்தை போட்டிருக்கிறார்கள் என அர்த்தம். இது பங்கின் விலை இறங்கப் போகிறது என்பதற்கான சிக்னல்.

குறுகி கால முதலீட்டாளர்கள் அல்லது டிரேடர்கள் இந்த சிக்னல்களைக் கவனித்துச் செய்யலாமே!

காஸ்ட் ஆஃப் கேரி காட்டும் சிக்னல்கள்..!

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன் வர்த்தகத்தில் பொசிஷனைத் தொடர்வதற்கான கட்டணம் காஸ்ட் ஆஃப் கேரி (Cost of carry) எனப்படும். இது அதிகரித்தால், குறிப்பிட்ட இண்டெக்ஸ் அல்லது பங்கில் வாங்கும் அழுத்தம் (Buying Pressure) இருக்கிறது. அதாவது, பங்கின் விலை அதிகரிக்கும் சிக்னலை இது குறிக்கும். இதுவே காஸ்ட் ஆஃப் கேரி குறைந்தால் பங்கின் விலை குறையும் சிக்னலைக் குறிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு