Published:Updated:

தொழில் வளர்ச்சி... சரியான திசையில் தமிழகம்!

சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்
பிரீமியம் ஸ்டோரி
சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்

சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்

தொழில் வளர்ச்சி... சரியான திசையில் தமிழகம்!

சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்

Published:Updated:
சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்
பிரீமியம் ஸ்டோரி
சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்

ந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சி.ஐ.ஐ. அதன் தமிழகப் பிரிவின் தலைவர் பதவியை சந்திரமோகன் ஏற்று, ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் முடியப்போகின்றன. டாஃபே நிறுவனத்தின் குரூப் பிரசிடென்ட், சி.ஐ.ஐ-யின் தமிழகப் பிரிவின் தலைவர் என இருபெரும் பொறுப்புகளையும் திறம்படச் செய்துவரும் எஸ்.சந்திரமோகனை சென்னையில் டாஃபே அலுவலகத்தில் சந்தித்து, பேட்டி கண்டோம். அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...

சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்
சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்

சி.ஐ.ஐ அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவராகப் பதவியேற்ற பிறகு நீங்கள் செய்த முக்கியமான விஷயங்கள் என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஒன்பது மாதங்களில் தமிழகத்தில் தொழில் செய்வதற்கான சூழலை அதிகரிக்க, பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். இதற்காக சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை என ஐந்து மண்டலங்களில் கூட்டம் நடத்தினோம். தொழில் செய்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன, அந்தப் பிரச்னைகளுக்கு அவர்கள் என்ன மாதிரியான தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்துப் பேசினோம். அந்தக் கூட்டங்களுக்குத் தொழில் துறை தொடர்புடைய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் நேரில் வந்து, தொழில் செய்பவர்கள் சொல்லும் விஷயங்களையெல்லாம் கவனமாகக் கேட்டறிந்து, அவற்றுக்கான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்ததை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அது மட்டுமல்ல, கடந்த ஒன்பது மாதங்களில் முக்கியமான பல கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறோம். சென்னையில் `ஐ.டி கனெக்ட்’, `டிராவல் அண்ட் டூரிஸம் மார்ட்’, ஈரோட்டில் `டெக்வேலி’, மதுரையில் `ரப்பர் தொழில்நுட்ப மாநாடு’, சேலத்தில் `ஒளிரும் உழவு’ எனப் பல துறைகளில் நடத்திய கருத்தரங்குகள் மூலம் உலக அளவில் நடக்கும் தொழில் மாற்றங்களை, தமிழகத்தில் தொழில்துறையினருக்கு எடுத்துச்சொல்லவும், தமிழகத்திலிருக்கும் சிறப்பம்சங்களை உலகின் பிற பகுதிகளில் இருப்பவர்களுக்கு எடுத்துச்சொல்லவும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.’’

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கத்துடன் இணைந்து தொழில் நிறுவனங்களும் செயல்பட வேண்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றைக்கு தமிழகத்தில் நம் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன?

‘‘பொருளாதார மந்தநிலையால் சில துறைகளில் கொஞ்சம் பாதிப்பு இருக்கிறது. உதாரணமாக, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கார் தயாரிப்பு மிகப்பெரிய அளவில் நடக்கிறது. ஆனால், இன்றைக்கு இந்திய அளவில் கார் விற்பனை பாதிப்படைந்திருப்பதால், ஆட்டோ மற்றும் ஆட்டோதுறை சார்ந்த உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கொஞ்சம் பாதிப்படைந்திருக்கின்றன. தவிர பிற தொழில் நிறுவனங்கள் இந்தப் பொருளாதார மந்தநிலையால் பெரிதாக பாதிப்படைந்திருப்பதாகச் சொல்ல முடியாது.

சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்
சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்

சீனாவிலோ, துருக்கியிலோ அல்லது ஐரோப்பிய நாடுகளிலோ குறிப்பிட்ட ஒருவகைத் தொழிலை, குறிப்பிட்ட பகுதியில் செயல்பட அனுமதி தந்துவிட்டால், பிறகு அதில் எந்தவிதமான கொள்கை மாற்றமும் அரசுத் தரப்பிலிருந்து கொண்டுவரப் படுவதில்லை. இதனால் முதலீடு செய்தவர்கள் அந்தத் தொழிலை நன்றாக நடத்தி முடிக்கும் வரை எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள். அது போன்ற நிலை இங்கும் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.’’

தொழில் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி தொடர்பாகப் பல பிரச்னைகளை எதிர்கொள்வதாகச் சொல்லப்படுகிறதே..!

‘‘ஜி.எஸ்.டி-யில் உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெறுவதில் (Input Credit) சில பிரச்னைகள் இருப்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். இவற்றுக்கான உரிய தீர்வையும் சொல்லியிருக்கிறோம். விரைவில் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க, எங்களாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.’’

சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்
சி.ஐ.ஐ தலைவர் சந்திரமோகன்

கடந்த ஓராண்டுக்காலத்தில் எப்படிப்பட்ட தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வந்துள்ளன?

‘‘நிறைய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகின்றன. மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், காகிதத் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை கடந்த சில மாதங்களில் தமிழகத்துக்கு வந்திருக்கின்றன. இவை தவிர, தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தங்களைத் தமிழகம் சிறந்த முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படி நிறைய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தைத் தேடிவந்து தொழில் தொடங்குவதால், நம் மாநிலத்தில் இன்னும் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரித்து, நம் மாநிலத்தின் ஜி.டி.பி-யும் கணிசமாக உயரும். இப்போதே பிற மாநிலங்களைவிட நம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பதை நினைத்து நாம் பெருமைப்படலாம். ஆக, தொழில் வளர்ச்சியில் நம் மாநிலம் சரியான திசையில்தான் சென்றுகொண்டிருக்கிறது.’’

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வரும் இளைஞர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு இல்லையே..!

‘‘சில மாதங்களுக்கு முன்னர் ‘ஐ.டி கனெக்ட்’ என்ற நிகழ்ச்சியை எங்கள் சி.ஐ.ஐ அமைப்பு நடத்தியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நேரில் வந்து கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார். கருத்தரங்கில் கலந்துகொண்ட நிபுணர் ஒருவர், ஏ.ஐ (AI), எம்.எல் (ML) ஆகிய துறைகளில் பத்து லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பிருப்பதாகச் சொன்னார். இந்தத் துறைகளில் பயிற்சி பெற்றவர்களுக்கு உலக அளவில் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே, எந்தத் துறையில் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் தேவை என்பதைப் புரிந்துகொண்டு, அந்தத் துறைகளில் நம் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தால், வேலை இல்லை என்ற பிரச்னையே இருக்காது. கல்லூரிகளில் மாணவர்களின் திறனை வளர்க்கத் தேவையான முக்கியமான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய பொறுப்பு தொழில் நிறுவனங்களுக்கு இருக்கிறது. டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் `டி.எஸ்.ஸ்ரீநிவாசன் சென்டர் ஃபார் ஆடோமோட்டிவ் ரிசர்ச்’ (TSS Car) என்ற ஆய்வு மையத்தைத் தொடங்கியுள்ளது. இதற்காக ரூ.11 கோடியை அந்த நிறுவனம் செலவழிக்கப் போகிறது. இதன் மூலம் ஆட்டோதுறையில் பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், ஆட்டோதுறையில் அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்ளவும் வழிபிறக்கும்.

டி.வி.எஸ் நிறுவனத்தைப்போல தமிழகத்திலிருக்கும் பிற நிறுவனங்களும் அவர்கள் தொழில் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு தொழில் நிறுவனங்களும், கல்லூரிகளும் இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.’’

நம்பிக்கை தந்த பாசிட்டிவ் பாடங்கள்!

ண்மையில் சி.ஐ.ஐ நிறுவனம், தூத்துக்குடியில் கூட்டமொன்றை நடத்தியது. `பொருளாதார மந்தநிலையில் தொழில்கள் சரியாக நடப்பதில்லை’ என்று எல்லோரும் கவலைப்படும் இந்த நேரத்தில் அந்தக் கூட்டத்தை சற்று வித்தியாசமாக நடத்தியிருக்கிறது சி.ஐ.ஐ. பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கொஞ்சம் ‘மாற்றி யோசி’த்ததன் மூலம் புதுமையான தீர்வுகளைக் கண்டுபிடித்து, செயல்படுத்தும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்கள் அனுபவங்களை அந்தக் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டன. அந்த பாசிட்டிவ் பாடங்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பல தொழில் நிறுவனங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருந்ததாம். இதுபோன்ற கூட்டங்களை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் நடத்தினால், தற்போதுள்ள மந்தநிலையைக் கடந்துவர முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism