மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற அக்ரி கமாடிட்டிகளின் போக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில், சென்ற வாரம் நல்ல ஏற்றத்தைக் கொடுத்துள்ளது. மென்தா ஆயில் 29.03.2019-ல் உச்சமாக 1737-ஐ தொட்ட பிறகு ஒரு தொடர் இறக்கத்தில்தான் இருந்து வந்தது. நடுநடுவே சில ஏற்றங்கள் வந்தாலும், அதாவது மே 2019-ல் முதல் இரண்டு வாரங்கள் 1344-லிருந்து 1489 வரை ஏறியதும் சரி, ஜூன் 2019-ல் முதல் வாரம் 1291 என்ற புள்ளியிலிருந்து 1363 வரை ஏறியதும் சரி, எல்லாமே, ஓர் இறக்கத்தின் ஏற்றமாகவே இருந்து வந்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “மென்தா ஆயில் முன்பு நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 1230-ஐ உடைத்து இறங்கிய பிறகு அதுவே தற்போது தடைநிலையாக மாறியுள்ளது. இந்த நிலையில் 1165 என்பது உடனடி ஆதரவாக மாறியுள்ளது. உடைத்தால் இறக்கம் தொடரலாம்.’’

மென்தா ஆயில் சென்ற வாரம் முழுவதும் ஏறுமுகமாகவே முடிந்துள்ளது. சென்ற வாரம் திங்கள் அன்று சற்றே 1230-ஐ தாண்டி ஏறி ஒரு டோஜி வடிவத்தில் முடிந்து இருந்தாலும்கூட, அதன்பின் செவ்வாய்க்கிழமை அன்று சற்றே நன்கு ஏறியது. அதை அடுத்து புதன் அன்று 1260 என்ற புள்ளியில் ஆரம்பித்து, பின் மிகப் பலமாக ஏறி உச்சமாக 1296 என்ற புள்ளியைத் தொட்டது. அதன்பின்னும் அதன் ஏற்றம் வியாழன் மற்றும் வெள்ளி அன்று தொடர்ந்தது.

ஆனால் வியாழன் மற்றும் வெள்ளி இரண்டு நாளும் வலிமையான தடைநிலையில் இடித்து நிற்கிறது.

இனி என்ன செய்யலாம்?

மென்தா ஆயில், ஜூலை மாத கான்டராக்ட் டென்டர் பீரியடுக்குள் நுழைவதால், இனி நாம் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். தற்போது 1340 என்ற புள்ளியில் வலுவாகத் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேசயம் 1270 என்ற எல்லை மிக முக்கிய ஆதரவாக உள்ளது.

காட்டன்

காட்டன் பொதுவாக அகண்ட பக்கவாட்டு நகர்வில் உள்ளது. இந்தப் பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லையை ஜூலை 19-ல் தொட்டது. அதன் ஏற்றத்திற்கான முனைப்பைக் காட்டியது. ஆனால், சென்ற வாரத்தின் முதல் பாதியில் ஏறினாலும், பின் இரண்டாம் பாதியில் இறங்கி முடிந்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது... “காட்டன் தற்போது 20020 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 21350 என்ற எல்லையை முக்கிய தடைநிலையாகவும் கொண்டுள்ளது. ஒருவேளை 21350-ஐ உடைத்து ஏறினால் மட்டுமே, காட்டன் புதிய ஏற்றத்திற்கு மாறலாம்.’’

காட்டன் சென்ற வாரம் நாம் கொடுத்த தடை எல்லையான 21350 என்ற எல்லையை உடைத்து ஏறியது. உச்சமாக 21940 என்ற புள்ளியைத் தொட்டு வியாபாரி களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.

காட்டன் சென்ற வாரம் 21280 என்ற புள்ளியில் ஏற்றத்தை ஆரம்பித்தது. அடுத்து செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாள்களில் மிக வலிமையாக ஏறி உச்சமாக 21940-ஐ தொட்டது. ஆனால், வியாழன் அன்று மிக பலமாக இறங்கி ஒரு பியரிஷ் என்கஃல்பிங் அமைப்பைத் தோற்றுவித்துள்ளது. அடுத்து வெள்ளி அன்றும் பலமாக இறங்கியது.

காட்டன் ஜூலை மாத கான்ட்ராக்ட் டென்டர் பீரியட்டுக்குள் நுழைவதால், இனி ஆகஸ்ட் 2019 கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள் வோம். காட்டன் புல்பேக் ரேலி முடிந்து மீண்டும் இறக்கத்திற்குத் தயாராகிறது. உடனடி ஆதரவு எல்லை 20700 ஆகும். மேலே தடைநிலை 21220 ஆகும்.

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.

சென்னா, இன்னமும், தொடர்ந்து பக்கவாட்டு நகர்வில் தான் இருந்து வருகிறது. சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 4360 என்ற எல்லையைச் சற்றே தாண்டி 1365-ஐ தொட்டு, பின் இறங்கி முடிந்துள்ளது.

சென்னா, ஜூலை கான்ட்ராக்ட் முடிவுக்கு வந்துள்ளதால், ஆகஸ்ட் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். தற்போது 4270 ஆதரவாகவும், மேலே 4370 தடைநிலையாகவும் உள்ளது.