மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற அக்ரி கமாடிட்டிகளின் போக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில், 18.07.2019 அன்று உச்சமாக 1320-ஐ தொட்ட பிறகு இறங்க ஆரம்பித்துள்ளது. இதை ஏற்றத்தின் இறக்கமாக எடுத்துக்கொள்ளலாம் என்று சென்ற வாரம் சொன்னோம். இந்த ஏற்றத்தின் இறக்கம் முடிந்தபிறகு, தற்போது மேல்நோக்கி ஏறுவதற்கு முயற்சி செய்கிறது. தற்போதைக்கு இதை ஒரு பக்கவாட்டு நகர்வாக நாம் எடுத்துக்கொள்ளலாம். இது ஏறுமுகமாக மாறுமா என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சென்ற வாரம் நாம் சொன்னது… “மென்தா ஆயில் இறக்கம் என்பது தற்போதுள்ள ஆதரவான 1240-ஐ தக்கவைக்கவேண்டும், இல்லையென்றால், இறக்கம் வலிமையானதாக மாறலாம். மேலே தற்போது 1310 என்பது தடைநிலையாக உள்ளது.’’

மென்தா ஆயில் சென்ற வாரம், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1240-ஐ உடைக்க முயற்சி செய்தது. சென்ற வாரம் திங்களன்று 1250 என்ற புள்ளியில் வியாபாரம் ஆரம்பித்து, 1240-ஐ உடைத்து, 1222 வரை சென்றாலும் மீண்டும் 1240-க்கு அருகில் வந்து முடிந்தது. இதனால் ஒரு பெரிய இறக்கம் தவிர்க்கப் பட்டது.

அதன்பின் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இருநாள்களும் பெரிய மாற்றம் இன்றி, ஸ்பின்னிங் டாப் கேண்டில்களில் முடிவடைந்தது. வியாழனன்று ஒரு கேப்அப்பில் தொடங்கி இறங்கி முடிந்துள்ளது. வெள்ளியன்று மீண்டும் ஏற்றத்தின் முயற்சியில் இருப்பதாகப் பார்க்கிறோம். மென்தா ஆயில் தற்போது 1230 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 1290 உடனடித் தடை நிலையாக உள்ளது.

காட்டன்

காட்டன் 28.06.2019 அன்று உச்சமாக 22440-ஐ தொட்டபிறகு ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த இறக்கத்தின்போது அவ்வப்போது ஒரு புல்பேக் ரேலி வந்துபோனாலும், திசையில் அடிப்படையில் தொடர்ந்து கீழ்நோக்கியே நகர்ந்து வருகிறது. சென்ற வாரம் இந்த இறக்கத்தின் வீச்சு அதிகமாகி பலமாக இறங்கியுள்ளது.

சென்ற வாரம் சொன்னது... “காட்டன் புல்பேக் ரேலிமூலம் ஏறியுள்ளது நிலையில், முந்தைய தடைநிலையான 21220-ஐ உடைத்தால், 21420 என்ற எல்லையை அடுத்த வலுவான தடைநிலையாகக் கொண்டுள்ளது. கீழே 20700 என்ற எல்லை ஆதரவாக உள்ளது.’’

காட்டன் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 20700-ஐ உடைத்து வலிமையாக இறங்க ஆரம்பித்துள்ளது. சென்ற வாரம் திங்களன்று வரை 20700-ஐ தக்கவைத்திருந்தாலும் செவ்வாயன்று மிகப் பலமாக இறங்கி, 20700-ஐ உடைத்து இறங்கியது மட்டும் அல்லாமல், அன்றே குறைந்த பட்ச புள்ளியாக 20550-ஐ தொட்டது. அதன்பின் புதன் மற்றும் வியாழனன்று சற்றே மேலே ஏறினாலும் அது மிகக் குறுகிய புல்பேக் ரேலியாக இருந்தது. பின் வெள்ளியன்று மீண்டும் ஒரு பேக் டவுன் மூலம் 20490-ல் வியாபாரம் ஆரம்பித்து, பலமாக இறங்கி, 20170 என்ற குறைந்துபட்சப் புள்ளியைத் தொட்டு முடிந்துள்ளது.

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. சென்ற வாரம் சொன்னது… “சென்னா, இன்னும் 4370 என்ற எல்லையைத் தடை நிலையாகவே கொண்டுள்ளது. கீழே உடனடி ஆதரவு என்பது 4240 என்ற எல்லையில் உள்ளது.“

சென்னா, கடந்த வாரம் பக்கவாட்டு நகர்வில் கீழ் எல்லையிலிருந்து ஏறி, மேல் எல்லையைத் தொட்டது என்று பார்த்தோம். அப்போது தடை நிலை 4370 என்றும் கூறியிருந்தோம். சென்னா, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4370-ஐ தக்கவைத்துக்கொண்டு, கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தது. சென்னாவின் பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லையாக நாம் கொடுத்திருந்த 4240 எல்லையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. சென்ற வாரம் வியாழனன்று பலமான இறக்கத்தைக் கண்ட சென்னா, 4240-யும் உடைத்து, 4214 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டது. அடுத்து வெள்ளியன்று ஒரு குறுகிய நகர்வுள்ள ஸ்பின்னிங் டாப் தோன்றியுள்ளது.

சென்னா தற்போது 4205 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. இதை உடைத்தல் நல்ல இறக்கம் வரலாம். மேலே 4260 என்பது உடனடித் தடை நிலையாக உள்ளது..