Published:Updated:

சந்தை நிலவரம்... கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி

மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில், ஜூலை 2019-லிருந்து நகர்ந்த விலைநகர்வு செப்டம்பர் 2019 முடிவில் ஒரு ஹெட் அண்டு ஷோல்டர் அமைப்பைத் தோற்றுவித்துள்ளது. ஒரு ஹெட் அண்டு ஷோல்ட் அமைப்பு மூன்று உச்சங்களைக் கொண்டிருக்கும். முதல் உச்சம் 19.07.2019 அன்று 1337 என்ற புள்ளியைத் தொட்டு இறங்கியது, அடுத்து 20.08.2019 அன்று அடுத்த உயர்ந்த உச்சமாக 1369-ஐ தொட்டு இறங்கியது.

சந்தை நிலவரம்... கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

இந்த அமைப்பின் மூன்றாவது உச்சமாக 11.09.2019 அன்று 1334 என்ற குறைந்த உச்சத்தைத் தோற்றுவித்தது. இந்த உச்சங்களின் பாட்டத்தை இணைக்கும் கோட்டை ‘நெக்லைன்’ என்று சொல்வோம். இந்த ‘நெக்லைன்’ உடைக்கப்பட்டால், விலை நன்கு இறங்கலாம். இந்த ‘நெக்லைன்’-ல் முக்கிய ஆதரவுப்புள்ளி 1290 ஆகும். தற்போது இந்த ‘நெக்லைனை’ உடைத்து இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கத்தின் டார்கெட் 1230 ஆகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்ற வாரம் சொன்னது… “மென்தா ஆயில் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நாம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். மென்தா ஆயிலும் ஒரு ஹெட் அண்டு ஷோல்டர் அமைப்பைத் தோற்றுவித்துள்ளது. முக்கிய ஆதரவு 1275 ஆகும். உடைத்தால் நல்ல இறக்கம் வரலாம். மேலே 1295 உடனடித் தடைநிலை ஆகும்.’’

சந்தை நிலவரம்... கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில் சென்ற வாரம், நாம் கொடுத்த ஆதரவு நிலையான 1275-ஐ சென்ற வாரம் திங்கள் அன்றே உடைத்து மிக வலிமையாக இறங்கி 1256 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டது. அதன்பின் செவ்வாய் மற்றும் புதன் அன்று மெள்ள இறங்கி, 1249 என்ற புள்ளிவரை இறங்கியது. வியாழன் அன்று திசை மாறி மேல்நோக்கி நகர்ந்து, ஒரு புல்பேக் ரேலிமூலம் 1270 என்ற உச்சத்தைத் தொட்டது. அடுத்து வெள்ளி அன்று வலிமையாக ஏறுவதுபோல் ஏறி 1273 என்ற உச்சத்தைத் தொட்டாலும், சந்தை முடியும்போது இறங்கி 1258 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.

மென்தா ஆயில் புல்பேக் ரேலி முடிந்து, அடுத்தகட்ட இறக்கத்தில் உள்ளது. தற்போது 1247 முக்கிய ஆதரவு ஆகும். உடைத்தால் நல்ல இறக்கம் வரலாம். மேலே 1275 தடைநிலை ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காட்டன்

காட்டன், ஒரு குறுகிய எல்லைக்குள் சுழல ஆரம்பித்தது. தற்போது அந்தக் குறுகிய எல்லையின் கீழ்பகுதியை உடைத்து இறங்கியதுடன் அல்லாமல், மீண்டும் அடுத்த பக்கவாட்டு நகர்வுக்குள் சுழல ஆரம்பித்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “காட்டன் தற்போது சற்றே ஏறுமுகமாக மாறியநிலையில் மேலே 19920 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகக் கொண்டுள்ளது. உடைத்தால் நல்ல ஏற்றம் வரலாம். கீழே 19610 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.’’

காட்டன் முந்தைய வாரம் கொடுத்திருந்த தடைநிலையைத் தாண்ட முடியாமல் கீழே இறங்கி, நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 19610-ஐ உடைத்து இறங்கியது. முதல் மூன்று நாள்களின் இறக்கத்தில் 19410 என்ற புள்ளி வரை இறங்கியது. பின்பு, பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

காட்டன், மீண்டும் பக்கவாட்டு நகர்வுக்குள் வந்துள்ளதால், மேலே 19740-ஐ தடைநிலையாகவும் கீழே 19400-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது.

சந்தை நிலவரம்... கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. முந்தைய வாரம் சொன்னது… “சென்னா செப்டம்பர் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி அக்டோபர் கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்ளலாம். சென்னா தற்போது ஒரு ‘கப் அண்டு ஹேண்டில்’ அமைப்பைத் தோற்றுவித்துள்ளது. எனவே, மேலே தடை நிலையான 4080-ஐ உடைத்தால், வலிமையான ஏற்றம் வரலாம். கீழே 4020 என்பது உடனடி ஆதரவு ஆகும்.”

சென்னா, நாம் கொடுத்த தடைநிலையான 4080 உடைத்து மிகவும் பலமாக ஏறி, உச்சமாக 4421-ஐ தொட்டது. ‘கப் அண்டு ஹேண்டிலின்’ டார்கெட்டையும் அது தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது வலிமையான ஏற்றம் முடிவுக்கு வந்து, ரீடிரேஸ்மென்டில் உள்ளது.

சென்னா, இறக்கத்தின் முக்கிய ஆதரவாக 4240-ஐ கொண்டுள்ளது. மேலே 4330 உடனடித் தடைநிலை ஆகும்.