Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

கமாடிட்டி

பிரீமியம் ஸ்டோரி

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி) 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

தங்கம் மே 2019-ன் மூன்றாம் வாரத்திலிருந்து ஏறுமுகமாக மாறியது. அப்போது 10 கிராம் 24 காரட் தங்கம் விலை ரூ.31,101 என்று இருந்தது. அதன்பின் தங்கத்தின் விலை திசை திரும்பி ஏற ஆரம்பித்தது. அப்போது ஒவ்வொரு வாரமும், விலையானது அந்தந்த வாரத்தின் புதிய உச்சத்தைத் தோற்றுவித்துக்கொண்டே போனது. ஜூன் 2019-ன் முதல் வாரத்தில் 32,994 என்ற விலையைத் தொட்டது. அதன்பின் ஒரு வாரம் பக்கவாட்டு நகர்வில் இருந்துவிட்டு, பின் மீண்டும் ஏறி ஜூன் மாத முடிவில் அதிக பட்சமாக 34,599 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின் மீண்டும் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது. ஜூலை 2019 முதல் வாரத்தில் தங்கம் மீண்டும் வலிமை பெற்று 35,070-ஐ தொட்டது. அதன்பின் மீண்டும் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in
தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் ஜூலை கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி நாம் ஆகஸ்ட் கான்ட்ராக்டை எடுத்துக்கொள்வோம். தங்கம் 34570-ஐ உடனடித் தடையாக கொண்டுள்ளது; இதை உடைத்தால் பெரிய ஏற்றம் வரலாம். கீழே 33830 மிக முக்கிய ஆதரவு ஆகும்.’’

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த 34,570 என்ற தடைநிலை வலுவான தடைநிலையாகவே இருந்துவந்தாலும், அதையும் உடைத்து 35070 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு, தொடர்ந்து ஏற முடியாமல் இறங்கியது. ஆனாலும், சென்ற வாரத்தின் நான்கு நாள்களும் பெரிதாக ஏறவில்லை என்றாலும், பெரிதாக இறங்கவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. எல்லாமே டோஜியும் ஸ்பின்னிங் டாப் போன்ற அமைப்பையும் தோற்றுவித்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் பலமான ஏற்றத்திற்குப்பிறகு, 34400 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகவும் மேலே 34950 என்ற எல்லையை வலிமையான தடைநிலை யாகவும் கொண்டுள்ளது.

வெள்ளி (மினி)

வெள்ளி தங்கத்தைவிடத் தொடர்ந்து வலிமை குன்றிக் காணப்படுவதை ஒவ்வொரு வாரமும் சொல்லி வருகிறோம். கடந்த வாரமும் அதுவே நடந்துள்ளது. அதாவது, ஜூன் 2019-ல் உச்சமாக 38850-ஐ தொட்டபிறகு வெள்ளி இறங்குமுகமாக மாறியது. ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் 37500 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்ட பிறகு சற்றே ஏறுமுகமாக மாறியது.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி தற்போது 37750-ஐ ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 38460 என்பது மிக வலிமையான தடைநிலை ஆகும்.’’

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 37750-ஐ தக்கவைத்துக் கொண்டது. அதேநேரம் மேலே கொடுத்திருந்த தடைநிலையான 38460-ஐ உடைக்க முயன்று, அது தோல்வியில்தான் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? வெள்ளி தற்போது குறுகிய நகர்வில் இருக்கிறது. கீழே 37750-ஐ இன்னும் ஆதரவாகவும் மேலே 38460-ஐ தடை நிலையாகவும் கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கச்சா எண்ணெய்

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் இன்னும் பக்கவாட்டு நகர்வில் இருப்பதால், உடனடித் தடைநிலையான 4190-ஐ தாண்டினால் பலமான ஏற்றம் வரலாம். இன்னும் 3880 முக்கிய ஆதரவே.” 

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 3880-ஐ முடிவு விலையின் அடிப்படையில் தக்கவைத்துள்ளது. மேலே உள்ள தடைநிலையையும் தாண்ட முடியாமல் அருகில் சென்று முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? கச்சா எண்ணெய் தற்போது நல்ல ஏற்றத்திற்குப்பிறகு, நாம் கொடுத்த 4190 என்ற தடைநிலையைத் தாண்டினால் வலுவாக ஏறலாம். கீழே 4980 என்பது உடனடி ஆதரவு எல்லை ஆகும்.

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும். சென்ற வாரம் சொன்னது… “காப்பர் மெகாவின் ஜூலை கான்ட்ராக்ட்டுக்கு மாறுகிறோம். தற்போது 448-ஐ தடைநிலையாகவும், கீழே 439 முக்கிய ஆதரவாகவும் கொண்டுள்ளது.’’

காப்பர் மினி, சென்ற வராம் நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 439-ஐ உடைத்து 431-க்கு இறங்கியது. அங்கிருந்து மீண்டெழுந்து, மேல் எல்லையான 444-க்கு அருகில் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? காப்பர் தற்போது 438 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும் மேலே 447-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு