பிரீமியம் ஸ்டோரி

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

தங்கம் மீண்டும் ஒரு சரித்திரம் படைத்துள்ளது. முந்தைய வாரம் தங்கம் 34600-க்கும் 34900-க்கும் இடையே சுழன்று வந்திருந்தது. ஆனால், கடந்த வாரம் இந்தப் பக்கவாட்டு எல்லை யின், மேல் எல்லையான 34900-ஐ உடைத்து மிக வலிமையான ஏற்றத்தைக் கண்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் பலமான ஏற்றத்திற்குப் பிறகு, 34400 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகவும், மேலே 34950 என்ற எல்லையை வலிமையான தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த 34950 என்ற வலுவான தடைநிலையை உடைத்து, மிகவும் வலுவாக ஏற ஆரம்பித்துள்ளது. சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் அன்று பக்கவாட்டு நகர்வில் இருந்தாலும், புதன் அன்று மிக வலுவாக ஏறி, உச்சமாக 35080-ஐ தொட்டது. தங்கம் மீண்டும் சரித்திரம் படைக்க ஆரம்பித்துள்ளது. அதன்பின் வியாழன் அன்று சற்றே ஏறி 35150 என்ற அடுத்த உச்சத்தைத் தொட்டாலும், இன்னும் ஏறுவதற்கு முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறது.

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in
தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் தற்போது புதிய புதிய உச்சங்களைத் தோற்றுவித்து வருகிறது. எனவே, தற்போதைய ஆதரவான 34950-ஐ உடைத்து இறங்காதவரை எல்லா இறக்கங்களும் வாய்ப்பே.

வெள்ளி (மினி)

வெள்ளி, ஒவ்வொரு வாரமும், தங்கத்தைவிட சற்றே மந்தமாக நகர்ந்து வந்ததைக் குறிப்பிட்டு இருந்தோம். இந்த நகர்வால், தங்கத்திற்கும் வெள்ளிக்கும் உள்ள விகிதாச்சார நகர்வு மாற ஆரம்பித்திருந்தது. சென்ற வாரம் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து வெள்ளி மிக வலிமையான ஓர் ஏற்றத்தைக் கொடுத்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி தற்போது குறுகிய நகர்வில் இருக்கிறது. கீழே 37750-ஐ இன்னும் ஆதரவாகவும், மேலே 38460-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 38460-ஐ உடைத்து மிக பலமாக ஏறி 41370 என்ற எல்லையை தொட்டுள்ளது. வெள்ளி விலை கடந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தோற்றுவித்துக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.

அதாவது, 38300-லிருந்து 41300 வரை, சுமார் 3000 புள்ளிகள் ஏறியுள்ளது. தற்போது ஆகஸ்ட் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நவம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். வெள்ளி வலிமையான ஏற்றத்திற்குப் பிறகு, 42350 என்ற எல்லையில் தடுக்கப்படலாம். கீழே 41350 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் தற்போது நல்ல ஏற்றத்திற்குப் பிறகு, நாம் கொடுத்துள்ள 4190 என்ற தடைநிலையைத் தாண்டினால் வலுவாக ஏறலாம். கீழே 3980 என்பது உடனடி ஆதரவு எல்லை ஆகும்.” 

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 4190-ஐ தாண்ட முடியவில்லை. மேலே 4174 வரை சென்று பின் கீழே திரும்பியது. அதன்பின் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 3980-ஐ உடைத்துத் தினமும் இறங்கியது; குறைந்தபட்சப் புள்ளியாக 3773-ஐ தொட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கச்சா எண்ணெய் ஜூலை மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். தற்போது 3960 என்பது முக்கியத் தடைநிலையாகவும், கீழே 3780 உடனடி ஆதரவாகவும் உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

காப்பர்

காப்பர் மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள் ளது; கவனமாக வியாபாரம் செய்யவும். காப்பர், சென்ற வாராம் நாம் கொடுத்த தடைநிலையான 447-ஐ உடைத்து மிக வலிமையாக ஏறி 459 என்ற எல்லையையும் தொட்டுள்ளது. தற்போது மிகப் பலமாக ஏறி தடைநிலைக்கு அருகில் உள்ளது.

காப்பர், தற்போது 454 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும், மேலே 467 என்ற எல்லையை தடைநிலையாவும் கொண்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு