பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி

கமாடிட்டி

தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர், மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி

ங்கம் தற்போது கொஞ்சம் பலவீனமாக மாறிவருவதைப்போல் தெரிகிறது. தங்கம் 04.09.19 அன்று உச்சமாக 39490-ஐ தொட்டு, தொடர்ந்து ஏற முடியாமல் இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் 01.10.19 அன்று 36750 என்ற குறைந்தபட்ச எல்லையைத் தொடும் வரை இறங்கி, அங்கிருந்து மேல்நோக்கித் திரும்பியது. இந்த ஏற்றம், 38450 என்ற எல்லையில் 09.10.19 அன்று வலுவாகத் தடுக்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் தொடர்ந்து கொஞ்சம் இறங்குவதும், பிறகு மீண்டும் ஏறி 38450 எல்லைக்கு அருகில் சென்று, மீண்டும் மீண்டும் இறங்குவதும் நிகழ்ந்துவருகிறது. அதாவது தங்கம் தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியிருக்கிறது.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தற்போது மீண்டும் இறக்கத்தில் உள்ளது. இந்த இறக்கம் தொடர்ந்தால், 37500 வரை இறங்கி இடைவெளியை மூடலாம். அதுவே முக்கிய ஆதரவாக மாறலாம். மேலே 38300 என்பது உடனடித் தடைநிலை.”

தங்கம் சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 38300 என்ற எல்லையை இன்னமும் தக்கவைத்திருக்கிறது. ஒரு முறை மட்டும் 38300-ஐ உடைத்து ஏறி 38406 வரை சென்றாலும், மீண்டும் 38300-க்கு கீழாகவே முடிந்திருக்கிறது. எனவே, 38300 என்ற எல்லை இன்னும் வலிமையான தடைநிலையாகவே இருக்கிறது. இரண்டாவது வாரமாக தங்கம் ஒரு தொடர் பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. ``இறக்கம் வந்தால் 37500 வரை இறங்கி இடைவெளியை மூடலாம்’’ என்று கூறியிருந்தோம். தங்கம் இறங்கியது, 37736 வரை இறங்கி மீண்டும் மேல்நோக்கித் திரும்பியிருக்கிறது.

தங்கம் தொடர் பக்கவாட்டு நகர்விலுள்ள நிலையில், 38400 மிக மிக வலிமையான தடைநிலையாகவும், கீழே 37900 என்பது உடனடி ஆதரவுநிலையாகவும் இருக்கிறது.

வெள்ளி (மினி)

வெள்ளி பக்கவாட்டு நகர்வுக்குள்ளாகவே முடிந்திருக்கிறது.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி 43980 என்ற எல்லையை மிக முக்கிய ஆதரவாகக் கொண்டிருக்கிறது. இது உடைக்கப்பட்டால், மிகப்பெரிய இறக்கம் வரலாம். மேலே 45950 உடனடித் தடைநிலை.’’

வெள்ளிக்கு, சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலை வலிமையாகவே செயல்பட்டிருக்கிறது. 15.10.19 அன்று மட்டும் கொஞ்சம் வலிமையாக ஏறி, உச்சமாக 46029-ஐ தொட்டாலும், நாள் முடிவில் இறங்கி 45234-ல் முடிவடைந்தது. கீழே நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 43980 என்பது தக்கவைக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளி, தங்கத்தைப்போலவே தொடர் பக்கவாட்டிலுள்ளநிலையில், 45800 வலிமையான தடைநிலையாகவும், கீழே 44600 முக்கிய ஆதரவாகவும் இருக்கிறது. உடைத்தால் நல்ல இறக்கம் வரலாம்.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் கடந்த சில தினங்களாக 3680 என்ற ஆதரவு எல்லையை உருவாக்கியிருக்கிறது. இருந்தாலும் உடனடி ஆதரவாக 3760 இருக்கிறது. மேலே உடனடித் தடைநிலை 3940.’’

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 3940-ஐ தக்கவைத்திருக்கிறது. அதேபோல் நாம் கொடுத்திருந்த உடனடி ஆதரவான 3760-ஐ தக்கவைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்னும் பக்கவாட்டு நகர்விலேயே இருக்கிறது.

கச்சா எண்ணெய் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நவம்பர் மாதத்தை எடுத்துக்கொள்ளலாம். தற்போது 3965-ஐ உடனடித் தடைநிலையாகக் கொண்டிருக்கிறது. உடைத்தால், நல்ல ஏற்றம் வரலாம். கீழே 3750 என்பது உடனடி ஆதரவாகும்.

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது, கவனமாக வியாபாரம் செய்யவும். சென்ற வாரம் சொன்னது... “காப்பர் தற்போது 436-ஐ நல்ல ஆதரவாகக்கொண்டு ஏறி இருக்கிறது. மேலே 445 என்பது உடனடித் தடைநிலை.’’

காப்பர், சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 445-ஐ தக்கவைத்துக்கொண்டு கீழே இறங்கியது. இந்த இறக்கம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 436-ஐ நோக்கி இறங்கி, அங்கிருந்து மேல்நோக்கித் திரும்பியிருக்கிறது.

காப்பர், தற்போது 436 என்ற ஆதரவை மீண்டும் வலுவாக எடுத்திருக்கிறது. மேலே 445 வலிமையான தடைநிலை.

மென்தா ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில், தொடர்ந்து ஒரு தொடர் இறக்கத்திலிருக்கிறது. அதாவது விலையானது, 20.08.19 அன்று 1349 என்ற உச்சத்தைத் தொட்ட பிறகு, இறக்கம் தொடங்கியது. இந்த இறக்கத்தின் ஏற்றமாக 18.09.19 அன்று உச்சமாக 1320-ஐ தொட்டது. இது முந்தைய உச்சமான 1349-ஐவிட குறைவு.

அடுத்து, தொடர்ந்து இறங்கியபோது, அதன் ஏற்றமாக 23.09.19-ல் தொட்ட உச்சம் 1276. இது முந்தைய உச்சமான 1320-ஐ விடக் குறைவு. அதைத் தொடர்ந்து இறங்கியபோது 10.10.19 அன்று தோற்றுவித்த உச்சம் 1234. இப்படியாகத் தொடர்ந்து இறங்கி வந்திருக்கும் மென்தா ஆயில், கடந்த சில வாரங்களாகப் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியிருக்கிறது.

சென்ற வாரம் மென்தா ஆயில், ஆதரவு எல்லையான 1190-ஐ எல்லையைத் தொட்டு, நான்கு நாள்கள் வியாபாரம் ஆனது. ஆனால், அந்த ஆதரவை உடைத்து இறங்கவில்லை. அதேபோல் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1230-ஐ இன்னும் தக்கவைத்திருக்கிறது. சென்ற வாரம் முழுவதும், நாம் கொடுத்த எல்லைகளுக்குள்ளாவே சுழன்று வந்திருக்கிறது.

மென்தா ஆயில், இன்னமும் 1190-ஐ ஆதரவாகக் கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது உடனடித் தடை நிலையாக 1220 உள்ளது.

காட்டன்

காட்டன், இன்னும் தொடர் பக்கவாட்டு நகர்விலேயேதான் இருக்கிறது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்கள் மிக நெருக்கமான எல்லைக்குள் வியாபாரமாகிவருகிறது.

காட்டன், கடந்த வாரம் திங்களன்று நாம் கொடுத்திருந்த தடைநிலையான 19690-ஐ ஒரு கேப்அப் மூலம் தாண்டி 19760 என்ற புள்ளியில் தொடங்கி, அதிகபட்சமாக 19860-ஐ தொட்டாலும், நாள் முடியும்போது, மிக மிக பலமாக இறங்கி 19510-ல் முடிந்தது.

அடுத்தடுத்த நாள்களில் நடந்த வியாபாரங்களில் நாம் கொடுத்திருந்த தடைநிலை தக்கவைக்கப் பட்டிருக்கிறது. அதேநேரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 19320 தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருக்கிறது.

காட்டன், பக்கவாட்டு நகர்விலுள்ள நிலையில், நாம் முன்பு கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 19320, இன்னும் வலிமையான ஆதரவாகவே இருக்கிறது. அதேபோல் இந்த வாரமும் 19690 தடைநிலையாக இருக்கிறது.

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. 

சென்னா, சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 4390-ஐ உடைத்து வலிமையாக ஏற ஆரம்பித்திருக்கிறது. இந்த ஏற்றத்தில் உச்சமாக 4515-ஐ தொட்டிருக்கிறது.

சென்ற வாரம் திங்கள் அன்று 4342 என்ற எல்லையில் ஆரம்பித்து, மெள்ள மெள்ள ஏறி, புதனன்று மிக வலிமையான ஏற்றத்தைக் கொடுத்தது. பிறகு வியாழனன்று 4515 என்ற உச்சத்தைத் தொட்டு பிறகு, சற்றே பக்கவாட்டில் நகர்ந்துவருகிறது.

சென்னா, வலிமையான ஏற்றதிலுள்ள நிலையில் 4520 என்பது வலிமையான தடைநிலையாக இருப்பதுடன், கீழே 4360 என்பது முக்கிய ஆதரவாகவும் இருக்கிறது.