ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லிமிடெட் நிறுவனம் கட்டுமானத் துறை மற்றும் தொழில் துறைக்கான அதிக எடையுள்ள பொருள்களைக் கையாளும் இயந்திரங்களை (கிரேன்கள் போன்ற) உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் நிறுவனமாகும். இந்தத் தொழில் பிரிவில் மொபைல் கிரேன்கள் மற்றும் டவர் கிரேன்களில் அதிகபட்ச சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

தொழில் வளர்ச்சி...

மொபைல் மற்றும் நிலையான டவர் கிரேன்கள், க்ராவ்லர் கிரேன்கள், டிரக்கில் பொருத்தப்பட்ட கிரேன்கள், லாரிகளில் கட்டுமானப் பொருள்களை ஏற்றுவதற்கான லோடர்கள், பேக்ஹூ லோடர்கள், வைப்ரேட்டரி ரோலர்கள் (ரோடு ரோலர்கள் போன்ற), ஃபோர்க் லிப்டுகள், டிராக்டர்கள் மற்றும் ஹார்வெஸ்ட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

பொதுவான, கட்டுமானப் பிரிவில் இயங்கும் பல்வேறு துறைகள் மற்றும் அவற்றில் இருக்கும் பல்வேறு விதமான உபயோகங்கள் என்ற இரண்டு விஷயங்களையும் தெளிவாகப் புரிந்து வைத்துக்கொண்டு தன்னுடைய அனுபவம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவி யுடன் வாடிக்கையாளர்களுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்கிவருவது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் காரணியாக இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டு மானங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணி, துறைமுகம் மற்றும் கப்பல் கட்டுமான நிலையங்கள், அணைகளை அமைக்கும் கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் வசதிகளை நிர்மாணிக்கும் பணிகள், சாலைகள், சுரங்கங்கள், இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், இன்ஜினீயரிங் துறை, ரயில்வே, சிமென்ட், பெட்ரோலியம், பாதுகாப்புத் துறை, ரசாயனம் மற்றும் உர உற்பத்தி ஆலைகள், பொருள்களை வைத்திருக்கும் கிடங்குகள், லாஜிஸ்டிக்ஸ், குடியிருப்புகள் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் கட்டுமானங்கள் உள்ளிட்ட பல பணிகளில் பெருமளவு பயன்படு கின்றன.

கட்டுமானத் துறையில் நல்ல அனுபவம் கொண்ட வல்லுநர்களால் 1995-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். ஹரியானாவில் உள்ள பரிதாபாத் எனும் இடத்தில் உள்ள தொழில்பேட்டையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உற்பத்தி வசதியைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். இந்த உற்பத்தி மையங்களில் ஆண்டொன்றுக்கு 12,000 கட்டுமான பயன்பாட்டுக்கான ஹெவி உபகரணங்களையும், 9000 டிராக்டர் களையும் உற்பத்தி செய்யும் வகை யிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதி இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இந்த நிறுவனத்தின் வாடிக்கை யாளர்கள் என்ற ரீதியில் பார்த்தால், ஏ.சி.சி, அதானி, ஹேவெல்ஸ், ஜிண்டால் பவர், ஜே.குமார், கே.இ.சி, கல்பதரு பவர், லார்சன் & டியூப்ரோ, டாடா புராஜெக்ட்ஸ், ரிலையன்ஸ், புஞ்ச் லாயிட், டாடா ஸ்டீல், ஏ.பி.பி, ஏர்டெல், அல்கார்கோ, அம்புஜா சிமென்ட், அசோகா பில்ட்கான், பெர்ஜர் பெயின்ட்ஸ், பாஸ்ச், இன்ஜினீயர்ஸ் இந்தியா, எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், கெயில், ஜெனரல் எலெக்ட்ரிக், ஜி.இ பவர், ஹீரோ, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஜே.கே.லஷ்மி சிமென்ட், மஹிந்திரா, நோவார்ட்டிஸ், ஓரியன்ட் சிமென்ட், ஹனிவெல், ரைட்ஸ், சன் பார்மா, சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ், தெர்மேக்ஸ், வி.ஆர்.எல் லாஜிஸ்டிக்ஸ், டெல்லி மெட்ரோ, இந்தியன் ஆயில், என்.ஹெச்.பி.சி, என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, செயில், சவுத் ஈஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ், வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் உள்ளிட்ட 15,000-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன.

கிட்டத்தட்ட 25 ஆண்டு காலத்துக்கும் மேலாக அதிக எடை கொண்ட பொருள்களை கையாள்வதற்கான உபகரணங்களை உற்பத்தி செய்வதில் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், உலக அளவில் பிக் & கேரி எனும் ரக கிரேன்கள் (அதிக எடை உள்ள பொருள்களை ஓரிடத்திலிருந்து எடுத்து நகர்த்திக்கொண்டு செல்லுதல்) உற்பத்தி செய்வதில் மிகப் பெரிய நிறுவனமாக (இந்தியச் சந்தையில் மொபைல் கிரேன்களில் சுமார் 63% சந்தைப் பங்களிப்புடனும், டவர் கிரேன்களில் கிட்டத்தட்ட 60% சந்தைப் பங்களிப்புடனும்) இன்றைக்கு இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

இந்தியாவைத் தாண்டி உலக அளவில் 25-க்கும் மேற்பட்ட நாடு களில் (மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில்) தன்னுடைய வியாபாரத்தைச் செய்துவரும் இந்த நிறுவனம், இந்தியாவில் செயல்பட்டு வருகிற அதிகபட்ச பல்வகைப்படுத்தப் பட்ட (diversified) அதிக எடை கொண்ட பொருள்களைக் கையாளும் இயந்திரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. தன் செயல்பாட்டுக்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வசதியைப் பரிதாபாத் எனும் இடத்தில் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

தனக்கென சொந்தமாக 90 ஏக்கர் அளவிலான நிலத்தை உற்பத்தி வசதியை நிர்மாணிப்பதற்காகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். தனது தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்களையும் 21 மண்டல அலுவலகங்களையும் கொண்டு இயங்குகிறது இந்த நிறுவனம்.

தற்போதுள்ள நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதிகளே அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கான விற்பனை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், பெரிய அளவிலான விரிவாக்கத்துக்கான செலவுகள் ஏதும் செய்யாமலேயே எதிர்காலத் தேவைகளை இந்த நிறுவனத்தால் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பது தனிச் சிறப்பான விஷயமாகும்.

மத்திய அரசு தற்போது கொண்டுள்ள இன்ஃப்ராஸ்ட்ரக்சர் விரிவாக்கத் திட்டங்கள் (வீட்டு வசதி, சாலைகள், ரயில்வே, உற்பத்திக்கான கட்டுமானங்களுக் கான ஊக்குவிப்பு, விவசாயத்துக்கான திட்டங்கள் போன்றவை) இந்த நிறுவனத்துக்கான வியாபார வாய்ப்பைக் கணிசமான அளவில் விரிவடையச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், இந்த நிறுவனம் குடியிருப்புகள் மற்றும் அலுவலகக் கட்டுமானங்கள், மின்சார உற்பத்தி நிலையக் கட்டுமானங்கள், சிமென்ட் ஆலைகள், கெமிக்கல் ஆலைகள், மெட்ரோ கட்டுமானங்கள், பாலங்கள் மற்றும் பறக்கும் அடுக்கு மேம்பாலங்கள், அணைகள் போன்ற கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை வாடகைக்கு விடும் வசதியைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

தற்போது இந்த வகை வாடகைக்கு விடும் பிரிவில் 150-க்கும் மேற்பட்ட டவர் கிரேன்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கிரேன்களை வாடகைக்கு விடுவதிலும் ஒரு முன்னணி நிறுவனமாக இயங்கிவரும் இந்த நிறுவனம் உடனடியாகத் தேவைப்படுகிற ரக கிரேன்களை வழங்குதல், 24 மணிநேர உதிரி பாகத்தைத் தருதல் மற்றும் பழுது நீக்கு சேவையை வழங்குதல், 20 டன் எடை வரையிலுமான கிரேன்களை வாடகைக்கு விடுதல், கம்பெனியில் பயிற்சியளிக்கப்பட்ட இன்ஜினீயர்கள் மற்றும் டெக்னிஷியன்களைக் கொண்டு இந்த கிரேன்களை இயக்கித் தருதல் போன்ற அனுகூலங்களையும் கொண்டுள்ளதால், வாடகைக்கு விடும் பிரிவிலும் சிறப்பான செயல் பாட்டைக் கொண்டிருக்கிறது.

ரிஸ்க்குகள் என்னென்ன?

கட்டுமானத் துறைக்கான ஹெவி உபகரணங்களை உற்பத்தி செய்யும் துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் உபயோகப்படுத்தப்படும் துறைகள் அனைத்துமே பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடையும் துறை களே ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவு இல்லாதுபோனாலோ, எதிர் பாராத பொருளாதார தேக்கநிலை தோன்றினாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டைப் பாதிக்கவே செய்யும். மூலப் பொருள்கள் விலை உயர்வு, தொழில் நுட்ப மாறுதல், போட்டி, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கு உரித்தேயான ரிஸ்க்குகளேயாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத் துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தா லோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!