பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அக்சோ நோபல் இந்தியா லிமிடெட்! (BSE Code: 500710 NSE Symbol: AKZOINDIA)

அக்சோ நோபல் இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
அக்சோ நோபல் இந்தியா

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பங்கு நிறுவனம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கிவருகிற நிறுவனமான அக்சோ நோபல் இந்தியா லிமிடெட்.

பெயின்ட் தயாரிப்பில்...

பெயின்ட் மற்றும் கோட்டிங்ஸ் துறையில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், சிறு வாடிக்கையாளர்கள் முதல் நிறுவன ரீதியான வாடிக்கையாளர்கள் வரையிலான கோட்டிங் மற்றும் பெயின்ட்டுகளுக்கான தீர்வுகளை வழங்கி வருகிறது. நீண்ட பாரம்பர்யம், புதுமையான முயற்சிகள் மற்றும் சமரசம் ஏதும் செய்யாத அளவில் நீடித்து நிலைக்கிற அளவிலான தொழில்நுட்பம் என்ற மூன்றையும் உள்ளடக்கியிருப்பதால் வாடிக்கையாளர் களுக்கு சிறப்பான தயாரிப்புகளை வழங்கி வருவதாகக் கூறுகிறது இந்த நிறுவனம்.

கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தொழில் செய்துவரும் இந்த நிறுவனம், இன்றைக்கு ஐந்து உற்பத்தி மையங்கள், இரண்டு ஆராய்ச்சி மையங்கள், 20,000-க்கும் மேற்பட்ட பெயின்ட் ரீடெயிலர்கள், 4,000-க்கும் மேற்பட்ட கோட்டிங் வாடிக்கையாளர்கள், 15,000-க்கும் மேற்பட்ட பெயின்ட் தேவைக்கேற்ப பல்வேறு வண்ணத்தில் கலந்து தருகிற டின்ட்டிங் (tinting) மெஷின்கள் மற்றும் 1,467 பணியாளர்களுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அக்சோ நோபல் இந்தியா 
லிமிடெட்! (BSE Code: 500710 NSE Symbol: AKZOINDIA)

முன்னணி பிராண்டுகள்...

டியூலக்ஸ், இன்டர்பான் (பவுடர் கோட்டிங்ஸ்), ரெசிகோட், ட்ரைநார், வான்டா, கோட் இன், சிக்கென்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல முன்னணி பிராண்டுகளில் தயாரிப்புகளை சந்தைப் படுத்தி வருகிறது இந்த நிறுவனம். கடந்த நிதியாண்டில் 31,486 மில்லியன் ரூபாய் அளவிலான விற்றுவரவையும், ரூபாய் 2,900 அளவிலான வரிக்குப் பிந்தைய வருமானத்தையும் கொண்டிருந்தது.

வளர்ச்சி வரலாறு...

1911-ம் ஆண்டில் ஐ.சி.ஐ குழுமம் தொழிலை ஆரம்பித்தது. யுனைடெட் கிங்டமில் 1926-ம் ஆண்டில் நான்கு நிறுவனங்கள் இணைக்கப்பட்டு, ஐ.சி.ஐ நிறுவனம் யுனைடெட் கிங்டமில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஒன்றான பிரன்னர் மான்ட் அண்ட் கோ நிறுவனம் கொல்கத்தாவில் டிரேடிங் அலுவலகம் ஆரம்பித்து அதன் மூலம் ஆல்கலீஸ் மற்றும் கெமிக்கல்கள் விற்பனை செய்து வந்தது. 1923-ம் ஆண்டில் இந்த நிறுவனம் பிரன்னர் மான்ட் அண்ட் (இந்தியா) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1929-ம் ஆண்டில் இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) லிமிடெட் என்று பெயரிடப்பட்டது. 1954-ம் ஆண்டில் ஐ.சி.ஐ பி.எல்.சி நிறுவனமானது இந்திய அரசுடன் கூட்டணி அமைத்து இண்டியன் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தது.

2003-ம் ஆண்டில் இந்திய அரசு இந்த நிறுவனத்தில் செய்திருந்த முதலீட்டில் இருந்து முழுமையாக வெளியேறியது. 1985-ம் ஆண்டில் ஐ.இ.எல் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த நிறுவனம், 1989-ம் ஆண்டில் ஐ.சி.ஐ இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2010-ம் ஆண்டில் அக்சோ நோபல் இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1976-ம் ஆண்டில் ஐ.சி.ஐ பி.எல்.சி நிறுவனம் தன் துணை நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு, தானேயில் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவியது. காலப்போக்கில் கன்சாலிடேஷன், டைவெஸ்ட்மென்ட் மற்றும் ரீஸ்ட்ரக்சரிங் எனப் பல்வேறு நிகழ்வுகள் இந்த நிறுவனத்தில் நடை பெற்றது. இதில் குறிப்பாக, ஐ.சி.ஐ பி.எல்.சி நிறுவனத்துடன் ஆல்கலி அண்ட் கெமிக்கல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், கெமிக்கல்ஸ் அண்ட் பைபர்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் க்ரெசன்ட் டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் என்ற மூன்று குழும நிறுவனங்களும் ஐ.சி.ஐ பி.எல்.சி நிறுவனத்துடன் 1984-ம் ஆண்டில் இணைக்கப்பட்டதைக் கூறலாம்.

1987-ம் ஆண்டில் இந்த நிறுவனம் நால்கோ கெமிக்கல்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தது. 1997-ம் ஆண்டில் தானேயில் ஒரு பெயின்ட் மற்றும் பாலியூரித்தேன் உற்பத்தி வசதியைத் தொடங்கியது. பின்னர், 1998-ம் ஆண்டில் சண்டிகாரில் ஒரு பெயின்ட் உற்பத்தி மையத்தையும் தானேயில் யுனிக்மா இன்னோவேஷன் சென்டரையும் நிறுவியது.

சந்தைப் பங்களிப்பு...

இந்திய கோட்டிங் மற்றும் பெயின்ட் துறையின் மொத்த சந்தை மதிப்பானது கிட்டத்தட்ட ரூ.55,000 கோடி. ஆர்கனைஸ்டு உற்பத்தியாளர்கள் கிட்டத்தட்ட 75% சந்தைப் பங்களிப்பைக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

ஆர்கனைஸ்டு உற்பத்தி யாளர்கள் டெக்கரேட்டிவ் பெயின்ட் பிரிவில் சுமார் 75% அளவிலான சந்தைப் பங்களிப் பைக் கொண்டுள்ளனர். தொழிற் சாலைகளில் உபயோகப்படுத்தப்படும் பெயின்டானது ஆட்டோமொபைல், மரைன், பேக்கேஜிங், பவுடர் கோட்டிங், பாதுகாப்புக்கான கோட்டிங் மற்றும் ஏனைய இண்டஸ்ட்ரீயல் கோட்டிங் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

அக்சோ நோபல் இந்தியா 
லிமிடெட்! (BSE Code: 500710 NSE Symbol: AKZOINDIA)

பல்வேறு பிரிவுகளின் பணி...

இந்த நிறுவனத்தின் டெக்க ரேட்டிவ் பிரிவில் பல்வேறு வித சூழல்கள் மற்றும் மேற்பரப்பில் பூசுவதற்கு ஏதுவான பெயின்ட் தயாரிக்கப்படுகிறது. ஆட்டோ மோட்டிவ் மற்றும் ஸ்பெஷா லிட்டி கோட்டிங் பிரிவில் ஆட்டோமொபைல்கள், கன்ஸ் யூமர் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கான கோட்டிங் மற்றும் வாகனங்களைப் புதுப் பிப்பிக்கத் தேவையான பெயின்ட் கோட்டிங் மற்றும் ஸ்பெஷாலிட்டி கோட்டிங் போன்றவற்றுக்குத் தேவைப்படும் பெயின்ட்டை உற்பத்தி செய்து வருகிறது.

இண்டஸ்ட்ரீயல் கோட்டிங்ஸ் பிரிவில் காயில் மற்றும் எக்ஸ்ட்ரூஷனுக்கான கோட்டிங் உள்ளிட்ட பல தொழில்துறைக்குத் தேவைப் படும் பெயின்ட் உற்பத்தி செய்து வருகிறது.

பேக்கேஜிங் பிரிவில் உணவுப் பொருள்களுக்கான கேன்கள் மற்றும் மூடிகளின் மீது அச்சடிக்கத் தேவைப்படும் இங்க்குகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மரைன் மற்றும் புரொட் டெக்ட்டிவ் கோட்டிங் பிரிவில் எண்ணெய் மற்றும் எரிவாயு, பவர், இன்ப் ராஸ்ட்ரக்சர் புராஜெக்ட்கள், காற்றாலைகள் போன்றவற்றுக்குத் தேவைப்படுகிற கோட்டிங்குகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

பெயின்ட் மற்றும் கோட்டிங் தயாரிப்புகளில் ஈடுபடுகிற நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் பொருந்தும். பெயின்ட் மற்றும் கோட்டிங் துறையில் மூலப் பொருள்களின் விலைஉயர்வு பாதிப்பை ஏற்படுத் தக்கூடிய வகையிலான ரிஸ்க் ஆகும். கச்சா எண்ணெயின் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் என்ற இரண்டும் மூலப்பொருள்கள் விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதால், இவற்றின் விலைகளில் நடக்கும் ஏற்றமும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க் என்றே கூறலாம்.

இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்கள் கணினி மற்றும் இணையதளத்தைப் பெருமளவில் தங்களுடைய வியாபாரத்தை மேலாண்மை செய்ய உதவும் வகையில் பயன்படுத்துகின்றன. எனவே, கணினித் தொழில்நுட்பம் சார்ந்த ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. பெயின்ட் மற்றும் கோட்டிங் துறையானது கெமிக்கல்கள் சார்ந்த துறை என்பதால், இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கான நடைமுறைகள் அனைத்தையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.

அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கைகளில் வரும் மாறுதல்கள் போன்றவையும் இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கான ரிஸ்க்குகளே. மேலும், பெயின்ட் மற்றும் கோட்டிங் என்ற இரண்டுமே பொருளாதார வளர்ச்சி சார்ந்தே வியாபார வளர்ச்சி காண்கிற துறை. எனவே, ஏதாவது ஒரு காரணத் தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளராமல் போனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கும்.

அக்சோ நோபல் இந்தியா 
லிமிடெட்! (BSE Code: 500710 NSE Symbol: AKZOINDIA)

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்பே முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!