Published:Updated:

அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட்! அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ALKEM, BSE CODE: 539523)

அல்கெம் லேபரட்டரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
அல்கெம் லேபரட்டரீஸ்

அறிவோம் பங்கு நிறுவனம்... - KN O W Y O U R C O M P A N Y

அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட்! அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ALKEM, BSE CODE: 539523)

அறிவோம் பங்கு நிறுவனம்... - KN O W Y O U R C O M P A N Y

Published:Updated:
அல்கெம் லேபரட்டரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
அல்கெம் லேபரட்டரீஸ்

இன்றைக்கு இந்தியாவில் சந்தைப் பங்களிப்பின் அடிப்படையில் ஐந்தாவது பெரிய பார்மச் சூட்டிக்கல் நிறுவனமாகத் திகழ்கிறது அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட் (Alkem Laboratories) நிறுவம்ன. 1973-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தைத்தான் இந்த வாரம் அறிமுகப்படுத்துகிறோம்.

நிறுவனத்தின் வளர்ச்சி

மும்பையில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனம், நாற்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தன் வர்த்தகத்தைச் செய்துவருகிறது. உயர்தரம் கொண்ட பிராண்டட் ஜெனரிக்ஸ்கள், ஜெனரிக் மருந்துவகைகள், ஆக்டிவ் பார்மச்சூட்டிக்கல் இன்க்ரீடி யன்ட்ஸ் மற்றும் நியூட்ரசூட்டிக்கல்ஸ் உற்பத்தியில் வெற்றிகரமாகச் செயல் பட்டு வருகிறது இந்த நிறுவனம்.2015-ம் ஆண்டில் பொதுப் பங்குகளை வெளியிட்டு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

இன்றைக்கு 21 உற்பத்தி மையங் களையும், ஆறு ஆராய்ச்சி மையங் களையும் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், இந்தியாவில் 15 ஆண்டு களாகத் தொற்று எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்பில் முதலாவது இடத்தில் இருந்துவருகிறது. இந்தியாவில் இமாசலப்பிரதேசத்தில் உள்ள பட்டி, சிக்கிம், டாமன், மந்த்வா, அங்க்லேஷ்வர், இந்தூர், புனே போன்ற இடங்களில் உற்பத்தி மையங்களையும், அமெரிக்காவில் கலிபோர்னியா மற்றும் செயின்ட் லூயிஸ் (மிசெளரி) போன்ற இடங் களில் ஆய்வு மையங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட்! அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட்!
(NSE SYMBOL: ALKEM, BSE CODE: 539523)

நிறுவனத்தின் வர்த்தகம்...

இரப்பை மற்றும் குடல் மருத்துவம் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் தயாரிப்பில் அகில இந்திய ரீதியாக மூன்றாவது பெரிய நிறுவனமாகவும் இருந்து வருகிறது இந்த நிறுவனம். 800-க்கும் மேற்பட்ட பிராண்டு களுடன் மருந்துகள் சந்தையில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தின் பத்து பிராண்டுகள் ஆண்டொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபாய் அளவுக்கு விற்பனை என்ற எல்லையைத் தாண்டி வர்த்தகமாகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். மேலும், இந்த நிறுவனத்தின் ஏழு பிராண்டுகள் இந்தியாவில் உள்ள முக்கிய முதல் 100 பிராண்டுகளுக்குள் இடம் பிடித்திருப்பதும் தனிச் சிறப்பான விஷயமாகும்.

2019-20-ம் நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் மொத்த விற்றுவரவில் அமெரிக்காவில் செய்யப்படும் வர்த்தகத்தில் இருந்து விற்றுவரவு 26.4 சதவிகிதமும், இந்தியாவில் இருந்து விற்றுவரவு 67.2 சதவிகிதமும், ஏனைய உலக நாடுகளில் இருந்து விற்றுவரவு 6.4 சதவிகிதமுமாக இருக்கிறது.

தன்னுடைய தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க 40-க்கும் மேற்பட்ட சேல்ஸ் டிப்போக்கள் மற்றும் வேர்ஹவுஸ் களையும், 7,000-க்கும் மேற்பட்ட ஸ்டாக்கிஸ்டுகளையும் கொண்டு செயல்பட்டுவருகிறது இந்த நிறுவனம்.

40-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வர்த்தகத்தைச் செய்து வரும் இந்த நிறுவனம், அமெரிக்க டாலர் மதிப்பில் 300 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை அமெரிக்காவில் மட்டும் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்களில் ஆறு உற்பத்தி மையங்கள் அமெரிக்க உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் (FDA) அங்கீகாரம் பெற்றுள்ளது.

144 ஏ அண்ட் டி ஏ-க்களை (Abbreviated New Drug Applications (ANDA) filings) அமெரிக்க எஃப்.டி.ஏ-வில் ஃபைல் செய்துள்ளது இந்த நிறுவனம். மேலும், 89 ஏ& டி.ஏ-க்களுக்கான அப்ரூவலை அமெரிக்க எஃப்.டி.ஏ-விடமிருந்து இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

1973-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் உற்பத்தி மையம், 1978-ம் ஆண்டில் மும்பைக்கு அருகே உள்ள தலோஜா எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1992-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள மந்த்வா எனும் இடத்தில் இரண்டாவது உற்பத்தி மையத்தையும், 2003-ம் ஆண்டில் தலோஜாவில் இந்த நிறுவனத்தின் முதல் ஆராய்ச்சி மையமும் நிறுவப்பட்டது. 2006-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பான டாக்ஸிம் எனும் தொற்று தடுப்பு மருந்து இந்தியாவில் 1,000 மில்லியன் ரூபாய் என்ற வர்த்தக எல்லை யைத் தாண்டியது.

2007-ம் ஆண்டில்இந்த நிறுவனம் தன்னுடைய தயாரிப்பான அமோல்டி பைன் எனும் மருந்துக்கு அமெரிக்காவில் ஏ&டி.ஏ-யை அனுமதி பெற விண்ணப் பித்து, 2009-ம் ஆண்டில் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றது.

2009-ம் ஆண்டில் பார்மாகார் பி.டி.ஒய் லிமிடெட் என்ற ஆஸ்திரேலிய ஜெனரிக் பார்மா நிறுவனத்தைக் கையகப்படுத்திய இந்த நிறுவனம், 2010-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான அசென்ட் பார்மச்சூட்டிக்கல் நிறுவனத் தையும், 2011-ம் ஆண்டில் பயோசி மிலர்களை உற்பத்தி செய்துவந்த இந்திய நிறுவனமான என்ஸுன் எனும் நிறுவனத்தையும், 2012-ம் ஆண்டில் அமெரிக்காவில் செயல் பட்டுவந்த ஏ.பி.ஐ உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றையும் கையகப்படுத்தியது.

2014-ம் ஆண்டில் கால்டெர்மா எஸ்.ஏ எனும் நிறுவனத்தின் பிராண்டான ‘கிளிண்டாக்-ஏ’ எனும் பிராண்டை இந்தியாவில் வாங்கியது. அதே ஆண்டில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ‘க்ளாவம்’ எனும் மருந்து ரூபாய் 2,000 மில்லியன் என்ற விற்பனை இலக்கைத் தாண்டியது.

2015-ம் ஆண்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வந்த பார்முலேஷன் நிறுவனத் தைக் கையகப்படுத்திய இந்த நிறுவனம், 2017-ம் ஆண்டில் தன் தயாரிப்பான ‘ப்ரெகாகெம்’ மற்றும் ‘லிவோஎர்ப்’ எனும் மருந்துகளை டைரக்ட் மார்க் கெட்டிங் மூலம் விநியோகம் செய்ய ஆரம்பித்தது.

2018-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் அமெரிக்க மருந்து விற்றுவரவுத் தொகை அமெரிக்க டாலர்கள் அளவீட்டில் 200 மில்லியன் என்ற இலக்கைத் தாண்டியது.

2019-ம் ஆண்டில் இந்த நிறுவனம் அமெரிக்க டாலர் அளவீட்டில் ஒரு பில்லியன் டாலர் என்ற ஒட்டுமொத்த விற்றுவரவு என்ற எல்லையை வெற்றிகரமாகத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்க விஷய மாகும்.

தயாரிப்பு ரீதியாகப் பார்த்தால், தொற்று நீக்குதல், தோல் மருத்துவம், சர்க்கரை மருத்துவம், இருதய மருத்துவம், குடல் மற்றும் இரப்பைக்கான மருத்துவம், ஆஸ்டியோ போரோசிஸ், ஆன்காலஜி, யூராலஜி, மகப்பேறு மருத்துவம் போன்றவற்றுக்கான மருந்து களையும் விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஊட்டச் சத்துக்காக உட்கொள்ளும் மருந்து வகைகளையும் உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம்.

அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட்! அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட்!
(NSE SYMBOL: ALKEM, BSE CODE: 539523)

ரிஸ்க்குகள் என்னென்ன?

மருந்துகள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்கு களும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மருந்து தயாரிப்பில் ஈடுபடுகிற நிறுவனங்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அவற்றில் கணிசமான அளவில் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவையாகும். எனவே, ஆராய்ச்சியில் வெற்றி பெறுவது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க அவசியமான ஒன்றாகும்.

மேலும், அரசாங்கத்தின் கொள்கைகளில் வரக்கூடிய மாறுதல்கள், மூலப் பொருள் களின் விலையில் வரும் மாறுதல்கள், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கு உரித்தேயான ரிஸ்க்குகளே.

தொழில் ரீதியான போட்டி மற்றும் வேகமாக மாறுகிற தொழில்நுட்பம், போட்டி நிறுவனங்கள் ஆராய்ச்சியில் பெரும் வெற்றியால் அவற்றுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கும் அனுகூலங்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கு உரித்தான ரிஸ்க்குகள் என்று கூறலாம்.

அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட்! அல்கெம் லேபரட்டரீஸ் லிமிடெட்!
(NSE SYMBOL: ALKEM, BSE CODE: 539523)

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில்முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism