Published:Updated:

அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட்!

அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட்

கம்பெனி பயோடேட்டா

அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோ டேட்டா அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தினுடையது. கடந்த ஆண்டு இறுதியில் பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்ட இந்த நிறுவனமானது அக்ரோ கெமிக்கல்களில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள், காஸ்மெட்டிக்ஸ் துறைக்குத் தேவைப்படும் கெமிக்கல்கள் மற்றும் பாலிமர்களுக்கு தேவைப்படும் கெமிக்கல்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டது.

தொழில் பிரிவுகள்...

இந்த நிறுவனம் செய்யும் தொழில் பெரும் பிரிவுகள் என்ற அடிப்படையில் பார்த்தால், பார்மா இண்டர்மீடியரிஸ், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் மற்றும் ஏனைய கெமிக்கல்கள் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. பார்மா துறைக்கான கெமிக்கல்களை ஜி.எம்.பி என்னும் குட் மேனுஃபேக்சரிங் பிராக்டிஸ் அடிப்படையில் உற்பத்தி செய்து தருவதும், ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற உற்பத்தி மையங்களின் வாயிலாக ஃபைன் மற்றும் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களை உற்பத்தி செய்து தருவதும் இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பாகும்.

பார்மா துறைக்குத் தேவைப்படும் ஏ.பி.ஐ-களைக் (Active Pharmaceutical Ingredients) கண்டறிந்து, தன்னுடைய வாடிக்கையாளர் களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற ரீதியில் உற்பத்தி செய்து தருகிறது இந்த நிறுவனம்.

இன்றைக்குத் தலைசிறந்த ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையங்களைக் கொண்டு அட்வான்ஸ்டு பார்மா இண்டர்மீடியரிஸ், ஏ.பி.ஐ மற்றும் என்.சி.இ (New Chemical Entities), அக்ரோ மற்றும் ஃபைன் கெமிக்கல் களை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் அடிப்படை வேதிப்பொருள்கள் போன்ற வற்றை உற்பத்தி செய்து ஐம்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் உள்ள 450-க்கும் மேற்பட்ட நிறுவன ரீதியான வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட்!

உற்பத்தி மையங்கள்...

இந்தியாவில் குஜராத்தில் மூன்று உற்பத்தி மையங்களையும் ஓர் ஆராய்ச்சி மையத்தையும் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், 2021-22 நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, மொத்த விற்பனையில் ஏற்றுமதியின் பங்களிப்பாக 58 சதவிகிதத்தைக்கொண்டிருந்தது குறிப்பிடத் தக்கதொரு விஷயமாகும். வர்த்தகத்தில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பங்களிப்பானது அந்தந்த நாடுகளின் பெயருக்குப் பின்னால் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள அளவிலான விகிதமாக இருந்தது: இத்தாலி (35 %), பின்லாந்து (18%), சீனா (10%), இஸ்ரேல் (9%), ஸ்பெயின் (8%), ஜெர்மனி (6%), ஜப்பான் (1%), மெக்ஸிகோ (1%) மற்றும் ஏனைய நாடுகள் (12%).

கடந்த நிதியாண்டில் 5,201 மில்லியன் ரூபாய் என்கிற அளவுக்கான வர்த்தகத்தைச் செய்திருந்த இந்த நிறுவனத்தின் விற்றுவரவில் ஏ.பி.ஐ மற்றும் என்.சி.இ-க்களுக்கான (API & NCE) அட்வான்ஸ் இண்டர்மீடியரிஸின் பங்களிப்பு 77 சதவிகிதமாகவும், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களின் பங்களிப்பு 18 சதவிகிதமாகவும் ஏனைய தயரிப்புகளின் பங்களிப்பு 5 சதவிகித மாகவும் இருந்தது.

நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையங்கள் என்கிற அளவீட்டில் பார்த்தால், சச்சின் என்னும் இடத்தில் உற்பத்தி மையம் மூலம் ஆண்டொன்றுக்கு 2,460 MTPA-என்ற அளவிலும், அங்க்லேஷ்வரில் செயல்படும் உற்பத்தி மையம் மூலம் ஆண்டொன்றுக்கு 3,600 MTPA என்ற அளவிலும், ஜகாடியா என்ற இடத்தில் செயல்படும் உற்பத்தி மையம் மூலம் 3,600 MTPA என்ற அளவிலும் நிறுவப்பட்டுள்ளது. சச்சின் எனும் இடத்தில் உள்ள வேர்ஹவுஸ் மையம்மூலம் 1,050 MTPA என்ற அளவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் மையத்தையும் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

நிறுவனத்தின் வளர்ச்சி...

2004-ம் ஆண்டில் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனமாக நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 2007-ம் ஆண்டில் அமி ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டில் 1,000 மில்லியன் ரூபாய் விற்று வரவு என்ற எல்லையைத் தொட்டது.

மேலும், அமெரிக்காவில் உள்ள டெல்வேர் எனும் இடத்தில் அமி ஆன்கோ தெரனொஸ்டிக்ஸ் எல்.எல்.சி என்ற நிறுவனத்தையும் இதே ஆண்டில் பதிவு செய்து தொடங்கியது. 2016-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையங்கள் மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. 2017-ம் ஆண்டில் 1,500 மில்லியன் ரூபாய் விற்று வரவு என்ற இலக்கைத் தொட்டது. இதே ஆண்டில் இந்தியாவில் ஐந்து காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்தது இந்த நிறுவனம்.

2018-ம் ஆண்டில் குட் மேனுஃபேக்சரிங் பிராக்டீஸை (GMP Compliance) கொண்டிருக்கும் உற்பத்தி மற்றும் வேர்ஹவுஸ் மையத்தை நிறுவியது இந்த நிறுவனம். மேலும், மூன்று காப்புரிமைகளுக்கு இதே ஆண்டில் விண்ணப்பித்த இந்த நிறுவனம், இந்திய அரசின் டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஃபாரின் டிரேடிட் என்ற அமைப்பிடமிருந்து இரண்டு நட்சத்திர ஏற்றுமதி நிறுவனம் என்ற அந்தஸ்தையும் இந்த ஆண்டில் பெற்றது. மேலும், இதே ஆண்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப் பாட்டு ஆணையத்திடமிருந்து முதல் இ.ஐ.ஆர்-யை (Establishment Inspection Report) பெற்றது. 2020-ம் ஆண்டில் இரண்டாவது இ.ஐ.ஆர்-யையும் பெற்ற இந்த நிறுவனம், இதே ஆண்டில் புதிய தொரு ஆராய்ச்சி மையத்தையும் சச்சின் எனும் இடத்தில் நிறுவியது. இதே ஆண்டில் சால் வெண்ட் ரெக்கவரி பிளான்ட் (Solvent Recovery Plant) ஒன்றையும் இதே இடத்தில் உள்ள உற்பத்தி மையத்தில் நிறுவியது.

மேலும், குஜராத் ஆர்கானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து அங்கலேஷ்வர் மற்றும் ஜகாடியா என்ற இடங்களில் செயல்பட்டு வந்த உற்பத்தி மையத்தைக் கையகப்படுத்தியதும் இதே ஆண்டில்தான்.

இந்த நிறுவனத்தின் அட்வான்ஸ்ட் பார்மா இன்டர் மீடியரிஸ் தொழில் பிரிவுக்கு சன்பார்மா, சைடஸ், லாரஸ் லேப்ஸ், சிப்லா, டாக்டர்ரெட்டி, லூபின், அரோபிந்தோ, மெடிகெம், மிடாஸ் பார்மா, ஹெடிரோ உள்ளிட்ட பல ஜெனரிக் மருந்துகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் பல வாடிக்கையாளர்களாகவும், பாயர், பெர்மியான், போஹ்ரிங்கர் இஞ்சல்ஹெய்ம் உள்ளிட்ட பல இன்னோவேட்டர் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றன.

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் தொழில் பிரிவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன்பார்மா, ஷா ரான் லேபரட்டரீஸ், ஹிமாலயா, எல்.பி.பி ஸ்பெஷாலிட்டீஸ், டிரான்ஸ்பார் கெமி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர் களாக இருக் கின்றன. இவற்றில் பெரும் பாலானவை அவை ஈடுபட்டு வரும் துறை வேகமாக வளர்ச்சி அடையும் ரீதியிலான நாடுகளில் செயல்பட்டுவரும் எம்.என்.சி நிறுவனங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

2,200 சதுர மீட்டர் அளவில் அதிநவீன உபகரணங்களைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத் தின் ஆராய்ச்சி மையத்தில் 60 பணியாளர்கள் பணியில் உள்ளனர். ஈத்தரி பிக்கேஷன், டையசோட்டேஷன், அசை லேஷன், ஹைட்ரோ ஜினேஷன், அமினேஷன், நைட்ரேஷன், அல்கைலேஷன், ப்ளூரினேஷன், எஸ்டரிபிக்கேஷன், குளோரினே ஷன், ப்ரோமினேஷன் போன்ற கெமிக்கல் ரியாக்‌ஷன்களை செய்து பார்க்கும் மையங்களையும், தொடர் ரியாக்‌ஷன்களைநிகழ்த்திப் பார்க்கும் மையங்களையும் இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட்!
அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

கெமிக்கல்கள் மற்றும் பார்மா துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கே உரித்தான அனைத்து வகையான ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. உற்பத்தி செய்யும் வேதிப்பொருள்களில் கட்டாயம் இருக்க வேண்டிய உச்சபட்ச தரம், தயாரிப்பு முறைகளில் கடைப் பிடிக்க வேண்டியிருக்கும் சுகாதார மற்றும் ஏனைய சட்ட திட்டங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த அரசாங்கத்தின் தீவிர கட்டுப்பாடுகள் (நிகழ்கால மற்றும் எதிர்காலத்தில் மாறக்கூடிய) இந்த துறையின் ரிஸ்க் ஆகும்.

மற்றும் மருந்துகள் சம்பந்தப்பட்ட கெமிக்கல்கள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், அந்த மருந்துக்கான மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிடுதல் மற்றும் அதனால் இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் கெமிக்கல்களின் தேவை குறைந்துபோதல், மூலப்பொருள்கள் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்ற அனைத்துமே இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்கு களாக பார்க்கப்பட வேண்டியவையாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism