Published:Updated:

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் லிமிடெட்! (BSE Code: 533758, NSE Symbol: APLAPOLLO)

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ்

கம்பெனி பயோடேட்டா

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் லிமிடெட்! (BSE Code: 533758, NSE Symbol: APLAPOLLO)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் நிறுவனம், ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் லிமிடெட் என்னும் ஸ்ட்ரக்சுரல் டியூப்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

இன்றைக்கு ஸ்ட்ரக்சுரல் ஸ்டீல் டியூப் பிராண்டில் முதலாவது பிராண்டாகத் திகழும் இந்த நிறுவனம், நான்கு தயாரிப்புகளில் 14 முன்னணி பிராண்டுகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஆண்டொன்றுக்கு 2.6 மில்லியன் டன்கள் என்ற அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியைக் கடந்த நிதியாண்டின் இறுதியில் தன்வசத்தே கொண்டிருந்தது இந்த நிறுவனம்.

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் லிமிடெட்! (BSE Code: 533758, NSE Symbol: APLAPOLLO)

நிறுவனத்தின் வரலாறு...

1986-ம் ஆண்டில் பீகார் டியூப்ஸ் பிரை வேட் லிமிடெட் என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம், முதன்முதலாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிக்கந்தராபாத் எனும் ஊரில் எம்.எஸ் பைப்புகள் உற்பத்தி செய்யும் வசதி ஒன்றை நிறுவியது. பின்னர், ஜி.ஐ பைப்புகள் உற்பத்தியிலும் கால்பதித்தது இந்த நிறுவனம்.

1993-ம் ஆண்டில் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்ட இந்த நிறுவனம், 1994-95-ம் ஆண்டில் பொதுப்பங்குகளை வெளியிட்டு, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதே ஆண்டில் ஒரு கால்வனைசிங் பிளான்ட்டையும் நிறுவிய இந்த நிறுவனம், 2000-2002-ம் ஆண்டுகளில் புதியதொரு டியூப் மில் மற்றும் காலியம் (gallium) மில் ஒன்றையும் நிறுவியது.

2003-04-ம் ஆண்டுகளில் பல்வேறு அளவிலான ஹாலோ செக்‌ஷன்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. இதே ஆண்டில்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக ப்ரீ-கால்வனைஸ்டு பைப்புகளை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 2007-08-ம் ஆண்டில் அப்போலோ மெட்டாலெக்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தையும், பெங்களூரில் உள்ள லஷ்மி மெட்டல் உத்யோக் லிமிடெட் நிறுவனத்தையும் கையகப்படுத்தியது. இதே ஆண்டில்தான் ஸ்டார் எக்ஸ்போர்ட் ஹவுஸ் என்ற அங்கீகாரத்தையும் பெற்றது.

2009-10-ம் ஆண்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய புதிய உற்பத்திப் பிரிவை ஓசூரில் நிறுவியது. இதே ஆண்டில்தான் அகில இந்திய ரீதியாகப் பல்வேறு வேர்ஹவுஸ்களையும் இந்த நிறுவனம் உருவாக்கியது. 2010-ம் ஆண்டில் பீகார் டியூப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெயர் ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் லிமிடெட் என்று மாற்றப்பட்டது. 2011-12-ம் ஆண்டில் மும்பைக்கு அருகே இருந்த லாயிட்ஸ் லைன் பைப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவைக் கையகப்படுத்தியது.

2013-14-ம் ஆண்டில் ஜே.ஹெச்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து சி.ஆர்.எஃப்.ஹெச் காயில்களை வாங்கி தன்னுடைய புதிய வகை தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தது. இந்த ஆண்டில்தான் டோர் செக்‌ஷன், விண்டோஸ் செக்‌ஷன் மற்றும் ரயிலிங் டியூப்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 2015-ம் ஆண்டில் இந்த நிறுவனம் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் டன் உற்பத்தி என்ற எல்லையை இந்தியாவிலேயே முதன்முறையாக எட்டிய நிறுவனம் என்ற பெருமைமிகு நிலையை அடைந்தது.

2016-17-ம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன் முறையாக டைரக்ட் ஃபார்மிங் டெக்னாலஜி என்னும் தொழில்நுட்பத்தைத் தன்னுடைய ஓசூர் உற்பத்தி மையத்தில் பயன்படுத்த ஆரம்பித்தது. பின்னர், ராய்ப்பூரில் இருக்கும் உற்பத்தி மையத் திலும் இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியது. இதே ஆண்டில் ஆறு தயாரிப்புகளுக் கான டிசைன்களுக்கான காப்புரிமையையும் பெற்றது இந்த நிறுவனம். 2018-19-ம் நிதியாண்டில் அப்போலோ ட்ரைகோட் நிறுவனத்தைக் கையகப் படுத்தியதன் மூலம் கதவுகளுக்கான சட்டங்கள், டிசைனர் டியூப்கள், எலெக்ட்ரிக்கல் கான்ட்யூட்கள், மேற்கூரைக்கான தயாரிப்புகள் போன்ற வீட்டுவசதிப் பிரிவில் கால்பதித்தது.

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் லிமிடெட்! (BSE Code: 533758, NSE Symbol: APLAPOLLO)

நிறுவனத்தின் தனிச்சிறப்பு...

இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பு எனப் பார்த்தால், இந்தத் துறையில் செயல்பட்டுவரும் இரண்டாவது பெரிய நிறுவனத்துக்கும் முதல் நிலையில் இருக்கும் இந்த நிறுவனத்துக்கும் இடையே நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித்திறனில் உள்ள வித்தி யாசத்தின் அளவு மிகப் பெரிய தாக இருப்பதுதான்.

அதிநவீன தொழில்நுட்பத்தை உபயோகித்தல், உற்பத்திக்கான செலவைக் குறைந்த அளவில் வைத்திருக்கும் கட்டுப்பாடு, இந்த செக்டாரில் செயல்படும் ஏனைய நிறுவனங்களைவிட அதிக லாப சதவிகிதத்தைக் கொண்டிருத்தல், விநியோகஸ் தர்களுக்குத் தேவைப்படும் உற்பத்திப் பொருளைக் கொண்டு சேர்ப்பதில் ஆகக்குறைந்த கால அவகாசமான 48 மணிநேரம் என்ற அளவில் செயல்பட்டு வருதல், கடன் ஏதும் இல்லாமல் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையத்தை இரண்டு மடங்காக்கிக் கொண்டுவரும் நடைமுறை, வாடிக்கையாளர் களுக்கு இந்த நிறுவனத்தின் பிராண்டின் மீதிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை போன்ற வையும் இந்த நிறுவனத்தினுடைய ஏனைய தனிச்சிறப்புகளாகும்.

இந்திய அளவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டீலில் 2% அளவையும், ஹெச்.ஆர் காயில் தயாரிப்பில் 10% அளவையும் இந்த நிறுவனம் கொள்முதல் செய்வதால், கணிசமான அளவில் விலையை நிர்ணயிப் பதில் அனுகூலங்களைக் கொண்டு திகழ்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களுக்கு டாப்-3 வாடிக்கையாளர்களில் ஒன்றாக இந்த நிறுவனம் திகழ்வது ஒரு தனிச்சிறப்பான விஷயமாகும். மேலும், இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் தயாரிப்புகளில் சில மோனோபாலி ரகமாக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் நிறுவனம் 16 காப்புரிமைகள், 10 உற்பத்தி மையங்கள், 2,124 பணி யாளர்கள், 1,500-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள், 800 விநியோகஸ்தர் களுடன் வெற்றிகரமாகச் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் 50,000-க்கும் மேற் பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக வாடிக்கையாளர்களை சென்றடைகிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பு களைப் பயன்படுத்துவதில் முக்கிய மான முடிவுகளை எடுக்கும் நபர் களான ஃபேப்ரிக்கேட்டர்கள், ஆர்க்கிடெக்ட்டுகள், இன்ஜினீயர்கள் போன்ற இரண்டு லட்சத் துக்கும் மேற்பட்ட நபர்களை இந்த நிறுவனம் ‘அப்போலோ கனெக்ட்’ என்ற திட்டத்தின் மூலமாக இணைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் லிமிடெட்! (BSE Code: 533758, NSE Symbol: APLAPOLLO)

ரிஸ்க்குகள் என்னென்ன?

ஸ்டீல் மற்றும் ஸ்டீல் சார்ந்த துறைகளில் செயல்பட்டுவரும் நிறுவனங்களுக்கே உரித்தான அத்தனை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் உபயோகப்படுத்தப்படும் தொழில்களில் பெரும்பாலானவை பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளர்ச்சி அடையக்கூடிய தொழில்கள் என்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி அடையாமல் போனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான டிமாண்டை குறையச் செய்து, இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

கோவிட்-19-ன் அலை மீண்டும் வந்தால் அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை தற்காலிகமாக பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல, வாடிக்கையாளர்களின் தேவை அதிகரிக்கும் வேகத்துக்கு ஈடுகொடுப்பதைப்போல் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படா விட்டால் வாடிக்கையாளர்களின் தேவையை சரியான நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். மூலப் பொருள்களின் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தும் புதிய தயாரிப்புகள், நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்ப தால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!