Published:Updated:

அசோக் லேலாண்ட் லிமிடெட்!

அசோக் லேலாண்ட்
பிரீமியம் ஸ்டோரி
அசோக் லேலாண்ட்

கம்பெனி பயோடேட்டா

அசோக் லேலாண்ட் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
அசோக் லேலாண்ட்
பிரீமியம் ஸ்டோரி
அசோக் லேலாண்ட்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் கம்பெனி பயோடேட்டா இந்தியாவில் இரண்டாவது பெரிய கமர்ஷியல் வாகன உற்பத்தி செய்யும் நிறுவனமும் ஹிந்துஜா குழுமத்தின் அங்கமுமாகிய அசோக் லேலாண்ட் லிமிடெட். இந்த நிறுவனம் உலக அளவில் 50 நாடுகளில் கால்பதித்து செயல்பட்டு அமெரிக்க டாலர் அளவீட்டில் 2.09 பில்லியன் டாலர்கள் அளவிலான விற்று வரவுடன் செயல்பட்டு வருகிறது.

அசோக் லேலாண்ட் லிமிடெட்!

வாகன உற்பத்தியில்...

உலக அளவில் இந்த நிறுவனம் பேருந்துகளை உற்பத்தி செய்வதில் நான்காவது பெரிய நிறுவனமாகவும், டிரக்குகளை உற்பத்தி செய்வதில் 19-வது பெரிய நிறுவனமாகவும் திகழ்கிறது. சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள எண்ணூர், ஓசூர், மகாராஷ்டிராவில் உள்ள பந்தாரா, ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் உள்ளிட்ட இடங்களில் ஏழு உற்பத்தி வசதி களைக் கொண்டுள்ளது.

யு.ஏ.இ-யில் உள்ள ராஸ் அல்கைமா மற்றும் யுனைடெட் கிங்டமில் உள்ள லீட்ஸ் எனும் இடத்தில் தலா ஒன்றுமாக உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது. இது தவிர, ஐரோப்பாவில் பின்லாந்தைச் சார்ந்த அல்டீம்ஸ் குழுமத்துடன் இணைந்து ஆட்டோமொபைல் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளுக்குத் தேவை யான ஹை-ப்ரஸ் டை காஸ்டிங் எக்ஸ்ட்ரூடட் அலுமினிய உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் வசதியையும் இந்த நிறுவனம் கொண்டுள்ளது. தயாரிப்பு ரீதியாக ஆட்டோ மொபைல் துறையில் நல்லதொரு டைவர்சிஃபி கேஷனுடன் செயல்பட்டுவருகிறது இந்த நிறுவனம்.

வாகனத்தின் எடை அளவு ஒரு டன் என்ற அளவிலிருந்து 55 டன் வரையிலான டிரக்குகள், 9 முதல் 80 இருக்கைகள் அளவிலான பேருந்துகள், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல சிறப்பு உபயோகத்துக்கான பல்வேறு வகை வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கான டீசல் இன்ஜின்கள், ஜெனரேட்டர் செட்டுகள் மற்றும் கப்பல்துறைக்கான டீசல் இன்ஜின்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் முதல் பேருந்து மற்றும் யூரோ-6 மாசுக் கட்டுப்பாட்டுடன்கூடிய டிரக்குகளை 2016-ம் ஆண்டிலேயே இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

நாளொன்றுக்கு 70 மில்லியன் எண்ணிக்கை யிலான பயணிகள் இந்த நிறுவனத்தின் பேருந்துகளில் பயணித்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்தைச் சென்றடைகிறார்கள். அதே போல, இந்திய ராணுவத்திலும் இந்த நிறுவனம் தயாரிக்கும் வாகனங்கள் பெரு மளவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், உலக அளவிலும் பல்வேறு நாடுகளின் ராணுவங்களும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிக்கின்றன.

இந்தியாவில் கமர்ஷியல் வாகனத் தயாரிப்பில் முன்னோடியாக இருப்பதால், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தத் துறையில் அந்தத் தயாரிப்புகளை அளவீடு செய்வதற்கான அளவுகோலாக மாறியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

பாரத் ஸ்டேஜ்-4 இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கமர்ஷியல் ரக வாகங்களில் ஆன்போர்டு டைக்னாஸ்டிக் வசதிகளுக்கான சான்றிதழ், செலக்டிவ் கேட்டலைட்டிக் ரிடக்‌ஷன், இன்டெலிஜென்ட் எக்சாஸ்ட் கேஸ் ரீ-சர்க்கு லேஷன் மற்றும் சி.என்.ஜி தொழில்நுட்பம் போன்றவற்றை முதலில் பெற்றது இந்த நிறுவனம்தான். அதிநவீன தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் களின் தேவை அறிந்து அதற்கேற்ப தயாரிப்புகளை உற்பத்தி செய்தல் போன்றவற்றால் கமர்ஷியல் வாகனங்களுக்கான சந்தையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம்.

அசோக் லேலாண்ட் லிமிடெட்!

தொழில் விரிவாக்கம்...

இந்தியாவில் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற் காகச் சுமார் 3,000 விற்பனை நிலையங்களைக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 550 விற்பனை நிலையங்கள்/அலுவலகங்களைக் கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

தங்களுடைய தயாரிப்புகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கான சிறப்புப் பயிற்சியை வழங்கிவரும் இந்த நிறுவனம், கிட்டத்தட்ட இந்தப் பயிற்சிகளின் மூலம் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு கடந்த காலத்தில் பயிற்சி வழங்கியுள்ளது. அதே போல, வாகனங்களில் பழுதுநீக்கும் பணிகளைச் செய்யும் டெக்னீஷியன்களுக்கு திறன் மேம்படுத்துதலுக்கான பயிற்சிகளை அளிப்பதற்காக அகில இந்திய ரீதியாக ஒன்பது பயிற்சி மையங்களையும் அமைத்துள்ளது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான அல்போன் ஏர் ஜி.எம்.பி.ஹெச் எனும் நிறுவனம் வாகனங்களால் உருவாகும் காற்று மாசை முழுவதுமாகக் குறைக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதாகும். இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே கமர்ஷியல் மற்றும் பயணிகள் பயணிக்கும் வாகனங்களுக்கான செலக்டிவ் கேட்டலைட்டிக் ரிடக்‌ஷன் (SCR), யூரியா டோசிங் சிஸ்டம் (UDS) போன்றவற்றை வடிவமைத்தது. இந்த நிறுவனத் தின் மற்றொரு துணை நிறுவன மான குளோபல் டி.வி.எஸ் பஸ் பாடி பில்டர்ஸ் எனும் நிறுவனம் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே உள்ள விராலிமலை எனும் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி வசதியில் உள்ள மூன்று புரொடக்‌ஷன் லைன்களில் மாதம் ஒன்றுக்கு 150 பேருந்துகளை கட்டுமானம் செய்யலாம். குளோ பல் டி.வி.எஸ் நிறுவனம் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வாடிக்கையாளர் களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஜே.என்.என்.யு.ஆர்.எம் திட்டத்தின்கீழ் பல்வேறு மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகளைக் கட்டுமானம் செய்து தந்துள்ளது.

அசோக் லேலாண்ட் லிமிடெட்!

நிதித்துறையில்...

2008-ம் ஆண்டு இந்த நிறுவனம் ஹிந்துஜா குழுமத்துடன் இணைந்து ஹிந்துஜா லேலாண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியது. இந்த நிறுவனம் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்க கடன் வசதியை வழங்குகிறது. மார்ச் 2010-ல் என்.பி.எஃப்.சி அங்கீகாரத்தைப் பெற்ற இந்த நிறுவனம் கமர்ஷியல் வாகனங்கள், கார்கள், கட்டுமானத்துக்கான இயந்திரங்கள், டிராக்டர்கள் போன்றவற்றை வாங்குவதற்கான கடன் வசதியை 19 மாநிலங்களில் இருக்கும் 275 அலுவலகங்கள் வாயிலாகச் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான ஹிந்துஜா டெக் லிமிடெட் நிறுவனம், 2009-ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது. இந்த நிறுவனம் ஆட்டோமொபைல், ஏரோஸ் பேஸ், டிஃபென்ஸ், இண்டஸ்ட் ரியல் மற்றும் பொதுவான மேனுஃபேக்சரிங் நிறுவனங் களுக்கான இன்ஜினீயரிங், மேனுஃபேக்சரிங், இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி மற்றும் என்டர்ப்ரைஸ் குறித்த தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஹிந்துஜா டெக் நிறுவனம் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் உள்ள 18 நிறுவனங்களை வாடிக்கையாளராகக் கொண்டிருந்தது. இந்த நிறுவனம் தனக்கென ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து செயல்படுகிற அளவிலான ஆராய்ச்சி வசதியை நிறுவியுள்ளது.

ரிஸ்க்குகள் என்னென்ன?

ஆட்டோமொபைல் துறை என்பது முழுக்க முழுக்க பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளர்ச்சி அடையும் துறை ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சி அடையாது போனாலோ, எதிர்பாராத விதமாக தேக்க நிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கவே செய்யும். மூலப்பொருள்கள் விலை உயர்வு, அரசாங்கங்கள் நடைமுறைக்குக் கொண்டு வருகிற மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள், போட்டியாளர்கள் அறிமுகப்படுத்துகிற அதிநவீன டெக்னாலஜி, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் ஆகும்.

அசோக் லேலாண்ட் லிமிடெட்!
அசோக் லேலாண்ட் லிமிடெட்!

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!