Published:Updated:

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட்! (BSE CODE: 540376, NSE SYMBOL: DMART)

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்

கம்பெனி பயோடேட்டா

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட்! (BSE CODE: 540376, NSE SYMBOL: DMART)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோடேட்டா ‘டிமார்ட்’ எனும் பிராண்டில் சூப்பர் மார்க்கெட்களை நடத்திவரும் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட். டிமார்ட் சூப்பர் மார்க்கெட் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான வீட்டு மற்றும் தனிநபர் உபயோகத் துக்கான பொருள்களை ஒரே கூரையின் கீழ் விற்பனை செய்யும் நிறுவனம் இது.

தரமான பொருள்கள்...

அனைத்துக் கிளைகளிலும் உணவு, வீட்டு உபயோகப்பொருள்கள், சோப்பு-ஷாம்பு போன்ற குளியலறையில் உபயோகப்படுத்தும் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், வீட்டு உபயோகத் துணிவகைகள், சமயலறை உபயோகத்துக்குத் தேவையான பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள் / துணிவகைகள், குளியலறை உபயோகத்துக்கான துண்டுகள், வீட்டு உபயோகத்துக்கான பல்வேறு வகை சாதனங்கள் (ஹோம் அப்ளையன்சஸ்) போன்றவற்றை வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் கொள்முதல் செய்து சரியான விலையில் விற்பனை செய்துவருகிறது. வாடிக்கையாளர்களுக்குத் தரமான பொருள்களை சரியான விலையில் தருவதே தங்களுடைய நோக்கம் என்கிறது இந்த நிறுவனம். வேகமாக வளர்ந்துவரும் இந்திய பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ராதாகிருஷ்ணன் தமானி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட்! (BSE CODE: 540376, NSE SYMBOL:  DMART)

நிறுவன வரலாறு...

மும்பையில் உள்ள பொவாய் எனும் இடத்தில் 2002-ம் ஆண்டில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2020-21 நிதியாண்டின் இறுதி நிலவரப்படி மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, சத்தீஸ்கர், நேஷனல் கேப்பிடல் ரீஜன், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் 234 கிளை களுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறது. செயல்படும் இடங்களில் எல்லாம் அங்கே உள்ள போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் மிகக்குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாகத் திகழ வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருவதாக இந்த நிறுவனம் பெருமையுடன் கூறுகிறது.

அவன்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் டிமார்ட், டிமார்ட் மினிமேக்ஸ், டிமார்ட் ப்ரிமியா, டி ஹோம்ஸ், டட்ச் ஹார்பர்’ போன்ற பிராண்டுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் கிளைகள் மஹராஷ்டிரா வில் அமராவதி, அவுரங்காபாத், ஈச்சல்கரஞ்சி, ஜெய்சிங்பூர், ஜல்கான், ஜல்னா, காரட், கொல்ஹாபூர், லட்டுர், மிராஜ், மும்பை, நாக்பூர், நன்தெத், நவி மும்பை, ஒஸ்மனாபாத், புனே, ரத்னகிரி, சங்லி, சதாரா, சோலாப்பூர், தானே என்ற ஊர்களில் செயல்பட்டுவருகிறது. குஜராத்தில் அகமதாபாத், ஆனந்த், பரோடா, பூஜ், காந்திநகர், காந்திதாம், மேசனா, நடியாட், ராஜ்கோட், சூரத், வல்சாத், வாபி போன்ற ஊர்களிலும், தெலங்கானாவில் ஹைதராபாத், கரீம்நகர், கம்மம், வாராங்கல் போன்ற ஊர்களிலும், ஆந்திர பிரதேசத்தில் ஏலூரு, குண்டூர், காக்கிநாடா, கர்நூல், நெல்லூர், ஓங்கோல், ராஜமுந்திரி, திருப்பதி, துனி, விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற ஊர்களிலும், கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் பெல்காமிலும், மத்தியப் பிரதேசத்தில் போபால், தேவாஸ், இந்தூர், ரட்லம், உஜ்ஜயின் போன்ற ஊர்களிலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாய் மற்றும் ராய்ப்பூரிலும், நேஷனல் கேப்பிடல் ரீஜனில் காசியாபாத்திலும், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம் மற்றும் திருச்சியிலும், பஞ்சாப்பில் அமிர்தசரஸ், ஜலந்தர், ஜிராக்பூர் என்ற ஊர்களிலும், ராஜஸ்தானில் அஜ்மீர், பில்வாரா மற்றும் ஜெய்ப்பூர் போன்ற ஊர்களிலும் கிளைகளை நிறுவி செயல்பட்டுவருகிறது இந்த நிறுவனம்.

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட்! (BSE CODE: 540376, NSE SYMBOL:  DMART)

விற்பனைப் பிரிவுகள்...

இந்த நிறுவனம் விற்பனை செய்யும் சரக்குகளை பெரும்பிரிவுகளாகப் பிரித்துப் பார்த்தால் பலசரக்கு வகைகள், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்கள், பால் மற்றும் உறையவைக்கப்பட்ட உணவுப் பொருள்கள், டிமார்ட் பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்யப்படும் பல்வேறு விதமான வீட்டு உபயோகப் பொருள்கள், வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புக்கான பொருள்கள், குளியலறை மற்றும் படுக்கையறையில் உபயோகப்படுத்தப்படும் துணிவகைகள், வீட்டு உபயோகத்துக்கான மின்சாதனங்கள், பீங்கான் பாத்திரங்கள், காலணிகள், சூட்கேஸ்கள் மற்றும் லக்கேஜ்கள், பொம்மை மற்றும் விளையாட்டு சாமான்கள், பிளாஸ்ட்டிக் கன்டெய்னர்கள், குழந்தைகளுக்கான துணிமணிகள்/ஆடைகள், பெண்களுக்கான ஆடைகள், துணிவகைகள், ஆண்களுக்கான ஆடைகள் / துணிவகைகள், பழம் மற்றும் காய்கறிகள் போன்ற பெரும்பிரிவுகளில் பல்வேறு ரகமான பொருள்களை விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

சந்தைப் பங்களிப்பு...

2020-21 நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த விற்றுவரவு ரூபாய் 23,787 கோடி என்ற அளவிலும், வரிக்கு பிந்தைய லாபம் என்பது ரூபாய் 1,165 கோடி என்ற அளவிலும் இருந்தது. மொத்த விற்றுவரவில் 57.41 சதவிகித பங்களிப்பு உணவுப்பொருள்கள் விற்பனையாலும் (பலசரக்கு, குளிர்பானம், காய்கறி பழவகை கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள்), 19.69 சதவிகித பங்களிப்பு எஃப்.எம்.சி.ஜி (ஹோம்கேர், பர்சனல் கேர், உள்ளிட்ட பொருள்கள்) பிரிவில் உள்ள பொருள்களின் விற்பனை யாலும் 22.90 சதவிகித அளவி லான பங்களிப்பு பொதுவான பொருள்கள் மற்றும் துணி வகைகள் (குளியலறை மற்றும் படுக்கையறைக்கான துணி வகைகள், உடைகள், பிளாஸ்ட்டிக், க்ராக்கரி உள்ளிட்ட பொருள்கள்) விற்பனையாலும் இருந்தது.

2020-21 நிதியாண்டின் இறுதியில் 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 234 கிளைகளுடன் இயங்கியது அவென்யூ சூப்பர்மார்ட் நிறுவனம். 2020-21 நிதியாண்டில் மட்டும் 21 புதிய கிளைகள் திறக்கப் பட்டன என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

2020-21 நிதியாண்டின் இறுதி யில் 8.8 மில்லியன் சதுர அடி அளவிலான சில்லறை விற்பனைக் கான தளங்களுடன் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் அங்கமாக 39 விநியோக மையங் களும், ஏழு பேக்கிங் மையங்களும் இந்திய அளவில் செயல்பட்டு வருகின்றன. 2020-21 நிதியாண்டின் இறுதி நிலவரப்படி இந்த நிறுவனம் நேரடி பணியாளர்களாக 10,175 பேரை ஒப்பந்த அடிப்படை யிலான பணியாளர்களாக 30,809 பேரையும் கொண்டு செயல்பட்டு வந்தது. 2020-21 நிதியாண்டில் கடும் பாதிப்பை கோவிட் இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங் களுக்கு அளித்திருந்தபோதிலும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தாலும், மக்களின் தேவை அதிகரிப்பாலும் இந்தத் துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்பு தொடர்ந்து இருந்துகொண்டே யிருக்கும் எனலாம்.

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட்! (BSE CODE: 540376, NSE SYMBOL:  DMART)

ரிஸ்க்குகள் என்னென்ன?

சில்லறை விற்பனை/சூப்பர் மார்க்கெட் துறையில் இயங்கி வரும் அனைத்து நிறுவனங் களுக்கும் உரித்தான ரிஸ்க்குகள் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம். கோவிட்-19 மற்றும் அதனுடைய அலைகள் இந்தத் துறையின் செயல்பாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். விலைவாசி ஏற்றம் மற்றும் வேகமாக மாறும் விலைகள் போன்றவையும் இந்தத் துறையில் செயல்படும் நிறுவனத் துக்கான ரிஸ்க்குகளேயாகும்.

மேலும் கடைகளை நிறுவ தேவைப்படும் ரியல் எஸ்டேட் (வர்த்தக ரீதியிலான இடங்கள்) விலை ஏற்றமும் இந்தத் துறையில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஒரு பெரிய அளவிலான ரிஸ்க்கேயாகும். அனுபவம் உள்ள பணியாளர்களைத் தொடர்ந்து பணியில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது, திறமையான பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துவது, தேவைக்கு ஏற்றாற்போல் சரியான நேரத்தில் சரக்குகளைக் கடையில் வைத்திருப்பது போன்றவையும் இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கான சவால்களேயாகும். இது தவிர, வாடிக்கையாளர்களின் மாறும் ரசனைக்கேற்ப பொருள்களை மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டியதும் இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கான ரிஸ்க்குகளேயாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!