Published:Updated:

பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ் லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்..!

பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ்

(NSE SYMBOL: BEPL, BSE CODE: 500052) - K N O W Y O U R C O M P A N Y

பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ் லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்..!

(NSE SYMBOL: BEPL, BSE CODE: 500052) - K N O W Y O U R C O M P A N Y

Published:Updated:
பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ்

பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ் லிமிடெட், 1984-ம் ஆண்டில் ஆரம்பிக் கப்பட்டு இன்றைக்கு அக்ரிலோ நைட்ரைல் ப்யூட்டா டையீன் ஸ்டைரைய்ன் (ஏ.பி.எஸ்) ரெசினை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் வளர்ச்சி...

1984-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 1985-ம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்டது. 1986-ம் ஆண்டில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சத்நூர் எனும் இடத்தில் ஜப்பானிய நிறுவனமான சுமிடோமோ கெமிக்கல் இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட் மற்றும் சுமிடோமோ நெளகாடெக் கம்பெனி லிமிடெட் நிறுவனங் களுடன் கூட்டணி அமைத்து 7.5 கே.டி.பி.ஏ (Kilo Tonnes Per Annum) அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித்திறனுடன்கூடிய ஏ.பி.எஸ் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான பணிகளைத் தொடங்கியது.

1989-90-ம் ஆண்டுகளில் ‘அப்ஸ்ட்ரான்’ என்னும் பிராண்டில் இந்த நிறுவனம் ஏ.பி.எஸ்-ஐ அறிமுகப் படுத்தியது. இந்த பிராண்ட் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே ஆண்டில் சத்நூரில் நிறுவிய உற்பத்தி மையத்தில் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கியது இந்த நிறுவனம். 1995-96-ம் ஆண்டில் சத்நூர் உற்பத்தி வசதியின் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித் திறனை 15 கே.பி.டி.ஏ என்ற அளவுக்கு அதிகரித்தது.

1999-2000-ம் ஆண்டில் வதேதரா பாலிகெம் நிறுவனத்தின் 5 கே.டி.பி.ஏ ஏ.பி.எஸ் / எஸ்.ஏ.என் உற்பத்தி வசதியைத் தன்னுடைய பயன் பாட்டுக்காக ஒப்பந்த அடிப்படையில் எடுத்துக்கொண்ட இந்த நிறுவனம், பின்னர் அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. 2002-03-ம் ஆண்டில் வதேதராவில் செயல்பட்டு வந்த உற்பத்தி மையத்தின் உற்பத்தி அளவை 12 கே.டி.பி.ஏ என்ற அளவில் அதிகரித்தது. இந்த விரிவாக்கத்தின் மூலம் அன்றைய சூழலில் இந்த நிறுவனத்தின் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி அளவு 27 கே.டி.பி.ஏ என்ற அளவுக்கு அதிகரித்தது.

2004-05-ம் ஆண்டில் ராஜஸ்தானில் உள்ள அபுரோடு எனும் இடத்தில் செயல்பட்டுவந்த க்ரேவ்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 20 கே.டி.பி.ஏ அளவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் உற்பத்தி வசதியை வாங்கியது இந்த நிறுவனம்.

இந்த உற்பத்தி வசதியை நவீனமயப் படுத்தி நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியை 48 கே.டி.பி.ஏ என்ற அளவுக்கு அதிகப்படுத்தியது. இந்த உற்பத்தி வசதிக்குத் தேவைப்படும் ஹெச்.ஆர்.ஜி க்ரான்யூல்ஸை சத்நூர் உற்பத்தி மையத்திலும், எஸ்.ஏ.என்-ஐ (Styrene-acrylonnitrile resin) அபுரோடு உற்பத்தி மையத்திலும் உற்பத்தி செய்து பயன்படுத்த ஆரம்பித்தது இந்த நிறுவனம். 2013-14-ம் ஆண்டில் ஜப்பானிய நிறுவனமான நிப்பான் ஏ&எல் இங்க் எனும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து பன்சாலி நிப்பான் ஏ&எல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவியது. 2015-16ம் ஆண்டில் தன்னுடைய நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியை 80 கே.டி.பி.ஏ என்ற அளவுக்கு விரிவாக்கம் செய்தது இந்த நிறுவனம்.

2017-18-ம் ஆண்டில் அகில இந்திய ரீதியாக ஏ.பி.எஸ் உற்பத்தியில் நம்பர் ஒன் நிறுவனமாக உருவெடுத்தது இந்த நிறுவனம். இதன் தொடர்ச்சியாக தன்னுடைய அபுரோடு உற்பத்தி வசதியின் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியை 80 கே.டி.பி.ஏ என்ற அளவில் இருந்து 100 கே.டி.பி.ஏ என்ற அளவுக்கு உயர்த்தியது. 2018-ம் ஆண்டில் தன்னுடைய அபுரோடு உற்பத்தி வசதியில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆராய்ச்சி வசதியை நிறுவியது இந்த நிறுவனம். அதே காலகட்டத்தில் அபுரோடு உற்பத்தி வசதியின் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி அளவை 100 கே.டி.பி.ஏ என்ற அளவில் இருந்து 137 கே.டி.பி.ஏ என்ற அளவுக்கு அதிகரித்துக்கொண்டது இந்த நிறுவனம்.

பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ்
பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ்

நிறுவனத்தின் தயாரிப்புகள்...

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் என்று பார்த்தால், இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ஏ.பி.எஸ் என்பது ஆட்டோமொபைல் வாகனங்களில் (இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம்) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பாலிமர்கள் (பிளாஸ்ட்டிக் போன்றவை) பெயின்ட் மற்றும் எலெக்ட்ரோ ப்ளேட்டிங் செய்வது சுலபம். மேலும், நாள்பட உழைக்கும் குணமும் நெகிழ்வு தன்மையும் கொண்டிருப்பதால், வாகனங்களில் பெருமளவு உபயோகிக்கப் படுகிறது. இந்த நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான அக்ரிலோ நைட்ரைல் ஸ்டைரீன் அக்ரிலேட் (ஏ.எஸ்.ஏ) பெயின்ட் அடிக்காமல் வாகனங்களின் வெளிப்புறத்தில் உபயோகப்படுத்தப்படும் பொருளாகும்.

ஆட்டோமொபைல் வாகனங்களில் பின்னால் வரும் வாகனங்களைக் காட்டுவதற்காகப் பொருத்தப்படும் கண்ணாடிகளுக்கான கவர்கள் (mirror housing), முகப்பு மற்றும் பின்னால் பொருத்தப்படும் விளக்குகளின் அடிப்பகுதிகள் (light housing), கதவுகளில் பொருத்தப்படும் சைடு பில்லர்கள் போன்ற வற்றிலும், வீடுகளில் வேயப்படும் அலங்காரக் கூரைகளின் வெளிப்புறத்திலும் இந்த ஏ.எஸ்.ஏ ரக பாலிமர்கள் பயன்படுத்தப் படுகின்றன.

வீட்டு உபயோகப் பொருள் களில் குளிர்சாதனப் பெட்டிகள், ஏர்கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின்கள், வேக்யுவம் க்ளீனர்கள் போன்றவற்றில் பல்வேறு விதமான இடங்களில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பான பல்வேறு விதமான பாலிமர்கள்/ரெசின்கள் பயன்படுத்தப்படு கின்றன. கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உற்பத்தியில் டிவி மற்றும் மானிட்டர்களின் ஃபிரேம்கள், ஏர்கூலர்களின் பாகங்கள், கீசர்கள், லேப்டாப்களின் வெளிப்புற கேஸிங்குகள், மொபைல் சார்ஜர்கள் போன்ற வற்றின் உற்பத்தியிலும் பெரும்பாலான அளவில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான பாலிமர்கள் பயன்படுத்தப் படுகின்றன.

சமையலறையில் பயன் படுத்தப்படும் மிக்ஸி, ரொட்டி மேக்கர், ஸ்லைஸர்/சாப்பர், வாட்டர் ப்யூரிஃபையர் போன்றவற்றிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான பல்வேறு ரக பாலிமர்கள் பயன்படுத்தப்படுகின்றன. எலெக்ட்ரிக்கல் & எலெக்ட் ரானிக்ஸ் துறையில் ஸ்விட்ச்கள், மோடம், க்ளோஸ் சர்க்யூட் கேமரா, நெட்வொர்க் ஸ்விட்ச்கள், டியூப்லைட்டுகள், தேர்தல்களில் உபயோகப்படுத்தப் படும் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் போன்றவற்றின் உற்பத்தியிலும் (பிளாஸ்டி பகுதிகளில்) இந்த நிறுவனத்தின் பாலிமர் தயாரிப்புகள் பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றன. ஏனைய உதிரிவகை உபயோகங்களில் சிறுவர் களுக்கான விளையாட்டு சாமான்கள் (கார், பஸ், பிளேன் போன்ற பொம்மைகள்), கால்குலேட்டர்கள், லக்கேஜ்கள் (சூட்கேஸ்கள்) போன்றவற்றிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு களான பாலிமர்கள் பயன் படுத்தப்படுகின்றன.

சார்ட்
சார்ட்

ரிஸ்க்குகள் என்னென்ன?

பாலிமர்கள் உற்பத்தித் துறையில் செயல்படும் நிறுவனங் களுக்கே உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத் துக்கும் உண்டு. இந்த நிறுவனத்தின் ஒரு சில மூலப்பொருள்கள் (ஸ்டைரீன் போன்றவை) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதால், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் இந்த நிறுவனத்துக்கு உரித்தான ரிஸ்க்கே யாகும். மூலப்பொருள்கள் விலை மாறுதல், தொழில்நுட்பத்தில் வரும் வேகமான மாறுதல், போட்டி மற்றும் விலை ரீதியான போட்டி போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க் ஆகும். கெமிக்கல்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தும் உற்பத்தி மையங் களைக் கொண்டிருப்பதால், அரசாங் கத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகளில் வரக்கூடிய மாறுதல்களும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது.

பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ் லிமிடெட்! அறிவோம் பங்கு நிறுவனம்..!

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism