Published:Updated:

கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட்!

கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட்!

அறிவோம் பங்கு நிறுவனம்...

கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட்!

அறிவோம் பங்கு நிறுவனம்...

Published:Updated:
கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட்!

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் நிறுவனம் கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட். அஹமதாபாத்தில் தலைமை யகத்தைக் கொண்டு இயங்கும் இந்தியாவின் நான்காவது பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகளைக் கொண்டிருக்கும் மருந்துகள் உற்பத்தி செய்யும் குழுமம் இது.

நிறுவனத்தின் வளர்ச்சி...

1952-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழுமத்தின் உற்பத்தி மையங்கள் இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் என்ற ஐந்து மாநிலங்களில் உள்ளன. இது தவிர, அமெரிக்கா மற்றும் பிரேசிலிலும் தன்னுடைய உற்பத்தி மையங்களைக் கொண்டு இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

1995-ம் ஆண்டில் சைடஸ் குழுமத்தின் ஆதரவுடன் இந்தக் குழுமம் மறுசீரமைக்கப் பட்டது. அதன் பின்னர் 1995-ம் ஆண்டில் ரூ.250 கோடி என்ற அளவில் இருந்த விற்றுவரவு 2020-21-ம் நிதியாண்டின் இறுதியில் ரூ.15,000 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. 2020-21-ம் நிதியாண்டின் இறுதியில் இந்த நிறுவனத்துக்கு சைடஸ் அனிமல் ஹெல்த் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், சைடஸ் வெல்நெஸ் புராடெக்ட்ஸ் லிமிடெட், சைடஸ் வெல்நெஸ் லிமிடெட், சைடஸ் ஹெல்த்கேர் லிமிடெட், சைடஸ் பார்ம சூட்டிகல்ஸ் லிமிடெட், சைடஸ் பிரான்ஸ் எஸ்.ஏ.ஏ.எஸ், சைடஸ் வேர்ல்டுவைட் டி.எம்.சி.சி, சைடஸ் வேர்ல்டுவைட் இன்டர்நேஷன்ல் டி.எம்.சி.சி, சைடஸ் வி.டி.இ.சி லிமிடெட், சைடஸ் ஸ்ட்ராட்டஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், சைடஸ் பார்மசூட்டிக்கல்ஸ் மெக்சிகோ சர்வீசஸ் கம்பெனி எஸ்.ஏ.டி.இ சி.வி உள்ளிட்ட 40 துணை நிறுவனங்கள் (கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி) பல்வேறு நாடுகளிலும் (வெளிநாட்டில் 25) செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக அளவில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பா (பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின்) மற்றும் நல்ல வியாபாரத்துக்கான வாய்ப்புகளைக் கொண்ட சந்தைகளான லத்தீன் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 25 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சைடஸ் கெடிலா என்பது இந்த நிறுவனத்தின் பிராண்ட் ஆகும். ஹெல்த்கேர் பிரிவில் தன்னிகரில்லாத அனுபவத்தைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், மருந்துகள் உற்பத்தித் துறையில் இருக்கும் பல்வேறு மதிப்புக் கூட்டுதலுக்கான படிநிலைகளிலும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக்டிவ் பார்மசூட்டிக்கல் இன்க்ரிடியன்ட்ஸ் (API), ஆரோக்கியம் பேணுதலுக்கான தயாரிப்புகள், விலங்குகளுக்கான மருந்துகள் தயாரிப்பு போன்ற பெரும் பிரிவுகளில் செயல் பட்டு வருகிறது இந்த நிறுவனம். முப்பதுக்கும் மேற்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உற்பத்தி மையங்களை இந்தக் குழுமம் தன்வசம் கொண்டிருக்கிறது.

கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட்!

பார்முலேஷன்ஸ் பிரிவில்...

இந்தியாவைப் பொறுத்தவரை, பார்முலே ஷன்ஸ் பிரிவில் கெடிலா ஹெல்த்கேர் குழுமத்தின் துணை நிறுவனமான சைடஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், பயாலாஜிக்ஸ் பிரிவில் பயோசிமிலர்கள் மற்றும் நோவெல் பயாலாஜிக்ஸ் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்திய மருந்துகளின் சந்தையில் பார்முலேஷன்கள் பிரிவில் மிகவும் பழைமையானதொரு நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம், மருந்துகள் உற்பத்தியில் மிகப் பெரியதொரு நிறுவனமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தற்போது உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் மருந்து களுக்கான விற்பனை மற்றும் சந்தைப் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி செய்துவரும் அதே வேளையில், புதிய பல சிகிச்சைகளுக்கான மருந்துகளை அறிமுகப்படுத்து வதிலும் கவனம் செலுத்தி வருகிறது. பல புதிய மருந்துகளை முதன்முதலில் அறிமுகப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனுகூலங்களைப் பெற்றிருக்கும் இந்த நிறுவனம், கடுமையான நோய்களுக்கான சிகிச்சைக்கான மருந்து வகைகள் மற்றும் தொடர்ந்து நீண்டநாள் சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்து வகைகள் என்ற இரண்டு பிரிவிலும் ஸ்திரமான விற்பனையைக் கொண்டிருப்ப்பது தனிச் சிறப்பு.

கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட்!

மதிப்புக்கூட்டல் பிரிவிலும்...

புற்றுநோய்க்கான சிகிச்சை, கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், வாத நோய்கள், கண் மருத்துவம் மற்றும் எலும்பு பாதுகாப்பு போன்றவற்றுக்கான மருந்து வகைகளை சைடஸ் பயலாஜிக்ஸ் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. மருந்துகளைக் கண்டுபிடித்தல் மற்றும் உருவாக்குதல், உற்பத்தி செய்தல், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற அனைத்து மதிப்புக்கூட்டல் பிரிவிலும் சிறந்த அனுபவத்துடன் இந்த நிறுவனம் விளங்குவதால், பயாலஜிக்ஸ் பிரிவில் மிகச் சிறந்த நிறுவனமாகத் திகழ்கிறது.

சைடஸ் அனிமல் ஹெல்த் எனும் பிரிவில் கால்நடைகளுக் கான மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் இந்த நிறுவனம், பல்வேறு கால்நடை நோய்களுக்கான சிகிச்சைக்கு உதவும் மருந்துகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.

மருந்துகளில் பயன்படுத்தப் படும் இடைநிலை வேதிப் பொருள்கள் மற்றும் ஏ.பி.ஐ-கள் பிரிவின்கீழ், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள், ஃபைன் கெமிக்கல்கள் (Fine chemicals), மேம்படுத்தப்பட்ட மருந்துகள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இடைநிலைப் பொருள்கள் (Intermediaries), உயர்நிலை பல்க் ஆக்டிவ்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம்.

பார்முலேஷன்கள் பிரிவில் மனிதர்கள் உட்கொள்ளும் வகையிலான மாத்திரைகள், கேப்ஸ்யூல்கள், ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகள், மூக்கில் வைத்து சுவாசம் மூலம் எடுத்துக்கொள்ளக் கூடிய மருந்துவகைகள், வேக்சின்கள் உள்ளிட்ட பலவற்றை உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம்.

கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட்!

டிஜிட்டல் ப்ளாட்பார்ம்...

கடந்த நிதியாண்டில் மனிதர்கள் பயன்படுத்தும் மருந்து வகைகளில் பல்வேறு புதிய மருந்துகளை அறிமுகப் படுத்திய இந்தக் குழுமம், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் மருந்து விற்பனைப் பிரதிநிதி களுக்கான டிஜிட்டல் பிளாட்ஃபார்மை உருவாக்கியது.

கன்ஸ்யூமர் வெல்னஸ் பிரிவில் கடந்த நிதியாண்டில் ‘சுகர்ப்ரீ’ (Sugarfree) மற்றும் ‘நைசில்’ (Nycil) போன்ற பிராண்டுகளின் விற்பனை கணிசமான அளவில் உயர்ந்திருந்தது. கடந்த நிதி யாண்டின் இறுதியில் இந்தப் பிரிவில் உற்பத்தி செய்து விற்கப்படும் பொருள்கள் ஐந்து லட்சம் கடைகள்மூலம் வாடிக்கை யாளரைச் சென்றடைந்தது.

அமெரிக்க சந்தையில் கடந்த நிதியாண்டில் 30 புதிய தயாரிப்பு களை அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம். அதே போல், கடந்த நிதியாண்டில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடு களில் கணிசமான அளவிலான கூடுதல் விற்பனையை எட்டிய இந்த நிறுவனம் தன்னுடைய வியாபாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கை களையும் எடுத்துள்ளது. ஆக்டிவ் பார்மசூட்டிக்கல் இன்க்ரிடி யன்ட்ஸ் (API) பிரிவில் கடந்த நிதியாண்டில் 60 புதிய நிறுவன அமைப்பிலான வாடிக்கை யாளர்களைப் பெற்ற இந்த நிறுவனம், அமெரிக்க மருந்துகள் அங்கீகார அமைப்பான எஃப்.டி.ஏ-வில் ஒன்பது டி.எம்.எஃப்-களைப் (Drug Master File) பதிவு செய்தது. கெடிலா ஹெல்த்கேர் குழுமம் தனக்குத் தேவையான ஆராய்ச்சிகளைச் செய்துகொள்வதற்காக எட்டு ஆராய்ச்சி மையங்களைக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த ஆராய்ச்சி மையங்களில் 1,400-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

மருந்துகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் விற்பனை துறையில் செயல்பட்டுவரும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. ஆராய்ச்சிகளில் தொடர் வெற்றி என்பதை இந்த வகை நிறுவனங்கள் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். மேலும், நவீன தொழில்நுட்பங்கள், போட்டியாளர்கள் ஆராய்ச்சியில் பெறும் வெற்றி, மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் சட்ட திட்டங்கள், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், மூலப்பொருள்களின் விலை உயர்வு போன்ற வையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.