Published:Updated:

கேம்லின் ஃபைன் சயின்சஸ் லிமிடெட்!

கேம்லின் ஃபைன் சயின்சஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேம்லின் ஃபைன் சயின்சஸ்

கம்பெனி பயோடேட்டா

கேம்லின் ஃபைன் சயின்சஸ் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
கேம்லின் ஃபைன் சயின்சஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேம்லின் ஃபைன் சயின்சஸ்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோடேட்டா அனைவருக்கும் நன்கு பரிச்சயமான கேம்லின் குழுமத்தின் ஓர் அங்கமான கேம்லின் ஃபைன் சயின்சஸ் என்கிற நிறுவனத்தினுடையது.

நிறுவன வளர்ச்சி...

1947-ம் ஆண்டு சாக் பீஸ், மர பென்சில், ரப்பர், ஜியோமெட்ரி பாக்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஆரம்பிக்கப் பட்டது கேம்லின் குழுமத்தின் முதல் நிறுவனம். 1984-ல் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்கி அதன் கீழ் தாராப்பூரில் அதி நவீன தொழில்நுட்பத்தில் ஆன்டாக்சிடென்ட்ஸ் உற்பத்தி வசதியை நிறுவியதன் மூலம் ஃபைன் கெமிக்கல்கள் மற்றும் பார்மச்சூட்டிக்கல் பொருள்கள் உற்பத்தியில் கால்பதித்தது.

ஃபைன் கெமிக்கல்கள் மற்றும் பார்மச்சூட்டிக்கல் பொருள்கள் உற்பத்தியில் மேலும் தீவிரமாகச் செயல்படும் பொருட்டு இந்தத் தொழில் பிரிவானது தனியாகப் பிரிக்கப்பட்டு கேம்லின் ஃபைன் சயின்சஸ் லிமிடெட் என்ற பெயரில் தனியொரு நிறுவன மாக உருவாக்கப்பட்டது.

மரபார்ந்த ஆன்டாக்சிடென்ட்ஸ் (Traditional Antoxidants) உற்பத்தி செய்வதில் இன்றைக்கு ஒரு முன்னணி நிறுவனமாக கேம்லின் ஃபைன் சயின்சஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்தத் தொழில் பிரிவில் ஷெஃல்ப் லைஃப் தீர்வுகள், வாசனையூட்டுவதற்கான தயாரிப்புகள், ஹெல்த் & வெல்னஸ் மற்றும் வேதிப்பொருள்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம். மனிதர்கள் உட்கொள்ளும் உணவுப் பொருள்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கான உணவுப் பொருள்களில் உபயோகப்படுத்தப்படும் ஆன்ட்டாக்சிடென்ட்ஸ் மற்றும் கால் நடை களுக்கான ஊட்டச்சத்துக்கள் போன்ற வற்றையும், இது தவிர பல்வேறு தொழில் துறை களுக்குத் தேவையான வேதிப்பொருள்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்து தருகிறது.

கேம்லின் ஃபைன் சயின்சஸ் லிமிடெட்!

2011-ல் இத்தாலியில் உள்ள ராவென்னா எனும் இடத்தில் செயல்பட்டுவந்த போரேகார்ட் இத்தாலியா எஸ்.பி.ஏ எனும் ஹைட்ரோக்யூனோன் மற்றும் கேட்சால் (ஒருவகை பென்சீன்டயால்) எனும் கெமிக்கல் காம்பவுன்டை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. இந்த கையகப்படுத்துதல் என்பது மொரீஷியஸில் உள்ள கேம்லின் ஃபைன் சயின்சஸ் நிறுவனத்தின் 100% துணை நிறுவனத்தின் வாயிலாக நடைபெற்றது.

2014-ல் பிரேசில் நாட்டில் தன்னுடைய 100 சதவிகித துணை நிறுவனமான சி.எஃப்.எஸ் டு பிரேசில் எல்.டி.டி.ஏ (CFS do Brasil Ltda) என்ற நிறுவனத்தின் மூலம் ஆன்டாக்சிடென்ட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

2017-ல் உணவு, மருந்து, வாசனை திரவியங்களில் உபயோகப்படுதப்படும் வேதிப்பொருள்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் மூன்றாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.

2018-ல் கால்நடைகளுக்கான ஊட்டச்சத்துப் பொருள் களைத் தயாரிப்பதில் கால் பதிப்பதற்காக சிங்கப்பூரைச் சார்ந்த பஹங் பார்மா (எஸ்) பி.டி.இ எனும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. 2020-ல் இந்தியாவில் தஹீஜ் எனும் இடத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) டைஃபீனால் உற்பத்தி வசதியை ஆரம்பித்தது.

2021-22 நிதியாண்டில் நியூட்ராசெட்டிக்கல்ஸ் உற்பத்தியில் கால்பதிக்கும் நோக்கத்துடன் அல்காஐஆர் நியூட்ராபார்ம்ஸ் (AlgalR NutraPharms)நிறுவனத்தின் 80% பங்கை கையகப்படுத்தியது. இதே நிதியாண்டில் மெக்ஸிகோவில் செயல்படும் ட்ரெசென் க்வெய்மிகா எஸ்.ஏ.பி.ஐ.டி.இ சி.வி (Dresen Quimica S.A.P.I.de C.V) நிறுவனத்தைக் கையகப் படுத்தியது.

இன்றைக்கு 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேலான நிறுவன ரீதியிலான வாடிக்கை யாளர்களுக்குத் தேவையான வேதிப்பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் கேம்லின் ஃபைன் சயின்சஸ் நிறுவனம் ஐந்து உற்பத்தி வசதி கள் (இந்தியா, சீனா, இத்தாலி, பிரேசில், மெக்ஸிகோ) மற்றும் ஐந்து அப்ளிக்கேஷன் லேப் களையும் (இந்தியா, மெக்ஸிகோ, இத்தாலி, பிரேசில், அமெரிக்கா) கொண்டு இயங்கி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகை வேதிப்பொருள்களை வாடிக்கையாளர்களுக்காக உற்பத்தி செய்து தரும் இந்த நிறுவனம் தனக்குத் தேவையான ஆராய்ச்சிகளைச் செய்து கொள்வதற்காக இரண்டு ஆராய்ச்சி வசதிகளை (இந்தியா மற்றும் இத்தாலி) நிறுவியுள்ளது. மேலும் தாராப்பூரில் ஒரு பைலட் பிளான்ட்டைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கேம்லின் ஃபைன் சயின்சஸ் லிமிடெட்!
கேம்லின் ஃபைன் சயின்சஸ் லிமிடெட்!

தொழில் பிரிவுகள்...

தொழில்பிரிவுகள் ரீதியாகப் பார்த்தால் 2020-21 நிதியாண்டின் விற்றுவரவில் ஷெல்ஃப் லைஃப் தீர்வுகள் (உணவுப் பொருள்கள், கால்நடைகளுக்கான தீவனம், செல்லப்பிராணிகளுக்கான உணவுகள், ரெண்டரிங், பயோ-ப்யூயல், அக்வாகல்ச்சர் போன்ற வற்றுக்கானவை) 53% பங்களிப்பை யும், தொழில்துறை கெமிக்கல்கள் (மருந்துகள் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படும் இடை யீட்டுப் பொருள்கள், பெட்ரோ கெமிக்கல்கள், சாயம் மற்றும் பிக்மென்ட்ஸ், பாலிமர்கள், அக்ரோ கெமிக்கல்கள் போன்ற வற்றுக்கானவை) 29% பங்களிப்பை யும் கொண்டிருந்தது.

மற்றும் வாசனைக்காக உபயோகப்படுத்தப்படும் வேதிப் பொருள்கள் (உணவு, தீவனம், பர்சனல் மற்றும் ஹோம் கேர், ப்ளேவர்ஸ் மற்றும் ப்ராக்ரன்ஸ், மருந்துகள், ஊதுபத்திகள் போன்ற வற்றுக்கானவை) 16% பங்களிப் பையும், ஹெல்த் மற்றும் வெல்னஸ் தயாரிப்புகளில் உபயோகப் படுத்தப்படும் வேதிப்பொருள்கள் (சிறப்புப் பண்புகள் கொண்ட உணவுகள், கோழிகளுக்கான தீவனம், டயட்டரி சப்ளிமென்ட்ஸ், செல்லப் பிராணிகளுக்கான உணவு வகைகள் போன்றவற்றுக் கானவை) கிட்டத்தட்ட இரண்டு சதவிகித அளவிலான பங்களிப்பை யும் கொண்டிருந்தது.

ரிஸ்க்குகள் என்னென்ன?

கெமிக்கல் மற்றும் பார்மா துறையில் செயல்படும் நிறுவனங் களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம். அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள், மருத்துவத் துறையில் வரும் மாறுதல்கள் & உணவு மற்றும் மருந்துக்கான ஆணையங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு (இந்த நிறுவனத்தின் வாடிக்கை யாளர்கள்) விதிக்கிற புதிய கட்டுப்பாடுகள், இந்த நிறுவனம் செயல்படும் துறையில் அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பம், ஆராய்ச்சிகளில் போட்டியாளர்கள் பெறுகின்ற பெரிய அளவிலான வெற்றி, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளேயாகும்.

மேலும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உபயோகப் படுத்தப்படும் பொருள்கள் பொருளாதார வளர்ச்சி நிலைக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகக்கூடும். ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி எதிர்பாராத அளவு இல்லாதுபோனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. எனவே, எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism