Published:Updated:

செரா சானிட்டரிவேர் லிமிடெட்!

செரா சானிட்டரிவேர்
பிரீமியம் ஸ்டோரி
செரா சானிட்டரிவேர்

கம்பெனி பயோடேட்டா

செரா சானிட்டரிவேர் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
செரா சானிட்டரிவேர்
பிரீமியம் ஸ்டோரி
செரா சானிட்டரிவேர்

இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் நிறுவனம், சானிட்டரிவேர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் செரா சானிட்டரிவேர் லிமிடெட்.

நிறுவனத்தின் வரலாறு...

41 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய சானிட்டரிவேர் உற்பத்தி செய்யும் வசதியைக் கொண்டுள்ளது. மதுசூதன் இண்டஸ்ட்ரிஸ் (1940-களில் மதுசூதன் வெஜிடபிள் புராட்க்ட்ஸ்) என்ற பெயரில் இயங்கிவந்த இந்த நிறுவனம், 1980-களில் தன்னுடைய சொந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு சானிட்டரிவேர் துறையில் கால் பதித்தது இந்த நிறுவனம். சானிட்டரிவேர் பிரிவு தனிப்பட்ட ஒரு பிரிவாகச் செயல்பட்டுவந்த சூழலில், அது தனியாகப் பிரிக்கப்பட்டு, மதுசூதன் ஆயில்ஸ்& ஃபேட்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தின் கீழ் மாற்றப்பட்டது. 2002-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பெயர் செரா சானிட்டரி வேர் லிமிடெட் என்று மாற்றி அமைக்கப்பட்டது.

செரா சானிட்டரிவேர் லிமிடெட்!

கடன் இல்லாத நிறுவனம்...

கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, கடன் ஏதும் வாங்காத நிறுவனமாக இது இயங்கி வருகிறது. சானிட்டரிவேர் துறையில் இந்தியாவில் நம்பர் 1 என்ற சிறப்பான நிலையில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், 2020-21 நிதியாண்டில் மட்டும் 121 வகை புதிய சானிட்டரிவேர் தயாரிப்புகளையும், 11 ஃபாசெட்வேர் (Faucetware) தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

நிறுவனத்தின் தயாரிப்புகள்...

சானிட்டரிவேர்கள் (செராமிக் சிங்க்குகள், வாஷ்பேசின், வாஷ்பேசின் பெடஸ்டல், ப்ளெஷிங் சிஸ்ட்ரன், யூரினல் உள்ளிட்ட பல்வேறு வகை தயாரிப்புகள்), ஃபாசெட்டுகள், பிரீமியம் ரக ஷவர்கள், ஸ்டீம் க்யூபிக்கில்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.

குஜராத்தில் உள்ள கடி மற்றும் மார்பி எனும் இடங்களிலும், ஆந்திராவில் உள்ள கூடுர் எனும் இடத்திலும் தன்னுடைய உற்பத்தி மையத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், 11306 சில்லறை வர்த்தகர்கள் கொண்ட நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.

செரா ஸ்டூடியோ...

செரா ஸ்டைல் ஸ்டூடியோ என்பது செரா சானிட்டரிவேர் நிறுவனமே நடத்திவருகிற தயாரிப்புகளை வாடிக்கையாளர் பார்வைக்கு வைத்திருக்கிற இடமாகும். இந்த ஸ்டூடியோக்களில் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பார்வையிட முடியும். இந்த ஸ்டூடியோகளில் விற்பனைக்கான அழுத்தமோ, அதற்கான பேச்சுக்களோ இருக்காது. வெறுமனே தயாரிப்புகள் அனைத்தும் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கும். தயாரிப்புகள் குறித்த விளக்கம், கேள்விகள் மற்றும் சந்தேகத்துக்கான பதில்கள் தரப்படும். இந்த வித ஸ்டூடியோக்களின் சராசரி பரப்பளவு 7,000 சதுர அடியாக இருக்கிறது. ஹைதரா பாத் மற்றும் கொச்சியில் செயல்படும் ஸ்டூடியோக்கள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். ஹைதராபாத்தில் இயங்கிவரும் ஸ்டூடியோ 14,000 சதுர அடி அளவிலான பரப்பைக்கொண்டிருக்கிறது.

செரா சானிட்டரிவேர் லிமிடெட்!

செரா ஸ்டைல் கேலரி

இந்த நிறுவனத்தின் மற்றுமொரு மார்க்கெட்டிங் முயற்சியான செரா ஸ்டைல் காலரி என்பது டீலர்கள் நிறுவியுள்ள ஒரு தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் ஓர் இடமாகும். இந்த வித வசதியை நிறுவித் தருவதற்கு அடிப்படையாக அந்த ஊரில் ஷோரும் இருக்கும் இடம் மற்றும் செரா நிறுவன தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கு ஒதுக்கப்படும் இடத்தின் அளவு போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்படி தனிப்பட்ட முறையில் செரா சானிட்டரிவேரின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப் படுவதால், அதிக அளவில் இந்த வித தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெறுகின்றன. விற்பனைப் பிரிவில் பணியாற்றுவதற்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்ட நபர்கள், இந்த ஸ்டைல் கேலரிகளில் பணியில் அமர்த்தப் படுவதால், வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் ரசனைக்கு உகந்த தயாரிப்புகளை வாங்குவது குறித்த முடிவுகளை எடுக்க இவர்கள் உதவியாக உள்ளனர்.

கேரளாவில் இருக்கும் இந்த ஸ்டைல் கேலரி அதிகபட்ச அளவான 7,000 சதுர அடியைக் கொண்டிருக்கிறது.

செரா சானிட்டரிவேர் லிமிடெட்!

செரா சென்டர்கள்...

இந்த நிறுவனம் செரா ஸ்டைல் சென்டர்கள் என்ற அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த வகை சென்டர்கள் தனிப்பட்ட செரா தயாரிப்பு களை மட்டுமே விற்பனை செய்யும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் ஆகும். தற்சமயம் 376 செரா ஸ்டைல் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த இரண்டு நிதியாண்டு களுக்கு உள்ளாக மேலும் 600 ஸ்டைல் சென்டர்களை உருவாக் கும் திட்டங்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

இது தவிர, தொடர்ந்து மார்க் கெட்டிங் முயற்சிகளை விளம் பரங்கள் மற்றும் திட்டமிட்ட பிரச்சார முன்னெடுப்புகள் வாயிலாகச் செய்துகொண்டிருப் பதால், வாடிக்கையாளர்களின் மத்தியில் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பரிச்சயமாகவே இருந்துவருகிறது.

விற்பனைக்குப் பிந்தைய சிறந்ததொரு சேவையை வழங்க 13 பிரத்யேக சேவைக்கான அலுவலகங்களையும், 325 டெக்னீ சியன்களையும், இவர்களை மேற்பார்வை செய்ய 41 அதிகாரி கள் கொண்ட குழுவையும் நியமித்துள்ளது இந்த நிறுவனம். இவர்களுக்குத் தொடர்ந்து தயாரிப்புகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டுக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்க விஷய மாகும்.

தன்னுடைய தொழிலுக்குத் தேவையான ஆராய்ச்சிகளை செய்ய சொந்தமாக ஆராய்ச்சி மையம் ஒன்றையும் நிறுவியுள்ளது இந்த நிறுவனம். இத்துடன் தரக்கட்டுப்பாட்டு மையத்தையும் இந்த நிறுவனம் நிறுவியுள்ள காரணத்தால் கடுமையான தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப் பட்ட பின்னரே, இந்த நிறுவனத் தின் தயாரிப்புகள் வாடிக்கை யாளரைச் சென்றடைகிறது.

செரா சானிட்டரிவேர் லிமிடெட்!

2015-ம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள அஞ்சனி டைல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் கூட்டணி (51%) அமைத்த இந்த நிறுவனம், 2019-ம் ஆண்டில் மைலோ டைல்ஸ் எல்.எல்.பி எனும் நிறுவனத்துடன் (26% அளவிலான முதலீடு) இணைந்து மோர்பி எனும் இடத்தில் க்ளேஸ்டு விட்ரிஃபைடு டைல்கள் உற்பத்தியில் கால்பதித்தது. இந்த உற்பத்தி மையத்தில் நாள் ஒன்றுக்கு 16,000 சதுர மீட்டர் அளவிலான டைல்ஸ்களை உற்பத்தி செய்ய முடியும். இது தவிர, தன்னுடைய தயாரிப்புகளை பேக்கேஜிங் செய்வதற்கான கட்டமைக்கப் பட்ட (corrugated boxes) அட்டைகளைத் தயாரிப்பதற்கான ஒரு நிறுவனத்தையும் 51% அளவிலான முதலீட்டுடன்கூடிய கூட்டணி மூலமாக நிறுவியுள்ளது.

செரா சானிட்டரிவேர் லிமிடெட்!
செரா சானிட்டரிவேர் லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

இந்த நிறுவனம் இயங்கிவரும் தொழில் கட்டுமானத் துறையை முழுமையாகச் சார்ந்த துறையாகும். கட்டுமானத் துறையானது பொருளாதார வளர்ச்சியை முழுக்க முழுக்க சார்ந்து வளர்ச்சி காணும் துறையாகும். ஏதாவது, ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி தேக்கநிலையை சந்தித்தாலோ, எதிர்பார்த்த அளவுக்கு வளராது போனாலோ, அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டையும் பாதிக்கவே செய்யும். மேலும், மூலப்பொருள்கள் விலை உயர்வு, புதிய தொழில்நுட்பம், போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தும் நவீன வகை தயாரிப்புகள், வாடிக்கை யாளர்களின் ரசனை மாறுதல் போன்றவையும் இது போன்ற நிறுவனங்களுக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism