Published:Updated:

எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட்! (BSE CODE: 505700 NSE SYMBOL: ELECON)

எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி
பிரீமியம் ஸ்டோரி
எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி

கம்பெனி பயோடேட்டா

எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட்! (BSE CODE: 505700 NSE SYMBOL: ELECON)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி
பிரீமியம் ஸ்டோரி
எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி

இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் நிறுவனம், தொழிற்சாலை மற்றும் சுரங்கங் களில் இருந்து உற்பத்தியான பொருளை மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் (conveying equipment) உபகரணங்களைத் தயாரிக்கும் சிறிய நிறுவனமாக 1951-ல் ஆரம்பிக்கப்பட்டது.

எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட் நிறுவனம் 1960-ல் ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக கம்பெனிச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. பின்னர், 1961-ம் ஆண்டில் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்டு, பின்னர் வர்த்தகத்துக்காக மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. எலிவேட்டர்ஸ் (ELEvators) அண்ட் கன்வேயர்ஸ் (CONveyors) என்ற இரு செயல்பாடுகளை விளக்கும் வார்த்தைகளின் முதல் மூன்று எழுத்துகளில் இருந்துதான் இந்த நிறுவனத்தின் பெயர் அமைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தொழில்...

1951-ல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1963-ம் ஆண்டில்தான் பல்க் மெட்டீரியல் ஹேண்ட்லிங் என்ற பிரிவுக்கான உபகரணங்கள் மற்றும் தீர்வுகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட ஆரம்பித்தது. 1976-ம் ஆண்டில் கியர்களைத் தயாரிப்பதற்கென்று தனியானதொரு பிரிவை நிறுவிய இந்த நிறுவனம், 2010-ம் ஆண்டில் பென்ஸ்லர்ஸ் மற்றும் ராடிக்கான் எனும் யுகேவைச் சார்ந்த ஸ்க்ரூ ஜாக்ஸ்கள், ஷாஃப்ட் மவுண்டட் கியர் பாக்ஸ்கள் மற்றும் இண்டஸ்ட்ரீயல் ரெட்யூசர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது.

பென்ஸ்லர்ஸ்-ராடிகான் எனும் யுகே-வை சார்ந்த இந்த நிறுவனங்களைக் கையகப்படுத்தியதன் மூலம் ஸ்டீல் உற்பத்தி நிலையங்கள், அதிவேக டர்பைன்கள், ஐ.எஸ்.ஆர்.ஓ அமைப்பானது விண்ணில் செலுத்தும் ராக்கெட்டுகள், கடற்படை விமானம் தாங்கிகள் போன்றவற்றில் உபயோகிக்கப்படும் கியர்களை உற்பத்தி செய்வதில் தனது திறனைக் கணிசமான அளவில் அதிகரித்துக் கொண்டது இந்த நிறுவனம்.

2013-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள ஆனந்த் என்னும் இடத்தில் பானுபாய் மெமோரியல் சென்டர் ஃபார் எக்செலன்ஸ் எனும் பெயரில் அதிநவீன உற்பத்தி மையம் ஒன்றை நிறுவியது. 2015-ம் ஆண்டில் மனிகார்க் சிமென்ட் (Manikgarh Cement) என்னும் இந்திய நிறுவனத்துக்காக மிகவும் நீளமான பைப் கன்வேயர் வசதியை நிறுவிக் கொடுத்தது இந்த நிறுவனம். 2016-ம் ஆண்டில் இந்திய கப்பல் படையில் இருந்து பெரியதொரு ஆர்டரைப் பெற்றது இந்த நிறுவனம்.

எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட்! (BSE CODE: 505700 NSE SYMBOL: ELECON)

நிறுவனத்தின் சிறப்புகள்...

இந்த நிறுவனம் செயல்படும் பெரும் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், பவர் டிரான்ஸ்மிஷன், மெட்டீரியல் ஹேண்ட்லிங் தீர்வுகளை வழங்குதல் மற்றும் பவுண்டரி என்ற மூன்று பெரும் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

1962-ம் ஆண்டில் முதன்முதலாக ரிடக்‌ஷன் கியர் யூனிட்டுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், 1976-ம் ஆண்டில் கியர்கள் உற்பத்திக்காகத் தனியானதொரு பிரிவை நிறுவியது. கியர்களில் மாடுலர் டிசைன் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம் தான்.

இந்த நிறுவனத்தில் ஹெலிகல் கியர்பாக்ஸ்கள் ஆசியாவில் உள்ள பல்வேறு தொழில்துறையினர் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்று உள்ளது. எடையும் அளவும் குறைவாக இருப்பதால், அவற்றைத் தொழிற்சாலையில் நிறுவுவதற்குத் தேவைப்படும் இடம், நிறுவுவதற்கென்று எழுப்பப் பட வேண்டிய அஸ்திவாரத்தின் அளவு மற்றும் கியர்கள் செயல்பாட்டில் இருக்கும்போது பயன் படுத்தப்படும் லூப்ரிகேட்டிங் எண்ணெய்யின் குறைந்த அளவிலான செலவு போன்ற விஷயங் களில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கின்றன.

மின் உற்பத்தி, நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி யைக் கையாளுதல், சிமென்ட் உற்பத்தி ஆலைகள், ஸ்டீல் மற்றும் உர உற்பத்தி ஆலைகள், சர்க்கரை உற்பத்தி ஆலைகள், கெமிக்கல்கள் மற்றும் பிளாஸ்ட்டிக் துறைக்கான உற்பத்தி வசதிகள், டெக்ஸ் டைல் மற்றும் துறைமுகங்கள் என எந்த மாதிரியான பயன் பாட்டிலும் மிகச்சிறந்த செயல் திறனுடன் செயல்படும் அளவுக்கு இந்த நிறுவனம் தயாரிக்கும் கியர்கள் வடிவ மைக்கப்பட்டிருப்பதால், வாடிக் கையாளர்கள் விரும்பி வாங்கும் ஒரு தயாரிப்பாக இந்த நிறுவனத் தின் தயாரிப்புகள் விளங்கு கின்றன.

மேலும், ஸ்டீல் மில்கள், ஹை ஸ்பீடு டர்பைன்கள், சர்க்கரை ஆலைகள், கப்பல்துறை, பிளாஸ்ட்டிக் எஸ்ட்ரூஷன்ஸ், சிமென்ட் ஆலைகள், ரப்பர் உற்பத்தி நிறுவனங்கள், ஹைட்ரோ டர்பைன்கள் மற்றும் காற்றாலைகள் உள்ளிட்ட பல துறைகளில் செயல்பட்டுவரும் வாடிக்கையாளர்களின் தனிப் பட்ட மற்றும் குறிப்பிட்ட அளவிலான தேவைகளுக்கு (custom made gearboxes) இணங்க கியர் பாக்ஸ்களை வடிவமைத்து உற்பத்தி செய்து தருவதிலும் தலைசிறந்த நிறுவனமாக விளங்குகிறது.

இந்தியாவிலேயே முதன் முதலாக பல்க் மெட்டீரியல் ஹேண்ட்லிங் எனும் நடை முறையை அறிமுகப்படுத்திய பெருமை இந்த நிறுவனத்தையே சாரும். இன்றைக்கு ஸ்டீல், மின் உற்பத்தி, துறைமுகங்கள் (கப்பல்கள்), கெமிக்கல்கள், சிமென்ட், நிலக்கரி உள்ளிட்ட பல துறைகளுக்குத் தேவைப்படுகிற மெட்டீரியல்களைக் கையாள் வதற்கான தீர்வுகளை சிறப்பான முறையில் வழங்கிவருகிறது இந்த நிறுவனம். பெல்ட்-கன்வேயர்கள், ஐட்லர்கள் (idlers) மற்றும் புல்லிகள் (Pulleys), எலிவேட்டர்கள் மற்றும் செயின் கன்வேயர்கள், ஸ்டேக் கர்கள் (Stackers), ரீக்ளெய்மர்கள், ஸ்டெக்கர்-கம்-ரீக்ளெய்மர்கள், பேரல் டைப் ப்ளெண்டர் ரீக்ளெய் மர்கள், பிரிட்ஜ் டைப் பக்கெட் வீல் ரீக்ளெய்மர்கள் (Bridge type bucket wheel reclaimers) உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

தயாரிப்புகளைத் தாண்டி, பல்வேறு வகையான உற்பத்தி சார்ந்த சேவைகளையும் வழங்கி வருகிறது இந்த நிறுவனம். வாடிக்கையாளர்கள் தேவைக் கிணங்க கியர் பாக்ஸ்களை வடி வமைத்து உற்பத்தி செய்துதருதல், உபயோகப்படுத்தப்பட்ட கியர் பாக்ஸ்களைப் புதுப்பித்துத் தருதல், கியர் பாக்ஸ்களுக்கான விற்பனைக் குப் பிந்தைய சேவைகளை வழங் குதல், மெட்டீரியல் ஹேண்ட்லிங் எக்யூப்மென்ட்களுக்கான விற்ப னைக்குப் பிந்தைய சேவைகளை வழங்குதல் போன்ற சேவைகளை இந்த நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட்! (BSE CODE: 505700 NSE SYMBOL: ELECON)
எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட்! (BSE CODE: 505700 NSE SYMBOL: ELECON)

ரிஸ்க்குகள் என்னென்ன?

கியர்கள் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங் தீர்வுகளை உற்பத்தி செய்து தரும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிக்கும் துறைகள் பலவும் பொருளாதார முன்னேற்றத்தைச் சார்ந்தே வளர்ச்சி அடையும் துறைகளாக இருப்பதால் ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையை சந்தித்தாலோ, தேங்கிப்போனாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும். போட்டி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் நவீன தொழில்நுட்பம், மூலப்பொருள்கள் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் உள்ளிட்ட ஏனைய விஷயங்களும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும். பவுண்டரி பிரிவிலும் செயல்பட்டு வருவதால், சுற்றுச்சூழல் சார்ந்த அரசாங்கத்தின் கொள்கை முடிவு களும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஓரளவு பாதிக்கவே செய்யும் என எதிர்பார்க்கலாம்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்ப தால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!