Published:Updated:

ஃபேஸ் த்ரீ லிமிடெட்!

ஃபேஸ் த்ரீ லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ் த்ரீ லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

ஃபேஸ் த்ரீ லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
ஃபேஸ் த்ரீ லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபேஸ் த்ரீ லிமிடெட்!

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோடேட்டா ஃபேஸ் த்ரீ லிமிடெட் (Faza Three Ltd) எனும் உலக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தினுடையது.

நிறுவன வரலாறு...

1982-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆட்டோமொபைல்களில் உபயோகிக்கப்படும் துணிவகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். கடந்த 38 வருடங்களாக உலக அளவில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ரீடெயில் நிறுவனங் களை வாடிக்கையாளர்களாகப் பெற்று தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

மேலும், இந்தியாவில் செயல்பட்டுவரும் முன்னணி கார் சீட் கவர் உற்பத்தி நிறுவன மாகவும் இந்த நிறுவனம் திகழ்ந்துவருகிறது. ஜவுளி உற்பத்தியில் நவீனத்துவத்தைக் கடைப்பிடித்து வருவதாலும், புத்தம் புதிய டிசைன்களை வடிவமைப்பதாலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் வாடிக்கை யாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

குளியலறை மிதியடிகள், நடுத்தர அளவுள்ள தரைவிரிப்புகள் மற்றும் அறையில் விரிக்கக் கூடிய தரைவிரிப்புகள், தலையணைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், திரைச் சீலைகள், சமையலறை உபயோகத்துக்கான துணிவகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிற இந்த நிறுவனம், சமீப காலத்தில் மாஸ்க்குகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் தயாரிப்புகள் வாரியாகப் பிரிக்கப்பட்ட எட்டு உற்பத்தி நிலையங்களைக் கொண்டு இயங்கிவருகிறது.

ஃபேஸ் த்ரீ லிமிடெட்!

பங்குச் சந்தையில்...

ஃபேஸ் த்ரீ நிறுவனம் 1982-ம் ஆண்டில் ஃபேஸ்டூ என்கிற பெயரில் ஒரு டிரேடிங் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். 1985-ம் ஆண்டில் ஃபேஸ் த்ரீ நிறுவனம் டிரேடிங் நிறுவனம் என்ற நிலையில் இருந்து மாறி உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற நிலையை அடைந்தது. பின்னர், 1990-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டது. தற்சமயம் இந்த நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் (BSE) மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. 1992-ம் ஆண்டில் பானிபட் எனும் இடத்தில் உள்ள உற்பத்தி வசதியை ஆரம்பித்ததன் மூலம் தன்னுடைய நான்காவது உற்பத்தி வசதியை நிறுவியது இந்த நிறுவனம்.

1996-ம் ஆண்டில் ஃபேஸ் த்ரீ நிறுவனம் ஆயுன்டே (Aunde) எனும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ஆட்டோமோட்டிவ் டெக்னிக்கல் டெக்ஸ்டைலை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 1997-ம் ஆண்டில் சில்வாசா எனும் இடத்தில் இரண்டு தானியங்கி உற்பத்தி வசதிகளை ஆட்டோமோட்டிவ் மற்றும் ஹோம் டெக்ஸ்டைல் உற்பத்திக்காக நிறுவியது இந்த நிறுவனம். 2004-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள வாபி எனும் இடத்தில் ஒரு பிராசஸிங் யூனிட்டை நிறுவிய இந்த நிறுவனம், 2008-ம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள முனீச் எனும் நகரில் உள்ள பானா டெக்ஸ்ட்டைல் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.

உலகமயமாக்கல் என்பது வெகுவேகமாக நடந்துவருகிற இன்றைய காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் தேவையும் ரசனையும் உலக அளவில் வேகமாக மாறிக்கொண்டேயிருக்கிறது. இதனாலேயே இந்த நிறுவனம் தொடர்ந்து அதிநவீன டிசைன்களை அறிமுகப்படுத்தி வருவதாகக் கூறுகிறது. இதற்கெனவே தலைசிறந்த டிசைனிங் திறமை கொண்ட இந்த நிறுவனத்தின் குழுக்கள் உலக அளவில் மூன்று கண்டங்களில் (அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா (மும்பை, பானிபட் மற்றும் சில்வாசா) செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் இந்த டிசைன் ஸ்டூடியோக்கள் ரீடெயிலர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன்மூலம் மாறிவரும் டிரென்ட்டை பூரணமாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப தயாரிப்புகளை வடிவமைக்கின்றன.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை ரீடெயில் செயின் ஸ்டோர்கள் (தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காகவும்), தங்கும் விடுதிகள் அவர்களின் சொந்த பயன்பாட்டுக்காகவும் (பெட்ஷீட், பாத்ரூம் மற்றும் பெட் விரிப்புகள்), ஸ்பாக்கள் மற்றும் ரிசார்ட்டுகள் (சாஃப்ட் டவல்கள், ரோப்ஸ், பிரீமியம் ரக பெட் லினன் உள்ளிட்ட தயாரிப்புகளை) தங்களுடைய சொந்த பயன்பாட்டுக்காகவும், பயணிகளுக்கான கப்பல்களை இயக்கும் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் உபயோகத்துக்காகவும் வாங்குகின்றன.

பிரதான வாடிக்கையாளர்கள்...

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்கிற ரீதியாகப் பார்த்தால், அமெரிக்கா மற்றும் கனடாவில் வால்மார்ட், ஜே.சி.பென்னி, காஸ்ட்கோ, டி.கே.என்.ஒய், டில்லார்ட்ஸ், டார்கெட், டாலர் ஜெனரல், மார்ஷல்ஸ், பெட் பாத் & பியாண்ட், ஹோம் குட்ஸ், ஹட்சன் பே கம்பெனி, வில்லியம்ஸ் சோனோமா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன.

யுனைடெட் கிங்டமில் அர்கோஸ், ஏ.எஸ்.டி.ஏ, மார்க்ஸ்& ஸ்பென்சர், செயின்ஸ்பரீஸ், ஹவுஸ் ஆஃப் ப்ரேசர், ஹோம் குட்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனகள் வாடிக்கையாளர் களாக இருக்கின்றன.

ஐரோப்பாவில் ஜாரா ஹோம், கெல்வின் க்லெய்ன், மிக்ரோஸ், க்ரன்ட், அக்வாநோவா, ஜே.ஒய்.எஸ்.கே உள்ளிட்ட பல நிறுவனங் கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக் கின்றன. ஆஸ்திரேலியாவில் காட்டன் ஆன், கன்ட்ரி ரோட், டேவிட் ஜோன்ஸ், ஃப்ரீடம், கே.ஏ.எஸ், மையர், வுல்வொர்த்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர் களாக இருக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு நேரிடையாக ஏற்றுமதியைச் செய்துவரும் இந்த நிறுவனம், ஆர்டர் கிடைத்த பின்னரே, உற்பத்தி என்ற கொள்கையைப் பின்பற்றி செயல்பட்டு வருகிறது. டிசைன்-டு-டெலிவரி மற்றும் நூல் முதல் ஜவுளி வரையிலான அனைத்து விஷயங்களையும் சொந்தமாகச் செய்துகொள்ளும் திறனைக் கொண்டிருப்பது இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பாகும். மேலும், தன்னுடைய உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களில் சுமார் 95% அளவிலான மூலப் பொருள்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்துகொள்கிறது இந்த நிறுவனம்.

வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் தேவைப்படும் ஒரே வகையிலான (டிசைன் மற்றும் அளவு) ஜவுளிகளை சுணக்கமின்றி தயாரித்துத் தருதல், ஆர்டருக்கான குறைந்தபட்ச எண்ணிக்கை என்பதை கணிச மான அளவுக்குக் குறைவாக வைத்திருத்தல், தயாரிப்புகள் மற்றும் அவற்றின் நிறங்கள் என்ற இரண்டிலும் நெகிழ்வுத்தன்மை யுடன் இருத்தல் போன்றவை இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்புகளாகும்.

கடந்த காலாண்டின் இறுதி நிலவரப்படி, மொத்த விற்பனை யில் அமெரிக்காவின் பங்களிப்பு 60% என்ற அளவிலும் யுகே மற்றும் யூரோப்பின் அளவு 30% என்ற அளவிலும் இருந்து வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் டாப் 15 வாடிக்கையாளர்களுடன் ஸ்திரமான உறவை வளர்த்தெடுத்து வந்துள்ளது இந்த நிறுவனம். இந்த டாப் 15 நிறுவனங்கள் மொத்த விற்பனையில் 80% பங்களிப்பை வழங்கி வருகின்றன.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பொதுவாகப் பல்வேறு ரகத்திலுள்ள ஜவுளிகளை வாங்குகின்றனர் என்பதால், எந்தவொரு குறிப்பிட்ட ஜவுளி ரகத்தையும் இந்த நிறுவனம் விற்பனை ரீதியான பங்களிப்புக்காகச் சார்ந்திருக்கவில்லை.

ஃபேஸ் த்ரீ லிமிடெட்!
ஃபேஸ் த்ரீ லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

ஜவுளி ஏற்றுமதி (ஹோம் டெக்ஸ்டைல்) துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக அடுத்தடுத்து பாதிப்புகள் ஏதேனும் வந்தால் அது இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கான ரிஸ்க் என்றே கூற வேண்டும். வாடிக்கையாளர்களின் ரசனை மாறுதல், மூலப்பொருள் களின் விலை உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism