Published:Updated:

எஃப்.டி.சி லிமிடெட்

எஃப்.டி.சி லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
எஃப்.டி.சி லிமிடெட்

கம்பெனி பயோடேட்டா

எஃப்.டி.சி லிமிடெட்

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
எஃப்.டி.சி லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
எஃப்.டி.சி லிமிடெட்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் நிறுவனம் பார்மா துறையில் இயங்கும் எஃப்.டி.சி லிமிடெட் (FDC LTD).

நிறுவனத்தின் வரலாறு...

1936-ம் ஆண்டில் பார்ட்னர்ஷிப் நிறுவனமாக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், 1940-ம் ஆண்டில் ஃபேர் டீல் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு கம்பெனியாகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், 1986-ம் ஆண்டில் எஃப்.டி.சி பிரைவேட் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது இந்த நிறுவனம். அதன் பின்னர், 1996-ம் ஆண்டில் இந்த நிறுவனம் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப் பட்டு, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இன்றைக்கு எஃப்.டி.சி லிமிடெட் நிறுவனம் அமெரிக்காவின் எஃப்.டி.ஏ, யுனைடெட் கிங்டமின் எம்.ஹெச்.ஆர்.ஏ, தென் ஆப்பிரிக்காவின் எம்.சி.சி மற்றும் யுனைடெட் அரப் எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் மருந்துகளுக்கான ஆணையங் களின் அங்கீகாரத்தைப் பெற்ற நிறுவனமாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் ஓரல் ரீ-ஹைட்ரேஷன் சால்ட் (ORS) மற்றும் கண் சிகிச்சைக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. எஃப்.டி.சி நிறுவனத்தின் உலக நாடுகள் பலவற்றின் மருந்து ஆணையங்களின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தி வசதிகள் இந்தியாவில் மகாராஷ்டி ராவில் உள்ள ரோஹா, வாலூஜ், சின்னார் போன்ற இடங்களிலும், இமாசலப்பிர தேசத்தில் உள்ள பட்டி எனும் இடத்திலும் நிறுவப்பட்டு செயல்பட்டுவருகிறது.

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட மருந்து வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் எஃப்.டி.சி நிறுவனம், இவற்றில் பலவற்றை 50-க்கும் மேற்பட்ட உலக நாடு களுக்கு ஏற்றுமதி செய்தும்வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

எஃப்.டி.சி லிமிடெட்

நிறுவனத்தின் தயாரிப்பு மையங்கள்...

1936-ம் ஆண்டில் ஃபேர்டீல் கார்ப்பரேஷன் என்ற பெயரில் மருந்துகள், மழலைகளுக்கான உணவுப் பொருள்கள் மற்றும் சர்ஜிக்கல் எக்யூப்மென்ட்ஸ்களை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் முதலாவது உற்பத்தி வசதி மும்பையில் உள்ள ஜோகேஷ்வரி எனும் இடத்தில் 1949-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1963-ம் ஆண்டில் இந்த நிறுவனம் வான்மை செட்டின் எனும் கண் சிகிச்சைக்கு அளிக்கப்படும் சொட்டு மருந்துகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்ததுதான் கண் சிகிச்சைக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதில் கால்பதிப்பதற்கான முதல் முயற்சியாகும்.

இன்றைக்கு பிரசித்திபெற்று விளங்கும் ‘எலெக்ட்ரால்’ எனும் ஓரல் ரீஹைட்ரேஷன் சால்ட்டை 1972-ம் ஆண்டு உற்பத்தி செய்து இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 1974-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையங்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டன. 1977-ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள ரோஹா எனும் இடத்தில் ஆக்டிவ் பார்மச்சூட்டிக்கல் இன்க்ரிடியன்ட்ஸை (APIs) உற்பத்தி செய்யும் மையம் ஒன்றையும், 1984-ம் ஆண்டில் ரோஹாவில் மழலையருக்கான உணவுகளை உற்பத்தி செய்யும் மையம் ஒன்றையும் நிறுவியது இந்த நிறுவனம்.

1987-ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள வாலுஜ் எனும் இடத்தில் ஒரு பல்நோக்கு பார்முலேஷன் (மருந்துகள் உற்பத்திக்கானது) உற்பத்தி மையத்தை நிறுவியது இந்த நிறுவனம். 1989-ம் ஆண்டில் ப்ளர்பிப்ரூபன் என்னும் மருந்தை வர்த்தகரீதியாக உற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், 1991-ம் ஆண்டில் திமோலோல் மேலியேட் எனும் ஏ.பி.ஐ-யையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. இதே ஆண்டில் இந்த நிறுவனம் வாலுஜில் ஒரு பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தையும் நிறுவியது.

1996-ம் ஆண்டில் பொதுப் பங்குகளை வெளியிட்ட இந்த நிறுவனம் அதே ஆண்டில் ஏற்றுமதி நிறுவன அந்தஸ்த்தையும் பெற்றது. இதே ஆண்டில்தான் இந்த நிறுவனம் கண் சிகிச்சைக்கான மருந்துகளை விற்பனை செய்வதற்கென்றே தனிப்பட்ட அளவிலான விற்பனைப் பிரதிநிதிகளைப் பணிக்கு அமர்த்த ஆரம்பித்தது. 1998-ம் ஆண்டில் வாலுஜ் எனும் இடத்தில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்தின் கண் சிகிச்சைக்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் வசதி யுனைடெட் கிங்டமின் மருந்துகளை அங்கீகாரம் செய்யும் ஆணையமான எம்.ஹெச்.ஆர்.ஏ-வின் அங்கீகாரத்தைப் பெற்றது. 1999-ம் ஆண்டில் யுனைடெட் கிங்டமில் கண் சிகிச்சைக்கான மருந்துகளை சந்தைப்படுத்துவதற்காக எஃப்.டி.சி இன்டர்நேஷனலை நிறுவியது இந்த நிறுவனம். 2002-ம் ஆண்டில் கோவாவில் உள்ள (பிளான்ட்-1) இந்த நிறுவனத்தின் ஓரல் ரீஹைட்ரேஷன் சால்ட் உற்பத்தி வசதி யுனைடெட் கிங்டமின் எம்.ஹெச்.ஆர்.ஏ-வின் அங்கீகாரம் பெற்றது.

2004-ம் ஆண்டில் எஃப்.டி.சி சௌத் ஆப்பிரிக்கா என்னும் நிறுவனத்தை ஆரம்பித்த இந்த நிறுவனம், 2005-ம் ஆண்டில் வாலுஜில் உள்ள கண் சிகிச்சைக்கான மருந்துகளை உற்பத்தி செய்யும் வசதிக்கு அமெரிக்க மருந்துகள் அங்கீகார ஆணையமான எஃப்.டி.ஏ-வின் அங்கீகாரத்தைப் பெற்றது.

2008-ம் ஆண்டில் அமெரிக்கா வில் இந்த நிறுவனத்தின் கண் சிகிச்சைக்கான இரண்டு பார்முலேஷன்களுக்கான ஏ&ஏ-கள் அங்கீகாரம் பெற்றது. இதே ஆண்டில் வாய்வழியே உட்கொள்ளும் வகையிலான சிபோலோஸ் போரின் எனும் மருந்தை பட்டி என்னும் இடத்தில் உற்பத்தி செய்யும் மையத்தை நிறுவியது.

எஃப்.டி.சி லிமிடெட்
எஃப்.டி.சி லிமிடெட்

நிறுவனத்தின் தயாரிப்புகள்...

ஸ்பெஷலைஸ்டு பார்முலே ஷன்கள் மற்றும் ஓரல் ரீஹைட்ரேஷன் சால்ட்டுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வரும் பெருமையை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. மேலும், முழுமையாக அமெரிக்க மற்றும் யுனைடெட் கிங்டமின் மருந்து ஆணையங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங் கிணைக்கப்பட்ட உற்பத்தி வசதி களைக் கொண்டு இயங்குவதும் தனிச் சிறப்பாகும்.

தயாரிப்பு ரீதியாகப் பார்த் தால், தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் ஆன்ட்டி இன்ஃபெக் டிவ்ஸ், குடல் சார்ந்த சிகிச்சைக் கான மருந்துகள், கண் சிகிச்சைக் கான மருந்துகள், விட்டமின்கள், மினரல்கள், இணை உணவுப் பொருள்கள், இதயத்துக்கான சிகிச்சை, சர்க்கரை வியாதிக்கான சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான சிகிச்சை, வலி நிவாரணிகள் போன்றவற்றுக்கான மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். ஜி.பி, எலெக்ட்ரால், விக்டோபோல், பைரிமோன், சோகோன், சோக்ஸான், ஜாத்ரின், ஜிபோட், ஜிஃபு, கோட்டாரில் மற்றும் மைக்கோடெர்ம் போன்ற பிராண்டுகள் அந்தந்தப் பிரிவில் இருக்கும் இந்த நிறுவனத்தின் பிரசித்திபெற்ற பார்முலேஷன் பிராண்டுகளாகும்.

இணை உணவுகள் உற்பத்தியில், ஆண்டாக்சிடென்ட்ஸ், பேலன்ஸ்டு எனர்ஜி ட்ரிங்க்ஸ், விட்டமின்ஸ் மற்றும் நியூட்ரஸூட் டிக்கல்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. ஏ.பி.ஐ-கள் உற்பத்திப்பிரிவில் 23 ஏ.பி.ஐ-களை உருவாக்கியுள்ள இந்த நிறுவனம், அவற்றில் 14 வகை ஏ.பி.ஐ-களை வெற்றிகரமாக கமர்ஷியல் ரீதியான உற்பத்தி செய்து உலக அளவில் ஏற்றுமதி செய்துவருகிறது. இது தவிர, 11 யுஎஸ் டி.எம்.எஃப்-கள், ஆறு சி.இ.பி-களை ஃபைல் செய்தும் உள்ளது இந்த நிறுவனம்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

மருந்து உற்பத்தித் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மருந்து உற்பத்தித் துறையில் ஆராய்ச்சிகளில் வெற்றி பெறுவது அத்தியாவசியமான ஒன்றாகும். ஆராய்ச்சிகளில் வெற்றி பெறுவது தடைபட்டால் அது இந்த நிறுவனத்தின் எதிர்கால செயல்பாட்டை பாதிக்கவே செய்யும். மூலப்பொருள்களின் விலை உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், மருந்துகள் அங்கீகாரத்துக்கான ஆணையங் களின் கூடுதல் கட்டுப்பாடுகள், தொழில் ரீதியான போட்டி, அதிநவீன தொழில்நுட்பம் அறிமுகப் படுத்துதல். அரசாங்கங் களின் கொள்கை முடிவுகள் போன்ற அனைத்துமே இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism