Published:Updated:

ஃபைன் ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ்! (NSE SYMBOL: FINEORG, BSE CODE: 541557)

ஃபைன் ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைன் ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ்

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோ டேட்டா ஃபைன் ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். 1970-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் எதிர்காலத்தில் ஓலியோகெமிக்கல்களின் தேவை அதிகரிக்கும் என்பதை உணர்ந்து அவற்றைத் தயாரிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

450-க்கும் மேலான தயாரிப்புகள்...

இன்றைக்கு இந்த நிறுவனம் உள்நாட்டில் விளைவிக்கப்படும் தாவரங்களில் இருந்து கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு உலகத் தரத்தில் உயர்தரம் கொண்ட சிறப்பு உபயோகங்களுக்கான அடிட்டிவ்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் அடிட்டிவ்கள் உணவுப் பொருள்கள், பிளாஸ்டிக், அழகு சாதனப் பொருள்கள், ஜவுளி உற்பத்தி, பெயின்ட், இங்க்குகள், ரப்பர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு இணங்க பொருள்களை உற்பத்தி செய்து தருவதாலும், உற்பத்திக்கு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாலும் சிறப்புப் பயன்பாட்டுக்கான அடிட்டிவ்களை உலக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங் களின் மத்தியில் தனிச்சிறப்பான அந்தஸ்துடன் திகழ்கிறது இந்த நிறுவனம்.

450-க்கும் மேலான தயாரிப்புகள், 800-க்கும் மேற்பட்ட நேரிடையான நிறுவன ரீதியிலான வாடிக்கையாளர்கள், 150-க்கும் மேலான உலக அளவிலான விநியோகஸ்தர்கள், 700-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போன்றவற்றுடன் இன்றைக்கு வெற்றிகரமான நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் 5,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை நேரடியாகத் தங்களுடைய தயாரிப்புகளில் உபயோகிக்கின்றன என்பதும் ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.

ஃபைன் ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ்!  (NSE SYMBOL: FINEORG, BSE CODE: 541557)

நிறுவனத்தின் வளர்ச்சி...

1970-ம் ஆண்டில் ஃபைன் ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பார்ட்னர்ஷிப் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1973-ம் ஆண்டில் மும்பைக்கு அருகே உள்ள டோம்பிவில்லி எனும் இடத்தில் உற்பத்தி மையத்தை நிறுவியது. 1988-ம் ஆண்டில் அம்பெர்நாத் எனும் இடத்தில் மற்றும் ஓர் உற்பத்தி மையத்தை நிறுவிய இந்த நிறுவனம், 2001-ம் ஆண்டில் பத்லாபூர் எனும் இடத்தில் மற்றும் ஓர் உற்பத்தி மையத்தை அமைத்தது. பின்னர் 2000-ம் ஆண்டில் ஃபைன் ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் (மும்பை) பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம், 2005-ம் ஆண்டில் மும்பையில் தன்னுடைய ஆராய்ச்சி மையத்தை நிறுவியது.

2006-ம் ஆண்டில் அம்பேர்நாத்தில் உற்பத்தி மையத்தைப் புதிதாக நிறுவிய இந்த நிறுவனம், 2008 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு படிநிலைகளாக அம்பேர்நாத்தில் இருந்த உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்தது. 2014-ம் ஆண்டில் நெதர்லாந்தைச் சேர்ந்த பேக்கரிகளில் பயன் படுத்தப்படும் ப்ரீமிக்ஸ் வேதிப்பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமான ஜீலாண்டியா இன்டர்நேஷனல் என்னும் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தது.

2018-ம் ஆண்டில் இந்த நிறுவனம் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. மேலும், 2018 மற்றும் 2020-க்கு இடையேயான காலகட்டத்தில் மும்பைக்கு அருகே உள்ள அம்பேர்நாத் மற்றும் பட்லகங்காவில் புதிய உற்பத்தி மையங்களை நிறுவியது இந்த நிறுவனம்.

ஃபைன் ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ்!  (NSE SYMBOL: FINEORG, BSE CODE: 541557)

தொழில் பிரிவுகள்...

இந்த நிறுவனத்தின் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், பிளாஸ்டிக், உணவுப் பொருள்கள், ரப்பர், அழகு சாதனம் மற்றும் மருந்து உற்பத்தி, பெயின்ட் மற்றும் இங்க்குகள், ஜவுளி, ஸ்பெஷாலிட்டி அப்ளிகேஷன் உள்ளிட்ட முக்கிய தொழில் பிரிவுகளுக்குத் தேவையான தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. பிளாஸ்டிக் பிரிவில் பாலிஓலிபீன்ஸ், காம்பவுண்ட் மாஸ்டர் பேட்ச்கள், ஸ்டைரீனிக் காம்பவுண்ட்ஸ், என்ஜினீயரிங் காம்பவுண்ட்ஸ், ஃபோம்டு புராடக்ட்ஸ், ரிஜிட் பி.வி.சி தயாரிப்புகள், பிளாஸ்டிசைஸ்டு பி.வி.சி தயாரிப்புகள், தெர்மோ செட் தயாரிப்புகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும்போது உபயோகப்படுத்தப்படும் அடிட்டிவ்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

உணவு உற்பத்தித் துறைக்கான பிரிவின்கீழ், பூசணம் பிடிக்காமல் இருப்பதற்கான வேதிப்பொருள்கள் (ஏஜென்டுகள்) மற்றும் ப்ரிசர்வேட்டிவ்ஸ், எமல்சிஃப் பையர்கள் மற்றும் ஸ்பெஷாலிட்டி தயாரிப்புகள் பலவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. ரப்பர் சார்ந்த பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங் களுக்குத் தேவைப்படும் வேதிப்பொருள்கள் வரிசையில் டயர் அல்லாத பொருள்கள் உற்பத்தியில் தேவைப்படும் பிராசஸிங் எய்ட்ஸ், என்.பி.ஆர்-பி.வி.சி பிளெண்டுகள், டயர்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் சிறப்புப் பண்புகள் கொண்ட வேதிப்பொருள்கள் மற்றும் பிளாஸ்டிசைசர்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

அழகு சாதனம் மற்றும் மருந்து உற்பத்திகள் துறைக்குத் தேவைப் படும் சிறப்பு வேதிப்பொருள்கள் பிரிவில் கிளிசரல் ஸ்டீரி யேட்டுகள், கிளிசரல் ஃபேட்டி எஸ்டர்கள், எஸ்டர் வேக்ஸ்கள், சார்பிட்டான் எஸ்டர்கள், கிளைக்கால் எஸ்டர்கள், அல்கோநோலமைடுகள், பி.இ.ஜி எஸ்டர்கள், லிக்யுட் எஸ்டர்கள் மற்றும் சிறப்பு பண்பு மற்றும் உபயோகம் கொண்ட வேதிப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது.

ஜவுளிகளுக்கான தயாரிப்பு களில் வெட்டிங் ஏஜென்ட், ஸ்கெளரிங் ஏஜென்ட், பென்ட் ரேட்டிங் ஏஜென்ட், சிந்தெட்டிக் கம், எமல்சிபையர், ப்ளினிஷிங் சாஃப்ட்னெர், டெக்ஸ்டரைசிங் கெமிக்கல் என்பவை உள்ளிட்ட பல வேதிப்பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

சிறப்பு உபயோக வேதிப் பொருள்கள் உற்பத்திப் பிரிவில் துருப்பிடிக்காமல் இருக்க உதவி செய்யும் வகையிலான வேதிப் பொருள்கள், பயோசைடுகள், டீஃபோமர்கள் மற்றும் எமல்சி பையர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சிறப்புப் பண்புகள் கொண்ட வேதிப்பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் மும்பைக்கு அருகே நிறுவப்பட்டுள்ளன. தவிர, மலேசியா மற்றும் தாய்லாந்தில் கூட்டணி நிறுவனங்கள் மூலமாக வும் உற்பத்தி மையங்களை நிர்மாணித்துள்ளது இந்த நிறுவனம்.

ஃபைன் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையங்கள் வேதிப்பொருள்களில் அப்ளைடு ரிசர்ச், வேதிப்பொருள் களின் பண்புகளை ஆராய்தல் மற்றும் வேதிப்பொருள்களைக் கண்டறிந்து பிரித்தெடுத்தல் போன்ற அனைத்துப் பணி களையும் செவ்வனே செய்யும் அளவுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டு இயங்கி வருகிறது.

ஃபைன் ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ்!  (NSE SYMBOL: FINEORG, BSE CODE: 541557)

ரிஸ்க்குகள் என்னென்ன?

வேதிப்பொருள்கள் உற்பத்தித் துறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கேயான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. தொழில் ரீதியான போட்டி, போட்டி நிறுவனங்கள் அவை செய்கிற ஆராய்ச்சியில் பெறுகிற வெற்றி, எதிர்காலத்தில் அறிமுகப் படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்கள். கெமிக்கல்கள் உற்பத்தி என்பதால், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், மூலப்பொருள்களின் விலை உயர்வு போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் என்றே கருதப்பட வேண்டும். எதிர்பாராத வகையில் பொருளாதார வளர்ச்சியில் தோன்றக்கூடிய மந்தநிலையும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஓரளவு பாதிக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!