கோத்ரெஜ் அக்ரோவெட் லிமிடெட் நிறுவனம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு சார்ந்த துறையில் இயங்கிவரும் நிறுவனமாகும். விலங்குகளுக்கான (வீடு மற்றும் பண்ணையில் வளர்க்கப் படும் ரக) தீவனங்கள் பயிர் பாதுகாப்பு, எண்ணெய்க்கான பனை, கோழி வளர்ப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்ற தொழில் பிரிவுகளில் ஒரு முன்னணி நிறுவனமாக இயங்கி வருகிறது.

நிறுவனத்தின் வளர்ச்சி...

புதுமைகளைத் தொடர்ந்து செய்து வருவதே வெற்றிக்குக் காரணம் எனச் சொல்லும் இந்த நிறுவனம், விவசாயி கள் நல்ல லாபத்தைப் பெறுவதை நோக்கமாகக்கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சிகள் மூலமே இதை சாத்தியமாக்கிக் கொண்டுள்ளது.

உதாரணமாக, இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் கால்நடைத் தீவனம் (மில்க் மோர் எனும் பிராண்டில் விற்பனை செய்யப் படுவது) அதிக பால் உற்பத்திக்கு உதவும் வகையில் இருக்கிறது. அதே போல், இந்த நிறுவனத்தின் பயிர் பாதுகாப்புத் தொழில் பிரிவில் உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் (விபுல், விகாஸ், கம்பைன் மற்றும் ஹிட்வீட் உள்ளிட்ட பல பிராண்டுகளில் விற்பனை செய்யப் படுபவை) பயிர்களுக்கான விதையை விதைத்த நாளிலிருந்து அறுவடை நாள் வரையிலான பல்வேறு படிநிலைகளுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்கும் ரகங்களில் இருக்கிறது.

நாசிக்கில் உள்ள நதிர் கோத்ரெஜ் சென்டர் ஃபார் அனிமல் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் என்னும் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையமானது, அகில இந்திய அளவில் தனியார் வசம் இருக்கும் ஆராய்ச்சி மையங்களில் முன்னோடியான தாகும். இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் இதுபோன்ற வீட்டு மற்றும் பண்ணை விலங்குகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான குறைந்த பொருள் செலவிலான தயாரிப்பு களைக் கண்டறிந்து உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் விலங்குகளுக் கான தீவன உற்பத்திப் பிரிவு கால்நடைகளுக்கான கலப்புத்தீவன உற்பத்தியில் இந்திய அளவில் மிகப் பெரிய ஒன்றாக இருந்துவருகிறது. இந்தப் பிரிவில் உற்பத்தி செய்யும் தீவனங்கள் பல்வேறு வகையான கால்நடை இனங்களின் ஊட்டச்சத்து தேவைகளை நன்கு புரிந்துகொண்ட பின்னர் உற்பத்தி செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு அது சிறந்த பலனைத் தருவதாக இருக்கிறது. கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி மற்றும் விற்பனையில் பல்வேறு வகை கால்நடைகளுக்கான தீவனங்களை யும் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் டன்னுக்கும் மேலான அளவிலான கால்நடைகளுக்கான தீவனங்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது.

சமையல் எண்ணெய் உற்பத்தி...

இந்தியா தன்னுடைய வளர்ந்து வரும் சமையல் எண்ணெய் தேவை யைப் பூர்த்தி செய்ய பாமாயிலைப் பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. இந்தவித எண்ணெய்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவு அடையும் நோக்கத்துடன் இந்திய அரசு பாமாயில் உற்பத்திக்கான பனை மரவகையை இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வளர்ப்பதை ஊக்குவித்து வருகிறது. இதற்காக பப்ளிக்-பிரைவேட் கூட்டணிகளையும் மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

இதைக் கருத்தில்கொண்டு சமையல் எண்ணெய் தயாரிக்க உதவும் ரக பனை மரங்களை வளர்த் தெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 61,700 ஹெக்டேருக்கும் மேலான விவசாய நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு இந்தவகை பனைக்கான தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

ஆந்திரா, சத்தீஸ்கர் கோவா, குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் இந்த வகை பனையைப் பயிரிட்டு வருகிறது. 2015-ம் ஆண்டில் இந்த நிறுவனம் மிசோரத்தில் பாமாயில் உற்பத்திக்கான உற்பத்தி வசதி ஒன்றை நிறுவியது. அந்த உற்பத்தி வசதிக்காகச் செய்யப்பட்ட முதலீடு அந்தக் காலகட்டத்தில் மிசோரத்தில் தனியாரால் செய்யப்பட்ட முதலீட்டி லேயே பெரிய அளவிலானது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பல்வேறு விதமான உற்பத்தி...

பயிர்ப் பாதுகாப்புப் பிரிவில் இந்த நிறுவனம் பல்வேறு விதமான புதுமை களைக் கொண்ட அக்ரோ கெமிக்கல் களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. வளர்ச்சி ஊக்கிகள், மண்ணைப் பதப்படுத்தும் உரவகை கள், பருத்திக்கான களைக் கொல்லிகள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

அகில இந்திய ரீதியாக 6,000-க்கும் மேலான விநியோகஸ்தர்களைக் கொண்டு செயல்பட்டுவருகிறது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இந்த அளவு அதிக எண்ணிக்கையிலான விநியோகஸ்தர் களைக் கொண்டு செயல்படுவதால், அதிக இந்திய ரீதியாகத் தன்னுடைய தயாரிப்புகளை இந்த நிறுவனத்தால் சுலபத்தில் விவசாயிகள் இடத்தில் கொண்டு சேர்க்க முடிகிறது.

2015-ம் ஆண்டில் பூஞ்சைக் கொல்லிகளை நிறுவனங்களுக்காக உற்பத்தி செய்துதரும் பிரிவில் (பி-டு-பி) செயல்பட்டுவந்த நிறுவனமான அஸ்டெக் லைஃப் சயின்ஸஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர்களின் (புரொமோட்டர்) பங்குகளைக் கையகப்படுத்தியது இந்த நிறுவனம்.

மேலும், அஸ்டெக் லைஃப் சயின்ஸஸ் நிறுவனம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்காக ஒப்பந்த ரீதியிலான உற்பத்தியைச் செய்யும் பணியையும் செய்து கொண்டிருந்தது.

தென் இந்தியாவில் பால் உற்பத்தி பிரிவில் செயல்பட்டு வந்த க்ரீம் லைன் டயரி புராடக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தைக் கையகப் படுத்தியதன் மூலம் விலங்குகளில் இருந்து கிடைக்கும் புரதத்தை உற்பத்தி செய்யும் பிரிவில் தன்னுடைய விரிவாக்கத்தைச் செய்தது இந்த நிறுவனம்.

ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் ‘ஜெர்சி’ எனும் பிராண்டில் பால், தயிர், சுவை சேர்க்கப்பட்ட தயிர் (யோகர்ட்), மற்றும் ஐஸ்க்ரீம் உள்ளிட்ட பல தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

2004-ம் ஆண்டில் பங்களாதேஷை சார்ந்த அட்வான்ஸ்டு கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து கலப்புத் தீவனம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்துவருகிறது. பங்களா தேஷைப் பொறுத்தவரை, இந்தக் கூட்டணி நிறுவனமானது எல்லா விதமான கால்நடை தீவனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களிடையே முதல் மூன்று பெரிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்த நிறுவனத்தின் கோழிக்கறி (poultry) விற்பனைத் தொழில் பிரிவான கோத்ரெஜ் டைசன் ஃபுட்ஸ், டைசன் ஃபுட்ஸ் எனும் உலக அளவில் கோழிக்கறி உற்பத்தி மற்றும் பதப்படுத்தி விற்பனை செய்தல் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்படும் தொழில் பிரிவாகும். கோத்ரெஜ் டைசன் ஃபுட்ஸ் இந்தியாவில் இந்தத் தொழில் பிரிவில் செயல்படும் இரண்டாவது பெரிய நிறுவனமாகும்.

இது தவிர, இரால்களுக்கான தீவனம், மீன்களுக்கான தீவனம், இந்த வகை மீன்களை வளர்ப்பதற்கான நீர்நிலைகளில் இருக்கும் நீர்வாழ் இனங்களைப் பராமரித்தல் போன்ற வற்றுக்கான தயாரிப்புகளையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

ரிஸ்க்குகள் என்னென்ன?

பயிர்ப் பாதுகாப்பு, பால் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியில் ஈடுபடுகிற நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப்பொருள்கள் விலை மாறுதல், புதிய தொழில் போட்டி, புதிய தொழில்நுட்பம், ஆராய்ச்சியில் தொய்வு ஏற்படும் நிலை, அரசாங்க கொள்கை முடிவுகள், பருவமழை அளவு குறைதல் போன்றவையும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டைப் பாதிக்க வாய்ப்புள்ளது எனலாம்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!