Published:Updated:

ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெட்!

ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெட்

கம்பெனி பயோடேட்டா

ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெட்

இந்த வாரம் இந்தப் பகுதியில் நாம் பார்க்கப்போகும் நிறுவனம், 1958-ம் ஆண்டில் டெல்லியில் ஆரம்பிக்கப்பட்டு, 1971-ம் ஆண்டில் ஹாவெல்ஸ் பிராண்டைக் கையகப்படுத்திய நிறுவனமான ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெட் எனும் பாஸ்ட் மூவிங் எலெக்ட்ரிக்கல் குட்ஸ்களைத் (FMEG) தயாரிக்கும் நிறுவனத்தினுடையது.

நிறுவனத்தின் தயாரிப்புகள்...

இன்றைக்கு கன்ஸ்யூமர் மற்றும் இண்டஸ்ட் ரியல் என்ற இரண்டு பெரும்பிரிவில் தன்னுடைய தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். கன்ஸ்யூமர் பிரிவில், ஃபேன்கள். லைட்டிங், மிக்சி போன்ற வீட்டு உபயோக சாதனங்கள், வாட்டர் ஹீட்டர், ஏர்கூலர், தண்ணீர் சுத்தி கரிப்பான்கள், பர்சனல் க்ரூமிங் (எலெக்ட்ரிக் ரேசர்கள் போன்றவை) ஆகும். இந்த நிறுவனம் லாயிட்ஸ் என்னும் பிராண்டில் ஏசி, ஃபிரிட்ஜ், டிஷ் வாஷர், டிவி மற்றும் வாஷிங் மெஷின்கள், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் (வீட்டுக் கூரையில் அமைத்தல், தனியாகத் திறந்தவெளியில் அமைத்தல், இன்வெர்ட்டர்கள் போன்றவை), பம்புகள் தயாரித்து விற்பனை செய்கின்றன.

இவை தவிர, பல்வேறு வகையிலான ஸ்விட்ச்சுகள், ஸ்விட்ச் கியர்கள் மற்றும் பல்வேறு வகையான மின்சார ஒயர்கள் மற்றும் கேபிள்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

இண்டஸ்ட்ரியல் பிரிவில், புரொஃபஷனல், லைட்டிங் (இன்டோர், அவுட்டோர், எல்.இ.டி, சாலைகளில் பொருத்தப்படும் மினி மாஸ்ட் தீர்வுகள் உள்ளிட்டவை), சோலார் (ஆன் க்ரிட், ஆஃப் க்ரிட் மற்றும் ஆன்கிரிட் இன்வர்ட்டர் தீர்வுகள்), ஹெவி டூட்டி ஃபேன்கள் (எக்சாஸ்ட் ஃபேன்கள் மற்றும் ஏர் சர்க்குலேட்டர்கள்), மோட்டார்கள் (க்ரேன் டூட்டி மோட்டார், ஸ்மோக் மோட்டார், ப்ரேக் மோட்டார், இன்வெர்ட்டர் டூட்டி மோட்டார் மற்றும் மின்சாரத்தைக் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டு செயல்படும் பிரீமியம் ரக மோட்டார்கள் உள்ளிட்ட தயாரிப்புகள்), கேபிள்கள் (எல்.டி பவர் கேபிள்கள், ஹெச்.டி பவர் கேபிள்கள், எல்.டி கன்ட்ரோல் கேபிள்கள், தீ விபத்துகளிலும் சேதமடையாத ஃபயர் சர்வைவல் கேபிள்கள் உள்ளிட்ட தயாரிப்புகள்), ஸ்விட்ச் கியர் மற்றும் கன்ட்ரோல் கியர்கள் (சர்க்யூட் பிரேக்கர்கள், இண்டஸ்ட்ரியல் ஸ்விட்ச்சுகள், பொதுவான பயன்பாட்டுக் கான ஸ்விட்ச் கியர்கள், மேக்னெட்டிக் கண்டெக்டர்கள், தெர்மல் ஓவர்லோட் ரிலேக்கள், ஸ்டார்ட்டர்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகள்), சீரான மின்சாரத்தைப் பெறுவதற்கான பவர் குவாலிட்டிக்கான தீர்வுகள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. ஹேவெல்ஸ், லாயிட்ஸ், க்ராப் ட்ரீ, ஆர்.இ.ஓ உள்ளிட்ட பல பிராண்டுகளில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெட்!

நிறுவனத்தின் வரலாறு...

1951-ம் ஆண்டில் ஒரு டிரேடிங் நிறுவனமாக ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம், 1971-ம் ஆண்டில் ஹேவெல்ஸ் பிராண்டைக் கையகப்படுத்தியது. 1976-ம் ஆண்டில் டெல்லியில் உள்ள கீர்த்தி நகர் எனும் இடத்தில் ரீ-வயரபிள் ஸ்விட்ச்சுகள் மற்றும் சேஞ்ச் ஓவர் ஸ்விட்ச்சுகளை தயாரிப்பதற்கான உற்பத்தி மையத்தை நிறுவியது.

1979-ம் ஆண்டில் ஹெச்.பி.சி ப்யூஸ்களை உற்பத்தி செய்யும் மையத்தை டெல்லியில் உள்ள பட்லி எனும் இடத்தில் நிறுவியது. 1980-ம் ஆண்டில் உயர்தரம் கொண்ட எலெக்ட்ரிசிட்டி மீட்டர்களை உற்பத்தி செய்யும் மையத்தை டெல்லியில் உள்ள திலக் நகர் எனும் இடத்தில் நிறுவியது. 1983-ம் ஆண்டில் டவர்ஸ் அண்ட் டிரான்ஸ்பார்மர்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. 1987-ம் ஆண்டில் ஜெர்மானிய நிறுவனமான ஜியர் எனும் நிறுவனத்துடன் இணைந்து எம்.சி.பி-க்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

1997-ம் ஆண்டில் நொய்டாவில் செயல்பட்டு வந்த எலெக்ட்ரிக் கண்ட்ரோல்ஸ் & ஸ்விட்ச் போர்ட்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்திய இந்த நிறுவனம், 1998-ம் ஆண்டில் ஜெர்மானிய நிறுவனமான டி.இசட்.ஜி என்னும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, பெராரிஸ் ஹை எண்ட் மீட்டர்களை அறிமுகப்படுத்தியது.

2002-ம் ஆண்டில் ஸ்டாண்டர்டு எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் தன்னுடைய 100% துணை நிறுவனமாக மாற்றியமைத்தது இந்த நிறுவனம். 2003-ம் ஆண்டில் ஃபேன்கள், சி.எஃப்.எல் (Compact Fluorescent Lamps) மற்றும் லைட்டிங் உபகரணங்களை விற்பனைக்குத் தன்னுடைய பிராண்டில் அறிமுகப்படுத்தியது.

2004-ம் ஆண்டில் இமாசலப் பிரதேசத்தில் உள்ள பட்டி எனும் இடத்தில் வீடுகளில் பயன்படுத்துவதற்கான ஸ்விட்ச் கியர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. அதே ஆண்டில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சீலிங் ஃபேன்கள் உற்பத்தி மையம் ஒன்றைத் தொடங்கியது.

மேலும், ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த உற்பத்தி மையத்தில் சி.எஃப்.எல் (Compact Fluorescent Lamps) பல்புகளை உற்பத்தி செய்யும் மையம் ஒன்றை நிறுவியது. மேலும், லண்டனில் தனக்கென ஒரு மார்க்கெட்டிங் அலுவல கத்தை (ஹாவெல்ஸ் யு.கே லிமிடெட் வாயிலாக) நிறுவியதும் இந்த ஆண்டில்தான்.

2016-ம் ஆண்டில் சூரிய ஒளியால் மின் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் தயாரிப்பில் கால்பதித்தது இந்த நிறுவனம். 2017-ம் ஆண்டில் பெர்சனல் குரூமிங் பிரிவை ஆரம்பித்த இந்த நிறுவனம், அதே ஆண்டில் லாயிட் எலெக்ட்ரிக் அண்ட் இன்ஜினீயரிங் லிமிடெட் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் டியூரபிள் பிரிவைக் கையகப் படுத்தியது. இதன் மூலம் ஏர்கண்டி ஷனர்கள், எல்.இ.டி டிவிக்கள் மற்றும் வாஷிங் மெஷின்கள் வர்த்தகத்திலும் கால்பதித்தது.

2018-ம் ஆண்டில் ராஜஸ்தானில் உள்ள கிலோத் எனும் இடத்தில் ஏ.சி மெஷின்கள் உற்பத்தி மையம் ஒன்றை நிறுவியது இந்த நிறுவனம். இந்த உற்பத்தி மையத்தில் ஆண்டொன்றுக்கு ஆறு லட்சம் ஏ.சி மெஷின்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையம் தற்சமயம் இருக்கிறது. இந்த நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையத்தை ஒன்பது லட்சம் என்ற எண்ணிக் கை வரையில் விரிவாக்கம் செய்யும் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்வதற்காக 1,562 நகரங்களில் நேரடியான (2020-21 நிதியாண்டின் இறுதி நிலவரப்படி) விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். அறுபதுக்கும் மேற்பட்ட நாடு களில் வர்த்தகம், 14,270 டீலர்கள், 39 கிளை அலுவலகங்கள், 14 உற்பத்தி மையங்கள் என ஒரு முன்னணி பாஸ்ட் மூவிங் எலெக்ட்ரிக்கல் குட்ஸ் நிறுவன மாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெட்!
ஹாவெல்ஸ் இந்தியா லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

பாஸ்ட் மூவிங் எலெக்ட்ரிக்கல் குட்ஸ் துறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கே உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. பொது வாக, எலெக்ட்ரிக்கல் குட்ஸ் (வீடு மற்றும் இண்டஸ்ட்ரியல்) மற்றும் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் பொருள்கள் விற்பனை பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே அதிகரிக்கும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லாதுபோனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

மூலப்பொருள்கள் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், நவீன தொழில் நுட்பம், வாடிக்கை யாளர்களின் ரசனை மாறுதல் மற்றும் தொழில் ரீதியாக உருவாக வாய்ப்புள்ள கடுமையான போட்டி போன்ற அனைத்தும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!