Published:Updated:

ஹிரன்பா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

ஹிரன்பா இண்டஸ்ட்ரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹிரன்பா இண்டஸ்ட்ரீஸ்

கம்பெனி பயோடேட்டா

ஹிரன்பா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் எனும் முன்னணி வேளாண் ரசாயனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பயோடேட்டாவைத் தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம்.

நிறுவனத்தின் வரலாறு...

1996-ம் ஆண்டில் அதிக விளைபொருள்களை உற்பத்தி செய்யும் திறனை விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். குஜராத்தில் உள்ள வாபி எனும் இடத்தில் உற்பத்தி வசதியையும், மும்பையில் தலைமையகத்தையும் கொண்டு செயல்பட்டுவருகிறது. வேதிப்பொருள்களில் ஒரு பிரிவான சிந்தெட்டிக் பைரெத்ராய்ட்ஸ் மற்றும் அது சார்ந்த இடைப்பொருள்களை உற்பத்தி செய்து இந்தியா மற்றும் அயல் நாடுகளில் விற்பனை செய்துவருகிறது.

பைரெத்ராய்ட்ஸ் எனும் வேதிப்பொருள் ஒருவகை சாமந்திப்பூவிலிருந்து பெறப்படும் வேதிப் பொருளாகும். இந்த வேதிப்பொருள் தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையும் மண்ணில் பெரிய அளவிலான ஊடுருவும் தன்மை கொண்டிராமலும் இருக்கிறது. இதனால் இந்த வேதிப்பொருள்கள் தோட்டங்கள், வீடுகள், உள் அரங்குகள், உணவகங்கள், மருத்துவமனை மற்றும் பள்ளிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படுகிறது. மேலும், இந்த வகை வேதிப்பொருள்கள் பால்தரும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாதவகையாக இருப்பதால் இவை கால்நடைகளுக்கான மருந்து உற்பத்தியிலும் பெருமளவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கு பைரெத்ராய்ட்ஸ் வேதிப்பொருள்கள் செறிவுபடுத்தப்பட்ட குழம்பு வடிவத் திலும், துகள்கள் வடிவத்திலும், சிறு மணித் துகள்களாகவும் மற்றும் ஸ்பெரே வடிவத்திலும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.

மேலும், பைரெத்ராய்ட்ஸ் பூச்சிகள், உண்ணிகள், கரையான்கள் மற்றும் மூட்டைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது. பைரெத்ராய்ட்ஸ் சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளைவிட விலை மலிவான வேதிப்பொருளாகும். இவை மக்கும் தன்மை கொண்டவையாக இருப்பதாலும் ஏற்கெனவே கூறியபடி பாலூட்டிகள் மற்றும் மண்ணுக்கு பெரிய அளவிலான விஷ ரீதியான பாதிப்பை ஏற்படுத்தாதவையாக இருப்பதும் இதுபோன்ற அளவிலான உபயோகத்துக்கு பெருமளவில் விரும்பி வாங்கி உபயோகிக்கப் படும் ஒரு வேதிப்பொருளாக இருக்கிறது.

இருப்பினும் இந்தியாவில் உபயோகிக்கப் படும் போது ஒளிச்சேர்க்கையால் வருகிற அதிக அளவிலான வீரியமிழப்பு என்பது இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. இது தவிர, பூச்சிகளின் மத்தியில் உருவாகும் மரபணுமாற்றமும்கூட பைரெத்ராய்ட்ஸ் கலந்த மருந்துகளைத் தாக்குப்பிடித்துச் செயல்படும் அளவுக்கு இருப்பதால் அதுவும் ஒரு சவாலாகவே இதுபோன்ற நிறுவனங்கள் பார்க்கின்றன.

இந்தியாவில் பைரெத்ராய்ட்ஸுக்கான ஒட்டுமொத்த சந்தையின் அளவு 2014-19-ம் ஆண்டுகளில் 7.4% (சிஏஜிஆர்) அளவிலான வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இதே அளவிலான வளர்ச்சி தொடரும் என்றும் இந்தத்துறை எதிர்பார்க்கிறது. அமெரிக்க டாலர் அளவீட்டில் 2019-ம் ஆண்டில் பைத்ராய்ட்ஸ்களுக்கான சந்தையின் அளவு 110 மில்லியன் என்பதாக இருந்தது. இந்த நிறுவனம் செயல்பட்டுவரும் மற்றொரு பிரிவான அக்ரோகெமிக்கல்கள் உலகளாவிய சந்தை வர்த்தகத்தின் மதிப்பு 2019-ம் ஆண்டு நிலவரப்படி 65.59 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது. இந்த சந்தை மதிப்பு 2014-19 ஆண்டுகளில் 0.87% (சிஏஜிஆர்) என்ற அளவில் வளர்ச்சியைச் சந்தித்து இருந்தது.

ஹிரன்பா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

நிறுவனத்தின் வளர்ச்சி...

உலக மக்கள்தொகை மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் உணவுவகைகள் உற்பத்தி என்ற அடிப்படையில் மதிப்பிட்டால் அக்ரோ கெமிக்கல்களின் தேவை தொடர்ந்து வளர்ச்சியடையவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அக்ரோகெமிக்கல்களின் இந்திய ஒட்டுமொத்த சந்தையின் வர்த்தக மதிப்பைக் கணக்கீடு செய்து பார்த்தால் 2019-ம் ஆண்டு அளவீட்டில் 2,760 மில்லியன் டாலர் என்ற அளவீட்டில் இருந்தது. 2014-19 ஆண்டுகளில் இது 6.5 சதவிகிதம் (சிஏஜிஆர்) என்ற அளவில் வளர்ச்சி யடைந்திருந்தது.

2019-ம் ஆண்டு நிலவரப்படி அக்ரோகெமிக்கல்ஸ் துறையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் 54.1 சதவிகித அளவும், களைக்கொல்லி மருந்துகள் 23.3% அளவும், பூஞ்சைக்கொல்லி மருந்துகள் 18.7% அளவும் ஏனைய மருந்துகள் 3.9 சதவிகித அளவு பங்களிப்பையும் கொண்டிருந்தன.

உபயோகம் என்கிற ரீதியாகப்பார்த்தால் ஒரு ஹெக்டேர் சாகுபடி செய்யப்படும் நிலத்துக்குத் தாய்வானில் அதிகபட்சமாக 13.4 கிலோவாகவும், சீனாவில் 13.1 கிலோவாகவும், தென் கொரியாவில் 12.5 கிலோவாகவும், ஜப்பானில் 11.9 கிலோவாகவும், பிரான்ஸில் 5.7 கிலோவாகவும், யுனைடெட் கிங்டமில் 5.5 கிலோவாகவும், அமெரிக்காவில் 5.1 கிலோவாகவும் இந்தியாவில் 0.6 கிலோவாகவும் இருக்கிறது. இதுவே இந்தத் துறையில் இன்னமும் வர்த்தகத் துக்கான வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஹிரன்பா நிறுவனம் 2019-ம் ஆண்டில் இந்திய சந்தையில் 19.5 சதவிகித சந்தைப்பங்களிப்புடன் இயங்கிவந்தது. சைபர்மெத்ரின், ஆல்பா சைபர் மெத்ரின், டெல்டா மெத்ரின், பெர்மித்தரின், லாம்டா சைக்ளோத்ரின் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் ஒரு முன்னணி உற்பத்தியாளராக இன்றைக்கு வளர்ச்சியடைந் துள்ளது இந்த நிறுவனம். விற்பனை பிரிவில் டெக்னிக் கல்ஸ் உள்நாட்டு நிறுவனப் பிரிவு, டெக்னிக்கல்ஸ் ஏற்றுமதிப் பிரிவு, பிராண்டட் பார்முலேஷன் பிரிவு, பார்முலேஷன் ஏற்றுமதிப் பிரிவு மற்றும் பொது சுகாதாரத் துக்கான தயாரிப்புகள் பிரிவு (அரசாங்க ஒப்பந்தப் புள்ளிகள் வாயிலாக) என்ற ஐந்து பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்கள்...

சீரான வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் வண்ணம் இந்தியா மற்றும் அயல்நாடுகளில் நல்லதொரு நெட்வொர்க்கைக் கொண்டு இயங்கி வருகிறது. பதினாறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 21 டெப்போக்களைக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் 8,600 டீலர்கள் வாயிலாக வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறது. இந்தியாவில் அதி நவீன அக்ரோ கெமிக்கல் தீர்வுகளை வழங்கி வரும் நிறுவனம் தனியார் மற்றும் அரசாங்கத்துக்குத் தேவையான (பொதுமக்கள் சுகாதாரத்துக்கான தேவை களுக்கானது) பொருள்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தன்வசத்தே கொண்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு களில் 50 சதவிகித அளவிலான தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப் பட்டு வருகின்றன (2020-21 நிதியாண்டு நிலவரப்படி). நிறுவன ரீதியான இந்திய வாடிக்கை யாளர்கள் என்று பார்த்தால் ராலீஸ், பிஐ, இன்செக்டிசைட்ஸ் இந்தியா, ஷார்தா க்ராப்கெம், பி.ஐ, மேக்மணி ஆர்கானிக்ஸ், யுபிஎல் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங் கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கை நிறுவனங்களாக உள்ளன.

பிராண்டட் பார்முலேஷன் பிரிவில், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் ஜெயம், ப்ராக்ரெஸ் ப்ளஸ், பராம், சைப்ராப்ளஸ், டைகென், மந்த்ரா, அஸ்ட்ரான், சிங்னர், ப்ராம்ஃப்ட், சிலிகான் ப்ளஸ், டெம்ப்பர், ரேட் கில் உள்ளிட்ட பல பிராண்டுகளின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் ஆண்டொன்றுக்கு 14,024 மில்லியன் டன்கள் அளவிலான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிர்மாணிக்கப்பட்ட வசதியைக் கொண்டுள்ளது.

ஹிரன்பா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

அக்ரோ கெமிக்கல்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்துக்குமே உண்டான ரிஸ்க்குகள் இந்த நிறுவனத்துக்கும் பொருந்தும். கெமிக்கல் துறை என்பதால் ஆராய்ச்சிகளும் அதில் வெற்றியும் தொடர்ந்து பெற்றுக்கொண்டேயிருக்க வேண்டியது கட்டாயமாக இருக்கும். இதுவும் ஒரு வகை ரிஸ்க்கேயாகும்.

போட்டி நிறுவனங்கள் ஆராய்ச்சியில் பெறும் வெற்றி, மூலப்பொருள்களின் விலை உயர்வு, தொழில்நுட்பங்களில் வரக்கூடிய அதி நவீன மாறுதல்கள், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளேயாகும்.

இது தவிர, விவசாயம் சார்ந்த துறையாக இருப்பதால் பருவநிலை மாறுதல், மழைப்பொழிவு எதிர்பார்த்த அளவு இல்லாது போதல் போன்றவையும் இந்தநிறுவனத்தின் செயல்பாட்டை ஓரளவு பாதிக்கவே செய்யும்.

ஹிரன்பா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!