Published:Updated:

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்! (BSE CODE: 539437, NSE CODE: IDFCFIRSTB)

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க்

கம்பெனி பயோடேட்டா

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்! (BSE CODE: 539437, NSE CODE: IDFCFIRSTB)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க்

இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் பயோடேட்டா ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்.

நிறுவனத்தின் வளர்ச்சி...

1997-ம் ஆண்டில் தனியார் உள்கட்டடமைப்பு வளர்ச்சிக் கான நிதி வழங்குதல் மற்றும் நிதி திரட்டுதல் என்ற நோக்கத் துக்காக இந்திய அரசின் பங்களிப்புடன் ஐ.டி.எஃப்.சி லிமிடெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

2014-ம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியானது ஐ.டி.எஃப்.சி லிமிடெட் நிறுவனத்துக்கு வங்கி ஒன்றை ஆரம்பிக்கும் அனுமதியை அளித்தது. 2015-ம் ஆண்டில் ஐ.டி.எஃப்.சி நிறுவனத்தின் உள்கட்டமைப்புக்கு கடன் வழங்கும் தொழிலானது தனியாகப் பிரிக்கப்பட்டு (Demerger), ஐ.டி.எஃப்.சி வங்கி என்கிற புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டது.

2015-ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.டி.எஃப்.சி வங்கியானது அடுத்த மூன்று ஆண்டு கால கட்டத்தில் வலுவான கட்டமைப்பை அமைத்துக் கொள்ளவும் சிறப்பான அளவில் வங்கித் தொழிலை செய்வதற்குத் தேவையான கம்ப்யூட்டர் கட்டமைப்பு களை மேம்படுத்திக் கொள்ளவும் செய்தது. வங்கித் துறையில் முக்கிய பிரிவான டிரெஷரி நிர்வாகத்தைச் சிறப்பாகச் செய்யும் திறனைக் கொண்டிருக்கும் இந்த வங்கி தனக்கும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கும் தேவையான வர்த்தகத்தை இந்த வசதி மூலம் செய்து கொள்கிறது.

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்! (BSE CODE: 539437, NSE CODE: IDFCFIRSTB)

மாறிவரும் இந்திய சூழ்நிலைக்கு ஏற்பவும், கார்ப்பரேட் நிறுவனங் களுக்கான கடன்களை வழங்குவதில் குறைந்து கொண்டே வருகிற லாப விகிதத்தின் காரணமாகவும் ரீடெயில் கடன்கள் மற்றும் டெபாசிட்டுகளை அதிகப் படுத்தும் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தது ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி. தன்னுடைய தொழிலை ரீடெயில் பிரிவுக்குள் பரவலாக்கியதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் சதவிகிதத்தை அதிகரிக்கும் முயற்சியை இந்த வங்கி செய்ய ஆரம்பித்தது.

ரீடெயில் கடன் வழங்குதல் மற்றும் டெபாசிட் சேகரித்தல் துறையில் வேகமான வளர்ச்சியைச் சந்திக்க பெரியதொரு நெட் வொர்க்கை உருவாக்க வேண்டியிருக்கும். அதற்கு நீண்ட நாள்களாகும் என்பதால், ஏற்கெனவே கடன் வழங்கும் துறையில் செயல்படும் நிறுவனங்களைக் கையகப்படுத்த முயன்றது.

இணைந்த கேப்பிடல் ஃபர்ஸ்ட்...

இந்த அடிப்படையில் கேப்பிடல் ஃபர்ஸ்ட் லிமிடெட் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. இந்த நிறுவனத்தின் நிறுவனரான வைத்தியநாதன் தான், தற்போதைய ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கியின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ ஆவார்.

2010-12 ஆண்டுகளில் சிறிய அளவில் ரியல் எஸ்டேட் ஃபைனான்சிங் துறையில் இயங்கிவந்த என்.பி.எஃப்.சி ஒன்றின் கணிசமான அளவிலான பங்குகளை வாங்கினார். அதன்பின்னால் அந்த நிறுவனம் செயல்பட்டு வந்த தொழில்களான புரோக்கிங், வெல்த் மற்றும் ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் பிரிவுகளில் வர்த்தகத்தை முழுமையாக நிறுத்திவிட்டு, பொதுவாக வங்கிகள் விருப்பத்துடன் கடன் வழங்க முன்வராத சில்லறைக் கடன்கள் மற்றும் குறுந் தொழில்முனைவோர்களுக்கான கடன்கள் வழங்கு வதில் அதிநவீன டெக்னாலஜியை உபயோகப்படுத்தி முனைப்பாக செயல்பட ஆரம்பித்தார்.

ஒரே வருடத்தில் ரூ.770 கோடி அளவிலான முன்மாதிரி லோன் புக்கை உருவாக்கி, அதை ஒரு ‘புரூஃப் ஆஃப் கான்செப்ட்’-ஆக ‘லிவரேஜ்ட் பை-அவுட்டு’க்காக உலக அளவில் செயல்படும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்முன் சமர்ப்பித்தார்.

2012-ம் ஆண்டில் மிகப் பெரிய ‘லிவரேஜ்ட் பை-அவுட்’ ஒன்றை முடித்து ரூ.100 கோடி அளவிலான ஈக்விட்டி முதலீட்டைப் பெற்று கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தைப் புதிய நிறுவனமாக புதிய ஷேர் ஹோல்டர்கள், புதிய பிசினஸ், புதிய போர்டு மெம்பர்களுடன் உருவாக்கினார்.

கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனம் 2009 மற்றும் 2010 நிதியாண்டுகளில் முறையே ரூ.30 கோடி மற்றும் ரூ.32 கோடி நஷ்டத்துடன் செயல்பட்டு வந்தது. இந்த நிலையை மாற்றி 2018-ம் ஆண்டில் வரிக்குப் பிந்தைய லாபத்தை ரூ.320 கோடி என்ற அளவில் கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் நிறுவனம் அடைந்தது.

இந்த நிறுவனம் வழங்கிய கடன்கள் செப்டம்பர் 2018 நிலவரப்படி, ரூ.29,625 கோடி என்ற அளவுக்கு உயர்ந்திருந்தது (மொத்தம் வழங்கிய கடன்தொகை). இந்த வளர்ச்சியானது ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 56% கூட்டு வளர்ச்சி அடைந்தது.

மார்ச் 2012-ல் ரூ.780 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஜனவரி 2018-ல் ரூ.8,882 கோடியாக இருந்தது. இந்த சூழ்நிலையில் வங்கிக்கான அனுமதியைப் பெறும் எண்ணத்தை இந்த நிறுவனம் கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தான் ஐ.டி.எஃப்.சி வங்கியானது கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தை கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் முன் வைத்தது. இதன்படி, இணைக்கப்பட்ட நிறுவனத்தின் (ஐ.டி.எஃப்.சி கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் வங்கி) மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ-வாக கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் வைத்தியநாதன் பதவி ஏற்றார்.

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்! (BSE CODE: 539437, NSE CODE: IDFCFIRSTB)

கடன் சேவைகள்...

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கியானது பெரு நிறுவனங்களில் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கென வீட்டு வசதிக் கடனை ‘ப்ரைம் ஹோம் லோன்ஸ்’ என்ற திட்டத்தின்கீழ் வழங்கி வருகிறது.

மேலும், அஃபர்டபிள் ஹோம் லோன், சொத்துகளுக்கு ஈடான கடன், புதிய மற்றும் பழைய கார்கள் வாங்க கடன், வியாபாரத்துக்கான கடன், பர்சனல் லோன், கன்ஸ்யூமர் டியூரபிள் கடன், இரு சக்கர வாகனங்களுக்கான கடன், மைக்ரோ என்டர்பிரைஸ் கடன், பெண்களுக்கென்று பிரத்யேகமாக வழங்கப்படும் ஜே.எல்.ஜி லோன் (சக்தி ஷக்தி லோன்) போன்ற கடன்களை வழங்கி வருகிறது.

டிஜிட்டல் வங்கிச் சேவை களை வழங்குவதற்கென்று பிரத்யேகமான ஆப்பை செயல் படுத்தியுள்ளது இந்த நிறுவனம். கரன்ட் அக்கவுன்ட் சேவைகளில் qப்ரீடம் கரன்ட் அக்கவுன்ட், மெர்ச்சன்ட் மல்ட்டிப்ளையர் அக்கவுன்ட், ஸ்டார்ட்அப்களுக் கான ஃபர்ஸ்ட் விங் கணக்குகள், டாக்டர்கள் மற்றும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் போன்றவர் களுக்கான டைனமிக் புரஃபஷனல் எனும் கரன்ட் அக்கவுன்ட் வசதி போன்றவற்றை வழங்கி வருகிறது இந்த வங்கி.

சேமிப்புக் கணக்குகளில் சராசரியாக ரூ.25,000/ரூ.10,000 பேலன்ஸைக் கொண்டிருக்கும் சேமிப்புக் கணக்குகள், சீனியர் சிட்டிசன்களுக்கான சேமிப்புக் கணக்குகள், பெண்களுக்கென்றே பிரத்யேகமான ஃபர்ஸ்ட் பவர் சேமிப்புக் கணக்குகள், ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு களுடன் கூடிய சிறப்பு சேமிப்புக் கணக்குகள், சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்குகள், ராணுவத் தினருக்கான சம்பளக் கணக்குகள், சம்பளக் கணக்குகள் போன்ற வசதிகளை வழங்கி வருகிறது.

வாடிக்கையாளர்களின் தன்மை மற்றும் தேவைக்கேற்ப வெல்த் மேனேஜ்மென்ட் சேவைகளையும் வழங்கி வருகிறது இந்த வங்கி. வெல்த் மேனேஜ் மென்ட்டுக்கென பிரத்யேகமாக ஒரு ஆப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது இந்த வங்கி.

2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் கிரெடிட் கார்டுகளை அறிமுகப் படுத்தியது ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி. மார்ச் 2022 நிலவரப்படி, ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வழங்கி உள்ளது இந்த வங்கி. நிறுவனங்களுக் கான கேஷ் மேனேஜ்மென்ட் தீர்வுகளையும் இந்த வங்கி வழங்கி வருகிறது.

மார்ச் 31, 2022 நிலவரப்படி, இந்த வங்கியானது 641 கிளை களையும், 719 ஏ.டி.எம்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

இந்த வங்கியின் டிஜிட்டல் நடவடிக்கைகள் என்று பார்த்தால், இந்த வங்கியில் நடைபெறும் ரீடெயில் பரிவர்த்தனைகளில் 91.76% டிஜிட்டல் வடிவத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டின் இறுதியில் 27,804 பணியாளர்களைக் கொண்டிருந்தது ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி. மார்ச் 31, 2022 நிலவரப்படி, 8.3 மில்லியன் ஃபாஸ்ட்டேக்குகளை வழங்கியுள்ளது இந்த வங்கி.

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்! (BSE CODE: 539437, NSE CODE: IDFCFIRSTB)
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்! (BSE CODE: 539437, NSE CODE: IDFCFIRSTB)

ரிஸ்க்குகள் என்னென்ன?

வங்கித் துறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த வங்கிக்கும் உண்டு. வங்கித் துறைக்கே உரித்தான வாராக் கடன்களை நிர்வகிப்பதில் தொடர்ந்து திறமையுடன் செயல்பட வேண்டியிருப்பது ஒரு ரிஸ்க்காகவே கருதப்படவேண்டும்.

மேலும், வங்கித் துறையானது பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே செயல்பட்டுவரும் துறை என்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாமல் போனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கும். ஏனைய ரிஸ்க்குகளான போட்டியாளர்கள் தரக்கூடிய கடுமையான போட்டி, வட்டிவிகித போக்குகள் போன்றவையும் இந்த வங்கிக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.