Published:Updated:

இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ் லிமிடெட்! (BSE CODE: 543311, NSE SYMBOL: IPL)

இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ்

கம்பெனி பயோடேட்டா

இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ் லிமிடெட்! (BSE CODE: 543311, NSE SYMBOL: IPL)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ்

இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ் லிமிடெட் எனும் கெமிக்கல்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் குறித்த தகவல்களைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

நிறுவனத்தின் தொழில்...

1984-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் உலக அளவில் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாகும். மேலும், இது கெமிக்கல்கள் தயாரிப்பு துறையில் வேகமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் நிறுவனம்.

அக்ரோ கெமிக்கல்களில் டெக்னிக்கல்கள் மற்றும் பார்முலேஷன்கள், பார்மா துறைக்குத் தேவைப்படும் ஆக்டிவ் பார்மா உள்ளீட்டுப் பொருள்களை உற்பத்தி செய்து தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளுக்கான டெக்னிக்கல்கள் உற்பத்தியில் அகில உலக ரீதியாக ஐந்து முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும், இந்தியாவில் செயல்படும் ஒரே ஒரு நிறுவனமாகவும் இருக்கிறது இந்த நிறுவனம்.

மதிப்புக்கூட்டப்பட்ட, தரமான மற்றும் பல்வேறு வகைப்பட்ட கெமிக்கல்களை உற்பத்தி செய்து வழங்குவதால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று விளங்குகிறது இந்த நிறுவனம்.

2020-21-ம் நிதியாண்டில் ரூ.6,400 மில்லியன் என்ற அளவிலான விற்றுவரவைக் கொண்டிருந்த இந்த நிறுவனம், அக்ரோகெமிக்கல்கள் மற்றும் ஏ.பி.ஐ-கள் உற்பத்தியில் தனக்குத் தேவையான நடைமுறைகள் மற்றும் டெக்னாலஜிகள் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்ய தனியான ஆராய்ச்சி மையத்தையும் தன்வசத்தே கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்திடம் உள்ள இரு ஆராய்ச்சி மையங்கள் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவை.

இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ் லிமிடெட்! (BSE CODE: 543311, NSE SYMBOL: IPL)

உள்நாட்டிலேயே தனக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்துகொள்ளும் நடைமுறை யைப் பின்பற்றுவதால், மூலப்பொருள்கள் விலை ஏற்ற/ இறக்கத்திலிருந்து தன்னை காத்துக்கொள்ளவும், தொடர்ந்து உற்பத்திக்குத்தேவையான மூலப் பொருள்கள் தங்குதடை ஏதுமின்றி கிடைப்பதற்கும் வழிவகைகளைச் செய்துகொண்டுள்ளது இந்த நிறுவனம்.

2021-22-ம் நிதியாண்டின் இறுதியில் டெக்னிக்கல்கள் உற்பத்தியில் ஆண்டொன்றுக்கு 21,500 மெட்ரிக் டன் அளவிலான உற்பத்தி மையத்தைக்கொண்டும், பார்முலேஷன்கள் உற்பத்தியில் கிட்டத் தட்ட 6,500 மெட்ரிக் டன் அளவிலான உற்பத்தி மையத்தைக் கொண்டும், 680-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களைக்கொண்டும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ் லிமிடெட்! (BSE CODE: 543311, NSE SYMBOL: IPL)

நிறுவனத்தின் சிறப்புகள்...

இந்த நிறுவனம் செயல்படும் தொழில் பிரிவுகள் ரீதியாகப் பார்த்தால், டெக்னிக்கல்கள் (களைக்கொல்லி, பூஞ்சைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இடைநிலை வேதிப்பொருள்கள் போன்றவற்றுக்கானவை), பார்முலேஷன்கள் (பூச்சிக் கொல்லிகள், பூஞ்சைக்கொல்லிகள், களைக் கொல்லிகள், பயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்தும் வேதிப்பொருள்கள் போன்றவை) மற்றும் ஏ.பி.ஐ-கள் (பூஞ்சைத் தொற்றுக்கான மருந்துகள் மற்றும் சிரங்குக்கான மருந்துகள்) என்ற மூன்று பெரும் பிரிவுகளில் செயல்பட்டுவருகிறது இந்த நிறுவனம்.

இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ் நிறுவனம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தீவா ரோடு மற்றும் சாண்டிலா எனும் இரண்டு இடங்களில் தன்னுடைய உற்பத்தி மையத்தைக் கொண்டு இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்களில் உபயோகிக்கப்படும் தொழில் நுட்பமானது இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையங்களில் சொந்தமாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.

சந்தையில் இருக்கும் தேவைச் சூழல், போட்டி மற்றும் தொடர்ந்து உற்பத்தி செய்யும் நிலைத் தன்மைக்கான சாத்தியக்கூறுகள் போன்றவற்றை அடித்தளமாகக்கொண்டு இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப் படுவது ஒரு தனிச்சிறப்பான விஷயமாகும்.

தன்னுடைய தயாரிப்பு களை அகில இந்திய ரீதியாக 20 விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்துவருகிறது. இந்த விற்பனை மையங்கள் அனைத்தும் 15 மாநிலங்களில் உள்ள வேர் ஹவுஸ்களுடன் இணைக்கப் பட்டுள்ளன. தவிர, இந்த நிறுவனம் அகில இந்திய ரீதியாக 20 நேரடியான கிளைகளைக் கொண்டுள்ளது. 18 வேர்ஹவுஸ் கள், 20 சேல்ஸ் டெப்போக்கள் மற்றும் 4,712 டீலர்கள் என ஸ்திரமான தொரு நெட்வொர்க் மூலமாகத் தன்னுடைய தயாரிப்பு களை வாடிக்கையாளர் களிடம் கொண்டு போய் சேர்க்கிறது இந்த நிறுவனம்.

உலக அளவில் நாற்பதுக் கும் மேற்பட்ட நாடுகளுக்கு தன்னுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது இந்த நிறுவனம். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பிசினஸ் வளர்ச்சிக்கான குழுவையும் கொண்டும் இயங்கிவரு கிறது.

இந்த நிறுவனத்தின் புராஜெக்ட், புரொடக்‌ஷன் மற்றும் ஆராய்ச்சி மையங் களில் பணிபுரியும் பணி யாளர்கள் சிறந்த தொழில் நுட்ப அறிவைக் கொண் டிருப்பது குறிப்பிடத்தக்க தொரு விஷயமாகும். சின்ஜென்ட்டா, யு.பி.எல், அசென்கா, கான்க்வெஸ்ட், சாரதா க்ராப்கெம், ஸ்டோட்ராஸ் உள்ளிட்ட பல முக்கிய நிறுவன ரீதியான வாடிக்கையாளர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த நிறுவனம்.

எதிர்காலத் தேவைக்கான விரிவாக்கங்களை அவ்வப்போது செய்துவருகிறது இந்த நிறுவனம். உலக அளவில் பல்வேறு நிறுவன ரீதியான வாடிக்கையாளர்களும் வெறுமனே சீனாவைச் சார்ந்த நிறுவனங்களை மட்டுமே முழுமை யாக நம்பியிராமல், மற்றொரு நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தையும் தங்களுடைய சப்ளையராக இணைத்துக்கொள்ளும் கொள்கையை வகுத்திருப்பது இந்த நிறுவனத்துக்கான எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

மேலும், பல்வேறு புதிய தயாரிப்புகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் பொருள்களின் பட்டியலில் இந்த நிறுவனம் சேர்த்துக்கொண்டிருப் பதும் வியாபாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு ஒரு காரணியாக இருக்க வாய்ப்புள்ளது.

பின்னோக்கிய ஒருங்கிணைப்பை செய்து வருவதால், மூலப்பொருள் களுக்காக இறக்குமதியைச் சார்ந் திருப்பது கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் வளர்ந்துவரும் அக்ரோ கெமிக்கல்கள் மற்றும் விவசாயம் சார்ந்த கெமிக்கல்களின் தேவையும் இந்த நிறுவனத்துக்கான வியாபார வாய்ப்புகளாகும்.

இந்தியா பெஸ்ட்டிசைட்ஸ் லிமிடெட்! (BSE CODE: 543311, NSE SYMBOL: IPL)

ரிஸ்க்குகள் என்னென்ன?

கெமிக்கல்கள் மற்றும் மருந்து உற்பத்தித் துறையில் இயங்கிவரும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. கெமிக்கல்கள் உற்பத்தி என்பது பல்வேறு அரசாங்க நடைமுறைகள் மற்றும் ஆணையங்களிடம் அனுமதி பெற்று நடைபெறுகிற ஒரு தொழிலாகும். எனவே, அரசின் கொள்கை முடிவுகளில் வரும் மாறுதல்கள், சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கைகளில் வரும் மாறுதல்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கு உரித்தான ரிஸ்க்குகளே ஆகும்.

தொழில்நுட்பத்தில் வருகிற மாறுதல்கள், போட்டியாளர்கள் ஆராய்ச்சி மூலம் பெறுகிற வெற்றி, இந்த நிறுவனம் தன்னுடைய ஆராய்ச்சியில் பெறத் தவறும் முன்னேற்றம், மூலப்பொருள்களின் விலை உயர்வு, தேவையான அளவு மூலப்பொருள்கள் தேவையான காலகட்டத்தில் கிடைக்காது போகுதல், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!