Published:Updated:

ஜூபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ் லிமிடெட்!

ஜூபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜூபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ்

கம்பெனி பயோடேட்டா

ஜூபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
ஜூபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜூபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ்

ஜூபிலன்ட் பார்தியா குழுமத்தின் ஓர் அங்கமான ஜூபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனத்தைப் பற்றித்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

சுவை மாறாத உணவுகள்...

டோமினோஸ் பீட்ஸா, டன்கின் டோனட்ஸ் மற்றும் போப்பியீஸ் (Popeyes) போன்ற பதிவு பெற்ற பிராண்டுகளுக்கான மாஸ்டர் ஃப்ரான் சைஸாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஹாங்ஸ் கிச்சன் எனும் சொந்த பிராண்டில் சீன உணவுகளை வழங்கும் உணவகங்களை நிறுவியுள்ளது. மேலும், ‘செஃப்பாஸ்’ எனும் பிராண்டில் உடனடியாக சமைத்து சாப்பிடும் ரீதியிலான சாஸ்கள், கிரேவிகள் மற்றும் பேஸ்ட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ஏக்தம்’ என்னும் பிராண்டில் பிரியாணி சந்தையிலும் கால்பதித்துள்ளது இந்த நிறுவனம். இந்த பிராண்டின் கீழ் அகில இந்திய ரீதியாக பல்வேறு பகுதிகளில் பிரசித்திபெற்றிருக்கும் பிரியாணி வகைகளை அந்தப் பகுதியில் பின்பற்றப்படும் சமையல் முறையிலேயே தயார் செய்து சுவை மாறாமல் வழங்கி வருகிறது. மேலும், கபாப், பிரெட், டெசர்ட் மற்றும் பானங்களையும் விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

தற்சமயம், அகில இந்திய ரீதியாக 349 நகரங்களில் டொமினோஸ் பீட்ஸா, டன்கின் டோனட்ஸ் மற்றும் ஹாங்ஸ் கிச்சனை உள்ளடக்கிய 1,625 கிளைகளை நடத்திவருகிறது இந்த நிறுவனம். டெக்னாலஜியைத் தன்னுடைய தொழிலில் சிறப்பான வகையில் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சேவையை சிறப்பாகச் செய்து வருகிறது இந்த நிறுவனம்.

ஜூபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ் 
லிமிடெட்!

தொழில்... சப்ளை... நேர்த்தி...

பீட்ஸா விற்பனையில் அகில இந்திய ரீதியாக இந்த நிறுவனமே முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தொழிலுக்கு உதவும் வகையில் மூலப் பொருள்களை (விளைபொருள்கள்) சப்ளை செய்வதற்கென 135-க்கும் மேற்பட்ட ஹெச்.ஏ.சி.சி.பி சான்றிதழ் பெற்ற பார்ட்னர் களையும் கொண்டிருக்கிறது. பார்ட்னர்கள் சப்ளை செய்யும் மூலப் பொருள்களைச் சேமித்து வைத்து அவற்றை அன்றாட உபயோகத்துக்குக் குறித்த நேரத்தில் கிளைகளுக்கு வழங்குவதற்கென்றே 12 சப்ளை செயின்/டிஸ்ட்ரிப்யூஷன் சென்டர்களை அகில இந்திய ரீதியாக நிறுவியுள்ளது இந்த நிறுவனம். சப்ளை செயின் சென்டர்களில் இருந்து மூலப்பொருள்கள் குளிர்பதனம் செய்யப் பட்ட டிரக்குகள் வாயிலாக இந்த நிறுவனத்தின் கிளைகள் மற்றும் உற்பத்தி மையங்களை சென்றடைகின்றன.

நிறுவனத்தின் வளர்ச்சி...

1995-ம் ஆண்டில் டோமினோஸ் பீட்ஸா இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் அன்றைய நோக்கமானது, இந்தியா வின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் டோமினோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு ஃபிரான்சைஸாகச் செயல்படுவதாக இருந்தது.

1996-ம் ஆண்டில் புது டெல்லியில் முதலாவது டோமினோஸ் பீட்ஸா சென்டரை திறந்த இந்த நிறுவனம், 1998-ம் ஆண்டில் டோமினோஸ் பீட்ஸாவுக்கான அகில இந்திய மற்றும் நேபாள நாட்டுக்கான ஃபிரான்சைஸ் உரிமையைப் பெற்றது. 2004-ம் ஆண்டில் 30 நிமிடங்களில் டெலிவரி அல்லது இலவசம் என்ற பீட்ஸா டெலிவரி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

2009-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பெயர் ஜூப்லியன்ட் ஃபுட் வொர்க்ஸ் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதே ஆண்டில் தான் இந்த நிறுவனத்தின் கிளைகள் 200 என்ற எண்ணிக்கையைத் தாண்டியது. 2010-ம் ஆண்டில் ஐ.பி.ஓ-வை வெளியிட்ட இந்த நிறுவனம், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்டது.

2011-ம் ஆண்டில் டன்கின் டோனட்ஸ் நிறுவனத்துடன் ஃப்ரான்சைஸ் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டது. 2012-ம் ஆண்டில் 500-வது டோமினோஸ் பீட்ஸா ரெஸ்டாரன்ட்டை நிறுவியது. 2013-ம் ஆண்டில் `டன்கின்’ டோனட்ஸ் & மோர்’ ரெஸ்டா ரன்ட்களை இந்தியாவில் நிறுவியது. 2014-ம் ஆண்டில் தன்னுடைய 700-வது டோமி னோஸ் பீட்ஸா ரெஸ்டா ரன்ட்டைத் திறந்ததன் மூலம் அமெரிக்காவுக்கு வெளியே யுனைடெட் கிங்டமைவிட அதிகப்படியான வர்த்தகத்துடன் இந்தியாவில் டோமினோஸ் நிறுவனம் செயல்பட ஆரம்பித்தது.

2016-ம் ஆண்டில் தன்னுடைய ஆயிரமாவது கிளையைத் திறந்த டோமினோஸ், 2019-ம் ஆண்டில் ஹாங்ஸ் கிச்சனை முதன்முதலாக நிறுவிய இந்த நிறுவனம், இதே ஆண்டில் தன்னுடைய முதலா வது ரெஸ்டாரன்ட்டை பங்களா தேஷில் நிறுவியது.

பல்வேறு பிராண்டுகள்...

பிராண்டுகள் ரீதியாகப் பார்த் தால் டோமினோஸ் பீட்ஸா, டன்கின், செஃப் பாஸ், ஏக்தம், போப்பியீஸ் (Popeyes) என்ற பிராண்டுகளைக் கொண்ட தயாரிப்புகளை இந்த நிறுவனம் வர்த்தகம் செய்துவருகிறது. தயாரித்து வழங்கும் உணவு களில் மேம்படுத்துதல் மற்றும் மெனுவில் புதிய வகை உணவுகள் போன்றவற்றைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பாகும். சரியான உணவை சாப்பிடுவதற் கான ‘ஈட் ரைட்’ எனும் நடை முறையின்கீழ் உணவுப் பொருள் களை மேம்படுத்துதல், கொழுப்பு மற்றும் உப்பின் அளவைக் குறைத்தல் போன்ற நடவடிக்கை களை எடுப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக இந்த நிறுவனம் சொல்கிறது.

கோவிட்-19 பாதிப்புக்கு முன் (2020 நிதியாண்டில்) இந்திய உணவு வழங்குதல் சேவையின் மொத்த சந்தையானது ரூ.42,360 கோடி என்ற அளவில் இருந்ததாக கணக்கீடுகள் சொல்கிறது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் கிட்டத் தட்ட 9% (சிஏஜிஆர்) என்ற அளவில் இந்தத் துறை வளர்ந்து வந்தது. கோவிட் 19-ன் பாதிப்பு காரணமாக இந்தத் துறையின் மொத்த சந்தை யானது (2021-ல்) ரூ.32,740 கோடி என்ற அளவுக்கு குறைந்ததாகச் சொல்கின்றன கணக்கீடுகள்.

கன்ஸ்யூமர் ஃபுட் சேவைக்கு கோவிட் 19 ஆனது ஏற்படுத்திய பெரும்பாதிப்பால் இந்தத் துறையில் நிலவி வந்த கன்ஸ்யூமர் பிஹேவியர் பெருமளவில் மாற்றமடைந்து விட்டது. உதாரணமாக, ஆன் லைன் ஆர்டர்கள் பெருமளவில் பயன்படுத்தபடுவதால் ‘அன் ஆர்கனைஸ்டு’ பிரிவில் இருந்து ‘ஆர்கனைஸ்டு’ பிரிவுக்கு வியா பார வாய்ப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளது. அதிக அளவிலான குடிமக்கள் இளைய தலைமுறையினராக இருப்பது, வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் அதனால் கிடைக்கிற அதிகப்படியான வருமானம், வேகமாக பெருகி வருகிற டிஜிட்டல் நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை, நம்பகத்தன்மை கொண்ட பிராண்டுகளுக்கு செலவு செய்யும் மனநிலை போன்றவை இந்தத் துறையில் வியாபாரத்துக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவே செய்யும் என எதிர்பார்க்கலாம்.

ஜூபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ் 
லிமிடெட்!
ஜூபிலன்ட் ஃபுட் வொர்க்ஸ் 
லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

உணவுப் பொருள்கள் சேவையில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, மக்களின் ரசனை மாறுதல், போட்டி யாளர்களின் தீவிர விற்பனை முயற்சிகள் மற்றும் ஏனைய பிசினஸ் ரீதியான ஒப்பந்தங்களில் ஏற்படக்கூடிய மாறுதல்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும். இந்த நிறுவனம் ஈடுபட்டுவரும் துறை யானது பொருளாதார வளர்ச்சியை சார்ந்தே வளர்கிற துறை ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாது போனாலோ, தேக்கநிலையை சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததா என்பதை முடிவு செய்தபின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!