Published:Updated:

கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் லிமிடெட்! BSE CODE: 543308, NSE SYMBOL: KIMS

KIMS
பிரீமியம் ஸ்டோரி
KIMS

கம்பெனி பயோடேட்டா

கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் லிமிடெட்! BSE CODE: 543308, NSE SYMBOL: KIMS

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
KIMS
பிரீமியம் ஸ்டோரி
KIMS

இந்த வாரம் பயோடேட்டா பகுதியில் நாம் பார்க்கப்போவது, கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் லிமிடெட் (KIMS/கிம்ஸ்). பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகளை நடத்திவரும் நிறுவனம் இது.

கிம்ஸ் நிறுவனத்தின் தோற்றம்...

2000-ம் வருடத்தில் போலினேனி ரமணையா மெமோரியல் ஹாஸ்பிட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் ஆந்திராவில் உள்ள நெல்லூரில் கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸை நிறுவியது. 2012-ம் ஆண்டில் போலினேனி ரமணையா மெமோரியல் ஹாஸ்பிட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இந்த பிசினஸ் டிவிஷன் மற்றும் நெல்லூரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஆகிய இரண்டும் ஒரு ஸ்கீமின் அடிப்படையில் கிம்ஸ் நிறுவனத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. இன்றைக்கு மருத்துவம் பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் மருத்துவம் வழங்கப்படும் நோய்களின் வகைகள் என்ற அடிப்படையில் பார்த்தால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் செயல்படும் முன்னணி மருத்துவமனைக் குழுமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது கிம்ஸ்.

‘கிம்ஸ் ஹாஸ்பிட்டல்ஸ்’ எனும் பிராண்டில் இன்றைக்கு ஒன்பது மருத்துவமனைகளை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறது இந்த நிறுவனம். மார்ச் 31, 2022 நிலவரப்படி, 3,600 படுக்கை வசதிகளைக் கொண்ட 12 மருத்துவமனைகள் 1,300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 4,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 2,200-க்கும் மேற்பட்ட பாராமெடிக்கல் பணியாளர்கள் மற்றும் 5,500-க்கும் மேற்பட்ட நிர்வாக ரீதியிலான பணியாளர்களுடன் இந்தக் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. இந்த அளவிலான படுக்கை வசதி என்பது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் இரண்டாவது நிலையில் இருக்கும் மருத்துவமனையைவிட 2.2 மடங்கு அதிகமானதாகும் (2020-ம் ஆண்டு நிலவரப்படியான தகவல்).

கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் 
மெடிக்கல் சயின்சஸ் லிமிடெட்!
BSE CODE: 543308, NSE SYMBOL: KIMS

12 மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்...

முதல் நிலை நகரங்களில் செயல்படும் இந்தக் குழுமத்தின் மருத்துவமனைகள் அடிப்படை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை (primary, secondary, tertiary and quaternary healthcare) மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தக் குழுமத்தின் மருத்துவமனைகள் இதய நோய்க்கான சிகிச்சை, புற்றுநோய்க்கான சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, குடல் மற்றும் இரப்பைக்கான சிகிச்சை, எலும்புகளுக்கான சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை, சிறுநீரகத்துக்கான சிகிச்சை, மகப்பேறு மற்றும் தாய்-சேய் நலத்துக்கான சிகிச்சை என்பன உள்ளிட்ட சிகிச்சைப் பிரிவுகளில் 25-க்கும் மேற்பட்ட ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அளவிலான மருத்துவ வசதிகளை வழங்கிவருகிறது.

நிறுவனத்தின் வளர்ச்சி...

2000-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நெல்லூரில் நிறுவிய இந்தக் குழுமம், செகந்திராபாத்தில் ஒரே வளாகத் தில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை (படுக்கை எண்ணிக்கை அளவீட்டில், மருத்துவக் கல்லூரி களுடனான மருத்துவமனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை) நிறுவி நடத்தி வருகிறது.

2017-ம் ஆண்டில் ஓங்கோலில் ஒரு மருத்துவ மனையும், 2019-ம் ஆண்டில் விசாகப்பட்டினம் மற்றும் அனந்தப்பூரில் உள்ள மருத்துவமனை களையும், 2020-ம் ஆண்டில் கர்நூலில் ஒரு மருத்துவமனையையும் கையகப்படுத்தியதன் மூலம் தன்னுடைய சேவையை விரிவாக்கம் செய்தது கிம்ஸ் நிறுவனம். இன்றைக்கு செகந்திரா பாத் (கிம்ஸ் மற்றும் கிம்ஸ் சன்ஷைன்), நெல்லூர், ராஜமுந்திரி, ஓங்கோல், காகுளம், கொண்டாபூர், விசாகபட்டினம், அனந்தப்பூர், கர்நூல், காச்சி போவ்லி (கிம்ஸ்-சன்ஷைன்), கரீம்நகர் (கிம்ஸ்-சன்ஷைன்) நகரங்களில் தன்னுடைய மருத்துவ மனைகளை நிறுவி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது கிம்ஸ் குழுமம்.

2021-22 நிதியாண்டில் இந்தக் குழுமத்தின் மருத்துவமனை களில் இருக்கும் ஒட்டுமொத்த படுக்கை வசதிகளில் கிட்டத் தட்ட 58.5% அளவு (2020-21-ல் இது 57.6 சதவிகிதமாக இருந்தது) படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை (Occupancy ratio) பெற்றுச் சென்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

மேலே சொல்லப்பட்டுள்ள பெரும் மருத்துவப் பிரிவுகளைத் தாண்டி மயக்க மருத்துவம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை, கிளினிக்கல் சைக்காலஜி, தோல் மற்றும் அழகுக்கான சிகிச்சை, நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல், கண், காது மற்றும் தொண்டை, கருத்தரித்தலுக்கான சிகிச்சை, ரத்தப் புற்றுநோயியல், தீவிர சிகிச்சை, இன்டர்னல் மெடிசின், இன்டர்வென்ஷனல் ரேடி யாலஜி, ரத்த வங்கி மற்றும் மாதிரிகள் ஆய்வகம், பிறந்த குழந்தைக்கான சிகிச்சைப்பிரிவு, உடல்பருமன் மற்றும் நிரிழிவுக் கான அறுவைசிகிச்சைகள், கண் சிகிச்சை, குழந்தைகளுக்கான இதய சிகிச்சைப் பிரிவு, ரத்தக் குழாய்களுக்கான சிகிச்சை, வலி மேலாண்மை, பிசியோதெரபி மற்றும் மீட்பு சிகிச்சைகள், பிளாஸ்ட்டிக் சர்ஜரி, நுரை யீரலுக்கான நோய் சிகிச்சை, சைக்கியாட்ரி, கதிரியக்க சிகிச்சை, வாத நோய்க்கான சிகிச்சை, சிறு நீரகவியல் போன்ற பிரிவுகளிலும் தன்னுடைய சேவை களை வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.

கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் 
மெடிக்கல் சயின்சஸ் லிமிடெட்!
BSE CODE: 543308, NSE SYMBOL: KIMS
கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் 
மெடிக்கல் சயின்சஸ் லிமிடெட்!
BSE CODE: 543308, NSE SYMBOL: KIMS

குறிப்பிடத்தக்க சாதனைகள்...

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலிப்பு நோய்க்கான அறுவை சிகிச்சைகளை நடத்தியது; இந்தியாவில் முதன்முதலாக இரண்டு நுரையீரல்கள் மாற்று சிகிச்சையை செய்தது; இந்தியாவில் முதன்முதலாக (2017-ம் ஆண்டில்) ரோபோட்டிக் ஸ்ப்ளீன் பிரிசர்விங் டிஸ்டல் பேங்க்ரியாடெக்டோமி சிகிச்சை அளித்தது; தென் இந்தியா விலேயே முதல்முறையாக 2018-ம் ஆண்டில் 65 வயது நோயாளிக்கு டோட்டல் ஸ்கின் எலெக்ட்ரானிக் பீம் ரேடியோ தெரபி சிகிச்சையை வழங்கியது, ஆசியாவிலேயே முதல் முறையாக 2018-ம் ஆண்டில் டிரான்ஸ் கேத்தீட்டர் ட்ரைகஸ்பிட் வால்வு மாற்றுதல் அறுவை சிகிச்சையை வழங்கியது; ஆயிரத் துக்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை செய்துள்ளது, ரோபோட்டிக் சர்ஜரி வாயிலாக மிகப்பெரிய அளவிலான (6 x 7 செமி அளவிலான) எஸ்.பி.இ.என் டியூமரைப் பிரித்தெடுத்தது; 2013-ம் ஆண்டிலேயே முதன்முறையாக எக்மோ சிகிச்சைக்கான கருவிகளை ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய மருத்துவமனையில் நிறுவியது போன்றவற்றை முக்கிய மானதாகக் கூறலாம்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

மருத்துவமனை மற்றும் சிகிச்சைத் துறையில் இயங்கும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மருத்துவம் மற்றும் சிகிச்சை என்பது பல்வேறு தரப்பட்ட புரொஃபஷனல் பணியாளர்களை நம்பி செயல் படும் துறையாகும். எனவே, எதிர் காலத்தில் ஏதாவது, ஒரு காரணத்தால் இந்த நிறுவனத்தால் சரியான நிபுணத்துவம் கொண்ட புரொஃபஷனல் பணியாளர்களைக் கவர முடியாமல் போனால் அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

கோவிட்-19 போன்ற பாதிப்புகள் மீண்டும் பெரிய அளவில் வந்தால், இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும். மேலும், பல கிளைகளைக்கொண்ட மருத்துவமனையாக இருப்பதால், மிகச் சிறப்பாகச் செயல் படும் ஏதாவது ஒரு கிளை ஏதாவது ஒரு காரணத்தால் நோயாளிகளின் அபிமானத்தை இழந்தால், அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

போட்டி, அதிநவீன தொழில்நுட்பம், செயல்படும் இடங்களில் ஒரு சில சொந்தமாக இல்லாது இருப்பது, செயல்படும் துறையில் இருக்கும் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் அதிகரிப்பது, சம்பளம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிப்பது, விரிவாக்கங்களைத் திட்டமிட்ட படி செய்து முடிக்க முடியாமல் போவது போன்றவை இந்த நிறுவனத்தின் ரிஸ்க்குகளாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism