Published:Updated:

கிர்லோஸ்கர் நியூமேட்டிக் கம்பெனி லிமிடெட்! (BSE CODE: 505283)

கிர்லோஸ்கர் நியூமேட்டிக்
பிரீமியம் ஸ்டோரி
கிர்லோஸ்கர் நியூமேட்டிக்

கம்பெனி பயோடேட்டா

கிர்லோஸ்கர் நியூமேட்டிக் கம்பெனி லிமிடெட்! (BSE CODE: 505283)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
கிர்லோஸ்கர் நியூமேட்டிக்
பிரீமியம் ஸ்டோரி
கிர்லோஸ்கர் நியூமேட்டிக்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பங்கு நிறுவனம் 133 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழில்செய்துவரும் கிர்லோஸ்கர் குழுமத்தின் அங்கமான கிர்லோஸ்கர் நியூமேட்டிக் கம்பெனி லிமிடெட் எனும் நிறுவனம் ஆகும். காற்று, ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் வாயுக்கள் கம்ப்ரஷன் (அழுத்தம் அதிகரிக்கச் செய்தல்) செய்யும் துறையில் உலக அளவில் உள்ள பல்வேறு தொழில்களுக்கான தேவைகளைத் தனது தயாரிப்புகள் வாயிலாகப் பூர்த்தி செய்யும் நிறுவனம் இது. டிசைன், ஆராய்ச்சி வசதிகள், உற்பத்தி மற்றும் அதிநவீன செயல் பாடுகள் போன்றவற்றால் தன் வாடிக்கை யாளர்களின் தேவைக்கேற்ப பல்வேறு துறை களில் தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

தொழில் பிரிவுகள்...

இந்த நிறுவனத்தின் பழம்பெரும் செயல் பிரிவான ஏர் கம்ப்ரசர் பிரிவில் 30 சி.எஃப்.எம் (CFM: Cubic Feet Per Minute) முதல் 10,000 சி.எஃப்.எம் வரையிலான திறன்கொண்ட 1 முதல் 150 பார் (Bar: Metric unit of pressure) அளவிலான அழுத்தத்தைக் கையாளக்கூடிய கம்ப்ரசர்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏர் கண்டிஷன் மற்றும் ரெஃப்ரிஜிரேஷன் பிரிவில் வாடிக்கை யாளர்களின் தேவைக்கேற்ப திட்டமிட்டு, வடிவமைத்து, உற்பத்தி செய்து, நிர்மாணித்து செயல்படுத்தித் தரும் டர்ன்-கீ புராஜெக்டுகளை இந்த நிறுவனம் செய்துவருகிறது.

எரிவாயுத் துறையில் உபயோகிக்கும் கம்ப்ரசர்கள் தயாரிப்பு பிரிவில் காஸ் கம்ப்ரஷன் சிஸ்டம்களை உற்பத்தி செய்துதருகிறது இந்த நிறுவனம். இந்தப் பிரிவில் இயந்திரத்தின் தேவை குறித்த அளவீடுகளுக்கான கருத்துப்படிவத்தை உருவாக்குவது தொடங்கி அந்த இயந்திரத்தை நிறுவி இயங்கச் செய்தல் மற்றும் செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற அனைத்து வகை சேவைகளையும் வழங்கிவருகிறது இந்த நிறுவனம்.

இந்தப் பிரிவில் உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ப்ராசஸ் காஸ் சிஸ்டம்களை வெற்றிகரமாக நிறுவியுள்ளது இந்த நிறுவனம். ரயில்வே துறைக்குத் தேவைப்படும் டிரான்ஸ்மிஷன்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் கியர்கள், கியர் பாக்ஸ்கள் மற்றும் பினியன்களையும் (pinions) உற்பத்தி செய்கிறது. தற்சமயம், டிரான்ஸ்மிஷன்கள் பிரிவில் ரயில்வே, பவர் மற்றும் ஸ்டீல், சிமென்ட் மற்றும் மினரல்ஸ், ரப்பர், பிளாஸ்ட்டிக், கப்பல்கள் துறை, சர்க்கரை ஆலைகள் போன்றவற்றுக்கான தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

கிர்லோஸ்கர் நியூமேட்டிக் கம்பெனி லிமிடெட்! (BSE CODE: 505283)

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படும் பிரிவுகள் என்ற அடிப்படையில் பார்த்தால், வாயு (Air) சம்பந்தப்பட்ட பிரிவில் டூல்கள், கிளீனிங் ஏர், பெயின்டிங், ப்ளோமோல்டிங் மற்றும் ஏர்செப்பரேஷன் போன்றவற்றுக்கும், ரெஃப்ரெஜிரேஷன் சம்பந்தப் பட்ட பிரிவில் ப்ராசஸ் கூலிங் ப்ளான்ட்டுகள், தண்ணீரைக் குளிர்விப்பது (Water Chilling), ஐஸ் உற்பத்தி செய்வது, மீன்கள், மாமிசம் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருள் களைப் பாதுகாத்து வைப்பது போன்றவற்றுக்கான உபகரணங்களிலும், எரிவாயு பிரிவில் எண்ணெய் கிணறுகளில் இருந்து உற்பத்தி செய்தல், எரிவாயுவை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்தல், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பதப்படுத்துதல், விநியோகம் செய்தல் போன்ற பிரிவுகளிலும் பயன்படுத்தப் படுகிறது.

நிறுவன தயாரிப்புகள்...

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் என்கிற ரீதியில் பார்த்தால், ஏர்கண்டிஷனிங் அண்ட் ரெஃப்ரெஜிரேஷன், ஏர் கம்ப்ரசர்கள், ப்ராசஸ் காஸ் சிஸ்டம்ஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம். தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், ரெசிப்ரோகேட்டிங் மற்றும் ரோட்டரி (ஸ்க்ரூ & சென்ட்ரி ஃப்யூகல்) என்ற இரண்டு வகை தொழில் நுட்பங்களைத் தன்னுடைய தயாரிப்புகளில் உபயோகிக்கிறது இந்த நிறுவனம்.

இந்திய ரயில்வே துறைக்கு முதன்முதலாக டிராக்‌ஷன் கியர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தது, ஹைட்ரோ கார்பன் ரெஃப்ரெஜிரேஷன் பிரிவில் முதன்முதலில் அங்கீகாரம் பெற்ற இந்திய நிறுவனமாக உருவெடுத்தது போன்றவற்றை இந்த நிறுவனத்தின் சாதனைகளாகச் சொல்லலாம்.

இந்தியாவில் செயல்படும் சி.என்.ஜி நிரப்பும் ஸ்டேஷன் களில் கிட்டத்தட்ட 50% எண்ணிக்கை அளவிலான ஸ்டேஷன்கள் இந்த நிறுவனத் தின் தயாரிப்புகளைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. கம்ப்ரசர் களில் அம்மோனியாவை உபயோகித்து குளிரூட்டும் வகை யிலான கம்ப்ரசர்கள் சந்தையில் இந்தியாவில் 70% சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், கடந்த நிதி யாண்டில் மட்டும் ஆறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி யுள்ளது.

கிர்லோஸ்கர் நியூமேட்டிக் கம்பெனி லிமிடெட்! (BSE CODE: 505283)

நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள்...

1958-ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம் ஹடப்சார், சாஸ்வத் மற்றும் நாசிக் என்னும் ஊர்களில் அதிநவீன தொழில் நுட்பத்துடன்கூடிய மூன்று உற்பத்தி மையங்களையும் 700-க் கும் மேற்பட்ட பணியாளர் களையும் (கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி) கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வரு கிறது. நான்கு மண்டல அலுவல கங்களையும், நான்கு கிளை அலுவலகங்களையும் கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், சொந்தமாக ஃபவுண் டரிகளையும் கொண்டுள்ளது.

மேலும், இந்த நிறுவனம் ஆய்வகம் என்.ஏ.பி.எல்-லின் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) அங்கீகாரத்தைப் பெற்றுள்ள மெட் டலர்ஜி ஆய்வகமாகும். மத்திய அரசால் (Department of Scientific and Industrial Research (DSIR), Ministry of Science and Technology, Government of India) அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் 97 பொறியாளர்கள் (கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி) பணிபுரிந்து வரு கின்றனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பு களில் வாயு சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் மின்சாரம், சிமென்ட், ஸ்டீல், சர்க்கரை, டெக்ஸ்டைல், கெமிக்கல்கள் மற்றும் பெர்ட்டி லைசர்கள், ஆட்டோமொபைல், ஆயில் மற்றும் காஸ், தண்ணீர் கிணறுகள், கட்டுமானம், சுரங்கம் மற்றும் ரயில்வே துறைகளில் பயன் படுத்தப்படுகிறது. ரெப்ரெஜிரேஷன் பிரிவு தயாரிப்புகள் குளிர்பதன கிடங்குகள், ஐஸ் உற்பத்தி மையங் கள், உணவு மற்றும் பானங்கள், வடிப்பகங்கள் (breweries), மீன் மற்றும் இறைச்சி சேமிப்பு/கையாளுதல், கெமிக்கல்கள் மற்றும் பெர்ட்டிலைசர், மருந்து உற்பத்தி, ஆயில் & காஸ் மற்றும் கப்பல் துறையில் பயன்படுத்தப்படு கின்றன. காஸ் சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் ஆயில் மற்றும் காஸ் பிரித்தெடுத்தல் (கரையிலும் & கடல் உள்ளும்), எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்கள், எரிவாயு விநியோகம் (சி.என்.ஜி வாகனங்களுக்கு நிரப்புதல்) போன்ற செயல்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

கிர்லோஸ்கர் நியூமேட்டிக் கம்பெனி லிமிடெட்! (BSE CODE: 505283)

ரிஸ்க்குகள் என்னென்ன?

நியூமேட்டிக் துறையில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படும் துறைகள் பலவும் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வியாபாரம் வளருகிற வாய்ப்பிருக்கும் துறைகளாக இருப்ப தால், உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவிலான வளர்ச்சியை அடையாமல் போனாலோ, தேக்க நிலையை சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல் பாட்டை பாதிக்கும். அரசாங்கத்தின் கொள்கை முடிவில் வருகிற மாற்றங்கள், போட்டி நிறுவனங்கள் அறிமுகப் படுத்தும் அதிநவீன தொழில்நுட்பம், மூலப்பொருள்கள் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே!

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!