Published:Updated:

பி.ஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட் லிமிடெட்! BSE CODE: 533581, NSE SYMBOL: PGEL

பி.ஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
பி.ஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட்

கம்பெனி பயோடேட்டா

பி.ஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட் லிமிடெட்! BSE CODE: 533581, NSE SYMBOL: PGEL

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
பி.ஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
பி.ஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டுவரும் எலெக்ட்ரானிக் மேனுபேக்சரிங் சர்விஸ்கள், பிளாஸ்ட்டிக் இன்ஜெக்‌ஷன் மோல்டிங், பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் மற்றும் ஏனைய பிளாஸ்ட்டிக் மேனுஃபேக்சரிங் சேவைகளை வழங்கிவரும் பிஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட் லிமிட்டெட்.

இந்தநிறுவனம் 1977-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து தன்னுடைய செயல்பாட்டுத் திறன்களை வளர்த்துக்கொண்டது. இதனால் இன்றைக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விரும்பி தங்களுடைய உற்பத்திக்கான முக்கியமான கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு முக்கிய நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது.

கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமோட்டிவ், லைட்டிங் சிஸ்டம்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மொபைல் போன்கள் மற்றும் பாத்ரூம் ஃபிட்டிங்குகளை விற்பனை செய்வதில் முன்னணி பிராண்டுகளைக்கொண்டிருக்கும் நிறுவனங்களைத் தன்னுடைய வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

தரமான பொருள்களை உற்பத்தி செய்து தருவதையே நோக்கமாகக் கொண்டிருப்பதும், டர்ன்-கீ அடிப்படையிலான உற்பத்தி / வர்த்தக முறையில் செயல்படுவதில் முனைப்புடன் திகழ்வதும் குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயங்கள்.

இந்த நிறுவனம் செயல்படும் துறையான ஒரிஜினல் எக்யூப்மென்ட் மேனுஃபேக்சரர்(OEM) மற்றும் ஒரிஜினல் டிசைன் மேனுஃபேக்சரர் (ODM) என்ற இரண்டிலும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் ஒரே இடத்தில் தருகின்ற நிறுவனமாகச் செயல்பட்டுவருகிறது. தன்னுடைய வாடிக்கையாளர்களுடன் நீண்டதொரு வர்த்தகரீதியிலான தொடர்பில் இருப்பதாலும் மிகவும் குறைந்த பொருள்செலவில் (Cost Efficient) உற்பத்தி செய்து தருவதாலும் இந்த நிறுவனம் தன்னுடைய நிறுவனரீதியிலான வாடிக்கையாளர்களின் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது.

பி.ஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட் லிமிடெட்! BSE CODE: 533581, NSE SYMBOL: PGEL

நிறுவனத்தின் வரலாறு...

1977-ம் ஆண்டில் சிறியதொரு எலெக்ட்ரானிக் காம்ப்போனெட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1995-ம் ஆண்டில் டெல்லியில் தொலைக்காட்சிப்பெட்டிகள் உற்பத்தி செய்யும் வசதியை நிறுவியது. 1997-ம் ஆண்டில் கலர் டிவி-க்கள் மற்றும் ஆடியோ சிஸ்டம்கள் உற்பத்தியை ஆரம்பித்தது இந்த நிறுவனம். பின்னர், 1999-ம் ஆண்டில் நொய்டாவில் ஒரு பிரின்டட் சர்க்யூட் போர்டு (PCB) உற்பத்தி வசதியை நிறுவியது இந்த நிறுவனம். 2003-ம் ஆண்டில் பிளாஸ்ட்டிக் இன்ஜெக்‌ஷன் மோல்டிங் உற்பத்தி வசதியை நிறுவிய இந்த நிறுவனம், 2008-ம் ஆண்டில் தமிழக அரசுக்கு 2.5 மில்லியன் எண்ணிக்கை யிலான கலர் டிவி-க்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை வென்று மூன்று ஆண்டு காலகட்டத்தில் அவற்றை உற்பத்தி செய்து கொடுத்தது.

2009-ம் ஆண்டில் சி.எஃப்.எல் பல்புகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், 2010-ம் ஆண்டில் ஆட்டோமொபைல் நிறுவனங் களுக்குத் தேவையான பிளாஸ்ட்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் பிரிவில் கால்பதித்தது. இதே ஆண்டில் இந்தியாவின் மிகப் பெரிய கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனம் என்ற இலக்கையும் தொட்டது இந்த நிறுவனம்.

2011-ம் ஆண்டில் தன்னுடைய பிளாஸ்ட்டிக் இன்ஜெக்‌ஷன் மோல்டிங் பிரிவை புனேயில் விரிவாக்கம் செய்த இந்த நிறுவனம், 2012-ம் ஆண்டில் இதே பிரிவை நொய்டாவில் விரிவாக்கம் செய்தது. 2014-ம் ஆண்டில் தன்னுடைய டைவர்சிஃபிகேஷனின் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கியமான பிராண்டுகளுக்காக மிக்சி மற்றும் ஜூஸர்களை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மோட்டார் உற்பத்தி வசதி ஒன்றை நிறுவியது இந்த நிறுவனம். 2015-ம் ஆண்டில் டிஷ் ஆண்டெனாக்களின் ஒரு பகுதியான செட்டாப் பாக்ஸ்களை உற்பத்தி செய்ய (அசெம்ப்ளி) ஆரம்பித்தது இந்த நிறுவனம். 2016-ம் ஆண்டில் வேகமாக அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாகத் தன்னுடைய டூலிங் டிவிஷனை விரிவாக்கம் செய்தது.

2019-ம் ஆண்டில் ரூ.500 கோடி என்ற விற்றுவரவு இலக்கைத் தொட்ட இந்த நிறுவனம், அதே ஆண்டில் தன்னுடைய இரண்டாவது மாடல் செமி ஆட்டோமேட்டிக் வாஷின் மெஷின் தயாரிப்பை அறிமுகப்படுத்தியது. இதே ஆண்டில் தான் தன்னுடைய கார்ப்பரேட் அலுவலகத்தில் தன்னுடைய தயாரிப்புகளுக்கான ஷோரூம் வசதி ஒன்றையும் நிறுவியது.

2020-ம் ஆண்டில் அறுநூறு கோடி என்ற விற்றுவரவு இலக்கைக் கடந்த இந்த நிறுவனம், அதே ஆண்டில் ஏர்கண்டிஷனருக்கான இண்டோர் யூனிட்டுகள் மற்றும் ஹீட் எக்சேஞ்சர் காயில்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 2021-ம் ஆண்டில் இந்த நிறுவனம் முழுவதுமாகத் தானியங்கும் வாஷிங் மெஷின்களை (Fully Automatic) உற்பத்தி செய்யும் வசதியை (Platform) நிறுவியது. இதே ஆண்டில் ஷீட் மெட்டல் காம்ப்போனெட்டுகள் உற்பத்தி வசதியின் நிர்மாணிக்கப்பட்ட அதிகப்படுத்திய இந்த நிறுவனம், க்ராஸ் ப்ளோ பேன்கள் உற்பத்தியிலும் கால்பதித்தது. மேலும், ரூம் ஏர்கண்டிஷனர்களுக்கான இண்டோர் மற்றும் அவுட்டோர் யூனிட்டுகளை உற்பத்தி செய்வதற்கான இரண்டு பிளாட்ஃபார்ம்களையும் 2021-ம் ஆண்டில் அமைத்தது இந்த நிறுவனம்.

பி.ஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட் லிமிடெட்! BSE CODE: 533581, NSE SYMBOL: PGEL

உற்பத்தி மையங்கள்...

உற்பத்தி வசதிகள் ரீதியாகப் பார்த்தால், பிஜி எலெக்ட்ரோ ப்ளாஸ்ட் நிறுவனம் பிளாஸ்ட்டிக் மோல்டிங், ஸ்பெஷலைஸ்டு ஏர்கண்டிஷனருக்கான காம்ப்போனென்டுகள், டூல்கள், பி.சி.பி அசெம்ப்ளிகள், பாலியூரித் தேன் பெயின்ட் ஷாப் போன்ற வசதிகளைக்கொண்டு இயங்கி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் நொய்டா (இரண்டு வசதிகள்) மற்றும் சூரஜ்பூர், உத்தரகாண்டில் பக்வான்பூர், மகாராஷ்டிராவில் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள சுபா (இரண்டு உற்பத்தி மையங்கள்) என்ற அளவில் தன் ஆறு உற்பத்தி மையங்களை நிறுவியுள்ளது இந்த நிறுவனம். இன்றைக்கு இந்த நிறுவனம் ஏர்கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின்கள், எல்.இ.டி டிவிக்கள், ஏர் கூலர்கள், கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள், ஆட்டோமோட்டிவ் காம்ப்போ னென்டுகள், பாத்ரூம் பிட்டிங்கு கள் எனப் பல்வேறு பொருள்களை முன்னணி பிராண்டுகளுக்காகத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது.

இந்த நிறுவனத்தின் வாடிக்கை யாளர்களாக அம்ஸ்ட்ரா-டி, புளூஸ்டார், ப்ரைட் ப்ளாஸ்ட், பிபிஎல், கேரியர், செல்லோ, கிராம்ப்டன், ஃப்ளிப்கார்ட், கோத்ரெஜ், ஹேயர், ஹாலோனிக்ஸ், ஹேவெல்ஸ், ஹனிவெல், இண்டெக்ஸ், ஜபில், ஜாக்குவார், ஜியோ, கெல்வினேட்டர், கோஹ்லர், லாவா, லூமேக்ஸ், எல்ஜி, லாயிட், மைடியா, மதர்சன், ஓனிடா, ஓரியன்ட் எலெக்ட்ரிக், பானா சோனிக், பிலிப்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல், சன்சூய், ஸ்பார்க் மின்டா, உஷா, வோல்டாஸ், வேர்ல்பூல் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன.

உலக அளவில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டு களில் விற்பனையாகும் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் (2020-21 நிதி ஆண்டு நிலவரப்படி) இயங்கி வருகிறது.

வேகமாக வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தில் இந்த நிறுவனம் இயங்கிவருகிற பிரிவுகளான கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்சஸ், ஆட்டோ மொபைல்கள் போன்றவற்றுக்கான தேவைகள் அதிகரித்துக்கொண்டே யிருக்கும் என்பதால் இந்த நிறுவனத் துக்கான வியாபார வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. மேலும், பல்வேறு முன்னணி பிராண்டு களுக்காகப் பொருள்களை உற்பத்தி செய்து தருவதாலும் நீண்ட அனுபவத்தைக் கொண்டிருப் பதாலும் பெரிய அளவிலான சிக்கல்கள் ஏதுமின்றி செயல்படும் வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது.

பி.ஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட் லிமிடெட்! BSE CODE: 533581, NSE SYMBOL: PGEL

தற்போதைய விலை : ரூ.673.30

52 வார அதிகம் : ரூ.871.45

52 வாரக் குறைவு : ரூ.288.50

புத்தக மதிப்பு : ரூ.91.40

விலை/புத்தக மதிப்பு : 7.37

முகமதிப்பு : ரூ.10

23.3.2022 நிலவரப்படி

ரிஸ்க்குகள் என்னென்ன?

இந்த நிறுவனம் செயல்படும் தொழில் பிரிவுகளான கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் துறையில் செயல்பட்டுவரும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மேலும், இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் தொழில்பிரிவுகள் அனைத்துமே பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் சார்ந்தே வாய்ப்புகள் உருவாகக் கூடுபவையாக இருப்பதால், ஏதாவது ஓர் எதிர்பாராத காரணத்தால் பொருளாதார வளர்ச்சி தடைபட்டாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

தொழில்நுட்ப ரீதியாக வருகிற மாறுதல்கள். வாடிக்கை யாளர்களின் தேவை மற்றும் ரசனை மாறுதல்கள் போன்றவையும், மூலப்பொருள்களின் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளேயாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.