Published:Updated:

ராம்கிருஷ்ணா போர்ஜிங்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: RKFORGE BSE CODE: 532527)

ராம்கிருஷ்ணா போர்ஜிங்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ராம்கிருஷ்ணா போர்ஜிங்ஸ்

கம்பெனி பயோடேட்டா

ராம்கிருஷ்ணா போர்ஜிங்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: RKFORGE BSE CODE: 532527)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
ராம்கிருஷ்ணா போர்ஜிங்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ராம்கிருஷ்ணா போர்ஜிங்ஸ்

ராம் கிருஷ்ணா போர்ஜிங்ஸ் நிறுவனத் தின் பயோடேட்டாவை இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம். 1981-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 1995-ம் ஆண்டு கம்பெனிச் சட்டத்தின் கீழ் பப்ளிக் லிமிட்டெட் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் இது. இன்றைக்கு நீண்ட அனுபவமும் மேம்பட்ட திறனும் கொண்ட பணியாளர் களைக் கொண்டு போர்ஜிங்குகளை உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம்.

நிறுவனத்தின் வரலாறு...

1995-ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குப் பொருள்களை சப்ளை செய்ய ஆரம்பித்தது இந்த நிறுவனம். 2002-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப் படும் உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான அங்கீகாரத்தைப் பெற்றது. 2004-ம் ஆண்டில் ஐ.பி.ஓ வெளியிடப்பட்டு, அதே ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

2007-ம் ஆண்டில் ரிங் ரோலிங் ப்ரஸ் லைன் மற்றும் மெஷினிங் வசதியை நிறுவியது இந்த நிறுவனம். 2014-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 3,150 மெட்ரிக் டன் மற்றும் 4,500 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி வசதியைக்கொண்ட இரண்டு ப்ரஸ் லைன்களை நிறுவியது. 2015-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 6,300 மெட்ரிக் டன் மற்றும் 12,500 மெட்ரிக் டன் என்ற அளவிலான உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு ப்ரஸ் லைன்களை நிறுவியது இந்த நிறுவனம்.

2017-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வசதிகளுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் (DSIR) கிடைத்தது. 2020-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 10,200 டன்கள் என்ற அளவிலான உற்பத்தித்திறன் கொண்ட ஸ்பிண்டில் லைனை நிறுவியது. 2021-ம் ஆண்டில் 17,000 மெட்ரிக் டன் அளவிலான ப்ரஸ் லைனை நிறுவிய இந்த நிறுவனம், இதே ஆண்டில் ஆண்டொன்றுக்கு 9,900 டன்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு வார்ம் போர்ஜிங் லைன் ஒன்றையும் நிறுவியது.

ராம்கிருஷ்ணா போர்ஜிங்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: RKFORGE BSE CODE: 532527)

நிறுவனத்தின் தொழில்...

ரயில்வேயில் பயணிகள் பயணிக்கும் கோச்சுகள் மற்றும் சரக்குகளைக் கொண்டு செல்லும் வேகன்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியமான தயாரிப்புகளான ஸ்க்ரூ கப்ளிங்குகள், போல்ஸ்டர் சஸ்பென்ஷன்கள், சைடு ஃப்ரேம் கீஸ் மற்றும் டிரா கியர் அசெம்ப்ளிகள் போன்ற வற்றையும் சப்ளை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

அயல்நாட்டு நிறுவனங்களான வோல்வோ, மேக் ட்ரக்ஸ், இவெகோ, ஃபோர்டு உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட், வி.இ கமர்ஷியல் மற்றும் டைம்லர் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு விருப்பமான சப்ளையர் என்ற நிலையில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். மேலும், டானா, சிசாமெக்ஸ் மற்றும் அமெரிக்கன் ஆக்சில்ஸ் போன்ற டயர்-1 ஆக்சில்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் தங்களுடைய தயாரிப்புகளை சப்ளை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ மொபைல் அல்லாத உபயோகத்துக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிற இந்த நிறுவனம், போர்ஜிங் துறையில் இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களின் மத்தியில் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

இந்தியாவில் ஆறு உற்பத்தி வசதிகளை (ஜாம் ஷெட்பூரில் மூன்று, செராய்கேலா-கர்ஸ்வானில் இரண்டு மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள ஹெளராவில் ஒன்று என்ற எண்ணிக்கை அடிப்படையில்) நிறுவியுள்ள இந்த நிறுவனம், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலும் வர்த்தகம் செய்துவருகிறது.

1995-ம் ஆண்டில் இந்திய ரயில்வேயின் பாதுகாப்புப் பிரிவால் (ஆர்.டி.எஸ்.ஓ) பயணிகள் பயணிக்கும் கோச்சுகளில் பாதுகாப்புக்குப் பயன் படுத்தப்படும் முக்கிய உதிரிபாகங்களை சப்ளை செய்வதற்கான அங்கீகாரம் இந்த நிறுவனத்துக்குத் தரப்பட்டது.

ராம்கிருஷ்ணா போர்ஜிங்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: RKFORGE BSE CODE: 532527)
ராம்கிருஷ்ணா போர்ஜிங்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: RKFORGE BSE CODE: 532527)

நிறுவனத்தின் சிறப்புகள்...

இந்த நிறுவனத்தின் செயல்படும் பிரிவுகள் என்ற அளவில் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு ரீதியாகப் பார்த்தால், ரோல்டு புராடக்ட்ஸ், ஃபோர்ஜ்டு புராடக்ட்ஸ், மெஷின்டு புராடக்ட்ஸ் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். ரோல்டு புராடக்டுகள் பிரிவில் க்ரெளன் வீல்கள் மற்றும் ரிங் கியர்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், 20 கிலோ முதல் 75 கிலோ எடை வரை யிலான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் வசதியைக் கொண்டிருக் கிறது.

போர்ஜ்டு புராடக்ட்டுகள் பிரிவில் இரண்டு கிலோ முதல் இருநூறு கிலோ வரையிலான எடை கொண்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்துவருகிறது. ஐ-பீம்கள், க்ராங்க் ஷாஃப்ட்டுகள், கனெக்டிங் ராடுகள், டிஃப் கேஸ்கள், சென்டர் வெட்ஜ்கள், ஸ்டியரிங் ஆர்ம்கள், டை ராடு ஆர்ம்கள், பிட்மேன் ஆர்ம்கள், ஸ்டப் ஆங்கிள், புராக்கெட்டுகள், வீல் ஹப்கள், ஹேமர் பார், ரிங் கியர் கேரியர் உள்ளிட்ட பல தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம்.

மெஷின்டு புராடக்ட்ஸ் பிரிவில் இரண்டு கிலோ முதல் இருநூறு கிலோ வரையிலான எடை கொண்ட பொருள்களைத் தயாரிக்கும் அளவிலான உற்பத் தித் திறனைக் கொண் டிருக்கிறது இந்த நிறுவனம்.

ஐ-பீம்கள், பினியன், ப்ரண்ட் ஹப், பிட்மேன் ஆர்ம், ப்ராப் ஷாப்ட், என்கேஜிங் கியர்கள், கிளட்ச் காலர், ரிங் கியர் கேரியர் உள்ளிட்ட பல தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.

ஜூன் 30, 2022 நிலவரப்படி, ஆண்டொன்றுக்கு 1,87,100 டன்கள் (ஒட்டுமொத்தமாக) என்ற அளவி லான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியுடன் இயங்கிவருகிறது. தன்னுடைய நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையத்தில் கிட்டத்தட்ட 77% உற்பத்தியை செய்து உலக அளவில் 17 நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்குத் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

உற்பத்தி செய்யும் தயாரிப்புகள் ரீதியாகப் பார்த்தால், கனரக வாகனங்களில் ப்ரண்ட் ஆக்சில், இன்ஜின், சஸ்பென்ஷன் & சேசிஸ், டிரான்ஸ்மிஷன் மற்றும் ரியர் ஆக்சில் போன்ற பல்வேறுதரப்பட்ட டைவர்சிஃபைடு உபயோகத்துக் கான தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம். 64 பணியாளர்களைக் கொண் டிருக்கும் ஆராய்ச்சி மையத்தையும் தன்வசம் கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

ரிஸ்க்குகள் என்னென்ன?

போர்ஜிங் துறையில் ஈடுபடுகிற நிறுவனங்களுக்கு உரித்தான அத்தனை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மேலும், இந்த நிறுவனத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கனரக மற்றும் ஏனைய வாகன உற்பத்தி நிறுவனங்களாக இருக் கின்றனர். வாடிக்கையாளர்கள் செயல்படுகிற இந்த வகை வாகன உற்பத்தித் துறையானது, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சார்ந்தே வளர்ச்சியடையும் துறையாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி யடையாமல் போனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அதன் காரணமாக இந்த நிறுவனமும் பாதிக்கப்படவே செய்யும்.

மூலப்பொருள்கள் விலை உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப் படுத்தப்படுதல், போட்டி நிறுவனங்களின் ஸ்ட்ராட்டஜி களில் செய்யப்படும் மாறுதல்கள் மற்றும் அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கை முடிவுகள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.