Published:Updated:

ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ் லிமிடெட்! NSE SYMBOL: RPGLIFE, BSE CODE: 532983

ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ்

அறிவோம் பங்கு நிறுவனம்...

ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ் லிமிடெட்! NSE SYMBOL: RPGLIFE, BSE CODE: 532983

அறிவோம் பங்கு நிறுவனம்...

Published:Updated:
ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ்

ஆர்.பி.ஜி குழுமம் 1968-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான ஜி.டி சியர்ல் (GD Searle, USA) எனும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து சியர்ல் இந்தியா லிமிடெட் (Searle India Ltd) என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்டது. பின்னர், 1993-ம் ஆண்டில் ஜி.டி சியர்ல் நிறுவனம் தன் முதலீட்டை ஆர்.பி.ஜி குழுமத்திடம் விற்று வெளியேற, பிறகு ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட து. இந்த நிறுவனத்தைக் குறித்துதான் நாம் இந்த வாரம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ் லிமிடெட்! NSE SYMBOL: RPGLIFE, BSE CODE: 532983

ஆரம்ப காலத்தில் அக்ரோ கெமிக்கல்கள், பார்மா, நொதித்தல் மற்றும் பயோடெக்னாலஜி போன்ற துறைகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்த நிறுவனம் முழுக்க முழுக்க ஆர்.பி.ஜி குழுமத்தின் கீழே செயல்பட ஆரம்பித்த பிறகு, 2001-ம் ஆண்டில் பார்மா, ஃபெர்மெண்டேஷன் மற்றும் பயோ டெக்னாலஜி துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தது.

2010-ம் ஆண்டில் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரிவில் கால்பதித்த இந்த நிறுவனம், 2016-ம் ஆண்டில் தன் பயோ டெக்னாலஜி பிரிவை இண்டஸ் பார்மா நிறுவனத்துக்கு விற்றது. அதே ஆண்டில் சன்பார்மா நிறுவனத்தின் ஏழு பிராண்டுகளை வாங்கிய இந்த நிறுவனம், சிறுநீரக மருத்துவத்துக்கான தயாரிப்புகளைத் தொடங்கியது. 2019-ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் தயாரிப்பிலும் கால்பதித்தது இந்த நிறுவனம்.

ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ் லிமிடெட்! NSE SYMBOL: RPGLIFE, BSE CODE: 532983

தொழில் பிரிவுகள்...

இந்த நிறுவனத்தின் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், ஏ.பி.ஐ (API), உள்நாட்டில் விற்பனைக்கான ஃபார்முலேஷன்கள் உற்பத்தி, உலகளாவிய நிறுவனங்களுக்கான ஃபார்முலேஷன்கள் உற்பத்தி என்ற மூன்று பெரும் பிரிவுகளில் இயங்கிவருகிறது இந்த நிறுவனம். ஆக்டிவ் பார்மச்சூட்டிக்கல் இன்க்ரிடியன்ட்ஸ் (API) எனும் தொழில் பிரிவில் மதிப்புக் கூட்டப்பட்ட பொது மருத்துவத்துக்கான சிந்தெட்டிக் ஏ.பி.ஐ-க்களை வாடிக்கையாளர்களுக்காக உற்பத்தி செய்து தருகிறது இந்த நிறுவனம். ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்துவரும் இந்த நிறுவனம், அமெரிக்காவிலும் கால்பதிக்க பணிகளைச் செய்துவருகிறது.

இந்த நிறுவனம் செயல்பட்டுவரும் மருந்து உற்பத்திப் பிரிவுகளுக்கான ஆராய்ச்சி வசதிகளில் தனித்துவம் கொண்டிருப்பதால், இந்த நிறுவனம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் நோய் எதிர்ப்புத் தடுப்பு மருந்துகள், மனநல மருத்துவத்துக்கான மருந்துகள், இருதயம் சார்ந்த மருத்துவத்துக்கான மருந்துகள், ஒட்டுண்ணிப் புழு மருத்துவத்துக் கான மருந்துகள், வலிப்பைத் தடுப்பதற்கான மருந்துகள், வலிப்பைக் குறைப்பதற்கான மருந்துகள் (Anti-spasmodic) போன்ற மருந்து களுக்கான ட்ரக் மாஸ்டர் பைல்கள் (DMF) மற்றும் இ.சி.டி.டி-க்களை [(e-CTD) – Electronic Common Technical Document) அந்தந்த நாடுகளின் மருந்துகளை அங்கீகாரம் செய்யும் அமைப்புகளிடம் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளது.

நெஃப்ராலஜி, புற்றுநோய், நுரையீரல் சார்ந்த நோய்கள், விட்டமின்கள் மற்றும் மினரல்கள், இரப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்கள், வலி நிவாரணம்/மேலாண்மை, இருதய நோய்களுக்கான மருந்துகள் போன்ற வியாதிகளுக்கான மருந்துகள் விற்பனையில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்த நிறுவனம் இந்தப் பிரிவுகளில் பல்வேறு மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ் லிமிடெட்! NSE SYMBOL: RPGLIFE, BSE CODE: 532983

நிறுவனத்தின் சிறப்புகள்...

வெகு பிரசித்திபெற்ற மருந்து வகைகளான அல்டக்டோன், செரனேஸ், அஸோரன், லோமோட்டில் மற்றும் லோமோ ஃபென் ப்ளஸ் போன்ற மருந்துகள் இந்த வகை மருந்துகளில் அடக்கம். இந்தத் தொழில் பிரிவைத் தலைமைப் பிரிவு, நெஃப்ரோகேர் பிரிவு, நியோ லைஃப் பிரிவு என்கிற ரீதியில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், மெயின் பிரிவில் இரப்பை மற்றும் குடல், நுரையீரல், வலி நிவாரணம்/மேலாண்மை, சர்க்கரை நோய், மகப்பேறு, குழந்தைகள் மருத்துவம் மற்றும் விட்டமின் & மினரல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

நெப்ரோகேர் பிரிவில் தொடர் சிகிச்சை தேவைப்படும் சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள், தீவிர சிறுநீரக தொற்றை நீக்குவதற்கான மருந்துகள் மற்றும் டயாலசிஸ் போன்றவற்றுக்குத் தேவைப்படும் மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது என்பதும் முக்கியமான விஷயமாகும்.

வளர்ச்சிப் பாதையில்...

2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட நியோ லைஃப் பிரிவில் புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் அது சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்கான மருந்து களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. மேலும், பயாலஜிக்கல் மற்றும் பயோ சிமிலர்களை உற்பத்தி செய்வதிலும் கால்பதித்துள்ள இந்த நிறுவனம், மார்பகப் புற்று நோய்க்கான பயோசிமிலரான ஹெர்மாப் எனும் மருந்தை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

யூரோலைஃப் பிரிவில் சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவில் சில்டியுரா மற்றும் டாம்ப்ளோ (Sildura & Tamflo) என்னும் பிராண்டுகளின் மாலிக்யூல்களைக் கையகப் படுத்தியுள்ளது.

இன்டர்நேஷனல் பார்மு லேஷன் பிரிவில், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து, தென் அமெரிக்கா மற்றும் எமர்ஜிங் மார்க்கெட்டில் ஜெனரிக்ஸ் மற்றும் பிராண்டட் ஜெனரிக்ஸ் மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

பிராண்டட் ஜெனரிக்ஸ் மருந்துகள் உற்பத்தியில் நெஃப் ராலஜி பிரிவில் எகிப்து, கென்யா மற்றும் மியான்மர் நாடுகளில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் முன்னணி நிலைமை வகித்து வருகின்றன.

நெஃப்ராலஜி பிரிவில் மேலும் தன் நிலைப்பாட்டை ஸ்திரப் படுத்திக்கொள்ளவும் புற்றுநோய் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக் கான மருந்துகள் போன்றவற்றில் கால்பதிப்பதற்காகவும் முயன்று வருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தன்னுடைய வர்த்தகத்தைச் செய்துவருகிறது. 1,100-க்கும் மேற்பட்ட பணியாளர் களைக் கொண்டு இயங்கிவரும், இந்த நிறுவனத்தின் மொத்த விற்று வரவில் உள்நாட்டு மருந்து விற்பனை 62 சதவிகிதமாகவும், ஏ.பி.ஐ-க்கள் விற்றுவரவு என்பது 17 சதவிகிதமாகவும், இன்டர் நேஷனல் ஃபார்முலேஷன்களில் இருந்து வரும் விற்றுவரவு 21 சத விகிதமாகவும் கடந்த காலாண்டின் இறுதியில் இருந்துள்ளது.

நோயாளிகள் மத்தியில் பெருமளவில் விற்பனையாகும் மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இயங்கிவரும் இந்த நிறுவனம் அவசர மற்றும் நீண்ட கால சிகிச்சைக்கான மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. மேலும், சட்டதிட்டங்கள் கடுமையானதாக இருக்கும் நாடுகளான கனடா, யுகே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சிறந்த செயல்பாட்டைக் கொண்டிருப்பதும் சிறப்பு.

ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ் லிமிடெட்! NSE SYMBOL: RPGLIFE, BSE CODE: 532983

ரிஸ்க்குகள் என்னென்ன?

மருத்துவத் துறையில் செயல்பட்டுவரும் நிறுவனங்களுக்கே உரித்தான அத்தனை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. தரக்கட்டுப்பாடுகள் அனைத்தையும் சரிவர தொடர்ந்து கடைப்பிடித்தல், ஆராய்ச்சிகளில் தொடர்ந்து வெற்றிபெறுதல் போன்றவற்றுக்கான தேவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

போட்டியாளர்கள் ஆராய்ச்சிகளில் பெறும் வெற்றி, அரசாங்கத்தின்/ரெகுலேட்டர்களின் கொள்கை முடிவுகள், மூலப் பொருள்களின் விலை ஏற்றம், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், வேகமாக மாறும் தொழில்நுட்பம் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

ஆர்.பி.ஜி லைஃப் சயின்சஸ் லிமிடெட்! NSE SYMBOL: RPGLIFE, BSE CODE: 532983

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பிறகே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!