Published:Updated:

சஃபாரி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்! (BSE CODE: 523025, NSE SYMBOL: SAFARI)

சஃபாரி இண்டஸ்ட்ரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
சஃபாரி இண்டஸ்ட்ரீஸ்

கம்பெனி பயோடேட்டா

சஃபாரி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்! (BSE CODE: 523025, NSE SYMBOL: SAFARI)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
சஃபாரி இண்டஸ்ட்ரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
சஃபாரி இண்டஸ்ட்ரீஸ்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பங்கு நிறுவனம், நம் அனைவருக்குமே நன்கு பரிச்சயமான பிராண்டான ‘சஃபாரி’ என்னும் பயணத்தின்போது பயன்படுத்தப்படும் பெட்டிகள் மற்றும் பைகள் தயாரித்து வர்த்தகம் செய்யும் நிறுவனம்.

நிறுவனத்தின் வரலாறு...

1974-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், ஆரம்ப காலத்தில் பயணத்துக்கு உதவும் லக்கேஜ்களைத் (பெட்டிகள்) தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தது. 2014-15 நிதியாண்டில் இந்த நிறுவனம் பாலி கார்போ னேட்டாலான ஹார்ட் லக்கேஜ்கள் மற்றும் லேப்டாப் பேக்குகள் போன்ற புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் கால்பதித்தது. இதே காலகட்டத்தில், டனோ கேப்பிடல் என்னும் முதலீட்டு நிறுவனம் சஃபாரி நிறுவனத்தில் ரூ.50 கோடியை முதலீடு செய்தது. சஃபாரி நிறுவனம் சீனாவில் ஓர் அலுவலகத்தையும், இ-காமர்ஸ் மூலம் லக்கேஜ்கள் விற்பனையையும் இதே ஆண்டில்தான் ஆரம்பித்தது.

2018-19 நிதியாண்டில் மும்பை மற்றும் குர்கானில் ரீடெயில் டிஸ்ட்ரிப்யூஷன் சென்டரை நிறுவிய இந்த நிறுவனத்தின் பங்குகள் 2019-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

சஃபாரி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்! (BSE CODE: 523025, NSE SYMBOL: SAFARI)

தொழில் பிரிவுகள்...

தொழில் பிரிவுகள் என்ற ரீதியாகப் பார்த்தால், லக்கேஜ்கள் (சாஃப்ட் லக்கேஜ் மற்றும் ஹார்ட் லக்கேஜ்), பேக் பேக்குகள் (Back Pack) மற்றும் ஸ்கூல்பேக்குகள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். லக்கேஜ்களில் சிறியவை, நடுத்தர அளவானவை, பெரியவை மற்றும் இரண்டும் கலந்த வகையிலான தயாரிப்புகளை விடுமுறைப் பயணங்கள், வேலை சார்ந்த பயணங்கள், இன்டர்நேஷனல் டிராவல் மற்றும் வார இறுதி ரிலாக்சேஷனுக்கான பயணங்கள் போன்ற பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்து உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

பேக் பேக்குகள் பிரிவில் லேப்டாப் பேக்குகள், மழைக்கான பாதுகாப்பு கவர்களுடன்கூடிய பேக்குகள், ஃபார்மல் பேக்குகள் மற்றும் ஓவர்நைட் பயணத்துக்கான பேக்குகள் போன்ற தயாரிப்பு களை விடுமுறை, வேலை, கல்லூரி மற்றும் அட்வென்சர் சார்ந்த பயணங்களுக்காக வடிவமைத்து உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். மேலும், குழந்தைகளுக்கான லக்கேஜ் மற்றும் பேக் பேக்குகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

வளர்ச்சிக்கான வாய்ப்புகள்...

இந்தத் துறையைப் பொறுத்தவரை, வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தருவதாக பின்வரும் அனுகூலங்கள் தென்படுகின்றன. தனிநபர் சராசரி வருமான உயர்வின் காரணமாகப் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிராண்டட் லக்கேஜ்களை வாங்க ஆரம்பித்து உள்ளனர். மேலும், மாறுகிற தேவைகள் மற்றும் புதிய டிசைன்கள் அறிமுகம் செய்யப்படுதல் போன்றவற்றின் காரணமாக பழைய லக்கேஜ்களை மாற்றி புதிய லக்கேஜ்களை வாங்கும் டிரெண்டும் உருவாகியுள்ளது. குடும்பத் துக்கான லக்கேஜ் என்ற நிலை மாறி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனியாக பயணிப் பதால், அவரவருக்கு ஏற்ற வகையில் லக்கேஜ்களை வாங்கும் பழக்கமும் உருவாகிவருகிறது.

கோவிட்-19 பாதிப்பு இந்தத் துறையின் செயல்பாட்டை நன்கு பாதித்திருந்தாலுமே கோவிட்-19-லிருந்து மீண்டுவரும் உலகத்தில் பயணத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம். இந்தத் துறையின் வளர்ச்சி யானது அடுத்த மூன்று ஆண்டு காலம் வரை 7.5% வரை இருக்க வாய்ப்புள்ளது என்கிறது இந்தத் துறை சார்ந்த ஆய்வுகள்.

இந்த நிறுவனம் லக்கேஜ்களை டிசைன் செய்வதற்கென்றே தனிப்பட்ட வசதிகளை சொந்தமாகக் கொண்டுள்ளது. டிசைன் செய்யப் பட்ட லக்கேஜ்களை உற்பத்தி செய்தும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்சிங் செய்தும் விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம்.

எண்ணூறுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளைக் (ஹார்ட் லக்கேஜ், சாஃப்ட் லக்கேஜ், பேக் பேக்ஸ் மற்றும் ஸ்கூல் பேக்ஸ் போன்ற அனைத்து ரகங்களையும் சேர்த்து) கொண்டிருக்கும் இந்த நிறுவனம் 9,200-க்கும் மேற்பட்ட கஸ்டமர் டச் பாயின்ட்களுடன் (CSD-கேன்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட் மென்ட், மல்ட்டி பிராண்ட் ரீடெயில் ஸ்டோர்ஸ், எக்ஸ் க்ளூசிவ் பிராண்ட் அவுட் லெட்டுகள், எலெக்ட் ரானிக் காமர்ஸ் மற்றும் இன்ஸ்டி டியூஷனல் விற்பனைப் பிரிவு களை உள்ளடக்கியது) வெற்றிகர மாகச் செயல்பட்டு வருகிறது.

சஃபாரி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்! (BSE CODE: 523025, NSE SYMBOL: SAFARI)

விற்பனையில் போட்டி...

லக்கேஜ் துறையில் ஆர்கனைஸ்டு மற்றும் அன்-ஆர்கனைஸ்டு என்ற பிரிவில் செயல்படும் இரண்டு வகை நிறுவனங்களும் தங்களுடைய பங்களிப்பைத் தந்துவருகின்றன. அன்-ஆர்கனைஸ்டு உற்பத்தி மற்றும் விற்பனையில் இருக்கும் மறைமுக செலவினங்கள் குறைவாக இருப்பதனாலேயே இந்தப் போட்டியைத் தவிர்க்க முடியாத சூழல் நிலவுகிறது. கடந்த காலத்தில் அன்-ஆர்கனைஸ்டு நிறுவனங்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக இருந்துவந்தது என்றாலும், பொருளாதார வளர்ச்சியின் காரணமாகத் தனிநபர் சராசரி வருமானம் அதிகரித்த காரணத் தால், பிராண்டட் லக்கேஜ்களை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் கோவிட்-19 காரணமாக அன்-ஆர்கனைஸ்டு உற்பத்தியாளர்கள் பல்வேறு இடைஞ்சல்களை (நிதிப் பற்றாக் குறை, சப்ளை - செயின் பிரச்னைகள் மற்றும் தேவையான தயாரிப்புகள் கிடைக்காமல் போவது போன்ற காரணங்கள்) சந்தித்து வருகின்றன. தவிர, ஆர்கனைஸ்டு உற்பத்தியாளர்கள் தரும் உத்தரவாதமும் (Warranty) வாடிக்கை யாளர்கள் ஆர்க்னைஸ்டு உற்பத்தியாளர்களை நோக்கிப் பயணிக்க உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வி.ஐ.பி மற்றும் சாம்சனைட் போன்ற நிறுவனங்களே இந்த நிறுவனத்துக்குப் போட்டியாகச் செயல்பட்டுவரும் நிறுவனங்கள். வி.ஐ.பி மற்றும் சாம்சனைட் பிரீமியம் ரக லக்கேஜ்கள் (பிரீமியம் மார்க்கெட்) மற்றும் சாதாரண குறைந்த விலை லக்கேஜ்கள் (மாஸ் மார்க்கெட்) என்ற இரு பிரிவிலும் செயல்பட்டுவருகின்றன. 2015-20 காலகட்டத்தில் ஆர்கனைஸ்டு செக்டாரின் வளர்ச்சி (வி.ஐ.பி, சாம்சனைட், சஃபாரி போன்ற பிராண்டுகளை உள்ளடக்கியது) கிட்டத்தட்ட 11% (CAGR) என்ற அளவில் இருந்து வந்துள்ளது.

சஃபாரி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்! (BSE CODE: 523025, NSE SYMBOL: SAFARI)

ரிஸ்க்குகள் என்னென்ன?

லக்கேஜ் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கே உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப் பொருள்கள் விலை உயர்வு, நவீன டிசைன்கள் மற்றும் தொழில்நுட்பம் போட்டியாளர்களால் அறிமுகப்படுத்தப்படுதல், இறக்குமதி செய்யப்படுவதால் அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், வாடிக்கையாளர்களின் ரசனை மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத் துக்கு உரித்தான ரிஸ்க்குகளேயாகும்.

கோவிட்-19 மீண்டும் பெரிய அளவில் அலையாக உருவெடுத்தால் மக்கள் பயணிக்க மீண்டும் தயக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இது போன்ற சூழ்நிலையில் இந்த நிறுவனத்தின் வியாபாரம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சிக்கேற்பவே மக்களின் பயணத் திட்டங்களும் வகுக்கப்படும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சியானது எதிர்பார்த்த அளவு இல்லாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை ஓரளவு பாதிக்கவே செய்யும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism