Published:Updated:

சான்சேரா இன்ஜினீயரிங் லிமிடெட்! (BSE CODE: 543358, NSE SYMBOL: SANSERA)

சான்சேரா இன்ஜினீயரிங்
பிரீமியம் ஸ்டோரி
சான்சேரா இன்ஜினீயரிங்

கம்பெனி பயோடேட்டா

சான்சேரா இன்ஜினீயரிங் லிமிடெட்! (BSE CODE: 543358, NSE SYMBOL: SANSERA)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
சான்சேரா இன்ஜினீயரிங்
பிரீமியம் ஸ்டோரி
சான்சேரா இன்ஜினீயரிங்

பெங்களூரில் 1981-ம் ஆண்டில் நிறுவப் பட்டு, 1986-ம் ஆண்டில் பயணிகள் வாகன உதிரிபாகங்களின் கமர்ஷியல் புரடக்‌ஷனை ஆரம்பித்த நிறுவனம் சான்சேரா இன்ஜினீயரிங் லிமிடெட். இந்த நிறுவனத்தைப் பற்றி இனி பார்ப்போம்.

தொழில் பிரிவுகள்...

இந்த நிறுவனம் செய்யும் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், ஆட்டோமொபைல், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ மொபைல் அல்லாத இயந்திரங்கள் என்ற இரண்டு பெரும் பிரிவில் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

மாறிவரும் தேவைகளுக்கேற்ப இருசக்கர வாகனங்கள், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், பயணிகள் பயணிப்பதற்கான வாகனங்கள்/ஹைபிரிட் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள், கமர்ஷியல் வாகனங்கள் எனப் பல்வேறு டைவர்சிஃபைட் தயாரிப்புகளுக்கான உதிரிபாகங்களை வடிவமைத்து உற்பத்தி செய்துதரும் அளவுக்கான தொழில் நுட்பத்துடனும் உற்பத்தி மையங்களுடனும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சான்சேரா இன்ஜினீயரிங் லிமிடெட்! (BSE CODE: 543358, NSE SYMBOL: SANSERA)

நிறுவனத்தின் வரலாறு...

1986-ம் ஆண்டில் மாருதி உத்யோக் (மாருதி சுஸூகியின் அன்றைய பெயர்) நிறுவனத்திடம் இருந்து முதல் பர்ச்சேஸ் ஆர்டரைப் பெற்றது இந்த நிறுவனம். ஆர்கானிக் குரோத் எனும் சுயசார்பு வளர்ச்சியின் மூலமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனம் 1996-ம் ஆண்டில் இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்களையும், 2009-ம் ஆண்டில் ஆஃப் ரோடு வாகனங்களுக்கான உதிரிபாகங்களை யும் 2011-ம் ஆண்டில் இலகு ரக கமர்ஷியல் வாகனங்களுக்கான உதிரிபாகங்களையும் உற்பத்தி செய்து சப்ளை செய்ய ஆரம்பித்தது. 2013-ம் ஆண்டில் அலுமினியம் மற்றும் டைட்டானியம் ஏரோஸ்பேஸ் காம்போனெட்டுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது இந்நிறுவனம்.

1996-ம் ஆண்டில் பெங்களூரில் தன்னுடைய இரண்டாவது உற்பத்தி மையத்தை நிறுவிய இந்த நிறுவனம், 2000-ம் ஆண்டில் தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக போர்ஜிங் வசதி ஒன்றைக் கையகப்படுத்தியது. 2004-ம் ஆண்டில் மூன்றாவது உற்பத்தி மையத்தை பெங்களூரில் நிறுவிய இந்த நிறுவனம், 2005-ம் ஆண்டில் ஹரியானாவில் உள்ள மனேசர் எனும் இடத்தில் நான்காவது உற்பத்தி மையத்தையும், புனேவில் ஐந்தாவது உற்பத்தி மையத்தையும் நிறுவியது. 2007-ம் ஆண்டில் பந்த்நகரில் ஆறாவது உற்பத்தி மையத்தையும் நிறுவியது இந்த நிறுவனம்.

2008-ம் ஆண்டில் ஃபோர்ஜிங் மற்றும் ஹீட் ட்ரீட்மென்ட் வசதியை தன் ஐந்தாவது மற்றும் ஆறாவது உற்பத்தி மையத்தில் நிறுவிய சான்சேரா இன்ஜினீயரிங், அதே ஆண்டில் ஏழாவது உற்பத்தி மையத்தை பெங்களூரில் நிறுவியது.

2009-ம் ஆண்டில் கனெக்ட்டிங் ராடுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், 2010-ம் ஆண்டில் ஏரோஸ்பேஸ் காம்ப்போனெட் களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 2011-ம் ஆண்டில் ஃப்ராக்சர்டு மற்றும் ஸ்ப்ளிட் டைப் கனெக்டிங் ராடுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், 2012-ம் ஆண்டில் பெங்களூரில் தன் எட்டாவது உற்பத்தி மையத்தை நிறுவியது. 2013-ம் ஆண்டில் கிர்லோஸ்கர் டொயோட்டா நிறுவனத்துக்கு மெஷின்டு கனெக்டிங் ராடுகளை சப்ளை செய்ய ஆரம்பித்தது.

2015-ம் ஆண்டில் பெங்களூரில் ஏரோஸ்பேஸ் காம்ப்போனென்ட்களை உற்பத்தி செய்வதற் கென்றே பிரத்யேகமான தன் ஒன்பதாவது உற்பத்தி மையத்தை நிறுவிய இந்த நிறுவனம், 2017-ம் ஆண்டில் ஐரோப்பிய உற்பத்தியாளர் நிறுவனமான மேப் ஸ்வீடன் ஏபி எனும் ஹெவி கமர்ஷியல் வாகனங்களுக்கான மெஷின்டு கனெக்டிங் ராடுகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைக் கையகப்படுத்தி, பின்னர், அதன் பெயரை சன்சேரா ஸ்வீடன் ஏ.பி என்று பெயர் மாற்றம் செய்தது.

2018-ம் ஆண்டில் மெஷின்கள் கட்டுமானத்துக்குத் தனி உற்பத்தி வசதியாக பெங்களூரில் பத்தாவது உற்பத்தி மையத்தை நிறுவியது இந்த நிறுவனம். அதே ஆண்டில் இன்டெக்ரல் கிராங்க் ஷாஃப்ட்டு களின் வணிக ரீதியான உற்பத்தியைச் செய்ய ஆரம்பித்தது. 2019-ம் ஆண்டில் பெங்களூரில் உள்ள பிடதியில் பதினோராவது உற்பத்தி மையத்தை நிறுவியது.

2020-ம் ஆண்டில் ஹைபிரிட் வாகனங்களுக்கான மல்ட்டி பிள் டிரைவ் டிரெயின் காம்ப் போனென்ட்டுகளை ஒரு குளோபல் பயணிகள் வாகன உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்காக உற்பத்தி செய்து தர ஆரம்பித்தது. மேலும், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான டிரைவ் டிரெய்ன் காம்ப்போ னெட்டுகளையும் இதே ஆண்டில் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

ஹெவி கமர்ஷியல் வாகனங் களுக்கான பிரேக்கிங் அசெம்ளி காம்ப்போனெட்டுகளை சப்ளை செய்ய ஆரம்பித்ததும் இதே ஆண்டில்தான். மேலும், இந்த நிறுவனத்தின் துணை நிறுவன மான ஃபிட்வெல் டூல்ஸ் அண்ட் போர்ஜிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஹெவி கமர்ஷியல் வாகனங்களுக்கான சேசிஸ் காம்ப்போனெட்டுகளை இதே ஆண்டில் சப்ளை செய்ய ஆரம்பித்தது.

2021-ம் ஆண்டில் பயணிகள் வாகனத்தில் பொருத்தப்படும் பிரேக்கிங் அசெம்ப்ளி காம்ப்போ னெட்டுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்த இந்த நிறுவனம், இதே ஆண்டில் ஏரோஸ்பேஸ் பிரிவில் மெஷின்டு இன்ஜின் கேஸிங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது.

சான்சேரா இன்ஜினீயரிங் லிமிடெட்! (BSE CODE: 543358, NSE SYMBOL: SANSERA)

சிறப்பான பங்களிப்புகள்...

கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, ஆட்டோமொபைல் பிரிவில் இந்த நிறுவனத்தின் விற்று வரவில் மோட்டார் சைக்கிள்களுக் கான உதிரிபாகங்களின் பங்களிப் பானது 37 சதவிகிதமாகவும், ஸ்கூட்டர்களுக்கான உதிரிபாகங் களின் பங்களிப்பானது 10 சதவிகித மாகவும், பயணிகள் வாகனங் களுக்கான உதிரிபாகங்களின் பங்களிப்பானது 28 சதவிகித மாகவும், கமர்ஷியல் வாகனங் களுக்கான உதிரிபாகங்களின் பங்களிப்பானது 13 சதவிகிதமாகவும் இருந்தது.

அதேபோல், மொத்த விற்று வரவில் ஆட்டோமொபைல் அல்லாத தொழில்பிரிவில் ஏரோஸ் பேஸ் நிறுவனங்களுக்கான தயாரிப்புகள் 3% பங்களிப்பையும், ஆஃப் ரோடு வாகனங்களுக்கான தயாரிப்புகள் 3% பங்களிப்பையும், விவசாயத்துக்கு உபயோகப்படுத் தப்படும் வாகனங்களுக்கான தயாரிப்புகள் 3% பங்களிப்பையும், ஏனைய தயாரிப்புகளின் விற்று வரவு 2% பங்களிப்பையும் கொண்டிருந்தது.

இந்த நிறுவனத்தின் வாடிக்கை யாளர்கள் என்று பார்த்தால், இந்தியாவில் உள்ள டாப்-10 இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியாளர் களில் ஒன்பது நிறுவனங்கள் சான்சேரா நிறுவனத்தின் தயாரிப்பு களை வாங்கிவருகின்றன. உலக அளவில் பல நாடுகளில் உள்ள இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றன.

சான்சேரா இன்ஜினீயரிங் லிமிடெட்! (BSE CODE: 543358, NSE SYMBOL: SANSERA)

தற்போதைய விலை: ரூ.712.75

52 வார அதிகம்: ரூ.889

52 வார குறைவு: ரூ.548.55

புத்தக மதிப்பு: ரூ.196.43

விலை / புத்தக மதிப்பு : 3.63

முகமதிப்பு ரூ.2

(24.8.2022 நிலவரப்படி)

ரிஸ்க்குகள் என்னென்ன?

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்துவகை ரிஸ்க்கு களும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான விற்று வரவு ஆட்டோமொபைல் துறை சார்ந்ததாக இருக்கிறது. ஆட்டோமொபைல் துறை என்பது பொருளாதார வளர்ச்சி சார்ந்தே வளர்ச்சி அடையும். ஏதாவது ஒரு காரணத்தில் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி அடையாமல்போனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும். மூலப்பொருள்கள் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், அதிநவீன தொழில்நுட்பங்கள் போட்டியாளர்களால் அறிமுகப்படுத்தப்படுதல் போன்றவையும் இந்த நிறுவனத் துக்கான ரிஸ்க்குகளேயாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.