Published:Updated:

ஷில்பா மெடிக்கேர் லிமிடெட்!

ஷில்பா மெடிக்கேர் லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
ஷில்பா மெடிக்கேர் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

ஷில்பா மெடிக்கேர் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
ஷில்பா மெடிக்கேர் லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
ஷில்பா மெடிக்கேர் லிமிடெட்!

ஷில்பா மெடிக்கேர் லிமிடெட் என்கிற மருத்துவத் துறை சார்ந்த நிறுவனத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்..

நிறுவனத்தின் வரலாறு...

1987-ம் ஆண்டில் ஷில்பா ஆன்ட்டிபயாடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம், 1989-ம் ஆண்டில் டிரைமெத்தோப்ரிம் எனும் மருந்தை வர்த்தக ரீதியிலாக உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

பின்னர் 1992-ம் ஆண்டில் பாம்பே டிரக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிளாஸ்க்கோ ஸ்மித்க்ளின் பார்மெச்சூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனங்களுக்காக ஆன்ட்டி பாக்ட்டீரியல் மருந்துகளை உற்பத்தி செய்து தர ஆரம்பித்தது. மேலும், சோடியம் மீத்தாக்சைட் எனும் வேதிப் பொருளை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பத்தைக் கண்டறிந்து, அதற்கான உற்பத்தி மையத்தையும் இதே ஆண்டில் ஆரம்பித்தது இந்த நிறுவனம்.

1993-ம் ஆண்டில் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்ட இந்த நிறுவனம், 1995-ம் ஆண்டில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

2004-ம் ஆண்டில் தன்னுடைய முதல் காப்புரிமைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த இந்த நிறுவனம், 2007-ம் ஆண்டில் லோபா ஃபெயின்கெமி ஜி.எம்.பி.ஹெச் எனும் வெளிநாட்டைச் சார்ந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.

2008-ம் ஆண்டில் ‘ஸ்டார் எக்ஸ்போர்ட் ஹவுஸ்’ எனும் அந்தஸ்தை இந்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்திடம் இருந்து பெற்றது இந்த நிறுவனம்.

2015-ம் ஆண்டில் பெங்களூரில் நானோ டெக்னாலஜி சார்ந்த புதிய அதிநவீன ஆராய்ச்சி மையத்தை நிறுவியது. அதே ஆண்டில் ராய்ச்சூரில் செயல்பட்டுவந்த இரண்டு உற்பத்தி மையங்களுக்கு எஃப்.டி.ஏ-வின் அங்கீகாரத்தைப் பெற்றது இந்த நிறுவனம். மேலும், ஜட்சேர்லாவில் செயல்பட்டு வந்த பார்முலேஷன் வசதிக்கும் எஃப்.டி.ஏ-வின் அங்கீகாரத்தைப் பெற்றது இந்த நிறுவனம்.

2016-ம் ஆண்டில் யூரோப்பியன் யூனியனில் மார்க்கெட்டிங் ஆத்தரைசேஷன் ஹோல்டர் என்ற அந்தஸ்துக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதே ஆண்டில் இந்த நிறுவனத்தின் முதல் அப்ரிவேட்டட் நியூ ட்ரக் அப்ளிக்கேஷன் அமெரிக்காவில் அங்கீகரிக்கப் பட்டது.

மேலும், இதே காலகட்டத்தில் ஐரோப்பிய யூனியனில் இமாடினிப் டேப்லெட்களுக்கான மார்க்கெட்டிங் ஆத்தரைசேஷனையும் பெற்றது. இது தவிர, ஷில்பா மெடிக்கேர் நிறுவனத்தின் ஏ.பி.ஐ உற்பத்தி மையங்கள் அமெரிக்க எஃப்.டி.ஏ-வால் அங்கீகரிக்கப் பட்டதும் இதே ஆண்டில்தான்.

ஷில்பா மெடிக்கேர் லிமிடெட்!

2017-ம் ஆண்டில் நவ்யா பயோலாஜிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தில் பங்கு முதலீட்டைச் செய்தது இந்த நிறுவனம். இதே ஆண்டில் கேப்பெசிட்பைன் எனும் மருந்தின் ஏ அண்ட் ஏ அங்கீகரிக்கப்பட்டது. மேலும், மூன்று மருந்துகளுக்கான மார்க்கெட்டிங் ஆத்தரைசேஷன் ஹோல்டர் என்ற அங்கீகாரம் ஐரோப்பியன் யூனியனில் வழங்கப்பட்டதும் இதே ஆண்டில்தான்.

2020-ம் ஆண்டில் ஷில்பா மெடிக்கேர் நிறுவனம் தன்னுடைய ஏபிஐ பிளான்ட்டு களுக்கு (யூனிட்-1 மற்றும் யூனிட்-2) அமெரிக்க எஃப்.டி.ஏ-வின் ஆய்வை வெற்றிகரமாக முடித்தது. மேலும், உலகத்திலேயே முதன் முதலாக உடனடியாகப் பருகக்கூடிய அளவிலான ‘க்ரீன் டீ பிலிம்’ எனும் தயாரிப்பை இந்த நிறுவனம் இந்த ஆண்டில்தான் அறிமுகப்படுத்தியது. 2021-ம் ஆண்டில் இந்த நிறுவனம் பெண்களுக்கான க்ளின்ஷிங் ஸ்பெரேயை ‘ஸ்வாட்ச்ஷில்’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது. மேலும், ட்ரான்ஸ் டெர்மல் பாட்சஸ் மற்றும் ஓரல் தின் பிலிம்களை உற்பத்தி செய்யும் அதிநவீன மையம் ஒன்றையும் இந்த ஆண்டில் இந்த நிறுவனம் நிறுவியது.

ஷில்பா மெடிக்கேர் லிமிடெட்!

நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவுகள்...

இந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவுகள் என்று பார்த்தால், பார்முலேஷன்கள் மற்றும் ஆக்டிவ் பார்மெச் சூட்டிக்கல் இன்க்ரிடியன்ட்ஸ்கள் என்ற இரண்டு பெரும் பிரிவுகளில் செயல்பட்டுவருகிறது. தவிர, கெமிக்கல் டெவலப்மென்ட் மற்றும் மேனுஃபேக்சரிங் பிரிவில் ஏ.பி.ஐ-கள், பெப்டைட்டுகள், பாலிமர்கள், கன்ட்டினியுயஸ் ப்ளோ கெமிஸ்ட்ரி, பார்முலேஷன் டெவலப்மென்ட் மற்றும் உற்பத்தி, பயாலஜிக்கல்ஸ் போன்ற பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் தார்வாட், பெங்களூரு, ராய்ச்சூர், ஜட்சேர்லா, ஹைதராபாத், அஹமதாபாத் போன்ற இடங் களில் செயல்பட்டுவருகிறது.

ஷில்பா மெடிக்கேர் லிமிடெட்!

புதிய மருந்துகள்...

இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டின் இறுதிவரை 40 ஏ.பி.ஐ-களுக்கான டி.எம்.எஃப்-களை ஃபைல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2020-21 நிதியாண்டில் நான்கு புதிய மருந்துகளை (இரண்டு புற்றுநோய் சிகிச்சைக்கும், இரண்டு ஏனைய சிகிச்சைகளுக்குமானது) அறிமுகப்படுத்தியுள்ள இந்த நிறுவனம், 2020-21 நிதியாண்டில் 12 இ.டி.எம்.எஃப்களை ஃபைல் செய்துள்ளது. அதே காலகட்டத்தில், அமெரிக்காவில் 25 பார்முலேஷன்களுக்கான அனுமதிக்கான விண்ணப்பங் களையும், ஐரோப்பிய யூனியனில் 20 பார்முலேஷன்களுக்கான அனுமதிக்கான விண்ணப்பங் களையும் செய்திருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பார்முலேஷன்கள் பிரிவில் 2020-21 நிதியாண்டில் புற்று நோய் மருத்துவத்துக்கான ஐந்து பார்முலேஷன்களையும், ஏனைய நோய் மருத்துவத்துக்கான மூன்று பார்முலேஷன்களையும் அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம்.

மேலும், இதே காலகட்டத்தில் இரண்டு வைட்டமின் சப்ளிமென்ட் மருந்துகளையும் அறிமுகப்படுத்தியது. இந்த காலகட்டத்தில் 56 காப்புரிமைக் கான விண்ணப்பங்களைச் செய்துள்ள இந்த நிறுவனம், ஆரம்பக் காலத்திலிருந்து இதுவரை 413 காப்புரிமைக் கான விண்ணப்பங்களைச் செய்துள்ளது. இதன் வாயிலாக 2020-21 நிதியாண்டு இறுதியில் 19 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.

ஏ.பி.ஐ-களைப் பொறுத்த வரை, புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களுக்கான சிகிச்சை களுக்கான பல்வேறு ஏ.பி.ஐ-களை தயாரிப்பதால். சிறந்த டைவர் சிஃபைடு போர்ட்ஃபோலியோ வைக் கொண்டு இயங்கி வருகிறது.

பார்முலேஷன்கள் பிரிவில் வெர்ட்டிக்கல் இன்டெக்ரேஷன் செய்யப்பட்ட அளவிலான உற்பத்தி வசதிகளையும், இந்தப் பிரிவில் சிறப்புடன் குறைந்த பொருள் செலவில் ஏ.பி.ஐ-கள் உற்பத்தி செய்யும் ரீதியில் செயல்படுவதற்கான ஆராய்ச்சி வசதிகளையும் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம். பயாலஜிக்கல்ஸ் பிரிவில் தன்னுடைய பெரும் பலமாக ஆராய்ச்சி மையங்களையும் உலகத் தரம் வாய்ந்த அதிநவீன உற்பத்தி வசதிகளையும் கொண்டு சிறப்பாக இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

ஷில்பா மெடிக்கேர் லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மருந்து உற்பத்தி என்பது உலக அளவில் உள்ள பல்வேறு ஆணையங்களின் சட்ட திட்டங் களுக்கு உட்பட்டும் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டும் செயல்படும் உற்பத்தி மையங் களைக் கொண்டிருக்கும் தொழிலாகும். எனவே, தொடர்ந்து இந்த ஆணையங்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டு இருப்பதும் ஒரு ரிஸ்க் என்றே சொல்லலாம்.

இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையங்களில் பெறும் வெற்றி என்பது இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங் களுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் ஒரு விஷயமாகும். ஒருவேளை, ஆராய்ச்சியில் எதிர்பார்த்த அளவிலான வெற்றி கிடைக்காமல்போனால் அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

மூலப்பொருள்களின் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், மருந்துப்பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் உபயோகத்துக்கான சட்டதிட்டங்களில் வரக்கூடிய மாறுதல்கள். அதிநவீனத் தொழில்நுட்பங்கள் கண்டறியப் பட்டு அறிமுகப்படுத்தப்படுதல், கடுமையான போட்டி போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism