தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஷோபா லிமிடெட்..! (BSE Code: 532784, NSE Symbol: Sobha)

ஷோபா லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷோபா லிமிடெட்

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் பெருமதிப்புடன் செயல்பட்டு வரும் ஷோபா லிமிடெட்.

நிறுவனத்தின் செயல்பாடுகள்...

அகில இந்திய ரீதியாக மிகப்பெரிய முழுக்க முழுக்க ஒருங்கிணைக்கப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம். 27 நகரங்களில் 112.30 மில்லியன் சதுர அடி களுக்கும் மேலான அளவிலான கட்டுமானப் பணிகளைச் செய்து முடித்துள்ள இந்த நிறுவனம், வாடிக்கையாளர்கள் மத்தியில் தலைசிறந்த நன்மதிப்பைப் பெற்றுள்ளது. ஈடுபட்டு வருகிற தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், ரியல் எஸ்டேட் (வீடு மற்றும் கமர்ஷியல்), ஒப்பந்த ரீதியிலான கட்டுமானம் (சிவில் கட்டுமானங்கள்: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் கான்ட்ராக்ட்டுகள்), கட்டுமான மற்றும் ஏனைய பொருள்கள் உற்பத்தி (கிளேசிங் மற்றும் மெட்டல் வொர்க்ஸ், இன்டீரியர் பொருள்கள், ஸ்ப்ரிங் மேட்ரஸ், கான்கிரீட் தயாரிப்புகள் போன்றவை) மற்றும் டிசைன்/இன்ஜினீயரிங் (ஆர்க்கிடெக்சுரல், ஸ்ட்ரக்சுரல், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், எலெக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் உள்ளிட்ட பல பணிகள்) என்ற தொழில் பிரிவு களில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

முழுக்க முழுக்க கட்டுமானம் சார்ந்த பொருள் தயாரிப்புகளில் பின்னோக்கிய ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ள நிறுவனமாகத் திகழ்வது இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பாகும். மேலும், கட்டுமான நிறுவனங்களுக்கு மிகவும் அவசியமான டிசைன் மற்றும் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயரிங் பிரிவில் தேவைப்படுகிற வல்லுநர்களையும் தன்வசத்தே கொண்டுள்ளது தனிச் சிறப்பு.

ஷோபா லிமிடெட்..! (BSE Code: 532784, NSE Symbol: Sobha)

உற்பத்தி மையங்கள்....

இந்த நிறுவனத்தின் கிளேசிங் மற்றும் மெட்டல் பிரிவில் கிட்டத் தட்ட 25,000 சதுர அடி அளவிலான உற்பத்தி மையத்தைக் கொண்டு இயங்கிவருகிறது இந்த நிறுவனம். எதிர்காலத்தில் வளர்ந்துவரும் தேவைக்கேற்ப இந்த உற்பத்தி மையத்தை 1,20,000 சதுர அடி வரையில் விரிவாக்கம் செய்யும் திட்டமும் இந்த நிறுவனத்தின் வசம் இருக்கிறது.

இந்தத் தொழில் பிரிவில் அலுமினியத்தாலான கதவுகள், ஜன்னல்கள், ஸ்ட்ரக்சுரல் கிளேசிங்குகள், அலுமினியம் காம்ப்போசைட் பேனல்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிளாடிங்குகள், ஆர்க்கிடெக்சுரல் மெட்டல் வொர்க்ஸ் மற்றும் ப்ரீ-இன்ஜினீயர்டு பில்டிங்குகள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம். ‘ஷுகோ இன்டர்நேஷனல் கேஜி’ எனும் நிறுவனத்துடன் தொழில்நுட்பக் கூட்டணி ஒன்றையும் இந்தப் பிரிவுக்காக அமைத்துக்கொண்டுள்ளது ஷோபா நிறுவனம்.

இன்டீரியர் கட்டுமானத்துக்காக உற்பத்தி செய்யப்படும் பொருள் களுக்காக 3,25,000 சதுர அடியில் இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான உற்பத்தி மையம் ஒன்றைத் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த உற்பத்தி மையத்தில் கதவுகள், கதவுகளுக்கான பிரேம்கள், பர்னிச்சர்கள், பேனலிங், பார்ட்டீஷன், மாடுலர் கிச்சன் போன்ற வற்றை உற்பத்தி செய்துவருகிறது இந்த நிறுவனம்.

ரீடெயில் சந்தையில்...

ரீடெயில் சந்தைக்கான தயாரிப்புகளிலும் கால் பதித்துள்ள இந்த நிறுவனம் ஷோபா ஸ்ப்ரிங் மேட்ரஸ் எனும் பிராண்டில் ஸ்ப்ரிங் மேட்ரஸ்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், தென் ஆப்பிரிக்கா, துருக்கி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெஷின்களைக் கொண்டு ஸ்ப்ரிங் மெத்தைகள் இந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும்படி டிசைன் ஸ்டூடியோ ஒன்றையும் நிறுவியுள்ளது இந்த நிறுவனம். இந்த டிசைன் ஸ்டூடியோவில் 150-க்கும் மேலான ஸ்ட்ரக்சுரல் மற்றும் எம்.இ.பி இன்ஜினீயர்கள், கிராபிக் டிசைனர்கள், மாடல் மேக்கர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

1995-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1997-ம் ஆண்டில் பெங்களூருவில் ஷோபா சபையர் என்ற புராஜெக்ட்டையும் கோயம்புத்தூரில் ஹரி கார்டன்ஸ் என்ற புராஜெக்ட்டையும் ஆரம்பித்தது. 1998-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங் களிலேயே முதன்முறையாக ஐ.எஸ்.ஓ 9001:1994 தரச் சான்றி தழைப் பெற்றது இந்த நிறுவனம். 1999-ம் ஆண்டில் தன் முதல் புராஜெக்ட்டான ‘ஷோபா சபையர்’ புராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்து வாடிக் கையாளர் வசம் ஒப்படைத்தது.

2000-ம் ஆண்டில் பெங்களூரில் இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தைக் கட்டுமானம் செய்து தருவதற்கான முதல் ஒப்பந்த ரீதியான கட்டுமானப் பணியைப் பெற்றது இந்த நிறுவனம். 2001-ம் ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மைசூர் புராஜெக்ட்டை வெற்றி கரமாக முடித்துக் கொடுத்தது இந்த நிறுவனம்.

2003-ம் ஆண்டில் ஷோபா டிரெயினிங் அகாடமியை நிறுவிய இந்த நிறுவனம், 2005-ம் ஆண்டில் முழுக்க முழுக்க தானியங்கிமயமான கான்கிரீட் புராஜெக்ட் பிரிவைத் தொடங் கியது. 2006-ம் ஆண்டில் பிரைவேட் லிமிடெட் என்ற நிலையில் இருந்து பப்ளிக் லிமிடெட் என்ற நிறுவனமாக மாற்றப்பட்ட இந்த நிறுவனம், அதே ஆண்டில் பொதுப் பங்கு களை ஐ.பி.ஓ மூலம் வெளியிட்டு என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்டது.

2007-ம் ஆண்டில் கேரளாவில் ஒருங்கிணைந்த டவுன்ஷிப் புராஜெக்ட் ஒன்றைத் திரிச்சூரில் `ஷோபா சிட்டி’ என்ற பெயரில் ஆரம்பித்தது. அதே ஆண்டில் ‘ஷோபா கார்னேஷன்’ என்ற பெயரில் புனேயில் ஒரு புராஜெக்ட்டை ஆரம்பித்தது இந்த நிறுவனம். 2008-ம் ஆண்டில் கோயம்புத்தூரில் `ஷோபா எமரால்ட்’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு புராஜெக்ட்டை ஆரம் பித்தது இந்த நிறுவனம்.

ஷோபா லிமிடெட்..! (BSE Code: 532784, NSE Symbol: Sobha)

ஒப்பந்தத் திட்டங்களில்...

ஒப்பந்த ரீதியான கட்டுமான புராஜெக்ட்டுகளை அதிகப்படுத்திக் கொண்டே வந்த இந்த நிறுவனம், 2010-ம் ஆண்டுவாக்கில் வொண்டர்லா ஹாலிடேஸ், டிரைடன்ட் ஹோட்டல்ஸ், ஐ.டி.சி, பயோகான், லீலா வெஞ்சர்ஸ் போன்ற பெருமை மிகு நிறுவனங் களுக்காகப் பணியை செய்து கொடுக்க ஆரம்பித்து. இந்த ஆண்டில்தான் இந்த நிறுவனம் தென் இந்தியாவின் முதல் 10 பில்லியன் ரூபாய் அளவிலான வர்த்தகத்தைக் கொண்ட பிராண்ட் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.

தற்சமயம் (ஜூலை 2022 நிலவரப் படி) இந்தியாவில் உள்ள 14 மாநிலங் களில் உள்ள 27 நகரங்களில் 120 மில்லியன் சதுர அடிகளுக்கும் மேலான கட்டுமானங்களை முடித்துள்ளது இந்த நிறுவனம். இன்றைக்கு 3,000-க்கும் மேற்பட்ட புரொஃபஷனல்கள் மற்றும் 7,000-க்கும் மேற்பட்ட டெக்னீசியன்களைத் தன்வசத்தே கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

ஷோபா லிமிடெட்..! (BSE Code: 532784, NSE Symbol: Sobha)

ரிஸ்க்குகள் என்னென்ன?

கட்டுமானத் துறையில் (வீடு மற்றும் கமர்ஷியல்) ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. இந்தத் துறையின் வளர்ச்சியானது பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும் என்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாது போனால், அது இந்த நிறுவனத்தின் வர்த்தகத்தையும் பாதிக்கவே செய்யும். மூலப்பொருள்கள் விலை உயர்வு, பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுதல், எதிர்பாராத காரணங்களால் கட்டுமானங்களை முடித்துத் தருவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் அதிகப்படியான செலவினங்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்ப தால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்தபின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.