Published:Updated:

சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ்!

சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ்!

கம்பெனி பயோடேட்டா

சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ்!

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் கம்பெனி பயோடேட்டா சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ் லிமிடெட். இது ஹரியானாவில் உள்ள குருகிராம் எனும் இடத்தில் தலைமை யகத்தைக் கொண்டு இயங்கிவரும் ஒரு முன்னணி ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி நிறுவனம்.

நிறுவனத்தின் வரலாறு...

1995-ம் ஆண்டில் சோனா ஒகேகாவா ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ் லிமிடெட் என்ற பெயரில் மிட்சுபிசி மெட்டீரியல்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

1998-ம் ஆண்டில் ஹரியானாவில் உள்ள குருகிராமில் டிஃபெரன்ஷியல் பிவெல் கியர்களைத் தன்னுடைய முதல் உற்பத்தி மையத்தில் ஆரம்பித்த இந்த நிறுவனம், 2005-ம் ஆண்டில் புனேவில் ஓர் உற்பத்தி மையத்தை நிறுவியது.

பின்னர், 2008-ம் ஆண்டில் தைசன் க்ரூப் நிறுவனத்தின் ப்ரிசிஸன் ஃபோர்ஜிங் பிரிவைக் கையகப் படுத்திய இந்த நிறுவனம், 2013-ம் ஆண்டில் சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2016-ம் ஆண்டில் ஜே.எம் பைனான்ஷியல் நிறுவனத்திடம் இருந்து முதலீட்டைப் பெற்ற இந்த நிறுவனம் அதே ஆண்டில் மிட்சுபிசி மெட்டீரியல்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மெட்டல் ஒன் கார்ப்பரேஷன் என்ற இரண்டு நிறுவனங்களிடம் செய்து கொண்டிருந்த தொழில்நுட்பத்துக்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்துகொண்டது.

2017-ம் ஆண்டில் குருகிராமில் இரண்டாவது மற்றும் மூன்றாவது உற்பத்தி மையங்களைத் தொடங்கியது. 2018-ம் ஆண்டில் புனேவில் உள்ள சகன் எனும் இடத்தில் இரண்டாவது உற்பத்தி மையத்தை நிறுவ நிலத்தைக் கையகப் படுத்தியது.

2019-ம் ஆண்டில் ப்ளாக் ஸ்டோன் நிறுவனம் சோனா பி.எல்.டபிள்யூ நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கான பங்குகளில் முதலீட்டைச் செய்தது. அதே ஆண்டில், காம்ஸ்டார் ஆட்டோமேட்டிவ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனங்களையும் கையகப்படுத்தியது.

மேலும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளின் பிராண்ட்டை ‘சோனா காம்ஸ்டார்’ என்று பெயர் மாற்றம் செய்தது. இதே வருடத்தில் ஹரியானாவில் உள்ள மனேசரில் புதிய உற்பத்தி மையத்தைத் தொடங்கியது இந்த நிறுவனம்.

2020-ம் ஆண்டில் பெல்ட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர்களை வாகனங்களில் பொருத்தி சாலைகளில் செய்யப்படும் சோதனைகளை ஒரு ஓ.இ.எம் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வெற்றிகரமாக முடித்தது இந்த நிறுவனம். அதே ஆண்டில் 250 மில்லியன் கியர்கள் உற்பத்தி என்ற எல்லையை வெற்றி கரமாகக் கடந்தது இந்த நிறுவனம்.

மேலும், இதே ஆண்டில் இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்படும் இரண்டு மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து ப்ரெஷ்லெஸ் டைரக்ட் கரன்ட் மோட்டார் களை உற்பத்தி செய்து தருவதற்கான கான்ட்ராக்ட்டைப் பெற்றது. 2021-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம்.

சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ்!

நிறுவனத் தயாரிப்புகள்...

தயாரிப்பு ரீதியாகப் பார்த்தால், மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங் களுக்கான கன்ட்ரோலர்கள், டிரைவ் மோட்டார்கள் (PMSM), ஹப்வீல் மோட்டார்கள் (BLDC) போன்றவற்றையும், மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான கன்ட்ரோலர்கள், டிராக்‌ஷன் மோட்டார்கள் (PMSM), டிஃபெரன்ஷியல் பிவெல் கியர்கள், டிஃபெரன்ஷியல் அசெம்ப்ளிகள், எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கான டிரைவ் மோட்டார் (PMSM), ஆக்சில்கள், கன்ட்ரோலர்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களுக்கான ஸ்டார்ட்டர் மோட்டார்கள், பெல்ட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர்கள், ஆல்ட்டர்னேட்டர்கள், ரிவர்ஸ் ஐடிலர்கள், டிஃபெரன்ஷியல் பிவெல் கியர்கள், டிஃபெரன்ஷியல் அசெம்ப்ளிகள், கமர்ஷியல் வாகனங் களுக்கான இண்டர் ஆக்சில் கியர் செட்கள், கப்ளிங்குகள் மற்றும் ஸ்லீவ்கள், டிஃபெரன்ஷியல் பிவெல் கியர்கள், ஸ்டார்ட்டர் மோட்டார்கள், கியர் பாக்ஸ் கியர்கள், ஆஃப் ஹைவே வாகனங்களுக்கான (டிராக்டர் போன்ற) போர்ட்டல் ஆக்சில் கியர்கள், ஸ்டார்ட்டர் மோட்டார்கள், டிஃபெரன் ஷியல் அசெம்ப்ளி மற்றும் டிஃபெரன்ஷியல் பிவெல் கியர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.

ரிக்கார்டோ அறிக்கையின்படி, (ரிக்கார்டோ யுகே லிமிடெட் எனும் நிறுவனம் வழங்கிய அறிக்கை – சோனா பி.எல்.டபிள்யூ நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டது) சோனா பி.எல்.டபிள்யூ நிறுவனம் பயணிகளுக்கான வாகனம், கமர்ஷியல் வாகனம் மற்றும் டிராக்டர்களுக்கான பிவெல் கியர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் முன்னணி பத்து நிறுவனங்களுள் ஒன்றாக 2020-ம் ஆண்டு நிலவரப்படி திகழ்கிறது.

அதேபோல் இந்த அறிக்கையின்படி, பயணிகள் பயணிக்கும் வாகனங்களுக்கான ஸ்டார்ட்டர் மோட்டார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதிலும் உலகளாவிய அளவில் பத்து முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக 2020-ம் ஆண்டில் இந்த நிறுவனம் இருந்தது.

2020-ம் ஆண்டு நிலவரப்படி, இந்த நிறுவனம் டிஃபெரன்ஷியல் பிவெல் கியர்களுக்கான உலகச் சந்தையில் 5.8% சந்தைப் பங்களிப்புடனும், ஸ்டார்ட்டர் மோட்டார்களில் 3.0% சந்தைப் பங்களிப்புடனும், பி.இ.வி டிஃபெரன்ஷியல் அசெம்ப்ளிஸ் களில் 8.7% சந்தைப் பங்களிப்பு டனும் இருந்தது. இந்த நிறுவனம் இந்தியா, சீனா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒன்பது உற்பத்தி மையங்களுடன் (ஆறு மையங்கள் இந்தியாவில் உள்ளன) இயங்கிவருகிறது.

கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, இந்தியாவில் உள்ள குருகிராமில் இருக்கும் உற்பத்தி மையத்தில் 28.7 மில்லியன் அளவிலான கியர்கள் உற்பத்தி மையத்தையும், சென்னையில் 3.8 மில்லியன் அளவிலான ஸ்டார்ட்டர் மோட்டார் உற்பத்தி மையத்தையும், மனேசரில் உள்ள உற்பத்தி மையத்தில் 5.3 லட்சம் டிஃபெரன்ஷியல் அசெம்ப்ளி களையும், புனேவில் உள்ள உற்பத்தி மையத்தில் 9.3 மில்லியன் கியர்கள் எனும் அளவிலான உற்பத்தி வசதியையும் ஆண்டொன்றுக்கு நிர்மாணிக்கப் பட்ட உற்பத்தி அளவாகக் கொண்டு இயங்கிவருகிறது.

அமெரிக்காவில் உள்ள உற்பத்தி மையத்தில் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் ஸ்டார்ட்டர் மோட்டார்களையும், மெக்ஸி கோவில் உள்ள உற்பத்தி மையத்தில் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் ஸ்டார்ட்டர் மோட்டார்களையும், சீனாவில் உள்ள உற்பத்தி மையத்தில் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் ஸ்டார்ட்டர் மோட்டார்களையும் உற்பத்தி செய்யும் அளவிலான நிர்மானிக்கப்பட்ட உற்பத்தியின் அளவாகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். மேலும், ஸ்வீடனில் ஒரு விற்பனை அலுவலகத்தையும் ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் வேர்ஹவுஸ் களையும் கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

2020 நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் விற்றுவரவில் 75% அயல்நாட்டுக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கிறது. இதில் வட அமெரிக்கா 36.1%, ஐரோப்பா 26.5%, சீனா 7.6% அளவிலுமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. மீதமுள்ள 25% அளவிலான விற்றுவரவு இந்தியாவில் நடக்கும் விற்பனையில் இருந்து இந்த நிறுவனத்துக்குக் கிடைக்கிறது.

சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ்!
சோனா பி.எல்.டபிள்யூ ப்ரிசிஸன் ஃபோர்ஜிங்ஸ்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை என்பது (பெட்ரோல்/டீசல் அல்லது மின்சாரம் என எதுவானாலும்) முழுக்க முழுக்க பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்து வளர்ச்சியடையக்கூடிய தொழிலாகும்.

எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் உலகப் பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவு வளராமல்போனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டையும் பாதிக்கவே செய்யும்.

மேலும், மூலப்பொருள்கள் விலை உயர்வு, புதிய டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்படுதல், போட்டி நிறுவனங்கள் ஆராய்ச்சியில் பெறும் வெற்றி (புதியதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவு வருவதால்), அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் போன்ற அனைத்துமே இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்குவதற்கும் முன்பு செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism